search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பத்மாசனம்
    X
    பத்மாசனம்

    பத்மாசனம் செய்முறையும் அதன் பலன்களும்

    யோக சூத்திரத்தில் எல்லா ஆசனங்களிலும் உத்தமமானது பத்மாசனம் என பத்மாசனத்தைப் பற்றி விளக்கப்பட்டிருக்கிறது. உபநிஷத்தும் பத்மாசனத்தை மிகவும் உயர்வாகக் கூறுகிறது.
    செய்முறை

    தரையில் கம்பளம் விரித்து, அமர்ந்து வலது காலை இடது தொடையின் மேல் போட்டு பிறகு இடது காலை வலது தொடையில் வைக்கவும். உள்ளங்கால்கள் மேல்நோக்கி இருக்க வேண்டும், மேலும் இரண்டு குதிகால்களும் இரண்டு பக்கங்களிலும் அடிவயிற்றை தொடும்படி இருக்க வேண்டும்.

    இரண்டு தொடைகளும், கால் முட்டுகளும் தரை விரிப்பில் நன்றாக படும்படி அமர்ந்திருக்க வேண்டும். முதுகை நிமிர்த்தி மலர்ந்த கால்களின்மேல் இரு கைகளும் சின்முத்திரை நிலையில் இருக்க வேண்டும்.

    நேர் முகமாக நோக்குதல் வேண்டும், இடை, வயிறு, கண்டம், தலை ஆகியவைகள் சமனாய் ஸ்தம்பத்தைப் போல் நிமிர்த்திருக்க வேண்டும். இதுவே பத்மாசனம் ஆகும்.

    பத்மாசனத்தில் அமர்ந்ததும் சுவாசத்தை நிதானமாகவும், முழுமையாகவும் இழுத்து நிதனமாக விட வேண்டும்.

    சுவாசத்தை இழுக்கும் நேரத்தை விட அதனை வெளிவடும் நேரம் சற்று அதிகமாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது பழகினால் சுவாசம் தானாகவே நிதானமடையும்.

    யோகாசனம் தினமும் செய்து வர, சுவாசத்தை மனதால் கவனித்து வந்தோமானல் எண்ண அலைகளை மனமானது இழந்து அமைதியடையும்.

    ஆரம்பத்தில் பத்மாசனத்தில் அமர்வது சிறிது சிரமமானலும், படிப்படியாக பழக்கத்துக்கு வந்துவிடும், அதேபோல் செய்யும் நேரத்தையும் சற்று அதிகப்படுத்தி கொள்ள வேண்டும்.

    பத்மாசனத்தின் பயன்கள்

    சுவாச சம்பந்தமான நோய்கள் வராது
    முதுகெலும்பை நிமிர்ந்து நிற்கச் செய்யும்
    நுரையீரல் மீக அதிக நன்மைப் பெறும்
    வாதம், மூலம், நரம்பு சக்தி குறைவு போன்ற நோய்கள் அருகில் வராது.
    Next Story
    ×