search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சப்பாத்தி வெஜிடபிள் நூடுல்ஸ்
    X
    சப்பாத்தி வெஜிடபிள் நூடுல்ஸ்

    குழந்தைகளுக்கு விருப்பமான சப்பாத்தி வெஜிடபிள் நூடுல்ஸ்

    உங்கள் வீட்டில் இரவு செய்த சப்பாத்தி மீதம் இருந்தால், அதனைக் கொண்டு காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு அருமையான ஒரு ரெசிபியை செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சப்பாத்தி - 4
    முட்டைக்கோஸ் - 1/4 கப்
    கேரட் - 2
    குடைமிளகாய் - 1 சிறியது
    பூண்டு - 5 பற்கள்
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    சோயா சாஸ் - 1/4 டீஸ்பூன்
    தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    முட்டைக்கோஸ், கேரட், குடைமிளகாயை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் சப்பாத்தியை கத்தரிக்கோல் பயன்படுத்தி நூடுல்ஸ் போன்று நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    பின்பு அதில் கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் குடைமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.

    பிறகு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

    பின் வெட்டி வைத்துள்ள சப்பாத்திகளை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 2 நிமிடம் நன்கு கிளறி இறக்கினால், சப்பாத்தி வெஜிடபிள் நூடுல்ஸ் ரெடி!!!
    Next Story
    ×