என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு சூப்பரான சைடு டிஷ் சேனைக்கிழங்கை வறுவல். இப்போது சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேனைக்கிழங்கு - 1/2 கப்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மல்லி தூள் (தனியா தூள்) - 1/2 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...

    கடுகு - 1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    வறுத்து அரைப்பதற்கு...

    வரமிளகாய் - 2
    மல்லி(தனியா) - 1 டீஸ்பூன்
    சோம்பு - 1/2 டீஸ்பூன்
    பூண்டு - 4

    செய்முறை :

    * சேனைக்கிழங்கை சமமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும். நறுக்கிய சேனைக்கிழங்கை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, கிழங்கு நன்கு வெந்ததும் அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை, கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

    * வேக வைத்துள்ள சேனைக்கிழங்கை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் பொடி செய்த தூள் சேர்த்து, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    * பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் ஊற வைத்துள்ள சேனைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மொறுமொறுவென்று வரும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும்.

    * சூப்பரான சேனைக்கிழங்கு வறுவல் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கத்தரிக்காய் மசியல் சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும். இன்று கத்தரிக்காய் மசியல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய கத்தரிக்காய் - 5,
    தக்காளி - 2,
    புளி - கோலிக்குண்டு அளவு,
    உப்பு - தேவைக்கு.

    தாளிக்க...

    எண்ணெய் - தேவைக்கு,
    கடுகு - 1 டீஸ்பூன்,
    உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
    பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை,
    பெரிய வெங்காயம் - 1,
    பச்சை மிளகாய் - 4,
    காய்ந்த மிளகாய் -  2,
    துருவிய தேங்காய் - 1/4 மூடி,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது.

    செய்முறை :

    * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * காய்ந்த மிளகாயைக் கிள்ளி வைக்கவும்.

    * புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    * கத்தரிக்காயை நன்றாகக் கழுவி, காம்பை மட்டும் எடுத்து விட்டு சுற்றிலும் எண்ணெய் தடவவும். ஸ்டவ்வில் நெருப்பில் வாட்டவும். தோல் நன்றாகக் கருக்கும் அளவுக்கு வாட்ட வேண்டும். அதை எடுத்து ஆற வைக்கவும். ஆறியதும் தோலை நீக்கி சதையைத் திறந்து பூச்சி, புழு எதுவும் இல்லை என்பதை பார்த்துவிட்டு தனியாகப் பிசைந்து வைக்கவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் போட்டு தாளித்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் புளிக்கரைசலையும் சேர்க்கவும்.

    * அடுத்து அதில் கத்தரிக்காய் பிசைந்து வைத்ததை சேர்த்து உப்பு போடவும்.

    * நன்றாக அனைத்து சேர்ந்ததும் கடைசியாக கொத்தமல்லி இலை, தேங்காய்த் துருவல் தூவி இறக்கவும்.

    * சூப்பரான கத்தரிக்காய் மசியல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சில்லி பரோட்டா ரொம்ப பிடிக்கும். ஹோட்டலில் கிடைக்கும் சில்லி பரோட்டாவை வீட்டிலேயே எளியமுறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..
    தேவையான பொருட்கள் :

    பரோட்டா உதிர்த்தது - 2 (பெரியது)
    வெங்காயம் பெரியது - 1
    தக்காளி பெரியது - 1
    பச்சை மிள்காய் - 1
    குடமிளகாய் - பாதி
    டொமட்டோ சாஸ் - 2 ஸ்பூன்
    அஜினமோட்டோ - ஒரு சிட்டிகை (விரும்பினால்)
    சில்லி பவுடர் - கால் டீஸ்பூன்
    கரம் மசாலா பவுடர் - கால் டீஸ்பூன்
    எலுமிச்சை ஜூஸ் - 1-2 டீஸ்பூன்
    எண்ணெய் - 4 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு.
    ஸ்பிரிங் ஆனியன் அல்லது கொத்தமல்லி தழை அலங்கரிக்க - சிறிது.

    செய்முறை :

    * வெங்காயம், குடமிளகாய், தக்காளியை நீளவாக்கி வெட்டிகொள்ளவும்

    * ஸ்பிரிங் ஆனியன், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பரோட்டாவை உதிர்த்து கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி, டொமட்டோ சாஸ், குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

    * தேவைக்கு உப்பு சிறிது அஜினமோட்டோ சேர்த்து நன்கு பிரட்டி சிறிது நேரம் சிம்மில் வைக்கவும். நன்கு மசிந்து விடும்.

    * அடுத்து அதில் கரம்மசாலா, சில்லி பவுடர் சேர்த்து நன்றாக கிளறவும்.

    * அடுத்து பொடியாக உதிர்த்த பரோட்டாவை சேர்த்து நன்றாக கலந்து விடவும். புளிப்பு தேவையென்றால் 1-2 டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் சேர்க்கவும்.

    * கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி, ஸ்பிரிங் ஆனியன் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

    * சுவையான சில்லி பரோட்டா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மசாலா அரைத்து விட்டு சாம்பார் செய்தால் எட்டு ஊருக்கு மணக்கும். இன்று அரைத்து விட்ட வெங்காய சாம்பார் செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துவரம் பருப்பு - 200 கிராம்
    கடலை பருப்பு - 2 ஸ்பூன்
    உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
    தேங்காய் துருவியது - அரை மூடி
    கருப்பு எள் - 2 ஸ்பூன்
    தக்காளி - 100 கிராம்
    மிளகாய் வற்றல் - 6
    புளி - எலுமிச்சை அளவு
    வெந்தயம் - அரை ஸ்பூன்
    கடுகு - 1 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    பச்சை மிளகாய் - 3
    எண்ணெய் - 4 ஸ்பூன்
    சின்ன வெங்காயம் - 200 கிராம்
    மஞ்சள் பொடி - சிறிதளவு
    பெருங்காயம் - சிறிதளவு

    செய்முறை :

    * கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ப.மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும்.

    * சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

    * புளியை கரைத்து கொள்ளவும்.

    * துவரம் பருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு அதனுடன் மஞ்சள் பொடி, பெருங்காய தூள் சேர்த்து நன்றாக குழைய வேக வைக்கவும். வேக வைத்த பருப்பை மத்தினால் கடைந்து வைக்கவும்.

    * பிறகு கடாயில் எள்ளை, எண்ணெய் இல்லாமல் வாசனை வரும் வரை வறுத்து எடுத்து மிக்ஸியில் பொடித்து தனியே வைக்கவும்.

    * பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மிளகாய் வற்றல், கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பையும் வறுத்துக்கொண்டு, இதை அடுத்து தேங்காய் துருவலை போட்டு நன்கு சிவக்க வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு தண்ணீர் விட்டு அரைக்கவும்.

    * கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி விடவும். அடுத்தபடியாக தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதங்கிய பின்னர் அரைத்த தேங்காய் மசாலாவைப் போட்டு கிளறவும்.

    * அடுத்து அதில், கரைத்த புளியை ஊற்றி தேவையான உப்பு சேர்த்து மூடிவிட்டு, மேலும் கொஞ்ச நேரம் கொதித்ததும், அதனோடு கடைந்த பருப்பையும் கலந்து, மீண்டும் ஒரு கொதிக்க விடவும்.

    * இறக்கும் போது எள்ளு பொடி தூவி இறக்கினால் நன்கு வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.

    * குழம்பை இறக்கி விட்டு, மீதி எண்ணெயை ஒரு சிறிய கடாயில் விட்டுக் கடுகு, வெந்தயம், 2 மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் கொட்டி கொத்தமல்லி இலையை கிள்ளி போட்டு இறக்கவும்.

    * சுவையான அரைத்து விட்ட வெங்காய சாம்பார் சாப்பிட தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கு, பட்டாணியை வைத்து செட்டிநாடு ஸ்டைலில் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 200 கிராம்
    பச்சை பட்டாணி - 1 கப்
    பூண்டு - 5 பல்
    வெங்காயம் - 2
    தக்காளி - 1
    இஞ்சி - சிறிய துண்டு
    உப்பு - ருசிக்கு
    தனி மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
    கரம்மசாலா தூள் - 1/4 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிது
    கொத்தமல்லி - சிறிதளவு

    தாளிக்க :

    எண்ணெய் - தேவைக்கு
    கடுகு - 1/4 ஸ்பூன்
    உ.பருப்பு - 1/2 ஸ்பூன்
    சோம்பு - 1/4 ஸ்பூன் + 1/4 ஸ்பூன்

    செய்முறை  :

    * வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கு, பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    * பூண்டு, இஞ்சி, 1/4 ஸ்பூன் சோம்பை மிக்சியில் போட்டு கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, சோம்பை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த இஞ்சி விழுதை போட்டு கிளறவும்.

    * அடுத்து அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், கரம்மசாலா தூள், தனி மிளகாய் தூள் போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில் வேக வைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.

    * அனைத்து சேர்ந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    *  செட்டிநாடு உருளைக்கிழங்கு - பட்டாணி பொரியல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மணத்தக்காளி வற்றலை வைத்து குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    காயவைத்த மணத்தக்காளி வற்றல் - 25 கிராம்,
    காய்ந்த மிளகாய் - 2,
    புளி - ஒரு எலுமிச்சை அளவு,
    சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்,
    வெந்தயம், கடுகு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய் -  4 டீஸ்பூன்,
    உப்பு - சிறிதளவு.

    செய்முறை :

    * புளியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின் மணத்தக்காளி வற்றலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * அடுத்து அதில் சாம்பார் பொடி சேர்த்துக் கிளறவும்.

    * அடுத்து இதில் புளிக்கரைசலை விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

    * குழம்பு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வந்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

    குறிப்பு: மழைக்கால இரவில் சூடான சாதத்தில் மணத்தக்காளி வற்றல் குழம்பும், நெய்யும் சேர்த்து சாப்பிட்டால்… அருமையான ருசியுடன் இருக்கும். சுட்ட அப்பளம் தொட்டு சாப்பிடலாம். மணத்தக்காளி காய், கீரை இரண்டும் வயிற்றுப்புண்ணை ஆறவைக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முருங்கைக்காயை சாம்பார், புளிக்குழம்பில்தான் போடுவோம். ஆனால் முருங்கைக்காயை வைத்து கூட்டு வச்சு பாருங்க.. அதோட சுவையும் மணமும் சும்மா சுண்டியிழுக்கும்.
    தேவையான பொருட்கள் :

    முருங்கைக்காய் - 5
    பெரிய வெங்காயம் - 2
    பூண்டு - 10 பல்
    பெரிய தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 2
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    சோம்பு, சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன்.

    தாளிக்க :

    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    கடுகு, உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது.

    அரைக்க :

    தேங்காய்த் துருவல் - 6 டேபிள்ஸ்பூன்

    செய்முறை :

    * தேங்காயை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    * வெங்காயம், தக்காளியை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.

    * கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * முருங்கைக்காயை இரண்டு அல்லது மூன்று இஞ்ச் அளவுக்கு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

    * முதலில் வெங்காயம், பூண்டை மிக்சியில் போட்டு கொர கொரப்பாக அரைத்து தனியாக வைக்கவும். அடுத்து அதில் தக்காளியையும் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அடுத்து அரைத்த வெங்காயம், பூண்டு, போட்டு நன்றாக வதக்கவும்..

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து மூடி போட்டு சிறிது வதக்க வேண்டும்.

    * அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்பு, சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    * அடுத்து அதில் முருங்கைக்காய், சிறிது தண்ணீர் சேர்த்து உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.

    * கொதி வந்தவுடன் கொர கொரப்பாக அரைத்த தேங்காயை சேர்க்கவும்.

    * இப்போது குக்கரை மூடி ஒரு விசில் விடவும். ஒரே விசில் தான் பக்குவமாக வெந்து விடும். அடுப்பை அணைக்கவும்.

    * வெந்ததும் மூடியை திறந்து கொத்தமல்லி தழை தூவி நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.

    * சுவையான முருங்கைக்காய் கூட்டு தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கருணைக்கிழங்கில் பொரியல், வறுவல் செய்து இருப்போம். இன்று கருணைக்கிழங்கை வைத்து காரசாரமான காரக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கருணைக்கிழங்கு - கால்கிலோ
    தேங்காய் - கால் முடி
    தக்காளி - ஒன்று
    வெங்காயம் - ஒன்று
    பூண்டு -  ஒன்று
    புளி - எலுமிச்சையளவு
    மிளகாய்த்தூள்  - ஒரு மேசைக் கரண்டி
    மஞ்சத்தூள் - அரைத் தேக்கரண்டி
    தனியாத்தூள் - இரண்டு தேக்கரண்டி
    மிளகு, சீரகத்தூள்  -  தலா ஒரு தேக்கரண்டி
    கறிவேப்பிலை - இரண்டு கொத்து
    கடுகு -  ஒரு தேக்கரண்டி
    காய்ந்தமிளகாய் - இரண்டு
    எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

    செய்முறை :

    * கருணைக்கிழங்கை தோல் சீவி துண்டுகளாக்கி கொதிக்கும் நீரில் போட்டு அரைவேக்காடாக வேகவைத்து வடித்து வைக்கவும்.

    * தேங்காயுடன் வெங்காயத்தை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

    * புளியை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்.

    * பூண்டை நசுக்கி வைக்கவும்.

    * தக்காளியை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து புளிக்கரைசலில் சேர்த்து நன்கு கரைத்து அதனுடன் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு தேவையான நீரை ஊற்றி கலக்கி வைக்கவும்.

    * கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின் பூண்டைப் போட்டு நன்கு வதக்கிய பின் அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

    * புளி கரைசல் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் எல்லாத் தூள்வகைகளையும் போட்டு பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விடவும்.

    * பின்பு அதில் கருணைகிழங்கு துண்டுகளையும் போட்டு தேவையான உப்பைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

    * குழம்பு நன்கு கொதித்து பச்சை வாசனை நீங்கியதும், ஒரு கொத்து கறிவேப்பிலையைப் போட்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

    * காரசாரமான கருணைக்கிழங்கு காரக்குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரளாவில் மீன் குழம்பு சூப்பராக இருக்கும். அதிலும் மீன் மொய்லி இன்னும் அருமையாக இருக்கும். இப்போது கேரளா ஸ்டைல் மீன் மொய்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாவல் மீன்/கிங்பிஷ் - 250 கிராம்
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய - 2
    தக்காளி - 1
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் பால் - 1 கப்
    கறிவேப்பிலை - சிறிது
    கடுகு - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.

    * தக்காளியை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    * மீனை நன்கு சுத்தமாக கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் தேங்காய் பால், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

    * குழம்பானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்துள்ள மீன் துண்டுகள், தக்காளியை சேர்த்து, 10 நிமிடம் குறைவான தீயில் மூடி போட்டு கொதிக்க விட வேண்டும்.

    * குழம்பு திக்கான பதம் வந்தவுடன் அதில் மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி கிளறி, இறக்கவும்.

    * சுவையான கேரளா ஸ்டைல் குழம்பான மீன் மொய்லி ரெடி!!!

    * இது சாதத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

    குறிப்பு :

    இந்த குழம்பிற்கு வாவல் மீன் அல்லது கிங்பிஷ் மீனைக் கொண்டு செய்யலாம். தக்காளி துண்டுகளாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாளை சன்டே விடுமுறை என்பதால் அனைவரும் வீட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு மாலையில் வாழைக்காய் பஜ்ஜி செய்து கொடுத்து அசத்துங்கள்.
    தேவையான பொருட்கள் :

    வாழைக்காய் - 1
    கடலை மாவு - 1 கப்
    அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    சோடா உப்பு - 1 சிட்டிகை
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    ஓமம் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
    தண்ணீர் - 1/2 கப்

    செய்முறை :

    * வாழைக்காயை தோலுரித்து, நீளமாக வெட்டிக்கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு, ஓமம், மிளகாய் தூள், உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

    * எண்ணெயானது சூடானதும், அதில் நீளமாக வெட்டி வைத்துள்ள வாழைக்காயை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    * சூடான வாழைக்காய் பஜ்ஜி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு ப்ரைடு ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் சைனீஸ் ப்ரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 2
    எண்ணெய் - 2  1 /2 மேசைக்கரண்டி
    முட்டை - 1  - 2 (முட்டையை லேசாக அடித்துக் கொள்ளவும்)
    நல்லெண்ணெய் -1 /4 தேக்கரண்டி
    சிக்கன் எலும்பில்லாதது - 1  கப்
    கேரட் - 1 /2 கப்
    பட்டாணி - 1 /2 கப்
    வெங்காயத்தாள் (green onion ) - 4
    சோயா சாஸ் - 2  மேசைக்கரண்டி
    அரிசி - 4  கப்

    செய்முறை :


    * வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    * அரிசியை உதிரியாக வேகவைத்து ஆறவைத்து கொள்ளவும்.

    * வெங்காயத்தாள், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி வேக வைத்து கொள்ளவும். சாதம் நன்றாக ஆறினால்தான் ப்ரைடு ரைஸ் செய்வதற்கு நன்றாக இருக்கும்.

    * கடாயில் 1  மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பிரவுன் கலராகும் வரை வதக்கிக் கொள்ளவும். வதக்கிய வெங்காயத்தை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    * முட்டையுடன் நல்லெண்ணெய் கலந்து வைத்துக் கொள்ளவும்.

    * அதே கடாயில் 1 /2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடாயைச் சுற்றிலும் எண்ணெய் படருமாறு செய்யவும் , கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி கடாயைச் சுற்றிலும் படருமாறு செய்யவும். முட்டை மேலே எழும்பி வரும்போது அதை திருப்பிப் போட்டு வேக விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    * கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வேக வைத்துள்ள சிக்கன், கேரட், பட்டாணி மற்றும் வதக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும்.

    * இதனுடன் வேக வைத்து வைத்துள்ள சாதம், வெங்காயத்தாள், அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து 3  நிமிடங்கள் வதக்கவும்.

    * இதனுடன் 2  மேசைக்கரண்டி சோயா சாஸ் மற்றும் நறுக்கி வைத்துள்ள முட்டை சேர்த்துக் கலந்து 1 நிமிடம் வதக்கிப் பரிமாறவும்.

    * சூப்பரான சைனீஸ் ப்ரைடு ரைஸ் ரெடி.

    குறிப்பு :

    விருப்பத்திற்கேற்ப காய்கறிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சிக்கனுக்குப் பதிலாக இறால் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உருளைக்கிழங்கு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. அந்த உருளைக்கிழங்கை வைத்து பூரிக்கு தொட்டு கொள்ள ஈஸியான குருமா செய்வதென்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - அரை கிலோ
    வெங்காயம் - 2
    தக்காளி - 4
    பச்சை மிளகாய் - 3  
    பட்டை - 1 இன்ச்
    இலவங்கம் - 2
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மல்லி தூள் - 1 டீஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    தேங்காய் - 1/2 மூடி
    கசகசா - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து பாதி கிழங்கை மசித்து கொள்ளவும். மீதி கிழங்கை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * தேங்காயை துருவிக் கொள்ளவும்.

    * மிக்ஸியில் தேங்காய், கசகசா போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, இலவங்கம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

    * அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    * தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் அதில் மசித்த மற்றும் வெட்டி வைத்த உருளைக்கிழங்கு போட்டு வதக்கி, அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.

    * நன்கு கொதித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையைப் போட்டு கிளறி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு இறக்க வேண்டும்.
    * இப்போது சுவையான உருளைக்கிழங்கு குருமா ரெடி!!!

    * இதனை சாதம், சப்பாத்தி அல்லது பூரியுடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×