என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    வடை மோர் குழம்பு செய்வது மிகவும் சுலபம். சூப்பராகவும் இருக்கும். இன்று வடை மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மெதுவடை அல்லது பருப்பு வடை - 10
    தயிர் - 2 கப்
    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
    பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    ஊறவைத்து நைசாக அரைக்க :

    அரிசி - 1 ஸ்பூன்
    துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 3
    சீரகம் - 1ஸ்பூன்

    கொரகொரப்பாக அரைக்க :

    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பூண்டு - 5 பல்
    இஞ்சி - சிறிது துண்டு

    தாளிக்க :

    எண்ணெய் - 2 ஸ்பூன்
    கடுகு - கால் ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2



    செய்முறை :


    * அரிசி, துவரம் பருப்பை 30 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும்.

    * தக்காளி, வெங்காயம், இஞ்சியை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    * ஊறவைத்த அரிசி, துவரம் பருப்புடன், சீரகம், ப.மிளகாய் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் தயிர், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், 2 கப் தண்ணீர், அரைத்த அரிசி விழுது, உப்பு சேர்த்து நன்றாக கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் கொரகொரப்பாக அரைத்த விழுதை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் கரைத்து வைத்துள்ள தயிர் கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.

    * கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வடைகளை போடவும். வடைகளை போட்டவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

    * கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான வடை மோர் குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வித்தியாசமான குழம்பு செய்து சாப்பிட நினைப்போருக்கு மசாலா வடை குழம்பு ஏற்ற ஒன்றாக இருக்கும். இப்போது இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மசாலா வடை - 10
    வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 3
    மல்லிப் பொடி - 2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    துருவிய தேங்காய் - 5 டீஸ்பூன்
    சோம்பு - 1/2 டீஸ்பூன்
    முந்திரி - 5
    இஞ்சி - சிறு துண்டு
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    கிராம்பு - 2
    மிளகு - 1/4 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு மற்றும் முந்திரியை சேர்த்து வறுத்த பின் அதில் தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி, பின் இஞ்சி சேர்த்து வதக்கி இறக்கி, குளிர வைத்த பின் மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, கிராம்பு, மிளகு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி விட வேண்டும்.

    * பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

    * அடுத்து அதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

    * குழம்பானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மசாலா வடைகளைப் போட்டு, ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தழை துவி இறக்கினால், மசால் வடை குழம்பு ரெடி!!!

    * இந்த குழம்பை சாதம், சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த மிளகு வடை, ஆஞ்சநேயருக்கு வடைமாலையாக சாற்றுவதற்காக கோவில்களில் செய்யப்படுவது. இந்த வடையை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உளுந்தம் பருப்பு - 1 கப்
    மிளகு - 1 டீஸ்பூன்
    அரிசி மாவு - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்றவாறு
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு



    செய்முறை :

    * உளுந்தம் பருப்பை 30 நிமிடங்கள் ஊறவைத்து, கழுவி, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, ஒரு வடிகட்டியில் போட்டு வைக்கவும்.

    * மிளகை கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

    * மிக்ஸியில் உளுந்தம் பருப்பை போட்டு, தண்ணீர் எதுவும் சேர்க்காமல், கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    * அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் அரிசி மாவு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.

    * ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு சுத்தமான ஈரத்துணியில், ஒரு சிறு எலுமிச்சம் பழ அளவிற்கு மாவை எடுத்து வைத்து, மெல்லிய வடையாகத் தட்டவும். வடையை துணியிலிருந்து கவனமாக எடுத்து, காய்ந்த எண்ணெயில் போட்டு, நன்றாக சிவக்கும் வரை பொரித்தெடுக்கவும்.

    * மிளகு வடை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள காரசாரமான சட்னி இருந்தால் சூப்பராக இருக்கும். இன்று காரசாரமான பச்சை மிளகாய் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை மிளகாய் - 10
    பூண்டு - 10 பல்
    வெங்காயம் - 1 பெரியது
    புளி - நெல்லிக்காய் அளவு
    எண்ணெய் - 1 ஸ்பூன்
    உப்பு - தேவைக்கு

    தாளிக்க :

    எண்ணெய் - 1 ஸ்பூன்
    கடுகு, உளுந்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை :

    * பூண்டை தோல் நீக்கி வைக்கவும்.

    * வெங்காயத்தை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

    * அடுத்து அதில் புளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி ஆற வைக்கவும்..

    * நன்றாக ஆறியதும் உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கொட்டவும்.

    * சுவையான பச்சைமிளகாய் சட்னி ரெடி.

    * இதனை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்,

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் டீ அல்லது காபி குடிக்கும் போது காரமாக எதையேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது சற்று வித்தியாசமாக வெண்டைக்காய் சிப்ஸ் செய்து சுவையுங்கள்.
    தேவையான பொருட்கள் :

    பிஞ்சு வெண்டைக்காய் - 20,
    கரம்மசாலா தூள் - கால் டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
    மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்,
    பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்,
    அரிசி மாவு - 1 டீஸ்பூன்,
    சோள மாவு (கார்ன்ஃப்ளவர்) - கால் டீஸ்பூன்,
    கடலை மாவு - 3 டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    * வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் நன்றாக துடைத்து விட்டு, நீள துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். வெண்டைக்காயில் சிறிதும் தண்ணீர் இருக்கக்கூடாது.

    * நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கரம் மசாலா, அரிசி மாவு, மல்லித் தூள், சோள மாவு, மிளகாய் தூள் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

    * கடாயில் எண்ணெய் வைத்துக் காய்ந்ததும், வெண்டைக்காய்களை அதில் சிறிது, சிறிதாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும். வித்தியாசமான சுவையில் அசத்தும், இந்த சிப்ஸ்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சைவ பிரியர்களுக்கு காளான் மிகவும் பிடிக்கும். இன்று செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.









    தேவையான பொருட்கள் :

    காளான் - 300 கிராம்
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    கொத்துமல்லி விதை(தனியா) - 1 ஸ்பூன்
    சீரகம் - 3/4 ஸ்பூன்
    சோம்பு - 1/2 ஸ்பூன்
    பட்டை- 2 இன்ச் துண்டு
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 2
    காய்ந்த மிளகாய் - 5 (அ) காரத்துக்கேற்ப
    தேங்காய் - கால் மூடி
    எண்ணெய்
    உப்பு
    கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை

    செய்முறை :

    * ஒரு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தனியா, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்ததும் வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி நன்றாக மசிந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி ஆறவைக்கவும். அனைத்தும் நன்றாக ஆறியதும் அதை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

    * காளானை நன்கு கழுவி, நீரில்லாமல் துடைத்து சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு போட்டு தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் அரைத்த மசாலா, மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    * குழம்பு நன்றாக கொதி வந்ததும், காளான் துண்டுகளை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

    * குழம்பு திக்கான பதம் வந்து எண்ணெய் பிரிய ஆரம்பித்தவுடன் கொத்துமல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.

    * சூப்பரான காளான் குழம்பு ரெடி.

    * இந்த குழம்பு சாதம், தோசை, இட்லி இவற்றுக்கு பொருத்தமாய் இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பட்டாணியில் போலிக் ஆசிட், நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், பச்சைப் பட்டாணியை வைத்து கட்லெட் செய்து சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை பட்டாணி - 3/4 கப்
    அரிசி மாவு - 1/2 கப்
    கடலை மாவு - 1/2 கப்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    பன்னீர் - 1/4 கப் (துருவியது)
    வெங்காயம் - 2
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    * வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    * ஒரு பௌலில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பச்சை பட்டாணியை போட்டு, அத்துடன் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், வெங்காயம், பச்சை மிளகாய், பன்னீர், உப்பு, மற்றும் தண்ணீர் ஊற்றி, சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

    * பின் அந்த கலவையை கட்லெட் போல், தட்டையாகவும் சற்று தடிமனாகவும் தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பிறகு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் ஓரளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள கட்லெட்டை, முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.

    * இப்போது பன்னீர் - பச்சை பட்டாணி கட்லெட் ரெடி!!!

    * இதனை தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக பட்டாணி பன்னீர் கிரேவி சூப்பராக இருக்கும். இன்று பட்டாணி பன்னீர் கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பச்சை பட்டாணி - 1 கப்
    பன்னீர் - 100 கிராம்  
    வெங்காயம் - 2
    பூண்டு - 6 பற்கள்
    இஞ்சி - சிறிய துண்டு
    பச்சை மிளகாய் - 1
    மல்லி தூள் - 2 டீஸ்பூன்
    கிராம்பு - 2
    சீரகம் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - 2 டீஸ்பூன்
    தக்காளி - 4 (நறுக்கியது)
    கொத்தமல்லி - சிறிது
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * பன்னீரை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * வெங்காயம், பூண்டு, ப,மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பன்னீரை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின் அதே வாணலியில் கிராம்பு, சீரகம் சேர்த்து தாளித்து, இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிய பின்னர் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.

    * அடுத்து அதில் மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.

    * கலவையானது நன்கு வதங்கியதும், அதில் பச்சை பட்டாணியை சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

    * பட்டாணியானது நன்கு வெந்ததும், அதில் பன்னீரை சேர்த்து கிளறி, 5 நிமிடம் மூடி வைத்து இறக்கும் போது கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

    * சுவையான பட்டாணி பன்னீர் கிரேவி ரெடி!!!

    * இதனை சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மொச்சையை பொரியல் செய்து சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும். இன்று மொச்சை பொரியலை எப்படி சுவையாக செய்வதென்று தெரிந்து கொள்ளுங்கள்.
    தேவையான பொருட்கள் :

    மொச்சை - 1 கப்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பூண்டு - 2 பற்கள்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...

    சீரகம் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    பச்சை மிளகாய் - 1
    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    செய்முறை :

    * வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மொச்சையை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு தூவி, குக்கரை மூடி வேக வைத்து கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின், பெருங்காயத் தூள் மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் சாம்பார் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு தூவி நன்கு பிரட்டி விட வேண்டும்.

    * அடுத்து, அதில் வேக வைத்துள்ள மொச்சையை சேர்த்து மசாலாவானது மொச்சையில் ஒன்று சேர நன்கு பிரட்டி இறக்கினால், மொச்சை பொரியல் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குஜராத்தியர்களின் விருப்ப உணவான இது சத்தான உணவும் கூட. இந்த டோக்ளாவை எப்படி எளிய முறையில் செய்யலாம் என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரவை - 1 டம்ளர்
    தயிர் - 2 தேக்கரண்டி
    பச்சைமிளகாய் - 2
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
    ஈனோ(ப்ரூட் சால்ட்) - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் பொடி - சிறிதளவு
    கறிவேப்பிலை - காம்பு நீக்கி பொடியாக நறுக்கியது

    தாளிக்க :

    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - 4 இலைகள்

    செய்முறை :

    * ரவையை லேசாக வறுக்கவும் (சிவக்கத் தேவையில்லை, பச்சை வாசனை போகும் அளவிற்கு வறுத்தால் போதும்)

    * பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    * ரவை, பச்சைமிளகாய், தயிர், சீரகம், எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, ஈனோ சால்ட் அனைத்தையும் ஒன்றாக இட்லி மாவு பதத்திற்குக் கரைக்கவும்.

    * வாயகன்ற பாத்திரத்தில் 1 டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும்.

    * வட்ட வடிவத் தட்டோ, பாத்திரமோ அதில் எண்ணெயைத் தடவி கரைத்த மாவைக் கொட்டி அடுப்பில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.

    * வாணலியில் எண்ணெயிட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வைத்துக் கொள்ளவும்.

    * ரவை வெந்து விட்டதா என்பதைப் பார்க்க ஒரு குச்சியை உள்ளே விட்டுக் கண்டறியலாம்(குச்சியில் மாவு ஒட்டி இருந்தால் கூட 2 நிமிடங்கள் வேக வைக்கலாம்)

    * வெந்ததை வெளியில் எடுத்து ஒரு அகலமான தட்டில் திருப்பிப் போடவும். வட்ட வடிவத்தில் இருக்கும் டோக்ளாவைச் சிறு சிறு சதுரங்களாக்கி தாளித்த கடுகினைத் தெளிக்கவும். அல்லது துண்டுகளாக்கிய டோக்ளாவை கடுகு தாளிசத்தில் லேசாகப் பிரட்டி எடுக்க சுவையான டோக்ளா தயார்.

    * இது குஜராத்தியர்களின் சிற்றுண்டி வகை.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பேல் பூரி மிகவும் பிடிக்கும். சுவையும், சத்துக்களும் மிகுந்த இந்த பேல் பூரியை வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பொரி - 1 பாக்கெட்
    ஓமப்பொடி - 1/4 கிலோ
    வெங்காயம், தக்காளி - 2 தலா
    வெள்ளரிப் பிஞ்சு - 1
    கேரட் - 1
    சென்னா - 2 டேபிள்ஸ்பூன்
    நிலக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
    சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்
    உப்பு - 1/4 டீஸ்பூன்
    கறுப்பு உப்பு - 1/4 டீஸ்பூன்

    இனிப்பு சாஸ் தயாரிக்க:

    பேரீச்சம் பழம் - 6
    வெல்லம் (பொடியாக நறுக்கியது) - 4 டேபிள் ஸ்பூன்
    புளி - சிறிய எலுமிச்சை அளவு
    உப்பு - 1 சிட்டிகை

    பச்சை சாஸ் தயாரிக்க:

    புதினா இலைகள் - 4 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லித் தழை - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 4
    உப்பு - 1/4 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லித் தழை - சிறிதளவு

    செய்முறை :

    * இனிப்பு சாஸ் தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் சிறிது தண்ணீருடன் அரைத்து வடிகட்டவும். அதை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

    * பச்சை சாஸ் தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் சிறிது நீருடன் மசிய அரைத்துக் கொள்ளவும்.

    * சென்னா, நிலக்கடலை ஆகியவற்றை வேக வைத்து கொள்ளவும்.

    * கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வெள்ளரி, கேரட்டை துருவிக் கொள்ளவும்.

    * பெரிய பாத்திரத்தில் பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி, துருவிய வெள்ளரிப் பிஞ்சு, கேரட் ஆகியவற்றுடன் வேக வைத்த சென்னா, நிலக்கடலை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    * பிறகு அதனுடன் இனிப்பு சாஸ், பச்சை சாஸ், சாட் மசாலா, கறுப்பு உப்பு, உப்பு சேர்த்து மேலும் குலுக்கி கலக்கவும்.

    * அடுத்து அதில் பொரி சேர்த்து மேலும் குலுக்கி கலந்துகொள்ளவும்.

    * கடைசியாக அதில் மேல் கொத்தமல்லி தழை, ஓமப்பொடி தூவிப் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எளிதில் சமைத்து முடிக்க ஒரு சிறந்த குழம்பு என்றால் அது பூண்டு புளி குழம்பு தான். இப்போது இந்த பூண்டு புளிக்குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பூண்டு - 100 கிராம்
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    தக்காளி - 2 (பெரியது)
    வெந்தய பொடி - 1/2 டீஸ்பூன்
    குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
    தேங்காய் பால் - 1/2 கப் (சற்று கெட்டியானது)
    புளி - 1 எலுமிச்சை அளவு
    கறிவேப்பிலை - சிறிது
    நல்லெண்ணெய் - 50 கிராம்
    சமையல் எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * பூண்டை நன்கு சுத்தமாக தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.

    * வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.

    * புளியை நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டுகளை சேர்த்து சற்று பொன்னிறமாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் குழம்பு மிளகாய் தூள், சிறிது தண்ணீர் (அதிக அளவு ஊற்றி விட வேண்டாம்) மற்றும் வேண்டிய அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

    * குழம்பானது நன்கு கொதித்ததும், கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.

    * அடுத்து அதில் தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க வைக்கவும்.

    * குழம்பு நன்கு கொதித்து ஓரளவு கெட்டியானதும், அதில் நல்லெண்ணெயை ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கி விடவும்.

    * இப்போது சுவையான பூண்டு புளி குழம்பு தயார்!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×