search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    15 நிமிடத்தில் செய்யலாம் சேமியா இட்லி
    X

    15 நிமிடத்தில் செய்யலாம் சேமியா இட்லி

    • விரைவில் டிபன் செய்ய நினைப்பவர்கள் இந்த ரெசிபியை செய்யலாம்.
    • காலையில் வேலைக்கு செல்பவர்கள் இந்த ரெசிபியை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    சேமியா - 250 கிராம்

    அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

    தயிர் - 300 மில்லி

    சாம்பார் வெங்காயம் - ஒரு கைப்பிடி

    கேரட் - 1

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு

    பச்சை மிளகாய் - 2

    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு

    நெய் - ஒரு குழி கரண்டி

    எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்

    கடுகு - ஒரு டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்

    சீரகம் - அரை டீஸ்பூன்

    கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 2

    முந்திரிப் பருப்பு - 15

    பெருங்காயம் - சிட்டிகை

    மஞ்சள் பொடி - சிட்டிகை

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    இஞ்சி, கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    கொஞ்சம் நெய் விட்டு சேமியாவை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும். டபுள் ரோஸ்டட் சேமியாவாக இருந்தால் வறுக்க வேண்டிய அவசியம் இல்லை.

    வாணலியில் எண்ணெய் மற்றும் கொஞ்சம் நெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட், கொத்தமல்லித்தழையை சேர்த்து மிதமான தீயில் வதக்கி மஞ்சள்பொடி, உப்பு சேர்த்து, சேமியாவை அதில் கொட்டி கலந்து விட்டு வேறு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

    இதனுடன் தயிர் மற்றும் அரிசி மாவை கலந்து நன்றாக கிளறி தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் மூடி வைத்து விடவும்.

    இட்லி தட்டில் நெய் தடவி முந்திரி வைத்து விட்டு அதன் மீது இந்த கலவையை ஊற்றி 5 லிருந்து 6 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான சேமியா இட்லி தயார்.

    இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, தக்காளி சட்னி அருமையான காம்பினேஷன்.

    Next Story
    ×