என் மலர்
சமையல்

கருவாடு ரசம்... எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் வாங்க...
- கருவாட்டில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று கருவாட்டில் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
கருவாடு - 5 துண்டுகள்
தக்காளி - 2 பெரியது
வெங்காயம் - 1 பெரியது
புளி - எலுமிச்சை அளவு
தனியா தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
பூண்டு - 10 பல்
உப்பு - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 4
கொத்தமல்லி - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - 2 கீற்று
பச்சை மிளகாய் - 1
எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி - சிறு துண்டு
செய்முறை:
கருவாட்டை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்த பின்னர் வறுத்து வைக்கவும். வறுத்த கருவாட்டை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
வெங்காயம், 1 தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்ஸியில் பச்சை மிளகாய், சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் 1 தக்காளியை சேர்த்து லேசாக அரைத்துக்கொள்ளவும்.
புளியை தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து நன்கு வதக்கவும்.
பச்சை வாசனை போகும் அளவுக்கு நன்றாக வதக்கி அதில் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சேர்க்க வேண்டும்.
மீதமுள்ள ஒரு தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம், தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், தனியா தூள் முதலியவற்றை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி பின்னர் புளி தண்ணீர் கொஞ்சம் அதிகமாகவே சேர்க்க வேண்டும்.
பிறகு வறுத்த கருவாடு துண்டுகளை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்து கருவாடு வெந்து வாசனை வரும்போது கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.
சூப்பரான கருவாட்டு ரசம் தயார்.
இதற்கு நெத்திலி கருவாட்டையும் பயன்படுத்தலாம். சூப்பராக இருக்கும்.