search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடல் பருமன்
    X
    உடல் பருமன்

    நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராக செயல்படும் உடல் பருமன்

    உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொழுப்பை குறைத்து, கொழுப்பு உணவுகளை தவிர்த்து, உடல் பயிற்சி செய்வதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.
    நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி தான் கோவிட்-19 தொற்றை எதிர்த்து போராடும் வல்லமை கொண்டது என்பது அனைவரும் உணர்ந்து உள்ளனர். நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராக செயல்படுவது உடல் பருமன். கொழுப்பை குறைத்து கொழுப்பு உணவுகளை தவிர்த்து உடல் பயிற்சி செய்ய வேண்டியது அவசியம் என்று ஜெம் மருத்துவமனையின் உடல் பருமன் அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் மற்றும் இயக்குனர் டாக்டர் பிரவீன்ராஜ் கூறுகிறார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி தான். கோவிட்-19 என்னும் கொரோனா தொற்றை எதிர்த்து போராடும் வல்லமை கொண்டது என்பதை உலகமும், இந்திய குடிமக்களும் உணர்ந்து உள்ளனர். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும், பாதிக்கப்படவில்லை என்றாலும் ஒவ்வொரு மனிதனுக்கும் நோய் எதிர்ப்பாற்றல் இருக்கிறது.

    நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராக செயல்படுவது உடல் பருமன். கொழுப்பை குறைத்து, கொழுப்பு உணவுகளை தவிர்த்து, உடல் பயிற்சி செய்வதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்கிறார். அனைத்து டாக்டர்களும், உடல் நல நிபுணர்களும், உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றல் தான் நோய்களுக்கு எதிராக போராட முக்கியமானது என கூறுகின்றனர். அதேசமயம் உடல் பருமன், உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றலை குறைந்து விடுகிறது. 

    உடல் பருமன் உள்ளவர்களை தசை எலும்பு மற்றும் கொழுப்பு கொண்டவர்கள் என வகைப்படுத்தலாம். உதாரணமாக 100 கிலோ அளவுக்கு அதிகமான எடையுள்ள ஒருவர் நல்ல ஆரோக்கியத்துடன் குறைந்த கொழுப்புடன் வலிமையாக இருந்தால் அவர் நல்ல ஆரோக்கியமானவர் தான். அதேசமயம் ஒல்லியாக இருப்பர் அதிக கொழுப்புடன் இருந்தால் அவர் ஆரோக்கியமானவர் அல்ல. ஒருவர் தனது கொழுப்பு அளவை அறிந்து அதை குறைக்க உடல் பயிற்சி செய்ய வேண்டும். உணவை கட்டுப்படுத்த கூடாது.

    இந்த தொற்று காலம். நாம் நல்ல நோய் எதிர்ப்பாற்றலுடன் இருக்கிறோமா, நோயை எதிர்த்து போராட முடியுமா என்பதை உணர்த்தியுள்ளது.

    உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உடல் பயிற்சி, நடைபயிற்சி, மூச்சு பயிற்சி, நீச்சல் போன்றவைகளை மேற்கொள்ளலாம். இவை உடலில் உள்ள கொழுப்பு சத்தை எரிக்கும். என்பதே எனது மாபெரும் அறிவுரை. உடல் பயிற்சிக்கு பதிலாக உணவை கட்டுப்படுத்தாதீர்கள். ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருங்கள். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×