search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பிராணாயாமம்
    X
    பிராணாயாமம்

    பிராணாயாமம் செய்வதற்கு முன் மறக்கக்கூடாதவை

    உடலையும் உள்ளத்தையும் திடமாக வைத்துக் கொள்ளும் ஆரோக்கியமான பயிற்சி என்று பிராணாயாமம் பயிற்சியை சொல்லலாம். இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் சிறந்த மூச்சுப்பயிற்சி என்றும் சொல்லலாம்.
    பொதுவாக காலை வேளையில் சுத்தமான ஆக்ஸிஜனை சுமந்துவரும் காற்றை ரசித்தப்படி உலாவருவருவது போல் அமைதியான இடத்தில் அமர்ந்து சுவாசித்து செய்யும் பயிற்சி உடலோடு மனதுக்கும் அலாதி சுகத்தைத் தரும். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த பிராணாயாமம் செய்யலாம்.

    அன்றாடம் நொடிப்போதும் விடாமல் மூச்சு விட்டு கொண்டிருந்தாலும் இந்த மூச்சு விடுதலையே ஒரு பயிற்சியாக்கி அதைச் செய்ய குறிப்பிட்ட நேரம் ஒதுக்குவது அவசியமாகும். இவையும் உடற்பயிற்சியைச் சேர்ந்த ஒன்றே.

    உடலையும் உள்ளத்தையும் திடமாக வைத்துக் கொள்ளும் ஆரோக்கியமான பயிற்சி என்று
    பிராணாயாமம்
    பயிற்சியை சொல்லலாம். இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் சிறந்த மூச்சுப்பயிற்சி என்றும் சொல்லலாம்.

    அதிகாலை வேளையில் செய்யும் பிராணாயாமம் பயிற்சியின் போது வெறும் வயிற்றில் செய்யாமல் குளிர்ந்த நீரை ஒரு தம்ளர் குடித்து பிறகு பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

    தூய்மையான காற்றோட்டமுள்ள இடத்தில் (புல்தரை, திறந்த வெளி மைதானம் போன்ற இடங்கள் இருந்தால் இன்னும் சிறப்பு.) விரிப்பை போட்டு அதன் மீது பத்மாசனத்தில் அமர வேண்டும்.

    பிராணாயாமம் செய்யும் இடம் தூய்மையானதாக வசதியாக இருக்க வேண்டும். பயிற்சி செய்வதற்கு முன்பு நிமிர்ந்து உறுதியாக உட்கார்ந்துகொள்ள வேண்டும். பயிற்சி செய்பவர் உடலை வளைக்காமல் முதுகெலும்பு நேராக நிமிர்ந்திருக்கும்படி இருக்க வேண்டும். பேச்சு சத்தம் இல்லாத அமைதியான தனிமையான இடம் சிறந் ததாக இருக்கும்.


    Next Story
    ×