search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாம்பழம்
    X
    மாம்பழம்

    மாம்பழம்: சத்துக்களும்... நன்மையும்...

    மாம்பழம் நார்ச்சத்து கொண்ட பழம் என்பதால் செரிமான செயல்பாட்டுக்கு உதவி புரியும். மேலும் உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரித்து எடை குறைவதற்கும் வழிவகை செய்யும்.
    கொழுப்பு

    மாம்பழத்தில் வைட்டமின் சி சத்து, பெக்டின், நார்ச்சத்து போன்றவை அதிக அளவில் உள்ளன. இவை உடலில் கொழுப்பு அளவை குறைக்கும் தன்மை கொண்டவை.

    சரும தூய்மை

    மாம்பழம் சருமத்தை சுத்தப்படும் கிளீன்சராகவும் செயல்படக்கூடியது. மாம்பழ கூழை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு உலர்ந்ததும் கழுவிவிடலாம். சருமம் புத்துணர்வுடன் காட்சியளிக்கும். சரும துளைகளும் நீங்கும்.

    நோய் எதிர்ப்பு சக்தி

    மாம்பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி வைட்டமின் ஏ சத்தும், 25 வகையான கரோட்டினாய்டுகளும் உள்ளடங்கி இருக்கிறது. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

    கண் பாதுகாப்பு

    ஒரு கப் மாம்பழ துண்டுகள் சாப்பிடுவது அன்றாட வைட்டமின் ஏ சத்து தேவையில் 25 சதவீதத்தை பூர்த்தி செய்யக்கூடியது. வைட்டமின் ஏ கண்களுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடியது என்பதால் கண் நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

    இரும்பு சத்து

    மாம்பழத்தில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. ரத்தசோகை பிரச்சனையை எதிர்கொள்பவர்களுக்கு இயற்கையாகவே தீர்வு வழங்கக்கூடியது. ஆதலால் இரும்புச்சத்து குறைபாடு கொண்ட பெண்கள் அவசியம் மாம்பழம் சாப்பிட வேண்டும்.

    நினைவாற்றல்

    மாம்பழத்தில் இருக்கும் குளூட்டமைன் அமிலம், நினைவாற்றல் திறனை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் மாம்பழத்தில் உள்ளடங்கி இருக்கும் டார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம் போன்றவை உடலின் கார சமநிலையை சீராக பராமரிக்கும் தன்மை கொண்டது.

    புற்றுநோய்

    மாம்பழத்தில் இருக்கும் குவார்செட்டைன், ஐசோகுவார்சிட்ரின், அஸ்ட்ராகேலின், பிஸ்டின், கேலிக் ஆசிட் போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகள், பெருங்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், புராஸ்டேட் புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

    எடை குறைப்பு

    இது நார்ச்சத்து கொண்ட பழம் என்பதால் செரிமான செயல்பாட்டுக்கு உதவி புரியும். மேலும் உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரித்து எடை குறைவதற்கும் வழிவகை செய்யும்.

    இன்சுலின்

    நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மாம்பழ இலைகள் உதவும். 5-6 மாம்பழ இலைகளை நீரில் போட்டு கொதிக்கவிட்டு, இரவு முழுவதும் அப்படியே ஊறவைத்து, காலையில் அந்த நீரை வடிகட்டி பருகலாம். இது உடலில் இன்சுலின் அளவை ஒழுங்குபடுத்த உதவும். மாம்பழம் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் (41-60) அளவீடு கொண்டது. அதனால் உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்க அனுமதிக்காது.
    Next Story
    ×