search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    சப்பாத்திக்கு சூப்பரான வெஜிடபுள் சப்ஜி
    X

    சப்பாத்திக்கு சூப்பரான வெஜிடபுள் சப்ஜி

    • நாண், இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    • இந்த சப்ஜியில் அனைத்து விதமான சத்துக்களும் அடங்கியுள்ளது.

    தேவையான பொருட்கள்:

    வெங்காயம் - 3

    தக்காளி - 4

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

    பன்னீர் - 150 கிராம்

    கேரட் - 1

    பீன்ஸ் - 10

    உருளைக்கிழங்கு - 1

    குடைமிளகாய் - 1/2

    காலிஃபிளவர் நறுக்கியது - அரை கப்

    பட்டாணி - 1/2 கப்

    காஷ்மீர் மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

    கொத்தமல்லி தூள் - 2 தேக்கரண்டி

    சீரகம் தூள் - 1 தேக்கரண்டி

    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

    பிரெஷ் கிரீம் - 1/2 கப்

    கசூரி மெதி, கொத்தமல்லி இலை - சிறிதளவு

    செய்முறை

    கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

    பன்னீரை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைகிழங்கு, குடை மிளகாய், காலிஃபிளவர், வேக வைத்த பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

    அடுத்து அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

    அதே கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் தேவையான அளவு உப்பு, கஷ்மீரி மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    மசாலா நன்கு வதக்கிய பின்பு வதக்கிய காய்கறி மற்றும் வறுத்த பன்னீர் சேர்த்து நன்கு கலந்த பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடத்திற்கு மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

    பத்து நிமிடம் கழித்து இதில் கசூரி மேத்தி, கொத்தமல்லி இலை மற்றும் பிரெஷ் கிரீம் சேர்த்து பரிமாறவும்.

    இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபுள் சப்ஜி தயார்

    Next Story
    ×