search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாலை நேர ஸ்நாக்ஸ் மெது பக்கோடா
    X

    மாலை நேர ஸ்நாக்ஸ் மெது பக்கோடா

    மாலை நேரத்தில் சூடான காப்பி அல்லது டீயுடன் சாப்பிட மெது பக்கோடா அருமையாக இருக்கும். இன்று இந்த மெது பக்கோடாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    கடலைமாவு - 100 கிராம்
    அரிசி மாவு - 50 கிராம்
    வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
    சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு
    பூண்டுப்பல் - 6
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    சுடுவதற்கு எண்ணைய் - 200 கிராம் 



    செய்முறை  :

    வெங்காயத்தை மெலிதாக வெட்டி வைக்கவும்.

    கறிவேப்பிலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து ஒன்றிரண்டாக தட்டி வைக்கவும். க

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெண்ணையை போட்டு கையால் நன்றாக பிசைந்து வைக்கவும்.

    பிறகு உப்பு, சோடா உப்பு, நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள இஞ்சி, பூண்டு, கடலைமாவு, அரிசிமாவு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம் இவற்றுடன் ஒரு கை தண்ணீர் தெளித்து பிசையவும்.

    தண்ணீர் தேவைப்பட்டால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்து மாவுக்கலவையை கொஞ்சம் தளர்வாக பிசைந்து கொள்ளவும்.  

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் மாவுக் கலவையை சிறிதாக எடுத்து உருட்டாமல் கடாய் கொள்ளும் அளவுக்கு போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு சிவந்ததும் எடுத்து விடவும்.   

    மீதமுள்ள மாவுக் கலவையையும் இதே போல் சுட்டு எடுத்து டிஸ்யூ பேப்பரில் வைக்கவும். எண்ணெய் நன்கு உறிஞ்சியவுடன் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.

    சுவையான மெது பக்கோடா ரெடி.  

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×