search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    சேற்றுப்புண் பிரச்சினைக்கு சரியான தீர்வு
    X

    சேற்றுப்புண் பிரச்சினைக்கு சரியான தீர்வு

    • சேற்றில் நடப்பதால் மட்டுமே வரும் என்று நினைக்க வேண்டாம்.
    • பூஞ்சைக் காளான் நுண் கிருமிகளால் உண்டாகிறது.

    சேத்துப்புண் என்று பலராலும் சொல்லப்படும் சேற்றுப்புண் சேற்றில் நடப்பதால் மட்டுமே வரும் என்று நினைக்க வேண்டாம். உடலில் எப்பொழுதும் ஈரப்பதம் அதிகமுள்ள இடங்களில் எல்லாம் இந்த நோய் ஏற்படும். அத்லெட்ஸ் ஃபுட்" என்று மருத்துவ மொழியில் கூறப்படும் இந்நோய் ஒரு குறிப்பிட்ட வகை பூஞ்சைக் காளான் நுண் கிருமிகளால் உண்டாகிறது.

    இந்நோய், உடலின் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் கால்களில் தான் அதிகமாக வர வாய்ப்புண்டு. அதிலும் குறிப்பாக கால் விரல் இடுக்குகளில் தான் அதிகமாக வரக்கூடும். நாம் வெறுங்காலுடன் தரையில் நடக்கும்போது, இந்த நுண் கிருமிகள் கால்களின் விரல் இடுக்குகளில் ஒட்டிக்கொண்டு உடலுக்குள் நுழைந்துவிடும். ஈரப்பதம் அதிகமாக உள்ள இடங்களில் தான், இந்த நுண்கிருமி அதிகமாக வாழும். அதிக நேரம் கால்கள் ஈரமாக இருந்தால், செருப்பு ஈரமாக இருந்தால் இந்த பூஞ்சைக் கிருமி தாக்கும் வாய்ப்பு அதிகம்.

    நான் மண்ணில் நடக்கவே இல்லையே! எனக்கு எப்படி சேத்துப் புண் வந்தது? என்ற கேள்வி உங்கள் மனதில் எழும். வெளியிலிருந்து எந்த வழியில் வேண்டுமானாலும், யாராவது ஒருவருடைய கால்கள் செருப்பு, ஷூ சாக்ஸ் மூலமாகவும் இந்தக்கிருமி ஒட்டிக்கொண்டு உங்கள் வீட்டிற்குள் நுழைந்துவிடும்.

    முதலில் கால் விரல் இடுக்குகளில் அரிப்பு எரிச்சலை ஏற்படுத்தும், பின் அந்த இடம் சிவந்து போகும். அப்புறம் சின்னச்சின்ன கொப்புளங்கள் வந்து பின் உடைந்து புண்ணாகவே ஆகிவிடும்.

    மழைக்காலங்களில் தண்ணீரில் அதிக நேரம் நிற்பவர்கள், விவசாய வேலை செய்யவர்கள், எப்பொழுதும் தண்ணீரிலேயேநின்று கொண்டு வேலை பார்ப்பவர்கள், அசுத்தமான தண்ணீரில் அதிக நேரம் நிற்பவர்கள் இவர்களுக்கெல்லாம் இந்த நோய் வர வாய்ப்புண்டு.

    இந்த நோய் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வெகு சீக்கிரம் வந்துவிடும் வந்த சேற்றுப்புண் ஆறுவதற்கும் நீண்டநாட்கள் ஆகிவிடும்.

    1. ஈரமான காலுறைகளை அணியக்கூடாது.

    2. எப்பொழுதும் கால்களை சுத்தமாக கழுவி துடைத்து ஈரமில்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும்.

    3. செருப்பு இல்லாமல் வெளியே காலை வைக்காதீர்கள்

    4.ஆபீசில் வேலை பார்ப்பவர்கள் சாக்சை சுமார் 7 மணி நேரத்திற்குமேல் அணியக்கூடாது, தினமும் சாக்சை துவைத்து அணிய வேண்டும். இல்லாவிட்டால் நாற்ற மடிக்கும். கிருமி சேர வாய்ப்பு அதிகம்,

    5.படுக்கப் போகும் முன் தேங்காய் எண்ணெய்யை பாதங்கள், விரல் இடுக்குகளில் தேய்த்துக் கொள்ளவும், தினமும் 15 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பைப் போட்டு கால்களை மூழ்க வையுங்கள். அதற்குப் பிறகு கால்களை நன்றாகத் துடைத்து காய வையுங்கள். அதன்பின் மஞ்சளோடு சேர்த்து வேப்பிலையும் அரைத்து அத்துடன் தேங்காய் எண்ணெய்யையும் நன்றாக பூசிவிடவும்

    Next Story
    ×