
புஜங்காசனம்: விரிப்பில் குப்புறபடுக்கவும். இரு கால்களையும் சேர்த்து வை க்கவும். கைகளை இதய பக்கவாட்டில் படத்தில் உள்ளது போல் கை விரல்கள் தரையில் படும்படி வைத்து மூச்சை இழுத்துக்கொ ண்டே மெதுவாக கழுத்து, தலை, அடி முதுகு வரை உயர்த்த வும். பத்து வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு சாதாரண நிலைக்கு வரவும். இது போல் மூன்று முறைகள் செய்யவும்.
முக்கிய குறிப்பு: முதுகுத்தண்டுவடம் அறுவை சிகிச்சை செய்தவர்கள், முதுகு வலி அதிகம் உள்ளவர்கள், இதய வலி உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பயிற்சி செய்ய வேண்டாம். முத்திரை மட்டும் செய்தால் போதும்.
பலன்கள்: நுரையீரல் நன்றாக இயங்கும், முதுகு தண்டுவடம் நன்கு திடமாகும். இதய வால்வுகள் சிறுகுடல், பெருங்குடல், சிறுநீரகம் சிறப்பாக இயங்கும். கழுத்து வலி வராமல் வாழலாம். சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் வாழலாம். ஆஸ்துமா, சைனஸ், மூக்கடைப்பு, ஒற்றை தலைவலி வராமல் வாழலாம். அடிக்கடி சளி பிடிப்பது நிற்கும்.
பிரம்மா முத்திரை: நிமிர்ந்து அமரவும், முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் கட்டைவிரல் உள்ள ங்கையில் படும்படி மடித்து மற்ற நான்கு விரல்களை மூடவும், இருக்கைகளி ல் செய்யவும், இது ஆதி முத்திரை, அந்தக் கைகளை மடக்கி படத்தில் உள்ளது போல் நான்கு விரல்கள் தொடும்படி இதயம் முன்பு வைக்கவும். மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஐந்து முறைகள் செய்யவும். பின் சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும். காலை மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.
லிங்க முத்திரை: நிமிர்ந்து அமரவும். முது கெலும்பு நேராக இரு க்கட்டும், க ண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனி க்கவும். பின் இருகை விரல்களை கோர்க்கவும். இடது கை கட்டை விரல்களை மட்டும் நேராக படத்தில் உள்ளதுபோல் வைக்க வும். சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும். காலை, மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.
முகுள முத்திரை: நிமிர்ந்து அம ரவும். முது கெலும்பு நேராக இருக்கட்டும் கட்டைவிரல் நோக்கி மற்ற நான்கு விரல்களையும் குவித்து மேல் நோக்கி வை க்கவும். இரு கைகளிலும் செய்யவும். சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும். காலை, மாலை இரு வேளையும் சாப்பி டும்முன் பயிற்சி செய்யவும்.
இதேபோல் மாற்றி செய்ய வேண்டும். வலது நாசியை அடைத்து இடது நாசியில் மூச்சை வெளிவிடவும். வலதில் இழுத்து இடதில் வெளிவிடவும் பத்து முறைகள் செய்யவும்.
இப்பொழுது கண்களை மூடி இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள்.
63699 40440
pathanjaliyogam@gmail.com