என் மலர்

  பொது மருத்துவம்

  புகைப்பழக்கத்தை கைவிட உதவும் உணவுகள்
  X
  புகைப்பழக்கத்தை கைவிட உதவும் உணவுகள்

  புகைப்பழக்கத்தை கைவிட உதவும் உணவுகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புகைப்பழக்கம் அல்லது பிற புகையிலைப்பொருட்களை பயன்படுத்தும்போது வாய் வழியாக வைரஸ் பாதிப்புக்கு ஆளாகுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கிறது.
  புகைப்பழக்கம் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை உணர்ந்திருந்தாலும் அதனை கைவிட்டுவிட முடியாமல் தவிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்த கொரோனா காலகட்டம் புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு வழிவகுத்திருக்கிறது.

  புகைப்பிடிப்பவர்கள் எளிதில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாக வாய்ப்பிருப்பதாக ஆய்வுகளும் கூறுகின்றன. ஏனெனில் புகைப்பழக்கம் நுரையீரல் செயல்பாட்டை குறைத்துவிடும்.

  புகைப்பழக்கம் அல்லது பிற புகையிலைப்பொருட்களை பயன்படுத்தும்போது வாய் வழியாக வைரஸ் பாதிப்புக்கு ஆளாகுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கிறது.

  நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டியது அவசியமானது. புகைப்பழக்கத்தை கைவிட முயற்சிப்பவர்கள் ஒருசில பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் நல்ல மாற்றத்தை உணரலாம்.

  புதினா: இது பல மருத்துவ குணங்களை கொண்டது. புகைப்பழக்கத்தால் உண்டாகும் மோசமான விளைவுகளை குறைக்கவும், நுரையீரலில் உள்ள நிக்கோட்டினை அழிக்கவும் இது உதவும். புற்றுநோய் செல்கள் உருவாகுவதை தடுக்கவும் உதவும். புதினாவில் தயாரான மிட்டாய்களை கைவசம் வைத் திருப்பது நல்லது. புகைப்பிடிக்கும் எண்ணம் தோன்றும்போதெல்லாம் அதனை வாயில் போட்டு மெல்லலாம். இது புகைப்பழக்கத்தை திசை திருப்ப உதவும்.

  ஜின்செங்: இது மருத்துவ குணம் கொண்ட ஒருவகையான வேர் தாவரமாகும். இதன் வேர் பகுதியை பொடித்து டீ தயாரித்து பருகலாம். இது புகைப்பொருட்கள் மீதான ஈர்ப்பை குறைக்கவும் உதவும். புகைப் பழக்கத்தை விட்டொழிப்பதிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கு வதாக பல ஆராய்ச்சிகளும் குறிப்பிடுகின்றன.

  வைட்டமின் சி: புகைப்பிடிக்கும் நபர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினை தலைதூக்கும். ஏனெனில் புகைப்பழக்கம், வைட்டமின் சி உள்பட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலில் உறிஞ்சப்படுவதை தடுத்துவிடும். ஆரஞ்சு, கிவி, திராட்சை மற்றும் குடைமிளகாய், ப்ரோக்கோலி போன்ற வைட்டமின் சி சத்து நிரம்பிய உணவுகளை சாப்பிட்டு வரலாம். இந்த உணவுகள் வைட்டமின் சி அளவை மீட்டெடுக்க உதவும்.

  தவிர்க்க வேண்டிய உணவுகள்: காபி, தேநீர், ஆல்கஹால் போன்ற காபினேட் பானங்களை உட்கொள்வதை குறைக்க வேண்டும். புகைப்பிடிக்கும்போது காபி பருகுவது மோசமான விளைவுகளை ஏற் படுத்திவிடும். புகைப்பழக்கத்தை கைவிட முயற்சிப்பவர்கள் இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். அவை புகைப்பிடிக்க வேண்டும் என்ற ஏக்கத்தை உண்டாக்கிவிடக்கூடியவை. அதுபோல் இனிப்பு, காரமான உணவுகளையும் தவிர்த்துவிட வேண்டும். இனிப்பை அதிகம் சேர்ப்பது வேறு பல நோய் பாதிப்புகளுக்கும் வழி வகுத்துவிடும்.

  பால் பொருட்கள்: புகைப்பிடிக்கும் உணர்வை கட்டுப்படுத்தும் தன்மை பாலுக்கு உண்டு. குறைந்த கொழுப்பு கொண்ட பால் பருகி வரலாம். நிகோட்டின் மற்றும் புகையிலை சார்ந்த ஆராய்ச்சி கட்டுரை ஒன்றில், ‘புகைப்பிடிப்பவர்களில் பெரும்பாலானோர் பால் பருகும்போது வாயில் ஒருவித கசப்பான சுவையை உணர்வதாக கூறி உள்ளனர்’ என்று குறிப் பிடப்பட்டுள்ளது. நீங்கள் புகைப்பழக்கம் கொண்டவர் என்றால் உங்கள் உடலில் பல்வேறு குறைபாடுகள் உருவாகுவது தவிர்க்கமுடியாதது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்ஏ, டி, பி 12, ரைபோபிளேவின், புரதம், பொட்டாசியம், துத்தநாகம், கோலைன், மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பாலில் நிறைந்திருக்கிறது. புகைப்பழக்கத்தை விட்டுவிட முயற்சிப்பவர்களுக்கு பால் சிறந்த உணவாகவும் கருதப்படுகிறது.

  சிற்றுண்டி: புகைப்பிடிப்பதை விட்டுவிட முயற்சிக்கும்போது, ​​சிற்றுண்டிகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். சர்க்கரை கலந்த சிற்றுண்டிகளை தவிர்த்துவிட வேண்டும். அதற்கு பதிலாக நட்ஸ் வகைகள், பீன்ஸ், பழங்கள், வேகவைத்த கொண்டைக்கடலை, மக்காச்சோளம் போன்றவற்றை தேர்ந்தெடுக்கலாம். புகைபிடிப்பது உடலில் ஒமேகா -3 அளவை குறைத்துவிடும். ஆளிவிதை மற்றும் அக்ரூட் பருப்புகளை உட்கொள்வதன் மூலம் அதை மீட்டெடுக்கலாம்.

  பழங்கள்:பசி உணர்வை கட்டுப்படுத்துவதோடு ஊட்டச்சத்து குறைபாட்டையும் போக்கும் தன்மை பழங் களுக்கு உண்டு. பழங்களில் நார்ச்சத்துகள், அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் இருக்கின்றன. புகைப்பழக்கத்தை கைவிடும்போது இனிமையாக பசி உணர்வை அனுபவிப்பார்கள். இனிப்பு பொருட்களின் மீது நாட்டம் கூடும். அந்த சமயத்தில் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் கலோரிகள் நிறைந்த இனிப்புகளை ருசிப்பதற்கு பதிலாக திராட்சை, மாம்பழம், வாழைப்பழம், பப்பாளி போன்றவற்றை சாப்பிடலாம்.

  கலோரிகள்: புகைப்பழக்கத்திற்கும், உடல் எடை அதிகரிப்புக்கும் தொடர்பு உண்டு. அதனால் கலோரிகள் அதிகம் கொண்ட உணவுகளை உட்கொள்ளக் கூடாது. அவை பிற நோய்களுக்கான அபாயத்தையும் அதிகரிக்கச்செய்துவிடும். மருத்துவ நிபுணரை கலந்தாலோசித்து புகைப்பழக்கத்தை விட்டொழிக்கும் வழி முறைகளை பின்பற்றுவது நல்ல பலனை கொடுக்கும்.

  நீர்ச்சத்து: உடலில் இருந்து நிகோட்டின் உள்ளிட்ட நச்சுக்களை வெளியேற்றுவதற்கு நீர் உதவும். புகைப்பழக்கத்தை கைவிட முயற்சிக்கும்போது உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க வேண்டியது முக்கியமானது. அது ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் நன்மை சேர்க்கும். தினமும் 7 முதல் 8 டம்ளர் நீர் பருகலாம். இது தவிர சர்க்கரை சேர்க்காமல் பழ ஜூஸ் மற்றும் காய்கறி ஜூஸ், இளநீர் போன்றவற்றையும் பருகலாம்.
  Next Story
  ×