என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    கை, கால்களின் மூட்டு பிரச்சனையை குணமாக்கும் பர்வதாசனம்
    X

    கை, கால்களின் மூட்டு பிரச்சனையை குணமாக்கும் பர்வதாசனம்

    கை, கால்களின் மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் பர்வதாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் நிரந்தர பலனை அடையலாம். இதன் செய்முறையை பார்க்கலாம்.
    செய்முறை :

    விரிப்பில் தரையில் கவிழ்ந்து படுக்கவும், கைகளை நெஞ்சருகே பக்கவாட்டில் கொண்டு வரவும். உள்ளங்கை பகுதியையும், பாதங்கள் இரண்டையும் தரையில் பதித்த படியும் உடலை மேல் நோக்கியபடி முக்கோண வடிவத்தில் உயர்த்தவும்.

    பின் தலையை இரு கைகளுக்கிடையே தொங்க விடவும். இப்படி 20 வினாடிகள் இருந்த பின் நிதானமாக உடலை பழைய கவிழ்ந்த நிலைக்கு கொண்டு வரவும்.

    இந்த நிலையில் சில வினாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு 5 முதல் 7 முறை செய்யவும்.

    ரத்த அழுத்தம் உள்ளவர்களும், ஒரு தலை வலி, கண்நீர் முட்டல் போன்ற கண் நோய் உள்ளவர்களும் இதை செய்யக்கூடாது.

    பலன் :

    தலை, மூளைப்பகுதி, கழுத்து, மார்பு, நுரையீரல் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சீராக அமையும். ஞாபக சக்தி அதிகரிக்கும். கண்பார்வை சீராகும். கை, கால்களின் மூட்டு பலனடையும்.
    Next Story
    ×