search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    காலையில் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள்
    X
    காலையில் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள்

    காலையில் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகளை எவை?

    காலையில் எடுத்துக் கொள்ளும் சத்தான உணவே நம்மை, நாள் முழுவதும் தேவையற்ற தவறான உணவுகள் எடுத்துக் கொள்வதினை தவிர்க்கும்.
    காலையில் நமக்கும் சரி, பிள்ளைகளுக்கும் சரி ஏழு மணிக்கு கிளம்பும்போது இட்லி, தோசை போன்ற உணவுகள் உண்பதற்கு கனமான உணவாகும். இதனால் அநேகர் காலை உணவினை தவிர்த்து விடுகின்றனர். ஆனால் காலையில் எடுத்துக் கொள்ளும் சத்தான உணவே நம்மை, நாள் முழுவதும் தேவையற்ற தவறான உணவுகள் எடுத்துக் கொள்வதினை தவிர்க்கும். ஆக எளிதாக சத்தாக காலையில் எடுத்துக் கொள்ளக் கூடிய சில உணகளைப் பார்ப்போம்.

    * முட்டை- முட்டை உண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கு இதனை காலையில் எடுத்துக்கொள்வது சத்தினையும், வயிறு நிறைவான ஒரு உணர்வையும், மதிய உணவு வரை நொறுக்குத் தீனி எடுத்துக் கொள்ளாமலும் வைக்கும். மூளை, கல் லீரலுக்கு இது சிறந்த உணவு. புரதம் நிறைந்தது.

    * தயிர் - புரதம் நிறைந்தது. பசியை கட்டுப்படுத்தும். எடை குறையும். குடலுக்கு மிகவும் சிறந்தது.

    * ஓட்ஸ்- அநேகர் காலை உணவாக ஓட்சை விரும்புகின்றனர். இதிலுள்ள நார்சத்து உடலுக்கு அநேக நன்மைகளை அளிக்கின்றது. கொலஸ்டிரால் குறையும். வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். இருதயம், உயர் ரத்த அழுத்த குறைப்பு இவற்றுக்கு பெரிதும் உதவும்.

    * Chia Seeols- ஒரு அவுன்ஸ் (28 கி) அளவு எடுத்துக்கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவினை குறைக்கும். உயர் ரத்த அழுத்தம் குறையும். புரத சத்து அளிக்கும் வீக்கங்களைக் குறைக்கும்.

    * பாதாம், பிஸ்தா போன்ற கொட்டை வகைகளை 2 ஸ்பூன் அளவு எடுத்து கொள்ளலாம்.

    * பப்பாளி, ஆரஞ்சு, பிளாக்ஸ் விதை, கிரீன் டீ போன்றவையும் காலை உணவில் சேர்த்துக் கொள்ள மூளை, நரம்பு மண்டலம் வலுப்பெறும்.
    Next Story
    ×