என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
நாள்பட்ட முதுகு, இடுப்பு வலியை குணமாக்கும் ஆசனம்
Byமாலை மலர்3 Nov 2020 2:08 AM GMT (Updated: 3 Nov 2020 2:08 AM GMT)
நாள்பட்ட முதுகுவலி, இடுப்பு வலி, மற்றும் முதுகில் டிஸ்க் பிரச்சனைகள் உள்ளவர்கள், இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்தால், உங்கள் பிரச்சனைகள் குணமாகிவிடும்.
யோகா செய்தால், கடினமான வேலையையும், சுலபமாகும். முதுவலி கழுத்து வலி, களைப்பு ஆகியவை பஞ்சாய் பறந்துவிடும். இந்த யோகாசனத்தை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். காலையில் எழுந்ததும் செய்தால், உடலில் இதம் உணர்வீர்கள். மிக எளிதான யோகா. இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பாக்கலாம்.
மார்யாரி ஆசனத்திற்கு இன்னொரு பெயரும் உண்டு. பூனை ஆசனம். பூனை போன்ற நிலையில் இந்த ஆசனத்தை செய்வதால் இத்ற்கு பூனை ஆசனம் என்றும் பெயர். முதலில் கால்களை மடக்கி, முட்டி போட்டு, பாதத்தின் மீது அமருங்கள். ஆழ்ந்து மூச்சை இழுத்து பின் விடவும்.
இப்போது மேலே படத்தில் காட்டியதை போல் குனிந்து கைகளை தரையில் ஊன்றுங்கள். மெல்ல முதுகை உட்பக்கமாக வளைத்து, தலையை மேலே தூக்குங்கள். தலை மேலே தூக்கும்போது, முதுகு உட்பக்கமாக வளைந்துதான் இருக்க வேண்டும்.
சில நொடிகளுக்கு பின், தலையை குனியுங்கள். இப்போது முதுகை லேசாக தூக்க வேண்டும். பாதங்கள் முழுவதும் தரையோடு தரையாக இருக்க வேண்டும். உள்பாதம் மேலே பார்த்தபடி இருக்க வேண்டும். பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கு வாருங்கள். மூச்சை ஆழ்ந்து இழுத்து, விடுங்கள். இந்த ஆசனத்தை இது போல், பத்து முறை செய்யுங்கள்.
பலன்கள் : ஸ்பான்டிலைட்டிஸ், நாள்பட்ட முதுவலி, இடுப்பு வலி, மற்றும் முதுகில் டிஸ்க் பிரச்சனைகள் உள்ளவர்கள், இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்தால், உங்கள் பிரச்சனைகள் குணமாகிவிடும்.
யோகா நம் ஆரோக்கியத்தில் உணவுக்கு அடுத்தபடியாக மிக உன்னதமான இடத்தை பிடித்துள்ளது. நோயற்ற, நீண்ட ஆயுளுடன், வளமான வாழ்க்கையை வாழ, நல்ல உணவு, யோகா, ஆரோக்கிய மன நிலை போதும். வேறொன்றும் தேட தேவையில்லை.

Next Story
×