search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கபால் ராந்திரா தாட்டி ஆசனம்
    X
    கபால் ராந்திரா தாட்டி ஆசனம்

    முகத்திற்கு பொலிவு தரும் கபால் ராந்திரா தாட்டி ஆசனம்

    முகத்துக்கான யோகா பயிற்சியான இது முதுமைத்தோற்றத்தைத் தள்ளிப்போட்டு உங்களை என்றும் பதினாறாக வைக்கும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    பத்மாசன நிலையிலோ அல்லது சாதாரணமாகவோ உட்கார வேண்டும். முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி அமர வேண்டும்.

    * கைகளை நெற்றியின்மீது வைக்க வேண்டும். பெருவிரல் கண்களின் பக்கவாட்டில் இருக்கட்டும். இப்போது மூச்சை இழுத்து விட வேண்டும்.

    * பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை ஒன்றாகக் குவித்துப் புருவத்தின்மீது வைக்க வேண்டும்.

    * பெருவிரலைக் கன்னத்திலும், மீதி உள்ள நான்கு விரல்களையும் கன்னத்தின் மேல்புறத்திலும் வைத்து சற்று அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    * கைகளைக் கன்னத்தில் வைத்து மென்மையாக முகம் கழுவுவதுபோல் தேய்க்க வேண்டும்.

    * கைகளைப் பக்கவாட்டில் மடக்கி, ஆள்காட்டி விரலை உதட்டுக்கு மேலும், நடுவிரலை தாடையின் மேலும் வைக்க வேண்டும்.

    * தலையைப் பின்புறமாகச் சாய்த்து, தொண்டைப் பகுதிக்கு மேல் கைகளை மேலும்கீழுமாக வைக்க வேண்டும்.

    இந்த நிலையில் சில விநாடிகள் இருக்கவேண்டும். பிறகு, மீண்டும் பழைய நிலைக்கு வரவேண்டும்.

    பலன்கள்: மனஅமைதிக்கு உதவுகிறது. முகத் தசைகளில் ரத்த ஓட்டம் சீராகும். முகம் பொலிவு பெறுவதோடு, முகக் கொழுப்பு குறையும்.
    Next Story
    ×