search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    வீட்டிலேயே செய்யலாம் ஹோட்டல் ஸ்டைல் மட்டன் சால்னா
    X

    வீட்டிலேயே செய்யலாம் ஹோட்டல் ஸ்டைல் மட்டன் சால்னா

    • சிலருக்கு பரோட்டா விருப்ப உணவாக இருக்க சால்னா முக்கிய காரணமாக இருக்கும்.
    • இன்று ஹோட்டல் ஸ்டைல் மட்டன் சால்னா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மட்டன் எலும்பு கறி - கால் கிலோ

    பெரிய வெங்காயம் - 2

    தக்காளி - 4

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மல்லி தூள் - 1/2 டிஸ்பூன்டீஸ்பூன்

    தேங்காய் துருவல் - 1 கப்

    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    சோம்பு - 1/2 டீஸ்பூன்

    சீரகம் - 1/4 டீஸ்பூன்

    மிளகு - 1/4 டீஸ்பூன்

    கல்பாசி பூ - 2

    ஏலக்காய் - 2

    பட்டை, லவங்கம் - சிறிது

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    மட்டன் எலும்பு கறியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    தேங்காய் துருவல், சோம்பு, சீரகம், மிளகு ஆகியவற்றை பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கல்பாசி பூ, ஏலக்காய், பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

    பின்னர் சுத்தம் செய்யப்பட்ட மட்டன் எலும்பு கறியை போட்டு அதனுடன் தேவையான தண்ணீர் விட்டு குக்கரை மூடி 8 விசில் வரும் வரை அடுப்பில் வைக்கவும்.

    விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சூடான ஹோட்டல் ஸ்டைல் மட்டன் சால்னா ரெடி.

    Next Story
    ×