என் மலர்
பெண்கள் உலகம்

சூப்பரான மதிய உணவு பீன்ஸ் சாதம்
பீன்ஸ் உடலுக்கு மிகவும் நல்லது. இன்று பீன்ஸை வைத்து மதியம் சாப்பிட சூப்பரான வெரைட்டி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பிஞ்சான பீன்ஸ் - 200 கிராம்,
உதிர் உதிராக வடித்த சாதம் - 2 கப்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
[பாட்டி மசாலா] மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 கொத்து.
வறுத்து அரைக்க...
காய்ந்த மிளகாய் - 3,
துவரம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை :
பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுக்க கொடுத்த பொருட்களை வறுத்தெடுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெயை ஊற்றி பீன்ஸ், உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் மூடிவைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து அடிக்கடி கிளறி விடவும்.
பீன்ஸ் வெந்ததும் அரைத்த பொடி தூவி, சாதம், கறிவேப்பிலை, [பாட்டி மசாலா] மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
சூப்பரான பீன்ஸ் சாதம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story