search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொழுப்பு மீது முழு வெறுப்பு காட்ட வேண்டாம்

    கொழுப்பு அமிலங்கள்தான் ஒவ்வொரு செல்லைச் சுற்றியும் பாதுகாப்பு அரணாக இருக்கிறது.
    ஆரோக்கியத்தின் மீது அதிக ஆர்வம்கொண்ட பலரும், கொழுப்பை முதல் எதிரியாக கருதுகிறார்கள். ஆனால் அப்படி கருதவேண்டியதில்லை. ஏன் என்றால் கொழுப்பும் உடலுக்கு அவசியமான ஒரு சத்துதான். கொழுப்பும், கொலஸ்ட்ராலும் ஒன்றல்ல. கொலஸ்ட்ரால் என்பது கொழுப்பின் ஒரு பகுதிதான். கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகியவை குறிப்பிட்ட அளவில் இணைந்த சேர்மம்தான் கொழுப்பாகும்.

    கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின், தாது உப்பு ஆகியவை உடலுக்கு சக்தி தரும் சத்துக்களாகும். இவற்றில் புரதமும், கார்போஹைட்ரேட்டும் ஒரு கிராமிற்கு 4 கலோரி ஆற்றலை உடலுக்கு அளிக்கும். ஆனால் ஒரு கிராம் கொழுப்பு 9 கலோரிகளை உடலுக்கு வழங்குகிறது. இதிலிருந்து கொழுப்பின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

    மெழுகுபோன்ற ஒருவகை கொழுப்பை கொலஸ்ட்ரால் என்கிறோம். இதய நோய் உருவாக அடிப்படை கொலஸ்ட்ரால்தான். செல்களின் அமைப்புக்கும், வளர்ச்சிக்கும் கொலஸ்ட்ரால் இன்றியமையாதது. கல்லீரல் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யும் உறுப்பாகும். உணவின் மூலமும் கொலஸ்ட்ரால் உடம்பில் சேரும். மேலும் பாலின ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென், டெஸ்டிரோஜென், புரோஜெஸ்டிரான் மற்றும் பித்தநீர் உற்பத்திக்கும் கொலஸ்ட்ரால் அவசியமாகும்.

    ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் லிப்போ புரோட்டின் என்ற புரதத்துடன் இணைந்து உடலெங்கும் பயணிக்கிறது. அப்போது குறைந்த அடர்த்தி உள்ள புரதத்துடன் இணைந்து எல்.டி.எல். கொலஸ்ட்ரால் உருவாகும். இதுதான் தீமையான கொலஸ்ட்ராலாகும். இது ரத்த நாளங்களில் படிவதால் மாரடைப்பும், பக்கவாதமும் ஏற்படும். கொலஸ்ட்ரால் அதிக அடர்த்தி உள்ள புரதத்துடன் இணைந்து (எச்.டி.எல்.) பயணம் செய்தால் இந்த பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும். ஆக சதிசெய்வதும், சதியறுப்பதும் கொலஸ்ட்ரால்தான்.

    கொழுப்பு, 3 வகைப்படும். பூரிதமான கொழுப்பு, பூரிதமாகாத கொழுப்பு, டிரான்ஸ் கொழுப்பு என அவை அழைக்கப்படுகிறது. கொழுப்பு அமிலங்களின் தன்மைக்கேற்ப இப்படி வகைப்படுத்தப்படுகிறது. கொழுப்பு அமிலங்கள்தான் ஒவ்வொரு செல்லைச் சுற்றியும் பாதுகாப்பு அரணாக இருக்கிறது. இவை தகவல்களைக் கடத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
    Next Story
    ×