என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    கொஞ்சம் மெனக்கெட்டால், சுவையும் சுத்தமும் கொண்ட குழந்தைகள் விரும்பும் இந்த ஸ்நாக்ஸை வீட்டிலேயே செய்யலாம். இப்போது இந்த காராச்சேவு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - 1 கப்
    அரிசி மாவு - கப்
    மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
    பூண்டு - 6 பல்
    பெருங்காயம் - 1 சிட்டிகை
    சீரகம் - டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கடலை எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.



    செய்முறை :

    * கடலை மாவையும், அரிசி மாவையும் சலித்து வைக்கவும் (சிறு கற்கள் இருக்கும் பட்சத்தில் எண்ணெயில் போடும் போது வெடிக்கும் அபாயம் உள்ளது).

    * பூண்டை சிறிது தண்ணீர் தெளித்து மைய அரைத்துக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் மாவை போட்டு அதனுடன் சீரகம், உப்பு, பெருங்காயம், மிளகாய் தூள், பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெயை கொதிக்க விடவும்.

    * சேவுக்கு என்றே சிறு துளைகள் கொண்ட தனி அச்சு உள்ளது. அதைக் கொண்டு மாவு தேய்த்து, எண்ணெயில் நேரடியாக விடவும்.

    * பொன்னிறமாக பொரிந்ததும் எடுத்து, காற்று புகாத பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

    * மாலை நேர ஸ்நாக்ஸ் காராச்சேவு ரெடி.

    குறிப்பு :

    இந்த மாவில் விரும்பினால் சிறிது வெண்ணெய் சேர்க்கலாம். ஆனால், அதிக நாள் வைத்திருக்க முடியாது. மாவு பிசைந்த உடன் சேவு செய்துவிட வேண்டும். அல்லது கடுகடுப்பாக மாறிவிடும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அனைவரும் இறால் மிகவும் பிடிக்கும். இன்று இறால், முருங்கைக்காய் சேர்த்து சாப்பாட்டிற்கு தொட்டுக் கொள்ள சூப்பரான முருங்கைக்காய் இறால் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முருங்கைக்காய் - 1
    இறால் - ½ கிலோ
    வெங்காயம் - 1
    தக்காளி - 3
    கறிவேப்பிலை - சிறிதளவு
    மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
    கரம் மசால் பொடி - ½ டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    * இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கறிவேப்பிலை, மிளகு போட்டு தாளித்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் கொஞ்சம் வதங்கியவுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும்.

    * பின் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி நன்கு வதங்கி எண்ணெய் பிரியும் பதத்தில் இறால் சேர்த்து கிளறி விடவும்.

    * சிறிது நேரம் கழித்து முருங்கைக்காய் சேர்த்துக் கிளறி, கரம் மசாலா சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து மூடிவைத்து அடுப்பை மிதமான தீயில் 15 நிமிடம் வேக விடவும்.

    * சூப்பரான முருங்கைக்காய் இறால் தொக்கு ரெடி.

    * தேவையென்றால் இத்துடன் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து ருசிக்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பிடித்தமான இறாலுடன் காய்கறிகளை சேர்த்து ஸ்பிரிங் ரோல் செய்து மாலை நேர ஸ்நாக்ஸாக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    ஸ்பிரிங் ரோல் ஷீட் - 15
    இறால் - 15 ( பெரியது)
    கேரட் - 1
    சாலட் வெள்ளரி - 1
    முட்டைகோஸ் - 1/4 கப்
    சின்னவெங்காயம் - 50 கிராம்
    பூண்டு - 4 பல்
    இஞ்சி - 1 சிறுதுண்டு,
    பச்சை மிளகாய் - 1,
    வெங்காயத்தாள் - சிறிதளவு
    வெள்ளை மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி (கறுப்புமிளகு தூளும் சேர்க்கலாம்)
    சோயா சாஸ் - 1/4 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    எலுமிச்சைச்சாறு - 2 தேக்கரண்டி
    எண்ணெய் - பொரிப்பதற்கு



    ஓரங்களை ஒட்ட:

    மைதா - 1 மேசைக்கரண்டி
    தண்ணீர் - சிறிதளவு

    செய்முறை :

    * வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சின்னவெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மைதாவை சிறிதளவு தண்ணீர் பசை போல் கலந்து வைக்கவும்.

    * இறாலை நன்றாக சுத்தம் செய்து உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துப் பிசறி தனியாக வைக்கவும்.

    * கேரட், சாலட் வெள்ளரியை 2 இன்ச் நீளத்தில் மெல்லிய குச்சிகளாக வெட்டி கொள்ளவும்.



    * வாணலியில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சின்னவெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில் முட்டைகோஸ், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும்.

    * அடுத்து சோயா சாஸ் சேர்த்துக் கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.

    * ஸ்ப்ரிங் ரோல் ஷீட் மீது இக்கலவையில் சிறிதளவு வைத்து அதன் மீது ஒரு இறால், சிறிதளவு கேரட், வெள்ளரி வைத்து சுருட்டவும்.

    * ஓரங்களை மைதா தண்ணீர் கலவையால் ஒட்டி வைக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள ஸ்ப்ரிங் ரோல்களை போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    * இறால் ஸ்பிரிங் ரோல் ரெடி.

    * ஸ்ப்ரிங் ரோல் ஷீட்டை ஃப்ரீசரில் வைத்து இருந்து எடுத்து ஈரமான டவலில் சுற்றி வைக்கவும். இல்லையென்றால் ஷீட் காய்ந்து சுருட்ட வராது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு இறால், உருளைக்கிழங்கு மிகவும் பிடிக்கும். இந்த இரண்டையும் வைத்து சுவையான எளிதில் செய்யக்கூடிய பொரியல் ஒன்றை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 1/2 கிலோ
    உருளைக் கிழங்கு - 2
    மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
    வெங்காயம் - 1
    காய்ந்த மிளகாய் - 2
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை :

    * இறாலை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    * இறால், உருளைக் கிழங்கு அதனுடன் மிளகாய்த் தூள், உப்பு போட்டு நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் ஊற வைத்த இறால் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்.

    * இறால், உருளைக்கிழங்கு நன்றாக வெந்து பொன்னிறம் வந்ததும் எடுக்கவும்.

    * இறால் உருளைக் கிழங்கு பொரியல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஜிகிர்தண்டா சாப்பிட மதுரைக்கு போக வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே எளிய முறையில் ஜிகர்தண்டாவை செய்யலாம். இப்போது ஜிகர்தண்டாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - ஒரு லிட்டர்
    சர்க்கரை - 8 டேபிள் ஸ்பூன்
    சைனா கிராஸ்(China Grass) - 4 டேபிள் ஸ்பூன்
    ரோஸ் சிரப் - 1 டேபிள் ஸ்பூன்
    நன்னாரி சிரப் - 1 டேபிள் ஸ்பூன்
    ஐஸ்கிரீம் ஸ்கூப் (வெனிலா) - 1
    பால் கோவா - 2 டேபிள் ஸ்பூன்



    செய்முறை :

    * அடிகனமான வாணலியில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி அதனுடன் சர்க்கரை சேர்த்து மெல்லிய தீயில் கொதிக்க விட்டு, ரோஸ் கலர் சேர்க்கவும். பால் அரைலிட்டராக சுண்டும் வரை மிதமான தீயில் வைக்கவும். பால் நன்றாக சுண்டியதும் ஆற வைத்து பிரிஜ்ஜில் 6 மணி நேரம் வைக்கவும்.

    * சைனாகிராஸை சூடான நீரில் ஒரு கொதிவிட்டு இறக்கி, 2 மணி நேரம் அப்படியே வைக்கவும். 2 மணி நேரம் கழித்து ஜெல்லி போல உள்ள `சைனா கிராஸை’ சிறு துண்டுகளாக வெட்டி, பிரிஜ்ஜில் 6 மணி நேரம் குளிர வைக்கவும்.



    * ஒரு நீளமான கண்ணாடித் தம்ளரில் முதலில் குளிர்ந்த பாலை பாதியளவு ஊற்றவும்.

    * அடுத்து பாலின் மேல் ஜெல்லிகள் போல உள்ள சைனாகிராஸ் துண்டுகளைப் போடவும்.



    * பிறகு அடுத்தடுத்து அதன் மேல் ரோஸ் சிரப், நன்னாரி சிரப் ஊற்றவும்.

    * அடுத்து அதன் மேல் வெனிலா ஐஸ்கிரீம் ஸ்கூப்பை வைத்து அதன் மேல் பரவலாக பால்கோவாவைத் தூவி ஜில்லென்று பருகலாம்.

    * ஜில் ஜில் மதுரை ஜிகிர்தண்டா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ராஜ்மா மசாலா சாதம் மற்றும் ரொட்டியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். இன்று இந்த ராஜ்மா மசாலாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிகப்பு கிட்னி  பீன்ஸ்(ராஜ்மா பீன்ஸ் ) - 1 கப்
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 3
    மஞ்சள்தூள் - 1/4  தேக்கரண்டி
    மிளகாய்த்தூள் - 2  தேக்கரண்டி
    மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
    கரம் மசாலாத்தூள் - 1 /2  தேக்கரண்டி
    சீரகத்தூள் - 1 /2  தேக்கரண்டி
    இஞ்சி - பூண்டு - 2 ஸ்பூன்

    தாளிக்க :

    சீரகம் - 1/2  தேக்கரண்டி
    பட்டை - 1 சிறிய துண்டு
    பிரியாணி இலை - 1
    நெய் - தேவைக்கு
    எண்ணெய் - 2  மேசைக்கரண்டி



    செய்முறை :

    * ராஜ்மா பயிரை 8 மணி நேரம் வரை  ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    * தக்காளியை சுடு நீரில் ஊற வைத்து தோலுரித்து, நன்கு அரைத்துக் கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.

    * அடுத்து அதில் தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் வேக வைத்துள்ள ராஜ்மா, தேவையான அளவு தண்ணீர், சீரகத்தூள் மற்றும் கரம் மசாலாதூள் சேர்த்து 20 நிமிடங்கள் வரை குறைந்த தீயில் வேக வைக்கவும்.

    * திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * சூப்பரான ராஜ்மா மசாலா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பட்டாணி கோப்தா மிகவும் சுவைமிக்கது. இந்த கோப்தாவை ரொட்டி மற்றும் சாதத்துடன் சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    பட்டாணி - 3 கப்
    வெங்காயம் - 1
    கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை :

    * பட்டாணியை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

    * வெங்காயத்தை அரைத்து கொள்ளவும்.

    * கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பௌலில் மசித்து வைத்துள்ள பட்டாணியைப் போட்டு, அதோடு கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து, சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் அந்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

    * மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், சீரகம், மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில் அரைத்த வெங்காயத்தை சேர்த்து, சிறிது நேரம் வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் மற்றும் சிறிது உப்பை சேர்த்து நன்கு வதக்கி, 4 கப் தண்ணீர் விட்டு, கொதிக்க விடவும்.

    * நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் பொரித்து வைத்துள்ள பட்டாணி கலவையை போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் வேக விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * இப்போது சுவையான பட்டாணி கோப்தா ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்திக்கு தொட்டு கொள்ள முந்திரி சிக்கன் கிரேவி சூப்பராக இருக்கும். இன்று இந்த முந்திரி சிக்கன் கிரேவியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 1/2 கிலோ
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    தயிர் - 1 டீஸ்பூன்
    பால் - 2 டீஸ்பூன்
    எலுமிச்சை - பாதி
    கொத்தமல்லி - சிறிது
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    அரைப்பதற்கு :

    முந்திரி - 8
    மிளகு - 1/2 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    சோம்பு - 1/2 டீஸ்பூன்
    கசகசா - 1/4 டீஸ்பூன்
    பட்டை - 1  துண்டு
    கிராம்பு - 4 புதினா - சிறிது



    செய்முறை :

    * சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

    * கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள முந்திரி, மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா, புதினா சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு பாத்திரத்தில் அரைத்த மசாலா, சிக்கன் சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், தயிர், பால் சேர்த்து பிசைந்து, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, வேண்டுமெனில் சிறிது தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, நன்கு பிரட்டி விட வேண்டும்.

    * பின் வாணலியை மூடி வைத்து, 15 நிமிடம் சிக்கனை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

    * சிக்கன் நன்கு வெந்ததும், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.

    * சூப்பரான முந்திரி சிக்கன் கிரேவி ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு தேங்காய் சாதம் மிகவும் பிடிக்கும். வேர்க்கடலை, முந்திரி சேர்த்து தேங்காய் சாதம் செய்யும் சூப்பராக இருக்கும். இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வடித்த சாதம் - 1 கப்
    தேங்காய் துருவல் - 3/4 கப்
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    கடுகு, உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
    முந்திரி பருப்பு - 10-15
    மிளகாய் வற்றல் - 3
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    கறிவேப்பிலை - சிறிது.
    கொத்தமல்லி - சிறிதளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    வேர்க்கடலை - தேவைக்கு



    செய்முறை :

    * இஞ்சியை துருவிக்கொள்ளவும்

    * கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைக்கவும்.

    * கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெய் சூடானவுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் முந்திரி, வேர்க்கடலை, இஞ்சி துருவல், மிளகாய் வற்றல், பெருங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.

    * அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

    * தேங்காய் நன்றாக வாசனை வர ஆரம்பித்தவுடன் சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

    * கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * சுவையான தேங்காய் சாதம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தக்காளி பூண்டு சாதம் ஒரு நல்ல காரசாரமான உணவு. அதிலும் காலையில் சீக்கிரம் சமைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த டிஷ்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 2 கப்
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 3  
    பூண்டு பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன்
    இலவங்கம் - 1
    கிராம்பு - 2
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    பிரியாணி இலை - 1
    வர மிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிது



    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * முதலில் அரிசியை நன்கு கழுவி, குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி, 3 விசில் விட்டு இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், இலவங்கம், வர மிளகாய், கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றகா வதங்கியதும் அதில் பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில் தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து வதக்கவும்.

    * தக்காளி நன்கு வதங்கியதும், அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு கிளறவும்.

    * பின் அதில் வேக வைத்துள்ள சாதத்தைப் போட்டு மசாலா நன்கு சாதத்தில் ஒன்றாகும் வரை கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * இப்போது சுவையான காரமான தக்காளி பூண்டு சாதம் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரளாவில் பலாப்பழம் வைத்து செய்யும் இலை அடை மிகவும் பிரபலம். இன்று இந்த பலாச்சுளை இலை அடையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பலாச்சுளைகள் - 20,
    வெல்லம் - ஒரு கப்,
    அரிசி மாவு - ஒரு கப்,
    தேங்காய்த் துருவல் - தேவைக்கேற்ப,
    ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    வாழை இலை - தேவைக்கு
    நெய் - 5 டீஸ்பூன்.



    செய்முறை :

    * பலாச்சுளைகளை கொட்டையை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வெல்லத்தை துருவிக்கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள பலாச்சுளைகளை போட்டு நன்றாக வதக்கி ஆறவைக்கவும்.

    * மிக்சியில் வதக்கிய பலாச்சுளையுடன் வெல்லம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    * அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு இதனுடன் ஏலக்காய்த்தூள், அரிசி மாவு, தேங்காய் துருவல் சேர்த்துக் கெட்டியாக பிசையவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம். இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.



    * வாழை இலைகளை பெரிய துண்டுகளாக வெட்டி அதில் நெய் தடவி, அதில் பிசைந்த மாவு உருண்டையை இலையின் நடுவில் வைத்து இலையை மூடி கைகளால் மாவை பரப்பி விடவும். இவ்வாறு அனைத்திலும் செய்யவும்.

    * இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இந்த அடைகைளை அடுக்கி வைத்து ஆவியில் வேகவிடவும்.

    * சூப்பரான பலாச்சுளை இலை அடை ரெடி.

    குறிப்பு: பரிமாறும் வரை அடை, இலையுடனேயே இருக்க வேண்டும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பன்னீர் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு பன்னீர் ஸ்டிக்ஸ் செய்து கொடுத்து அசத்தலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் -  150 கிராம்,
    மிளகாய் தூள் -  1 டீஸ்பூன்,
    கரம் மசாலா -  1 டீஸ்பூன்,
    இஞ்சி, பூண்டு விழுது -  1 டீஸ்பூன்,
    தந்தூரி பவுடர் -  1 டீஸ்பூன்,
    எண்ணெய்  - 1/2 கப்,
    உப்பு -  தேவைக்கு.



    செய்முறை :

    * பன்னீரை நீள நீளமாக விரல் வடிவில் வெட்டிக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் பன்னீர் அத்துடன் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது, தந்தூரி பவுடர், சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    * கடாயில் எண்ணெயை ஊற்றி நன்கு காய்ந்ததும் பன்னீரை போட்டு நன்கு சிவக்கும் வரை பொரித்தெடுத்துப் பரிமாறவும்.  

    * குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் ஸ்டிக்ஸ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×