என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    சில்லி முட்டை மசாலா சிறிது கிரேவி போல் இருப்பதால் மசாலாவின் சுவை தான் தனி சிறப்பு. இந்த ரெசிபியை செய்வது மிக சுலபம். இந்த முட்டை மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்..
    தேவையான பொருட்கள் :

    வேக வைத்த முட்டை - 2
    பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    கிராம்பு, பூண்டு - 2
    உப்பு - சுவைக்கேற்ப
    சோயா சாஸ் -  1 டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
    புளிக்கரைசல் - 2 டீஸ்பூன்
    வெங்காயம் - 1
    எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை :

    * கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வேக வைத்த முட்டையின் ஓட்டை எடுத்து விட்டு முட்டையை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.

    * அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    * வெங்காயம் வதங்கிதும், காய்ந்த மிளகாய்த்தூள் பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட் இட்டு 1 நிமிடங்கள் நன்கு கிளறி விடவும்.

    * அடுத்து அதில் சோயா சாஸ், கெட்டியான புளிக்கரைசல், உப்பு இட்டு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.

    * இரண்டாக நறுக்கிய முட்டையை மசாலா கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து அதன் மேலாக கொத்தமல்லி இலையைத் தூவி பரிமாறலாம்.

    * சில்லி முட்டை மசாலா ரெடி!

    * சில்லி முட்டை மசாலாவை சைனீஸ் ஃப்ரைடு ரைஸ் அல்லது ரொட்டி, பராத்தா உடன் சேர்த்து சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உருளைக்கிழங்கு லாலிபாப் செய்வது மிக சுலபம். இதை மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 200 கிராம்
    பிரட் - 6
    இஞ்சி - சிறிய துண்டு
    கொத்தமல்லி இலை - சிறிதளவு
    சாட் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    கேரட் - 1
    பச்சை மிளகாய் - 3
    சோள மாவு - 2 டீஸ்பூன்
    சீரகப்பொடி- 1/2 டீஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப



    செய்முறை :

    * பிரட்டை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து பின்னர் தண்ணீரை பிழிந்து விடவும்.

    * கேரட், உருளைக்கிழங்கை வேக வைத்து அதன் தோலை உரித்துக் கொள்ளவும்.

    * இஞ்சி தோலை உரித்து விட்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு மைய இடித்துக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, கேரட், இடித்து வைத்த இஞ்சி மசாலா, சீரகப் பொடி, சாட் மசாலா, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

    * நன்கு பிசைந்து வைத்த உருளைக்கிழங்கு கலவையில் ஊற வைத்த பிரட்டை தண்ணீர் பிழிந்து விட்டு சேர்த்து கார்ன் ஃபிளார் மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

    * பிறகு உருளைக்கிழங்கு மாவை பந்து போல் எடுத்து உள்ளங்கையில் வைத்து உருண்டையாக தேய்த்து பிடித்துக் கொள்ளவும்.

    * அடுப்பில் ஓரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் உருண்டையாக பிடித்து வைத்த உருளைக்கிழங்கு உருண்டையை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    * பொரித்த உருளைக்கிழங்கில் லாலிபாப் ஸ்டிக்கை சொருகி வைத்து பரிமாறவும்.

    * சுவையான உருளைக்கிழங்கு லாலிபாப் ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோவாவின் இறால் புலாவ் ரெசிபி மிகவும் பிரபலமானது. இன்று எளிய முறையில் வீட்டிலேயே சுவையான இறால் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 250 கிராம்
    அரிசி - 1 கப்
    வெண்ணெய் - 3 டீஸ்பூன்
    சீரகம் - அரை ஸ்பூன்
    கிராம்பு - 4
    இலவங்கப்பட்டை - 3
    ஏலக்காய் - 2
    பிரியாணி இலை - 1
    இஞ்சி, பூண்டு விழுது, - 2 டீஸ்பூன்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 2
    மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
    தேங்காய்ப்பால் - 1 கப்
    உப்பு - சுவைக்கேற்ப
    எண்ணெய் - தேவைக்கு
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * இறால் நன்றாக சுத்தம் செய்த பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    * அரிசியை நன்கு கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.

    * அடுப்பில் ஒரு கடாயை வைத்து வெண்ணெய் விட்டு சீரகம், கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்த பின் பொடியாக  நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

    * வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போக வதக்கியதும் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

    * தக்காளி நன்கு வதங்கியதும் ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

    * அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர், தேங்காய்ப்பால், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கடாயை மூடி புலாவை வேக வைக்கவும்.

    * மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு மசாலா கலந்த இறாலை இட்டு நன்கு கிளறி விட்டு இறால் ஒரளவு வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.

    * புலாவ் வெந்ததும் அதன் மேலாக கொத்தமல்லி இலையை தூவி விட்டு வறுத்த இறாலை வைத்து அழகுப்படுத்தி பரிமாறலாம்.

    * கோவாவின் பிரபலமான இறால புலாவ் ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மட்டன் ரோகன் ஜோஸ் ஒரு காஷ்மீரி ஸ்டைல் உணவாகும். இந்த ரெசிபியை காஷ்மீரி அசைவ உணவுகளிலேயே மிகவும் சுவையானது. இந்த ரெசிபியை எப்படி செய்வதென்று காண்போம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - 500 கிலோ
    உப்பு - சுவைக்கேற்ப
    மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 1/2

    தயிர் மசாலாவிற்கு :

    கெட்டியான தயிர் - 3/4 கப்
    குங்குமப்பூ - சிறிதளவு
    காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்
    சோம்பு -   1 டீஸ்பூன்
    இஞ்சி - 1 டீஸ்பூன்

    தாளிப்பதற்கு :

    எண்ணெய் - 3 டீஸ்பூன்
    பிரியாணி இலை -2
    இலவங்கப்பட்டை - 1 இன்ச்
    கிராம்பு -  5
    கருப்பு ஏலக்காய் -2
    பச்சை ஏலக்காய் - 5
    சீரகம் -1 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
    கரம்மசாலாதூள் - அரை ஸ்பூன்
    கொத்தமல்லி தழை - சிறிதளவு



    செய்முறை :

    * இஞ்சியை நசுக்கிக்கொள்ளவும்.

    * கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மட்டனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மட்டன் துண்டுகள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    * ஒரு கிண்ணத்தில் தயிர், குங்குமப்பூ, மிளகாய்த்தூள், தனியா தூள், சோம்புத்தூள், இஞ்சி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.

    * இப்போது, அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, இலவங்கப்பட்டை, கிராம்பு, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின் அதில் ஊற வைத்த மட்டம் கலவையை போட்டு நன்றாக வதக்கி விட்டு 5 நிமிடங்கள் கடாயை மூடி போட்டு வேக வைக்கவும்.

    * பிறகு, மூடியை எடுத்து விட்டு தயிர் கலவையை சேர்த்து நன்கு கிளறி விட்டு வேக வைக்கவும்.

    * அடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு 45 நிமிடங்கள் தண்ணீர் சுண்டி கிரேவி பதம் வரும் வரை வேக வைக்கவும்.

    * இறுதியாக மட்டன் வெந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கரம்மசாலா, கொத்தமல்லி இலையைத் தூவி விட்டு சாதத்துடன் பரிமாறலாம்.

    * சூப்பரான காஷ்மீரி ஸ்டைல் மட்டன் ரோகன் ஜோஸ் ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆந்திராவில் மிகவும் பிரபலமான ரெசிபி கோங்குரா சிக்கன் குழம்பு. இன்று இந்த கோங்குரா சிக்கன் குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புளிச்சக்கீரை - 1 கப்
    மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
    எண்ணெய் - 3 டீஸ்பூன்
    தனியா - 1 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 3
    வேகவைத்த கோழிக்கறி - 250 கிராம்
    வெங்காயம் - 2
    காய்ந்த மிளகாய் - 3
    நெய் -1 டீஸ்பூன்
    சீரகம் - 1/4 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு -1/2 டீஸ்பூன்
    கரம் மசாலா -  1/2 டீஸ்பூன்



    செய்முறை :

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * புளிச்சக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கோழிக்கறியை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சூடு தண்ணீரில் இட்டு வேக வைக்கவும்.

    * அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    * வெங்காயம் வதங்கியதும், மஞ்சள்தூள், உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

    * பின்னர், புளிச்சக்கீரை சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும்.

    * அடுத்து அதில் வேகவைத்த சிக்கனை இட்டு மிளகாய்த்தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவைக்கவும்.

    * ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வரும் போது இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான கோங்குரா சிக்கன் குழம்பு ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மும்பையில் மிகவும் பிரபலமானது இந்த தவா புலாவ். சுவையும் அருமையாக இருக்கும். இன்று இந்த தவா புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாஸ்மதி அரிசி ( அ) புழுங்கலரிசி - 1 கப்
    குடமிளகாய் - 1
    தக்காளி - 2
    வெங்காயம் - 1
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
    பாவ் பாஜி மசாலா - 2 டீஸ்பூன்
    வெண்ணெய் - 2 டீஸ்பூன்
    கேரட் -  1
    பீன்ஸ் - 10
    பச்சை பட்டாணி - 1/2 கப்
    எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லி இலை - சிறிதளவு
    உப்பு  -  சுவைக்கேற்ப

    தாளிக்க :

    பட்டை, ஏலக்காய், கிராம்பு.



    செய்முறை :

    * வெங்காயம், குடமிளகாய், கேரட், கேரட், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பாஸ்மதி அரிசியை தண்ணீரில் கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    * நறுக்கிய கேரட், பீன்ஸை வேக வைத்துக் கொள்ளவும்.

    * சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைத்து கொள்ளவும்.

    * அடுப்பில் ஓரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்த பின் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும், தக்காளியை போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில் குடமிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகப் பொடி, தனியா தூள், பாவ் பாஜி தூள் சேர்த்து வதக்கி மிதமான தீயில் வேக விடவும்.

    * மசாலா பச்சை வாசனை போனவுடன் வேகவைத்த கேரட், பீன்ஸ் காய்கறிகளை சேர்த்து நன்கு கிளறி விட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    * பிறகு அதில் வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறி காய்கறி, மசாலாவுடன் கலக்கும்மாறு கிளறி விடவும்.

    * கடைசியாக அதன் மேலாக எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலையைத்தூவி விட்டு பரிமாறலாம்.

    * சூப்பரான தவா புலாவ் ரெடி.

    * இதனுடன், வெள்ளரிக்காய் ரைத்தா, வெங்காயம், தக்காளி ரைத்தா, அப்பளம், ஊறுகாய், தயிர் உடன் சேர்த்து சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோதுமை மாவில் பரோட்டா செய்தால் சூப்பராக இருக்கும். இன்று எளிய முறையில் முட்டை சேர்த்து பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு -1/2 கப்
    வெண்ணெய் - தேவையான அளவு
    மிளகு - ஒரு சிட்டிகை
    உப்பு - சுவைக்கேற்ப
    தண்ணீர் - தேவையான அளவு
    முட்டை - 2
    பச்சைமிளகாய் - 1
    மஞ்சள்தூள் - தேவையான அளவு
    கொத்தமல்லி இலை - சிறிதளவு



    செய்முறை :

    * ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சிறிதளவு தண்ணீர், எண்ணெய் விட்டு நன்கு மாவை பிசைந்து 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

    * ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் உப்பு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    * மாவை பூரிக்கட்டையால் சப்பாத்தி போல் அகலமாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.

    * தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் தேய்த்து வைத்த மாவை இட்டு அதன் மேலாக முட்டை கலவையை மாவு முழுவதும் படும்படி பரப்பி ஊற்றி சுற்றி வெண்ணெய் தடவி வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமாக இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    * சூப்பரான முட்டை பரோட்டா ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    திருக்கை மீன் முள் இல்லாதது. தேங்காய் சேர்த்து மீன் குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று தேங்காய் சேர்த்து திருக்கை மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    திருக்கை மீன் - 300 கிராம் (வேறு துண்டு மீன்கள் பயன்படுத்தலாம்)
    தேங்காய் துருவல் - அரை கப்
    மஞ்சள்தூள் - ½ தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
    இஞ்சி - 1 துண்டு
    பச்சை மிளகாய் - 1
    புளி - சிறிய எலுமிச்சை அளவு
    சின்ன வெங்காயம் - 3
    கடுகு - ½ தேக்கரண்டி
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    தேங்காய் எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    * இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

    * சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    * புளியை தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.  

    * தேங்காய், மஞ்சள் தூள் சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து அதனுடன் மிளகாய் தூள், துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    * கரைத்த தேங்காய் கலவையை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.

    * குழம்பு நன்றாக கொதித்து வரும் போது கழுவி வைத்த மீன் துண்டுகளை அதில் போடவும். மீன் துண்டுகள் வேகும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து மீன் குழம்பில் சேர்க்கவும்.

    * சூப்பரான தேங்காய் சேர்த்த திருக்கை மீன் குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கருவாடுடன் கத்தரிக்காய் சேர்த்து தொக்கு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த கருவாடு கத்தரிக்காய் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கத்தரிக்காய் - 200 கிராம்
    சின்ன வெங்காயம் - கால் கிலோ
    கருவாடு - 100 கிராம்
    தக்காளி - 2 பெரியது
    பச்சை மிளகாய் - 4
    பூண்டு - 4 பல்
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
    கறிவேப்பிலை , - சிறிது
    தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    கடுகு, உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு



    செய்முறை :

    * கத்திரிக்காய், வெங்காயம், மிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பூண்டை தட்டி வைக்கவும்.

    * கருவாட்டை நன்றாக மண் இல்லாமல் சுத்தமாக கழுவி சிறிய துண்டாக்கி கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு வெடித்தவுடன், கறிவேப்பிலை, மிளகாய், தட்டிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதம் கத்திரிக்காய், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

    * கத்திரிக்காய் பாதியளவு வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி விடவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.

    * அடுத்து கருவாடு சேர்த்து சிம்மில் 10 நிமிடம் மூடி வைக்கவும்.

    * ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது மூடியை திறந்து கொத்தமல்லி இலை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கி பரிமாறவும்.

    * சுவையான கமகமக்கும் கருவாடு கத்திரிக்காய் தொக்கு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொதுவாக இடியாப்பம் செய்தால், அத்துடன் தேங்காய் பால், சர்க்கரை சேர்த்து தான் சாப்பிடுவோம். ஆனால் இந்த மசாலா இடியாப்பமானது பேச்சுலர்களுக்கு ஏற்ற ரெசிபி என்று சொல்லலாம்.
    தேவையான பொருட்கள் :

    இடியாப்பம் - 1 கப்
    வெங்காயம் - 1
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    தக்காளி - 1
    புதினா - சிறிது
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    சோம்பு - 1/2 டீஸ்பூன்
    பட்டை - 1/4 இன்ச்
    கிராம்பு - 2
    கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * முதலில் இடியாப்பம் செய்து, அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் உதிர்த்து, குளிர வைக்க வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காயந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்த பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு சிறிது வதக்கவும்.

    * அடுத்து அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, புதினா சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

    * இறுதியில் அதில் இடியாப்பத்தை சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான மசாலா இடியாப்பம் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண், புலாவ், நெய் சாதத்திற்கு சூப்பரான ரைடு டிஷ் இந்த கார்ன் மஷ்ரூம் மசாலா. இப்போது இந்த கார்ன் மஷ்ரூம் மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உதிர்த்த சோளம் - 100 கிராம்
    மஷ்ரூம் - 150 கிராம்
    வெங்காயம் - 2
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    கொத்தமல்லி - சிறிது
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
    மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்
    மல்லிப்பொடி - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய்ப்பால் - 1/2 கப்.



    செய்முறை :

    * மஷ்ரூமை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    * வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    * ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் சீரகம், கடுகு, கறிவேப்பிலை தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில் தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி போட்டு வதக்கி நறுக்கி வைத்துள்ள மஷ்ரூம், உதிர்த்து வைத்துள்ள சோளம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில் சிறிது நீர் தெளித்து தேவையான அளவு உப்பு போட்டு மூடி வைத்து வேக விடவும்.

    * நன்கு வெந்தவுடன் தேங்காய்ப் பால் 5 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

    * சூப்பரான கார்ன் மஷ்ரூம் மசாலா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பொரித்த உணவுகள் மிகவும் பிடிக்கும். பிஸ்கட், சாக்லேட் வைத்து குழந்தைகளுக்கு விருப்பமான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மேரி பிஸ்கட் - 1 பாக்கெட்
    கன்டென்ஸ்ட் மில்க் - அரைக் கப்
    கோக்கோ பவுடர் - 4 தேக்கரண்டி
    பால் - 2 தேக்கரண்டி
    உலர் பழங்கள் - தேவைக்கு

    அழகுப்படுத்துவதற்காக :

    ரெயின்போ தெளிப்பு(Rainbow spray) - 1 தேக்கரண்டி
    சாக்லேட் - அரை கிண்ணம்
    தேங்காய் பவுடர் - 4 தேக்கரண்டி



    செய்முறை:

    * சாக்லேட்டை துருவிக்கொள்ளவும்.

    * உலர் பழங்களை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மிக்ஸியில் பிஸ்கட்டை போட்டு நன்றாக தூளாக்கிக் கொள்ளவும்.

    * ஒரு கிண்ணத்தில் கன்டெஸ்ட் மில்க், பால் சேர்க்கவும். அதனுடன் கொக்கோ தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

    * இப்பொழுது கலவையானது ஒரு தடித்த நிலைத்தன்மையுடன் கிடைக்கும். இப்போது கலவையுடன் பிஸ்கட் தூளைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.
    * இப்போது இந்த கலவையுடன் பொடியாக நறுக்கியுள்ள உலர் பழங்களைச் சேர்க்கவும்.

    * இப்போது, சிறிதளவு நெய் எடுத்து உங்களின் உள்ளங்கைகளில் தடவிக் கொண்டு கலவையை லட்டு வடிவத்தில் பிடிக்கவும். பிடித்த லட்டுவை ஒரு தட்டில் தனியே வைக்கவும்.

    * லட்டுவை, துருவிய சாக்லேட், தேங்காய் பவுடர் மற்றும் வானவில் தெளிப்பு கொண்டு அலங்கரிக்கவும். லட்டுவை பிரிட்ஜில் 30 நிமிடங்கள் வைத்து குளிர விடவும்.

    * சுவையான பிஸ்கட் லட்டு தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×