search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    சக்கரவள்ளி கிழங்கு வைத்து சுடச்சுட வடை செய்யலாம் வாங்க...
    X

    சக்கரவள்ளி கிழங்கு வைத்து சுடச்சுட வடை செய்யலாம் வாங்க...

    • மாலைப்பொழுது, டீயுடன் வடை சாப்பிட அனைவருக்கும் பிடிக்கும்.
    • சக்கரவள்ளி கிழங்கில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சக்கரவள்ளி கிழங்கு - 2,

    ப.மிளகாய் - 3

    வெங்காயம் - 1

    நிலக்கடலை - ஒரு கப்,

    அரிசி மாவு - 2 ஸ்பூன்,

    பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு,

    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    கடாயில் நிலகடலையை போட்டு நன்றாக வறுத்து ஆற வைத்து ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    சக்கரவள்ளிக்கிழங்கை நன்றாக கழுவி தோல் சீவி விட்டு துருவிக்கொள்ளவும்.

    துருவிய சக்கரவள்ளிக்கிழங்குடன் பொடித்த நிலக்கடலையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அதனுடன் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

    இறுதியாக இரண்டு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். இந்த மாவு சற்று கெட்டியாக இருந்தது என்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளலாம்.

    அடுப்பில் கடாய் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து மாவை வடை போன்று தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இவ்வாறு பிசைந்து வைத்துள்ள மாவு அனைத்தையும் வடை செய்து எடுக்க வேண்டும்.

    இப்போது சூப்பரான சக்கரவள்ளி கிழங்கு வடை ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×