search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    பிராண முத்திரை
    X
    பிராண முத்திரை

    கல்லீரலை நன்கு இயங்க வைக்கும் முத்திரை

    பிராண முத்திரையை தினமும் காலை மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் செய்தால் மிக நல்ல பிராண ஆற்றல் பெற்று கல்லீரல் நன்கு இயங்கும்.
    ஒவ்வொரு மனித உடலிலும் கல்லீரல் நன்கு இயங்கினால் தான் கழிவுகள் சரியாக வெளியேறும்.  கல்லீரல் நன்கு இயங்கவும்,  நல்ல பிராண ஆற்றல் பெற்று இயங்கவும்,  பிராண முத்திரையை தினமும் காலை மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் செய்தால் மிக நல்ல பிராண ஆற்றல் பெற்று இயங்கும்.

    பிராண முத்திரை

    செய்முறை:

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது வினாடிகள் கூர்ந்து தியானிக்கவும்.  பின் கண்களை திறந்து மோதிர விரல், சுண்டு விரல்மடக்கி அதன் மையத்தில் பெருவிரலை தொடவும்.  இருகைகளிலும் செய்யவும்.  படத்தை பார்க்கவும்.  

    மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை உணவில் வாரம் ஒரு முறை எடுக்கவும்.  அதிக காரம், உப்பு தவிர்க்கவும்.  உடலுக்குரிய ஓய்வை சரியாக கொடுக்கவும்.  இரவு பத்து மணி முதல் காலை 4  மணி வரை உடலுக்கு ஓய்வு வேண்டும்.

    பகலில் தூங்குவதை தவிர்க்கவும்.   வாரம் ஒரு நாள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.  இளநீர், வாரம் ஒரு நாள் காலையில் வெறும் வயிற்றில் பருகவும்.  மாதுளம் பழம் வாரம் இரண்டு நாட்கள் சாப்பிடவும்.  வாழைப்பழம் இரவு ஒன்று சாப்பிடவும்.  

    மணத்தக்காளி கீரை,  அகத்தி கீரை, முருங்கைக்கீரை, கொத்தமல்லி, புதினா போன்றவற்றை உணவில் அடிக்கடி எடுக்கவும்.  மாதம் ஒரு முறை இஞ்சிச்சாறு ஒரு அவுன்ஸ் காலையில் பருகவும்.

    சுக்கு, கருப்பட்டி, தனியா பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பால் சேர்க்காமல் சாப்பிடவும்.

    யோகக் கலைமாமணி
    பி,கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
    6369940440
    Next Story
    ×