என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    காராமணியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று காராமணியை வைத்து எளிய முறையில் கர்நாடகா ஸ்டைலில் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி -  ஒரு கப்,
    காராமணி பயறு - கால் கப்
    சின்ன வெங்காயம் - 100 கிராம்,
    தக்காளி - 2,
    பூண்டு - 10 பல்,
    சீரகம் -  ஒரு டீஸ்பூன்,
    மிளகாய் வற்றல் - 6,
    தனியா தூள் - 1 ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :


    * சின்ன வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

    * பூண்டை தோல் நீக்கி ஒன்றும் பாதியாக தட்டிக்கொள்ளவும்.

    * காராமணியை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுக்கவும்.

    * வறுத்த காராமணியில் பாதியளவு எடுத்து, அதனுடன் மிளகாய் வற்றல் சேர்த்து ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பூண்டை போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தனியா தூள், தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் பிறகு களைந்த அரிசி, உப்பு, அரைத்த வைத்திருக்கும் காராமணி, மிளகாய் பொடி, மீதமுள்ள காராமணி சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * அடுத்து அதில் இரண்டு கப் தண்ணீர், கொத்தமல்லி சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வந்ததும் இறக்கவும்.

    * சூப்பரான கர்நாடகா ஸ்டைல் காராமணி ரைஸ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சோளா பூரி மிகவும் பிடிக்கும். ஹோட்டலில் கிடைக்கும் சோளா பூரியை வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 1 கப்
    தயிர் - 2 ஸ்பூன்
    ஆப்பசோடா - ஒரு பின்ஞ்
    உப்பு - ஒரு தேக்கரண்டி
    எண்ணெய் - அரை தேக்கரண்டி



    செய்முறை :

    * ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் உப்பு, எண்ணெய், ஆப்பசோடா, தயிர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து 2 மணிநேரம் ஊற வைக்கவும்.

    * பிசைந்த மாவை சிறிய எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். அதை சப்பாத்தி கட்டையில் வைத்து நன்கு பெரிதாக தேய்த்துக் கொள்ளவும்.

    * தேய்த்ததும் வட்டமாக வருவதற்கு ஒரு வட்டமான மூடியை மாவில் வைத்து அழுத்தி வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்திருக்கும் பூரியை போட்டு வெள்ளை நிறத்தில் பொரித்து எடுக்கவும்.

    * சுவையான சோளா பூரி தயார்.

    * இதற்கு தொட்டு கொள்ள சென்னா மசாலா சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு தினமும் ஒவ்வொரு வகையான சாதம் செய்து கொடுக்கலாம். இன்று சத்தான கொத்தமல்லி புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கொத்தமல்லி - ஒரு கட்டு
    பாசுமதி அரிசி - இரண்டு கப்
    வெங்காயம் - 2
    தக்காளி - 3
    இஞ்சி - ஒரு துண்டு
    பூண்டு - எட்டு பல்
    பச்சை மிளகாய் - ஐந்து
    எண்ணெய் - தேவையான அளவு
    பட்டை - ஒன்று
    லவங்கம் - ஒன்று
    நெய் - தேவைக்கு



    செய்முறை :

    * தக்காளி, வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கொத்தமல்லியை சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்.

    * அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

    * சுத்தம் செய்து நறுக்கிய கொத்தமல்லி, தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் லவங்கம், பட்டை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த பேஸ்டு, உப்பு போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.

    * அடுத்து அதில் கழுவி வைத்த அரிசி போட்டு 5 நிமிடம் வதக்கவும்.

    * பின்னர் அதில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து 3 விசில் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான கொத்தமல்லி புலாவ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தக்காளி ஊறுகாய் செய்வது மிகவும் சுலபமானது. தோசை, சப்பாத்தி, இட்லி, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சுவையான தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நன்கு பழுத்த நாட்டுத் தக்காளி - ஒரு கிலோ,
    பூண்டு -  100 கிராம்,
    காய்ந்த மிளகாய் -  15,
    மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்,
    துருவிய வெல்லம் -  3 டேபிள்ஸ்பூன்,
    நல்லெண்ணெய் - 150 கிராம்,
    கடுகு -  2 டேபிள்ஸ்பூன்,
    வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    கல் உப்பு - தேவைக்கேற்ப,



    செய்முறை :

    * தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பூண்டை தோல் உரித்து வைக்கவும்.

    * வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய், வெந்தயம், கடுகை தனித்தனியாக போட்டு வறுத்து, இறுதியில் தேவையான அளவு உப்பையும்(தக்காளிக்கு தேவையான அளவு) வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    * அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து 100 கிராம் எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டை முழுதாக போட்டு வதக்கவும்.

    * பூண்டு நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து (நீர் விடாமல்) வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கி வரும் போது மஞ்சள்தூள், வெல்லம் சேர்க்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கி எல்லாம் சேர்ந்து சுருண்டு வரும்போது பொடித்த பொடியைத் தூவி, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

    * இரண்டு கொதி வந்ததும் மீதியுள்ள 50 கிராம் நல்லெண்ணெயை ஊற்றிக் கிளறி இறக்கவும்.

    * எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து ஆறியவுடன் காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.

    * சூப்பரான தக்காளி ஊறுகாய் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கச்சோரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று சீஸ், கார்ன் வைத்து கச்சோரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா - இரண்டு கப்
    சீஸ் - 2௦௦ கிராம்
    ஸ்வீட் கார்ன் - இரண்டு கப்
    இஞ்சி, பூண்டு விழுது - இரண்டு டீஸ்பூன்
    கரம் மசாலா - இரண்டு டீஸ்பூன்
    எலுமிச்சை பழம் சாறு - ஒரு டீஸ்பூன்
    உப்பு - தேவைகேற்ப
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    * ஸ்வீட் கார்னை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    * சீஸை துருவிக் கொள்ளவும்.

    * மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அடித்து பிசைந்து, (சப்பாத்தி மாவு பதத்தில்) அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா, அரைத்த கார்ன், உப்பு சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கி ஆறவிடவும்.

    * மசாலா நன்றாக ஆறியதும் அதில் துருவிய சீஸை சேர்த்து கிளறவும்.

    * பிசைந்து வைத்துள்ள மாவை பூரியாக திரட்டி, கார்ன் கலவையை நடுவில் வைத்து மூடி, அதிக அழுத்தம் தராமல் தட்டி வைக்கவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்த கச்சோரிகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    * சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் சீஸ் கார்ன் கச்சோரி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    செட்டிநாடு முறையில் காளான் மசாலா செய்தால் சூப்பராக இருக்கும். செய்வதும் மிகவும் எளிமையானது. இன்று இந்த செட்டிநாடு காளான் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காளான் - அரை கிலோ
    எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
    பட்டை - ஒன்று
    லவங்கம் - ஒன்று
    ஏலக்காய் - ஒன்று
    சின்ன வெங்காயம் - 200 கிராம்
    தக்காளி - இரண்டு
    இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - இரண்டு
    கறிவேப்பில்லை - சிறிதளவு
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய் தூள் - இரண்டு டீஸ்பூன்
    தனியா தூள் - இரண்டு டீஸ்பூன்
    உப்பு - தேவைகேற்ப
    மிளகு தூள் - அரை டீஸ்பூன்
    சீரக தூள் - அரை டீஸ்பூன்
    சோம்பு தூள் - அரை டீஸ்பூன்
    கரம் மசாலா - அரை டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * பின், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, மிளகு தூள், சீரக தூள், சோம்பு தூள், கரம் மசாலா சேர்த்து கலந்து தண்ணீர் சிறிதளவு ஊற்றி கொதிக்கவிடவும்.

    * பிறகு அதில் காளான் சேர்த்து வதக்கவும். காளான் 10 நிமிடத்தில் வெந்து விடும்.

    * காளான் நன்றாக சுருங்கி வந்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    * சூப்பரான சூப்பரான செட்டிநாடு காளான் மசாலா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். சாக்லேட்டுடன் உலர்ந்த பழங்களை சேர்த்து சத்தான சுவையான சாக்லேட் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பொடித்த டார்க் சாக்லேட் - 1 1/2 கப்
    வெண்ணெய் - அரை கப்
    சர்க்கரை - சிறிது
    பாதாம், வால்நட், முந்திரி, பேரீச்சம்பழம், காய்ந்த பேரீச்சம், காய்ந்த திராட்சை, அத்திப்பழம்(முழுநட்ஸ் மற்றும் உலர்ந்த பழங்கள்) - தேவைக்கு
    பட்டர் பேப்பர், கலர் பேப்பர், சாக்லேட் பேப்பர் - தேவைக்கு



    செய்முறை :

    * நட்ஸ், உலர்பழங்களை சற்று பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    * ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதன் உள்ளே ஒரு சிறிய பாத்திரத்தில் சாக்லேட் துண்டுகள், வெண்ணெய், சர்க்கரை சேர்த்து அடிப்பாத்திரத்தை அடுப்பில் மேல் வைத்து மிதமான தீயில் கொதிக்க விடவும். இது கரைந்து கெட்டியான வரும் போது இறக்கவும்.

    * சூடாக இருக்கும் போது நட்ஸ், உலர்ந்த பழங்கள் அனைத்தையும் அதில் போட்டு நன்றாக கலந்து பட்டர் பேப்பரில் மேல் பரப்பி வைக்கவும்.

    * பின்னர் இதை தனித்தனியா டிரேயில் வைத்து பிரிட்ஜில் 5 மணிநேரம் குளிர வைக்கவும்.

    * நன்றாக செட் ஆனவுடன் எடுத்து துண்டுகள் போட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

    * நட்ஸ் சாக்லேட் ரெடி.

     - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காய்கறிகளுடன் தேங்காய் பால் சேர்த்து செய்யும் போது குழம்பு மிகவும் ருசியாக இருக்கும். இப்போது இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    தேங்காய் - 1
    உருளைக்கிழங்கு - 4
    கத்திரிக்காய் - 4
    முருங்கைக்காய் - 1
    எலுமிச்சை - 1/2
    பூண்டு - 1
    மிளகாய் - 4
    மல்லி - 2 டீஸ்பூன்
    சீரகம் - 2 டீஸ்பூன்
    சோம்பு - 1/2 டீஸ்பூன்
    பட்டை - 1
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 2
    கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை:

    * உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், முருங்கைக்காயை சமமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    * மிக்ஸியில் மிளகாய், மல்லி, சீரகம் ஆகியவற்றை சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    * தேங்காயை துருவி, மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து, வடிகட்டி பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் மீண்டும் அதில் தண்ணீர் ஊற்றி, தனியாக ஒரு பாத்திரத்தில் இரண்டாவது பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * இரண்டாவது பாலில் அரைத்து வைத்துள்ள மிளகாய், மல்லி பேஸ்ட்டை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதில் காய்கறிகளை சேர்த்து, உப்பு சிறிது தூவி, அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.

    * காய்கறிகளானது வெந்ததும், அதில் முதல் தேங்காய் பாலை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

    * மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் குழம்பில் கொட்ட வேண்டும்.

    * இறுதியில் அதில் எலுமிச்சையை பிழிந்து இறக்கினால், தேங்காய் பால் காய்கறி குழம்பு ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு முந்திரி பக்கோடா செய்து கொடுக்கலாம். இப்போது இந்த முந்திரி பக்கோடாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - ஒரு கப்,
    அரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 3
    புதினா - சிறிதளவு
    முழு முந்திரி - 100 கிராம்,
    உப்பு - தேவைக்கேற்ப,
    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் -  பொரிப்பதற்கு தேவையான அளவு.



    செய்முறை :

    * ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    * புதினாவை அரைத்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, .ப.மிளகாய், புதினா விழுது, முந்திரி, உப்பு சேர்த்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துப் உதிரியாக பிசைந்து கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்’மில் வைத்து, பிசைந்து வைத்த மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்து எடுக்கவும்.

    * எண்ணெயை வடியவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் பத்திரப்படுத்தவும்.

    * சூப்பரான முந்திரி பக்கோடா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று சாமை அரிசியை வைத்து சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    சாமை அரிசி - ஒரு கப்,
    பூண்டு - 2 பல்,
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
    பட்டை - 2,
    ஏலக்காய், பிரியாணி இலை - தலா 1,
    லவங்கம் - 3,
    கலந்த காய்கறி துண்டுகள் (கேரட், உருளைக் கிழங்கு, பீன்ஸ்) - 2 கப்,
    பச்சைப் பட்டாணி - கால் கப்,
    மிளகாய்த் தூள் - கால் டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    நெய் - ஒரு டீஸ்பூன்,
    கொத்தமல்லித் தழை, புதினா - சிறிதளவு,
    முந்திரி - 5,
    பெரிய வெங்காயம் - 1,
    உப்பு - ஒரு சிட்டிகை,
    தண்ணீர் - 3 கப்,
    தக்காளி - 1,
    தயிர் - சிறிதளவு,
    எலுமிச்சைப் பழம் - பாதி,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    * வெங்காயம், தக்காளி, புதினா, காய்கறிகள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சாமை அரிசியைக் கழுவி ஊறவைக்கவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் காய்கறிகள், பச்சைப் பட்டாணியைச்  சேர்த்துக் கிளறவும்.

    * அடுத்து தயிர், மிளகாய்த் தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும்.

    * பின்னர் மூன்று கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    * கொதி வந்தவுடன் ஊறவைத்த சாமை அரிசியைச் சேர்த்து, மிதமான சூட்டில் வேகவைக்கவும்.

    * அரிசி முக்கால் பாகம் வெந்தவுடன் நறுக்கிய புதினா, கொத்தமல்லி சேர்த்து, நெய் விட்டு, முந்திரியைத் தூவி ஐந்து நிமிடங்கள் மூடிவைக்கவும்.  

    * கடைசியாக எலுமிச்சைச் சாற்றை ஊற்றி, நன்றாகக் கிளறிப் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு சிக்கனில் போண்டா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று சிக்கன் போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் கைமா - கால் கிலோ,
    சின்ன வெங்காயம் - 50 கிராம்,
    போண்டா மாவு - 250 கிராம்,
    சிக்கன் மசாலா - 3 டேபிள்ஸ்பூன்,
    மஞ்சள்தூள் அரை - டேபிள்ஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    பூண்டு - 5 பல்,
    கறிவேப்பிலை - 2 ஆர்க்கு,
    சோம்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு,
    பொட்டுக்கடலை - 50 கிராம்,
    இஞ்சி - 2 சிறிய துண்டு,
    கொத்தமல்லித் தழை - சிறிதளவு.
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :

    * எலும்பில்லா சிக்கனை கொத்தி வாங்கவும். அதை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும்.

    * மிக்சியில் சின்ன வெங்காயம், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், சோம்பு, மஞ்சள்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு, சிக்கன் மசாலா, உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாக அரைத்த பின் கடைசியா சிக்கனை போட்டு அரைத்து எடுக்கவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய கொத்தமல்லித்தழை, அரைத்த சிக்கன் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும். சிக்கன் நன்றாக வெந்ததும், ஆறவிட்டு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் போண்டா மாவை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்து எடுக்கவும்.

    * சூப்பரான மாலைநேர ஸ்நாக்ஸ் ஸ்பைஸி சிக்கன் போண்டா ரெடி.

    * அரைத்து வெந்த சிக்கன் பஞ்சு போல் மிருதுவாக இருப்பதால், சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பருப்பு வடையை விட பட்டாணி பருப்பில் வடை செய்வதால் சூப்பராக இருக்கும். இன்று பட்டாணி பருப்பில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பட்டாணிப் பருப்பு - 200 கிராம்,
    கடலைப் பருப்பு - 50 கிராம்,
    அரிசி - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பெரிய வெங்காயம் - ஒன்று,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - தலா ஒரு டேபிள் ஸ்பூன்,
    இஞ்சித் துண்டுகள் - சிறிய துண்ட
    பச்சை மிளகாய் - 2,
    உப்பு - தேவைக்கேற்ப,
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.



    செய்முறை :


    * இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பட்டாணிப் பருப்பு, கடலைப்பருப்பு, அரிசி மூன்றையும் 2 மணி நேரம் ஊறவைத்து, உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக, கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    * அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிசைந்த மாவை வடைகளாகத் தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.

    * மாலை நேர ஸ்நாக்ஸ் பட்டாணி பருப்பு வடை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×