search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பத்மாசனம்
    X
    பத்மாசனம்

    ஆரோக்கியம் நம் கையில்- ரத்த அழுத்தத்தை போக்கும் யோகா

    இன்று நிறைய மனிதர்களுக்கு ரத்த அழுத்தம் உள்ளது. யோகக்கலைகள் மூலம் எப்படி இரத்த அழுத்தத்தை நீக்கலாம் என்பதைப் தெரிந்து கொள்வோம்.
    இன்று  நிறைய மனிதர்களுக்கு ரத்த அழுத்தம் உள்ளது. பொதுவாக ஆங்கில மருந்து சாப்பிடுபவர்கள், தொடர்ந்து இரத்த அழுத்த மாத்திரை சாப்பிட்டுக் கொண்டேயிருப்பீர்கள், இனி கவலையை விடுங்கள். நாம் யோக முறையில் இதற்கு நிரந்தர தீர்வு காணப் போகின்றோம். யோகக்கலைகள் மூலம் எப்படி இரத்த அழுத்தத்தை நீக்கலாம் என்பதைப் தெரிந்து கொள்வோம்.

    ரத்த அழுத்தம் நீக்கும் பத்மாசனம்

    தரையில் கிழக்கு திசை நோக்கி ஒரு விரிப்பு விரித்து அதில் அமரவும். இரு கால்களையும் நீட்டிக் கொள்ளவும். இடது காலை மடித்து வலதுகால் தொடை யில் வைக்கவும். பின் வலது காலை மடித்து இடதுகால் தொடை மீது வைக்கவும். இரு கைகளையும் சின் முத்திரையில் வைக்கவும். (சின் முத்திரை கட்டைவிரல், ஆள்காட்டி விரல் நுனி இரண்டும் தொட்டுக் கொண்டு, மற்ற மூன்று விரல்களும் தரையை நோக்கியிருக்க வேண்டும்.) முதுகெலும்பு நேராகயிருக்க வேண்டும்.

    முதலில் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுக்கவும். உடன் இரு நாசிவழியாக மூச்சை மெது வாக வெளிவிடவும். மூச்சை உள் இழுக்கும் பொழுது நல்ல சக்தி வாய்ந்த பிராணக் காற்றை உள் இழுப்பதாக எண்ணவும். மூச்சு வெளியிடும் பொழுது  டென்ஷன், மன அழுத்தம், கவலை நீங்கு வதாக எண்ணவும். இதுபோல் இரண்டு நிமிடங்கள் செய்யவும். பின் உங்கள் மனதை முதுகுத் தண்டின் கடைசிப் பகுதியில் நிலை நிறுத்தி அந்த இடத்தில் உங் கள் மூச்சோட்டத்தை இரண்டு நிமிடங்கள் கவனிக்கவும். பின் உங்கள் உள்ளத்தில் கீழ்கண்ட உறுதி மொழியை எடுத்துக் கொள்ளவும்.

    * நான் இனிமேல் கோபப் படமாட்டேன்.
    * நான் இனிமேல் கவலைப்படமாட்டேன்
    * நான் இனிமேல் டென்ஷன், பதட்டபட மாட்டேன்
    * நான் உணவில் கட்டுப் பாட்டு டன் சாத் வீகமான உண வை உண்பேன்.
    * நான் தினமும் யோகப்பயிற்சி செய்வேன்.

    என்னிடம் இதுவரை கருமையத்தில் பதிந் துள்ள தீய வாசனைகள் யாவும் அறவே அழிகின்றன என்று நினைக்கவும். மேற்கூறியவைகளை பத்துமுறை உங்கள் உள்ளத்தில் உச்சரிக்கவும்.

    பின் மெதுவாக மூச்சை உள் இழுக்கவும். உள் இழுக்கும் பொழுது, பொறுமை, அமைதி முதலிய தெய்வீக குணங்களை உள் வாங்குவதாக எண்ணவும். மூச்சை வெளியிடும் பொழுது கரு மையத்தில் பதிந்துள்ள தீய பண்புகள், பொறாமை, கோபம், கவலை, டென்ஷன் நீங்கு வதாக எண்ணவும். பின் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் இயல்பாக நடக் கின்ற மூச்சை மட்டும் அமைதி யாக கவனிக்கவும். பின் ஓம் சாந்தி என்று மூன்று முறை கூறி கண்களை மெதுவாகத் திறந்து சாதாரண நிலையில் அமரவும்.

    பலன்கள்

    பத்மாசனம் செய்யும் பொழுது இருகால்களும் தொடை மீது அழுத்தப்படு வதால் ரத்தம் முதுகுத்தண்டு வழியாக மூளைக்கும் அதன் அடியிலுள்ள பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிக்கு நன்கு பாய்கின்றது. இச்சுரப்பி சரியாக இயங்கச் செய்கிறது. இதனால் ரத்த அழுத்தம் படிபடியாக குறைந்து சரியாகி விடும்.

    இந்த ஆசனத்தில் பத்து நிமிடங்கள் இருக்கும் பொழுது, உடல் ஆடாமல், அசையாமல் இருப்பதால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இயங்கும். இருதய துடிப்பு சீராகின்றது. உடல் உள் உறுப்பில் உள்ள டென்ஷனும் வெளியேறுகின்றது. மூச்சை மெதுவாக இழுத்து வெளியிடுவதால் நுரையீரல் முழுவதும் பிராணன் நன்கு செல் கின்றது. பிராண ஓட்டம் சீரமைகின்றது. அத னால் இரத்த ஓட்டமும் சீரடையும்.

    வஜ்ராசனம்

    இதனைப் படிப்பவர்கள் வயதானவர் களாக இருக்கலாம். உடல் பருமனானவர் களாக இருக்கலாம், கால்களில், மூட்டுக் களில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் பத்மாசனம் போட முடியவில்லை என்று வருந்த வேண்டாம். அவர்கள் ஒரு நாற் காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து கைகளை சின் முத்திரையில் வைத்து பயிற்சி முறை களை காலை / மாலை செய்யுங்கள். பலன் நிச்சயம் உண்டு.

    மிகவும் வயதானவர்கள் சுவரில் சாய்ந்து முதுகெலும்பை மட்டும் நேராக வைத்து பயிற்சி செய்யுங்கள். சாதாரணமானவர்கள் எடுத்தவுடன் பத்மாசனம் வராது. பொறுமையாக ஒவ்வொரு காலாக முயற்சி செய்து ஒரு மாதத்தில் முழுமையாக பத்மாசனம் போடலாம்.

    வஜ்ராசனம்

    இரத்த அழுத்தம் வராமல் தடுக்கும், வந்தால் விரைவில் பூரண குணப்படுத்தும் மற்றும் ஒரு எளிய ஆசனம் வஜ்ராசனமாகும்.

    செய்முறை

    விரிப்பில் அமரவும். இருகால்களையும் நீட்டவும். ஒவ்வொரு காலாக மடித்து இருகால்களையும் மடக்கி இரு குதிகால்களில் புட்டம்படும்படி (படத்தை பார்க்கவும்) அமரவும். இரு கைகளையும் கால் முட்டிகளில் வைக்கவும். கண்களை மூடி மெதுவாக மூச்சை உள் இழுக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளியிடவும். இதுபோல் ஐந்து நிமிடங்கள் செய்து விட்டு உங்கள் இரு உள்ளங்கைகளையும் இருதயத்தில் வைத்து எனது இருதயம் சீராக இயங்குகின்றது. இரத்த ஓட்டம் நன்றாக பாய்கின்றது என்று மனதிற்குள் மூன்று முறை கூறிவிட்டு சாதாரண நிலைக்கு வரவும்.

    முக்கிய குறிப்பு

    மூட்டுவலி உள்ளவர்கள், கால்களில், மூட்டில், பாதத்தில் அறுவை சிகிச்சை செய்த வர்கள், மிகவும் வலி உள்ளவர்கள், உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் அவசரப்பட்டு வஜ்ராசனம் செய்ய முயற்சிக்க வேண்டாம்.
    Next Story
    ×