
பின் மூளை உள் பகுதி அதைச் சுற்றி உள்ள நரம்பு மண்டலங்களுக்கு நல்ல பிராண ஆற்றல் கிடைப்பதாக எண்ணவும். மூளை நரம்பு மண்டலங்களில் உள்ள சூடு, அதிக சூடு குறைந்து சாதாரண நிலையில் இருப்பதாக எண்ணவும். உங்களது மூச்சோட்டதை மூளை பகுதி முழுக்க நிலை நிறுத்தி தியானிக்கவும். ஐந்து நிமிடங்கள் மனதை ஒரு நிலைப்படுத்தவும்.
பின் உங்களது மனதை நெற்றிப் புருவ மையத்தில் நிலை நிறுத்தி உங்களது மூச்சோட்டத்தை சாந்தமான மன நிலையில் தியானிக்கவும். பின் மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும்.
இந்த தியானத்தை காலை மாலை இரு வேளையும் பயிற்சி செய்யவும். மன அமைதி கிடைக்கும். மூளை செல்கள் நன்கு புத்துணர்வு பெற்று இயங்கும். மூளை நரம்பு மண்டலங்கள் நன்கு இயங்கும்.
நமது உடலில் முழுமையான இயக்கம், நினைவுகள், உணர்வுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவது மூளைதான். மூளைக்கு செல்ல வேண்டிய முக்கியமான ஊட்டசத்துக்கள் குறையும் பொழுது அதன் விழிப்புத்தன்மை குறைந்து மந்தமாகிவிடும். அதிக காபி டீ குடிப்பதால் மூளையின் செயல்பாடுகளை குறைத்துவிடும்.
மூளை நன்கு இயங்க ஆரோக்கியமாக இருக்க மூளைக்கு தேவையான குளுகோஸ் புரதம் போன்ற ஊட்டச் சத்துக்கள் தேவை.
யோகக் கலைமாமணி
பெ.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
63699 40440
pathanjaliyogam@gmail.com