என் மலர்
உடற்பயிற்சி

அபான வாயு முத்திரை, சங்கு முத்திரை
இதயம் காக்கும் முத்திரைகள்
இந்த இரண்டு முத்திரையையும் காலை, மதியம், மாலை சாப்பிடும்முன் செய்யவும். மதியம் செய்ய முடியாதவர்கள் காலை, மாலை மட்டும் செய்யவும்.
இதயத்தை பாதுகாப்பது மனிதனின் முதற் கடமையாகும். மனிதனின் மனதில் மன அழுத்தம், கவலை, டென்ஷன், கோபம் கூடாது. மனிதன் தனது உடலுக்கு தேவையான ஓய்வை கொடுக்க வேண்டும். உணவில் சாத்வீகமான சைவ உணவையே உட்கொள்ள வேண்டும். தினமும் எளிய உடற்பயிற்சி, யோகாசனங்கள், தியானம் செய்ய வேண்டும். நாம் இங்கு பார்க்க இருப்பது, முத்திரைகள் மூலம் எப்படி நமது இதயத்தை பாதுகாப்பது.
அபான வாயு முத்திரை: (இருதய முத்திரை) விரிப் பில் நிமிர்ந்து அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் கண்களை திறந்து நடுவிரல் மோதிர விரலை கட்டைவிரலுடன் சேர்த்து வைக்கவும். ஆள்காட்டி விரலை மடித்து கட்டை விரலின் அடியில் வைக்கவும்.
சுண்டு விரல்மட்டும் தரையை நோக்கி இருக்கட்டும். படத்தை பார்க்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.
சங்கு முத்திரை: விரி ப்பில் நிமிர்ந்து அமரவும், விரிப்பில் அமர முடியாத வர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும்.
இரண்டு கை விரல்களையும் பின்னிக் கொள்ளுங்கள். உள்ளங்கைகளை ஒட்டிக் கொள்ளுங்கள். கட்டைவிரல்களை சேர்த்து படத்தில் உள்ளது போல் வைக்கவும். சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் முதல், ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.
இந்த இரண்டு முத்திரையையும் காலை, மதியம், மாலை சாப்பிடும்முன் செய்யவும். மதியம் செய்ய முடியாதவர்கள் காலை, மாலை மட்டும் செய்யவும்.
உணவு: பூசணி விதை, சூரியகாந்தி விதை ரத்தத்தில் நல்ல கொழுப்பு அளவை பெருக்கி கெட்ட கொழுப்பை நீக்குகிறது. பீன்ஸ், பட்டாணி, ஆரஞ்சு, மாம்பழம், பூண்டு, வெங்காயம், மிளகு, திராட்சை அதிகம் உண்ணவும்.முட்டை கோஸ், தக்காளி, முருங்கைக்கீரை உணவில் அடிக்கடி எடுக்கவும். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை வெளிவிடவும். மூச்சை கவனிக்கும் பொழுது மனம் அமைதி பெறும், எண்ணங்கள் ஒடுங்கும்., வாழ்வு வளமாகும். இதயத்துடிப்பு சீராகும்.
யோகக் கலைமாமணி
பி,கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
6369940440

Next Story