search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முக தசைகளுக்கு பொலிவு சேர்க்கும் பயிற்சி
    X
    முக தசைகளுக்கு பொலிவு சேர்க்கும் பயிற்சி

    முக தசைகளுக்கு பொலிவு சேர்க்கும் பயிற்சி

    எந்தவொரு செலவும் இல்லாமல் எளிமையான பயிற்சிகள் மூலம் சருமத்தை அழகூட்டலாம். அந்த பயிற்சிகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    சரும அழகை பராமரிப்பதற்கு அழகு சாதன பொருட்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியதில்லை. தினமும் சில நிமிடங்கள் ஒதுக்கினாலே போதும். எந்தவொரு செலவும் இல்லாமல் எளிமையான பயிற்சிகள் மூலம் சருமத்தை அழகூட்டலாம். அதன் ஆரோக்கியத்தையும் பேணலாம்.

    நெற்றியில் ஆள்காட்டி விரலை வைத்து வட்ட வடிவில் அதனை அழுத்தி தேய்த்து பயிற்சி செய்யலாம். அவ்வாறு செய்வதன் மூலம் சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். நெற்றியில் ஏற்படும் சுருக்கங்களும் காணாமல் போய்விடும். இதற்காக தினமும் ஐந்து நிமிடங்கள் ஒதுக்கினாலே போதுமானது. கண்களையும் வட்ட வடிவில் சுழல விட்டு பயிற்சி செய்யலாம்.

    கன்னங்கள் நன்றாக உப்பிய நிலையில் இருக்க வேண்டும் என்று சிலர் விரும்புவார்கள். வாய்க்குள் காற்றை உள்ளிழுத்து கன்னங்களை நன்றாக உப்பிய நிலையில் 30 விநாடிகள் வைத்திருக்க வேண்டும். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக காற்றை வெளியேற்ற வேண்டும். இவ்வாறு தினமும் 10 முறை செய்து வந்தால் கன்னம் புசுபுசுவென்று மாற தொடங்கிவிடும்.

    முக தசைகளுக்கு பொலிவு சேர்ப்பதற்கு எழுத்து பயிற்சிகளும் கை கொடுக்கும். முதலில் ‘ஏ’ என்ற எழுத்தை அழுத்தம் திருத்தமாக, சத்தமாக உச்சரிக்க வேண்டும். அவ்வாறு நான்கு, ஐந்து முறை உச்சரிக்கலாம். பின்பு ஈ, யூ, ஓ போன்ற எழுத்துக்களை ஒவ்வொன்றாக உச்சரித்து பயிற்சி பெறலாம். ஓ, யூ போன்ற எழுத்துக்களை உச்சரிக்கும்போது நாக்கை நன்றாக உட்புறமாக மடித்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தினமும் ஒவ்வொரு எழுத்தையும் ஐந்து முறை உச்சரித்து வரலாம்.

    வாய் பகுதிக்கும் பயிற்சி அளிப்பது முக தசைகளுக்கு வலுவும், பொலிவும் சேர்க்கும். வாயை எவ்வளவு திறக்க முடியுமோ அந்த அளவிற்கு நன்றாக திறந்து புன்னகைத்தவாறு இயல்பு நிலைக்கு தளர விட வேண்டும். அவ்வாறு தொடர்ந்து 10 முறை செய்து வரலாம். சோர்வாக இருக்கும் சமயங்களிலும் இந்த பயிற்சியை செய்யலாம். இது முகத்தில் வெளிப்படும் சோர்வை நீக்கி விடும். சருமமும் புத்துணர்ச்சி பெறும்.

    Next Story
    ×