search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    20 நிமிடத்தில் செய்யலாம் மொறு மொறு ஆலு பாப்கார்ன்
    X

    20 நிமிடத்தில் செய்யலாம் மொறு மொறு ஆலு பாப்கார்ன்

    • குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும்.
    • உருளைக்கிழங்கில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 250 கிராம்

    சோள மாவு - தேவையான அளவு

    முட்டை - 1

    எண்ணெய் - பொரிக்க

    பிரெட் தூள் - தேவையான அளவு

    உப்பு - சுவைக்கு

    செய்முறை

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுளாக(cube shape) வெட்டிக்கொள்ளவும்.

    வெட்டிய உருளைக்கிழங்கை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற விடவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் உருளைக்கிழங்கை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் மூடி போட்டு வேக விடவும்.

    5 நிமிடம் கழிந்த பின்னர் தண்ணீரை வடித்து விட்டு உருளைக்கிழங்கை மட்டும் தனியாக எடுத்து குளிர்ந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைக்கவும்.


    ஒரு பிளாஸ்டிக் கவரில் சோள மாவை போட்டு அதில் உருளைக்கிழங்கை தண்ணீர் இல்லாமல் வடித்து போட்டு நன்றாக குலுக்கவும். இப்போது சோளமாவு முழுவதும் உருளைக்கிழங்கில் ஒட்டியிருக்கும்.

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    ஒரு தட்டில் பிரெட் தூளை கொட்டி பரப்பி வைக்கவும்.

    இப்போது உருளைக்கிழங்கு துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து முட்டையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    அடுப்பில் கடாய் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து உருளைக்கிழங்குகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான மொறு மொறு ஆலு பாப்கார்ன் ரெடி.

    Next Story
    ×