search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    எள்ளு மட்டன் குழம்பு
    X
    எள்ளு மட்டன் குழம்பு

    எள்ளு மட்டன் குழம்பு

    இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் எள்ளு மட்டன் குழம்பு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மட்டன் - ½ கிலோ
    மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
    தயிர் - ¼ கப்
    மிளகு - 1 ஸ்பூன்
    சீரகம் - 1 ஸ்பூன்
    பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
    எள்ளு - 2  ஸ்பூன்
    பட்டை - 1 துண்டு
    கிராம்பு - 2 துண்டு
    நட்சத்திர மொக்கு - 1
    முந்திரி - 6
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    காய்ந்த மிளகாய் - 4
    பூண்டு - 10 பல்
    முருங்கைக்காய் - 1
    உருளை கிழங்கு - 1
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் -

    எள்ளு மட்டன் குழம்பு

    செய்முறை

    கொத்தமல்லி, உருளைக்கிழங்கு, முறுங்கைக்காய், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

    பின் மட்டனுடன் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு தயிர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 6 முதல் 7 விசில் வைத்து நன்கு வேக வைக்கவும்.

    பின்னர் ஒரு அகன்ற வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், எள், பட்டை, கிராம்பு, நட்சத்திர மொக்கு, முந்திரி, சேர்த்து வதக்கவும்.

    வதங்கிய பின் அதனுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.

    வதக்கிய பொருட்களை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவு்ம்.

    மற்றொரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.

    இதனுடன் ஒரு வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம், தக்காளியுடன் அரைத்து வைத்துள்ள வெங்காய மசாலா கலவையை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

    அதனுடன் குக்கரில் வேக வைத்து வைத்துள்ள  மட்டனை சேர்க்கவும்.

    பின்னர் ஒரு முருங்கைக்காய் அல்லது ஒரு உருளைகிழங்கு அதனுடன் நறுக்கி சேர்க்கவும்.

    மட்டன் வேக வைத்த தண்ணீருடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்கு கொதித்த பின்னர் கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால் சுவையான எள்ளு  மட்டன் குழம்பு ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×