search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தேங்காய்பால் மிளகு சிக்கன் குழம்பு
    X

    தேங்காய்பால் மிளகு சிக்கன் குழம்பு

    சிக்கனில் மிளகு தூள், தேங்காய் சேர்த்து குழம்பு செய்தால் அருமையாக இருக்கும். இந்த குழம்பை தோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - அரை கிலோ
    சின்னவெங்காயம் - 100 கிராம்
    தக்காளி - 2
    மிளகுதூள் - 4 ஸ்பூன்
    சீரகத்தூள் - 2 ஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
    தயிர் - 3 ஸ்பூன்
    தேங்காய்பால் - ஒரு கப்
    உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    எண்ணெய் - 3 ஸ்பூன்



    செய்முறை :

    சிக்கனை துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவி வைக்கவும்.

    கழுவிய சிக்கனில் உப்பு, தயிர், சிறிதளவு இஞ்சி பூண்டு சேர்த்து அரைமணிநேரம் ஊறவைக்கவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் இத்துடன் ஊறவைத்த சிக்கனை சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் சீரகம், மிளகுத்தூளை சேர்த்து நன்றாக கிளறவும்.

    அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு வேகவிடவும்.

    சிக்கன் வெந்தவுடன் அத்துடன் தேங்காய்பால் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து குழம்பு கெட்டியாகி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

    சுவையான தேங்காய்பால் மிளகு சிக்கன் குழம்பு ரெடி

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×