என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    கொண்டைகடலை புதினா சுண்டல்
    X

    கொண்டைகடலை புதினா சுண்டல்

    நவராத்திரி கொலு வீடுகளில் பிரசாதம் என்றாலே அனைவருக்கும் பிடித்தது சுண்டல்கள் தான். இன்று கொண்டைகடலை புதினா சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கொண்டைகடலை - 1 கப்,
    வெங்காயம் - 1,
    காய்ந்த மிளகாய் - 2,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    சீரகம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    அரைப்பதற்கு  :

    இஞ்சி - சிறியது துண்டு,
    பூண்டு - 3 பல்,
    தேங்காய் - விருப்பத்திற்கு ஏற்ப,
    பச்சை மிளகாய் - 3,
    புதினா - 2 கொத்து



    செய்முறை :

    கொண்டைக்கடலையை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

    ஊறவைத்த கொண்டைகடலையை குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைக்கக்கூடிய பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து வைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

    அதன்பின் கொண்டைகடலை, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த விழுதையும் போட்டு நன்கு கிளறவும்.

    கடைசியாக தேவையான அளவு உப்பு போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.

    சுவைமிகு புதினா கொண்டைகடலை சுண்டல் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×