search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்கள் விரும்பி அணியும் கருகமணி நகைகள்
    X
    பெண்கள் விரும்பி அணியும் கருகமணி நகைகள்

    பெண்கள் விரும்பி அணியும் கருகமணி நகைகள்.. ஒரு பார்வை..

    தக தக தங்கத்துடன் பல்வேறு அளவுகளில் உள்ள கருப்பு மணிகளைக் கொண்டு வடிவமைக்கப்படும் நகைகளின் அழகை இன்று முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
    கருப்பே அழகுதான். கருப்பு மணி கொண்டு செய்யப்படும் நகைகளின் அழகுத் தோற்றம் பற்றி சொல்லவா வேண்டும்.

    கருப்பு மணி அல்லது கருக மணி கொண்டு அனைத்து வகையான நகைகளும் செய்யப்படுகின்றன. மோதிரம், காதணி, செயின், நெக்லஸ், வளையல் மட்டுமல்லாது வட இந்தியர்கள் அணியும் தாலிச் செயினும் கருப்பு மணிகளைக் கொண்டு செய்யப்பட்டவையாகவே உள்ளன.

    தக தக தங்கத்துடன் பல்வேறு அளவுகளில் உள்ள கருப்பு மணிகளைக் கொண்டு வடிவமைக்கப்படும் நகைகளின் அழகை இன்று முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

    குறைந்த அளவு தங்கத்தில் கருப்பு மணிகளைக் கோர்த்து செய்யப்படும் செயின்கள் பெண்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. கருகமணியை குறிப்பிட்ட இடைவெளி விட்டு கோர்த்து செய்யப்படும் செயின்கள் பார்வைக்கு அதிக தங்கத்தினால் செய்யப்பட்டது போன்ற தோற்றத்தைத் தருகின்றன.

    சரடு மாடல் செயின்களில் மூன்று கருக மணிகள் கோர்த்து செய்யப்படுபவை பாந்தமான தோற்றத்தைத் தருகின்றன. சில செயின்களில் முகப்பைச் சுற்றிலும் கருக மணிகளைக் கோர்த்து செய்திருப்பது வித்தியாசமாகவும் அழகாகவும் காட்சி அளிக்கின்றன. ஒரு கருகமணி ஒரு தங்கக் குண்டு கோர்த்து செய்யப்படும் நீளமான செயின்களில் டாலர்களுடன் இருப்பது பார்வையாக உள்ளது.

    கருகமணி செயின்களுக்கு ஏற்றாற்போல் கருகமணி கம்மல் மற்றும் தொங்கட்டான்களும் தனியாகவும் அல்லது செட்டகாவும் கிடைக்கின்றன. தொங்கட்டான்களில் லோரியல் போல கருகமணி தொங்குவது பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக உள்ளது.

    கருகமணி கொண்டு ஃபேன்ஸி மாடல் கம்மல் மற்றும் தொங்கட்டான்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

    கருகமணி தோடு மற்றும் தொங்கட்டானுக்கு செட்டாக அணிவது போல் கருகமணி மாட்டல்களும் வந்துவிட்டன.

    மூன்று கிராம் முதலே கருகமணி செயின்கள் வடிவமைக்கப்படுகின்றன. வெள்ளை முத்துக்கள் மற்றும் சிவப்பு வண்ணக் கற்களும் கருகமணி கலந்து செய்யப்படும். ஃபேன்ஸி செயின்களை சிறு வயதுப் பெண்கள் முதல் அனைவருமே விரும்புகிறார்கள்.

    ஃபேன்ஸி நெக்லஸ்களிலும் கருகமணி சேர்த்து செய்யப்படுபவை அதற்கேற்ற கம்மல், வளையல் செட்டுடன் சேர்த்து அணியும் பொழுது மிகவும் நேர்த்தியாக உள்ளது என்று சொல்லலாம்.

    வளையல்கள் மட்டுமல்லாது பிரேஸ்லெட்களிலும் கருகமணிகள் இருப்பதை கல்லூரி மாணவிகள் மட்டுமல்லாது நடுத்தர வயதுப் பெண்களும் விரும்பி அணிகின்றனர்.

    ஒரு சரம் மட்டுமல்லாது இரண்டு மூன்று சரங்களாகவும் கருகமணி கோர்த்து செய்யப்படும் செயின்கள் நடுத்தர வயதுப் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவராலும் விரும்பி அணியப்படுகின்றன.

    டாலரில்லாமல் குட்டையாகவும் ஃபேன்ஸியாகவும் வரும் கருகமணிச் செயின்களை புடவைகள் மட்டுமல்லாது அனைத்து ஆயத்த ஆடைகளுடனும் அணிந்து கொள்ளலாம்.

    கொலுசு என்று எடுத்துக் கொண்டால் அதிலும் கருகமணி சேர்த்து செய்யப்படும் கொலுசுகள் பிரசித்தமாக உள்ளன என்றே சொல்லலாம். கண் திருஷ்டி கழிய சிலர் கால்களில் கருப்பு கயிற்றிற்கு பதிலாக கருகமணி கோர்த்து அணிவதும் இப்பொழுது பிரபலமாக உள்ளது.

    வட இந்தியா, ஆந்திரா மற்றும் கர்நாடாக பெண்களால் மட்டுமே அணியப்பட்டு வந்த கருகமணி நகைகள் இப்பொழுது உலகம் முழுவதும் உள்ள பெண்களால் மிகவும் விரும்பி அணியப்படும் ஆபரணமாக மாறிவிட்டது.

    கடுகை விடச்சிறிய அளவு முதல் மிளகை விடப் பெரிய அளவு வரை கருகமணிகளை வைத்து செய்யப்படும் நகைகளை விரும்பாத பெண்கள் இருப்பார்களா என்ன?

    பெரிய அளவு கருகமணியின் மேல் வலை பின்னல் போல் தங்கத்தினால் மூடப்பட்டு வருவது நவீன வகை நகைகளில் அதிகமாகக் காணப்படுகின்றது.

    அதிக தங்கத்தில் குறைந்த கருகமணி இருந்தாலும் அழகுதான். குறைந்த தங்கத்தில் அதிக கருகமணி சேர்த்து செய்தாலும் அழகுதான்.

    மாடர்ன் வளையல்களில் கருகமணிகள் வைத்து செய்யப்படுபவை நேர்த்தியாக உள்ளன.

    திருஷ்டிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கருகமணி நகைகள் இன்றைய காலகட்டத்தில் அனைத்து வயதுப் பெண்களாலும் விரும்பி அணியப் படுகின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதேபோல் ஒரு காலத்தில் திரு மணம் ஆனவர் களால் மட்டுமே அணியப்பட்டு வந்த கருகமணிச் செயின்கள் இப் பொழுது சிறுவயதுப் பெண் கள்முதல் அனைவ ராலும் விரும்பி அணியப்படும் நகையாக மாறிவிட்டது.
    Next Story
    ×