search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இரவில் மறக்காமல் இதை செய்தால் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்
    X
    இரவில் மறக்காமல் இதை செய்தால் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்

    இரவில் மறக்காமல் இதை செய்தால் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்

    இரவு தூங்கும் முன் செய்யும் சில விஷயங்கள் ஆரோக்கியமான சரும அழகைத் தரும். இரவில் நீங்கள் அளிக்கும் பராமரிப்பு சருமத்திற்கு கூடுதல் பலனைத் தரும்.
    முறையான சரும பராமரிப்புகளைப் பின்பற்றினாலே பொலிவான அழகைப் பெறலாம். குறிப்பாக இரவு தூங்கும் முன் செய்யும் சில குறிப்புகள் ஆரோக்கியமான சரும அழகைத் தரும். ஏனெனில் இரவில்தான் உங்கள் சருமத் துகள்கள் விரிந்து சுவாசம் பெறும். அந்த சமயத்தில் நீங்கள் அளிக்கும் பராமரிப்பு கூடுதல் பலன் தரும்.

    முகம் கழுவுதல் : முதலில் உங்கள் சருமத்தை ஃபேஸ் வாஷ் கொண்டு கழுவுதல் அவசியம். இதனால் சருமத்தில் இருக்கும் கூடுதல் எண்ணெய், பிசுபிசுப்பு, அழுக்கு, இறந்த செல்கள் போன்றவை நீங்கி சருமத்தை தெளிவாக்கும்.

    சீரம் : சருமத்திற்கு ஈரப்பதம் அளித்தல் மிக மிக அவசியம். இதனால் வறண்ட மற்றும் வெடிப்பான சருமத்தை தவிர்க்கலாம். இதற்கு தேன், தேங்காய் எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைஸர் சீரம் போன்றவையும் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம்.

    நைட் கிரீம் : சீரத்தை சருமம் உள்ளிழுத்தபின் நைட் கிரீம் பயன்படுத்தலாம். காலையில் எழுந்து பார்க்கும்போது பொலிவான சருமத்தை தரும். டல்லாக தோற்றமளிக்கும் சருமத்தை பளிச்சிட வைக்கும் சக்தி நைட் கிரீம்கள் செய்யும்.

    மேலே குறிப்பிட்ட விஷயங்களை செய்ய நேரமில்லை என்றாலும் முகத்தை கழுவுவதை மட்டும் கட்டாயம் கடைபிடியுங்கள். அதுவே சருமத்திற்கு போதுமானது.
    Next Story
    ×