என் மலர்

    ஆரோக்கியம்

    உட்கட்டாசனம்
    X
    உட்கட்டாசனம்

    மூட்டுவலியை குணமாக்கும் உட்கட்டாசனம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அலுவலகத்தில் ஒரு இடத்தில் பல மணி நேரம் அமர்ந்து வேலை செய்பவர்ககள், இந்த ஆசனத்தை செய்யும் பொழுது இரத்த ஓட்டம் சிறப்பாக இயங்கும். மூட்டுவலி இருந்தால் படிப்படியாகக் குறைந்துவிடும்.
    விரிப்பில் கிழக்கு நோக்கி நிற்கவும். இரு கால் பாதங்களையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும். இரு கைகளையும் ஒரு அடி அகலத்தில் முன்னால் நீட்டவும். கை விரல்கள் வானத்தைப் பார்த்திருக்கட்டும்.

    மெதுவாக ஒரு நாற்காலியில் அமர்வது போல் மெதுவாக உடலை கீழே கொண்டு வரவும். (படத்தைப் பார்க்கவும்). சாதாரண மூச்சில் 20 விநாடிகள் இருக்கவும். * உங்கள் உடல் எடை முழுவதும் குதிகாலில் கொடுக்கவும். பின்னர் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும். இதுபோல் மூன்று முறை செய்ய வேண்டும்.

    பலன்கள்:- இரு கால் மூட்டுகளுக்கும் நல்ல இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் கிடைக்கின்றது. மூட்டுக்கள் நன்கு பலப்படுகின்றது.
    மூட்டை சுற்றியிருக்கின்ற சைனோவியல் என்ற மூட்டுச் சுரப்பி சரியான அளவு சுரக்கும்.

    அலுவலகத்தில் ஒரு இடத்தில் பல மணி நேரம் அமர்ந்து வேலை செய்பவர்ககள், இந்த ஆசனத்தை செய்யும் பொழுது இரத்த ஓட்டம் சிறப்பாக இயங்கும். மூட்டுவலி இருந்தால் படிப்படியாகக் குறைந்துவிடும். மூட்டுவலி இல்லை என்றால் பிற்காலகட்டத்தில் மூட்டுவலி வராமல் தடுக்கப்படுகின்றது.
    இந்த உட்கட்டாசனத்தில் இரண்டு நிமிடங்கள் இருந்தால், மூன்று மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் என்ன பலன் கிடைக்குமோ அந்த பலன் இந்த ஒரு ஆசனத்தில் கிடைக்கும். மூட்டில் நீர் தேங்கல், வலி, வாதம் நீங்கும்.

    சிறுவர் முதல் பெரியவர் வரை உட்கட்டாசனத்தை செய்யலாம். மிகுந்த பலன் கிடைக்கும்
    . மூட்டில் அறுவை சிகிச்சை செய்து நான்கு மாதங்கள் முடியாத காலத்தில் உள்ளவர்கள், மூட்டில் அதிகமான வீக்கம் உள்ளவர்கள் செய்ய வேண்டாம்.
    பெண்கள் அவசியம் இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். காரணம் மூட்டுவலி நிறைய குடும்பப் பெண்களுக்கு திருமணத்திற்கு பிறகு, குழந்தை பிறந்தவுடன் வருகின்றது. பெண்கள் காலை, மதியம், மாலை என மூன்று வேளை பயிற்சி செய்யுங்கள். மூட்டு வலியும் மறையும். சுறுசுறுப்பாக வாழாம்.

     இந்த உட்கட்டாசனம் மூட்டு வலியை மட்டும் போக்குவதில்லை. இதனுடைய மற்ற பலன்கள் என்ன தெரியுமா?

    * தோள் பட்டைகளில் ஏற்படும் இறுக்கத்தைப் போக்கும்.
    * கால் பாதவலி நீக்கி கால்களுக்கு வலிமை தரும்.
    * இதயம் வலுப்பெறும். காரணம் உதரவிதானம் மேல் நோக்கி உயர்த்தப்படுவதால்.
    * பெண்களுக்கு வரும் இடுப்புவலி நீங்கும். குறிப்பாக மாதவிடாய் காலங்களில் வரும் அதிகமான இடுப்பு வலி நீங்கும்.
    * இடது, வலது கால்களில் சம அளவு உடல் பாரம் செலுத்தப்படுவதால், நரம்பு மண்டலம் சீராக இயங்கும்.
    * பெண்கள் இளம் வயதிலேயே இந்த ஆசனத்தை செய்தால் திருமணத்திற்கு பின் சுகப்பிரசவம் நடைபெறும்.
    * மூட்டுவாதம், அஜீரணம் வராது.
    Next Story
    ×