உடல் உறுப்புகளுக்கு ஏற்ற உணவுகள்

ஆரஞ்சு, செலரி கீரை, பால் ஆகியவை எலும்புகளை வலுப்படுத்த உதவும்.தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
உடல் உறுப்புகளுக்கு ஏற்ற உணவுகள்
Published on

ஒவ்வொரு உடல் உறுப்புகளின் நலனை பாதுகாப்பதில் ஒரு சில குறிப்பிட்ட உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

* மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க சால்மன், டுனா, மத்தி போன்ற மீன் வகைகளை தவறாமல் உட்கொள்ளுங்கள். அக்ரூட் பருப்புகளையும் சாப்பிடுங்கள்.

* தசைகள் பலவீனமடைந்திருக்கிறதா? அன்றாட உணவில் வாழைப்பழம், இறைச்சி, மீன் மற்றும் முட்டைகளை சேர்த்துக்கொள்வது நலம் பயக்கும்.

* காற்று மாசுபாடுகளால் நுரையீரலுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்க புரோக்கோலியை சாப்பிடுங்கள். இது நுரையீரலுக்கு நன்மை பயக்கும்.

* சரும ஆரோக்கியத்தை பேணுவதற்கு புளூபெர்ரி, சால்மன் மீன் சாப்பிடுங்கள். டீ, காபிக்கு மாற்றாக கிரீன் டீ பருகுங்கள்.

* முடி உதிர்வு பிரச்சினைக்கு இடம் கொடுக்காமல் கூந்தல் முடி வலிமையாக இருப்பதற்கு பச்சை காய்கறிகளை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். பீன்ஸ் மற்றும் சால்மன் மீன்களை அதிகம் சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்வைத் தடுக்கலாம்.

* கண் பார்வையை மேம்படுத்துவதற்கு கேரட் மட்டுமின்றி முட்டை, மக்கா சோளம் போன்றவற்றையும் கட்டாயம் உட்கொள்ளுங்கள்.

* தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அதனால் அன்றாட உணவில் இவை இரண்டும் இடம்பெற வேண்டும்.

* மலச்சிக்கல் பிரச்சினையை உணர்கிறீர்களா? சாப்பாட்டுடன் தவறாமல் தயிர் உட்கொள்ளுங்கள். பிளம்ஸ் பழமும் சாப்பிடுங்கள். அதிலும் உலர் பிளம்ஸ் சாப்பிடுவது சிறந்தது.

* ஆரஞ்சு, செலரி கீரை, பால் போன்றவை எலும்புகளை வலுப்படுத்த உதவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com