search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தங்க நகைகள் புதுசு போன்று இருக்க...
    X
    தங்க நகைகள் புதுசு போன்று இருக்க...

    தங்க நகைகள் புதுசு போன்று இருக்க...

    நகைகளை சுலபமான முறையில், தங்கம் தேயாமல் எப்படி சுத்தம் செய்வது என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு மூலம் தெரிந்து கொள்ளலாம்.
    எப்போதுமே நம்முடைய உடலில் அணிந்து கொண்டிருக்கும் கம்மல், செயின், வளையல், பிரேஸ்லெட் இவைகள் சீக்கிரமாகவே அழுக்குப் படிந்துவிடும். சூடு உடம்பாக இருந்தால், சீக்கிரம் கருப்பாக மாறிவிடும். இதுமட்டுமல்லாமல் கழுத்தில் போட்டிருக்கும் செயினில், மஞ்சள் கரை, பவுடர் திட்டு, அதிகமாக படிந்து, அதன் நிறம் மங்கி இருக்கும். இதை அப்படியே அணிந்து கொண்டிருந்தால், தங்க நகை எடுப்பாக இருக்காது. மங்கலாகக் காணப்படும். இந்த நகைகளை சுலபமான முறையில், தங்கம் தேயாமல் எப்படி சுத்தம் செய்வது என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    பூந்தி கொட்டையின் மேல் தோலை தண்ணீரில் ஊறவைத்து அதில் பொன் நகைகளை (கல், முத்து, பவளம் போன்றவை கூடாது) ஒரு நாள் முழுக்க போட்டுவைக்கவும். மறுநாள் பிரஷ் மூலம் சுத்தம் செய்தால் அன்று வாங்கிய நகை போலவே பளபளக்கும். நகைகள் அனைத்தையும் ஒரே டப்பாவில் போட்டு வைக்கக்கூடாது.

    தனித்தனி பிரிவு உள்ள நகை பெட்டியை தேர்ந்தெடுத்து வாங்கி அவற்றில் வைத்துவிட்டால் நகைகள் நசுங்காமல் இருக்கும். முத்து நகைகளை அணிந்துகொண்டு வெந்நீரில் குளிக்கக்கூடாது. நகைகளை அணிந்த பிறகு வாசனை திரவியங்களை ஸ்பிரே செய்யக்கூடாது. கல், முத்து நகைகள் மங்கிவிடக்கூடும்.

    தங்க வளையல்களுடன் கண்ணாடி வளையல்களைச் சேர்த்து அணிந்தால் தங்க வளையல்கள் சீக்கிரம் தேய்மானம் அடைந்துவிடும். வைரத் தோடு, மோதிரம், வளையல் ஆகியவை மங்கலாக இருந்தால் நான்கைந்து நாட்கள் விபூதி டப்பாவில் போட்டு வைத்து எடுத்து சுத்தம் செய்தால் பளிச்சென்று இருக்கும்.

    நகைகளை நின்றுகொண்டே கழற்றவோ, போடவோ கூடாது. அப்படிச் செய்வதால் கை தவறி மோதிரம், கம்மல் திருகாணி போன்றவை கீழே விழுந்துவிடக்கூடும். அதனால் உட்கார்ந்துகொண்டு மடியில் மெல்லிய துண்டை விரித்து நகைகளை அணிந்தால் அவை கீழே விழுந்தாலும் துண்டின் மீது விழும். சேதாரம் குறையும்.

    நாம் அணிந்திருக்கும் நகைகள், நம் வீட்டின் லட்சுமி கலாட்ச்சத்தை வெளிப்படுத்தும். அந்த நகைகளை அழுக்குப் படிந்த நகைகளாக, மங்கலான நிலையில் வைத்திருப்பது அவ்வளவு சரியல்ல. ஏனென்றால், மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய நகை எப்போதுமே பார்ப்பதற்கு பளிச்சென்று இருப்பதுதான் நம் வீட்டிற்கு நல்லது. அதிர்ஷ்டமும் கூட!
    Next Story
    ×