search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    பாய் வீட்டு கல்யாண தால்ச்சா செய்யலாம் வாங்க...
    X

    பாய் வீட்டு கல்யாண தால்ச்சா செய்யலாம் வாங்க...

    • மட்டன் தால்சா சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
    • இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    மட்டன் - 1/2 கிலோ

    பச்சை மிளகாய் - 2

    தக்காளி - 2

    சின்ன வெங்காயம் - 12

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

    கத்திரிக்காய் - 1

    மாங்காய் - 1/2

    கொத்தமல்லி - சிறிது

    பிரியாணி இலை - 1

    பட்டை - 1

    கிராம்பு - 2

    ஏலக்காய் - 2

    துவரம் பருப்பு - 1/2 கப்

    கடலை பருப்பு - 1/4 கப்

    கரம் மசாலா - 1 டீஸ்பூன்

    மல்லி தூள் - 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    புளிச்சாறு - 1/4 கப்

    உப்பு - சுவைக்கேற்ப

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    தாளிப்பதற்கு..

    வெங்காயம் - 1/2 கப்

    கடுகு - 1/4 டீஸ்பூன்

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    மிளகு - 1/2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    நெய் - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    * தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய், மாங்காய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ப.மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.

    * கடலை பருப்பு, துவரம் பருப்பை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

    * மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    * முதலில் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு சேர்த்து தாளித்த பின்னர் சின்ன பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * அடுத்து அதில் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்க வேண்டும்.

    * பின்பு அதில் மட்டனை கழுவிப் போட்டு நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட வேண்டும். அதன் பின் கடலை பருப்பு, துவரம் பருப்பு மற்றும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    * பிறகு அதில் போதுமான நீரை, அதாவது வழக்கமாக பருப்பு வேக வைக்க ஊற்றும் அளவை விட அதிகமாக நீரை ஊற்றி, குக்கரை மூடி மிதமான தீயில் 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.

    * விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும். மட்டனும், பருப்புக்களும் நன்கு வெந்ததும், கத்திரிக்காய், மாங்காய் சேர்த்து புளிச்சாற்றினையும் சிறிது ஊற்றி மூடி வைத்து, 10 நிமிடம் காய்கறிகள் வேகும் வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

    * பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய், மிளகு மற்றும் சிறிது வெங்காயத்தை சேர்த்து வதக்கி, குக்கரில் உள்ள மட்டன் தால்சாவில் ஊற்றி கிளறி, மேலே சிறிது கொத்தமல்லியை தூவினால், மட்டன் தால்சா தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×