search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இயற்கையான முறையில் ஹேர் ஸ்ட்ரெய்டனிங்
    X

    இயற்கையான முறையில் ஹேர் ஸ்ட்ரெய்டனிங்

    நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி தலைமுடிக்கு ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்து கொள்ள முடியும். இயற்கையான முறைகள் நாம் ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வதனால் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
    இப்போதெல்லாம் பெண்கள் கூந்தலை ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வதற்கு, அதிகமாக அழகு நிலையங்களுக்கு செல்கின்றனர், இருந்தாலும் அழகு நிலையங்களுக்கு சென்று ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்தாலும் அதற்கு தகுந்த பராமரிப்பு இருந்தால் தான் தலைமுடி நேராக இருக்கும்.

    அதேபோல் ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்ய பயன்படுத்தும் கருவிகளின் விளைவுகளினால் சிலருக்கு அதிக முடி உதிர்வு ஏற்படும். மேலும் பல பக்க விளைவுகளையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

    எனவே நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி தலைமுடிக்கு ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்து கொள்ள முடியும். இயற்கையான முறைகள் நாம் ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வதனால் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

    தேவையான பொருட்கள்:

    சோளமாவு அல்லது மைதா மாவு - இரண்டு ஸ்பூன்
    தேங்காய் பால் - 1/2 கப்
    சாதம் வடித்த கஞ்சி - 1/2 டம்ளர்
    வாசலின் - 1/2 ஸ்பூன் அல்லது 1 ஸ்பூன்

    ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் சோளமாவு அல்லது மைதா மாவு சேர்த்து 200 மில்லி தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும்.

    இதனுடன் சாதம் வடித்த கஞ்சி 200 மில்லி மற்றும் தேங்காய் பால் 1/2 டம்ளர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் கலந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கட்டிகள் விழாதவாறு கிளறிவிடவும்.

    கலவை நன்றாக கெட்டியானதும், 1/2 ஸ்பூன் அல்லது 1 ஸ்பூன் வாசலின் கலந்து கலவையை ஆறவிடவும்.

    இந்த பேக்கை பயன்படுத்தும் போது தலை முடியில் எண்ணெய் பசை இருக்க கூடாது, ஆகையால் முதல் நாளே தலைமுடியை நன்கு அலசி, எண்ணெய் பசை இல்லாதவாறு தலை முடியை வைத்து கொள்ளவும். தயாரித்த பேக் ஆறியதும் கொஞ்சம், கொஞ்சமாக எடுத்து தலைமுடியில் அப்ளை செய்ய வேண்டும், அதாவது தலைமுடியின் உச்சந்தலையில் இருந்து நுனி முடி வரை நன்றாக இந்த பேக்கை அப்ளை செய்ய வேண்டும்.

    இவ்வாறு நன்றாக அப்ளை செய்த பிறகு சீப்பை பயன்படுத்தி தலைமுடியை நேராக சீவிவிட வேண்டும். பின்பு இரண்டு மணி நேரம் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்பு தலைமுடியை ஷாம்போ போட்டு அலசி விடுங்கள் இவ்வாறு செய்வதினால் நாம் இயற்கையான முறையில் மிக எளிமையாகவே தலைமுடிக்கு ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்து விட முடியும்.
    Next Story
    ×