என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    யோகாசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் உடல் நலமடைகிறது. ஆரோக்கியம் பெறுகிறது. மன நிம்மதி கிடைக்கிறது. ஆத்ம சக்தி பெறுகிறது.
    தினமும் 5 நிமிடம் யோகாசனம் செய்தால் போதும், அற்புதமான வாழ்க்கையை நாம் அமைத்து கொள்ள முடியும்!

    “அது எப்படி சாத்தியமாகும்?” என்று நீங்கள் யோசிக்கலாம். 5 நிமிட பயிற்சியை தினமும் செய்து பார்த்தால்தான் அதன் தாக்கத்தை நாம் முழுமையாக உணர முடியும்.

    இதற்காகவே ஈஷா அறக்கட்டளை நமக்கு உதவ முன் வந்துள்ளது. ஒரே ஒரு நாள், அவர்கள் நமக்கு 90 நிமிட பயிற்சியும் ஆலோசனையும் கொடுப்பார்கள். வீட்டில் தினமும் 5 நிமிடம் எப்படி யோகா பயிற்சி செய்வது என்ற முழு விபரமும் அந்த 90 நிமிட பயிற்சியின் போது கற்றுத் தரப்படும். அதன் பிறகு நாம் வீட்டிலேயே தினமும் 5 நிமிடம் யோகா செய்து பயன்பெற முடியும்.
    “நோயற்றே வாழ்வே குறைவற்ற செல்வம்”- என்பது நம் முன்னோர்களின் அருள்வாக்கு.

    அளவற்ற செல்வங்கள் பெற்றிருந்தாலும் - நோயற்ற வாழ்வு வாழ்ந்தோமானால்தான் மனித வாழ்வின் மகத்துவத்தை உணர்ந்து சந்தோஷமாக வாழ முடியும். உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பது யோகாசனமாகும். யோகாசனத்தை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் உடல்நலம் கெடுவதில்லை. யோகாசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் உடல் நலமடைகிறது. ஆரோக்கியம் பெறுகிறது. மன நிம்மதி கிடைக்கிறது. ஆத்ம சக்தி பெறுகிறது.

    உடற்பயிற்சியினால் உடல் மாற்றம் அடைவது போல் (கை - கால்களால் மசுல்ஸ்) வெளியில் தெரியாது. ஆனால் உடலின் உள் உறுப்புகள் உறுதியாகி, நரம்புகள் வலுவேறி, தசை நார்களை திடப்படுத்தி ரத்தத்தை உற்பத்தி செய்து, உடலில் தேங்கியுள்ள கழிவுப் பொருட்களை அகற்றி உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் பேராற்றல் யோகாசனத்திற்கு உண்டு.

    மனம் அமைதியை இழக்குமானால் உடல் வலிமையை இழந்து நோய்பற்றி ஆரோக்கியத்தை இழந்து விடும். அப்போது அந்நோயைத் தாங்கும் மன வலிமை இல்லாமையால் மேலும் பல நோய்களுக்கு ஆட்பட்டு உடலே ஒரு சுமையாகி விடுகிறது.

    இதற்கெல்லாம் அடிப்படை காரணமாக இருப்பது மனம்தான். ஆகையினால் மனம் தெளிவுபெற - சமன்பட யோகாசனம் மிகவும் அவசியம். மன அமைதியும் நல்லொழுக்கமும் இல்லாத ஒருவனால் ஆரோக்கியத்துடன் வாழ முடியாது. மன அமைதியுடன் - உடல் நலத்தையும் - ஆன்மீக மேம்பாட்டையும் அடைய யோகாசனம் வழி காட்டுகிறது.

    யோகாசனப் பயிற்சியை முறையாகச் செய்து வந்தால் நிச்சயமாக நூறாண்டு காலத்திற்கு மேலாக ஒருவன் வாழ முடியும். அதற்கு வழிகாட்டவே 5 நிமிட பயிற்சிக்கு ஈஷா உங்களை அழைக்கிறது.

    இந்திய மொழிகளில், உபயோகா என்ற வார்த்தை, துரதிஷ்ட வசமாக உபயோகம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. உப என்றால் துணை, எனவே உபயோகா என்றால், துணை-யோகா அல்லது ‘அரை என்று பொருள். (பாதி) யோகா’ என்று பொருள். அதாவது ஐந்தே நிமிடத்தில் செய்யப்படும் யோகா. இப்பிரபஞ்சத்தின் மூலத்திற்குள் உறிஞ்சப்படுவதற்கு தயாராக இல்லாத, அதே சமயத்தில் பொருள் வாழ்க்கையில் தொலைந்து போக விரும்பாத மனிதருக்காக இந்த உபயோகா கொடுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஆசைகளோ நோக்கங்களோ இல்லாதவருக்கு இது தேவையில்லை.

    கால மாற்றங்களில், மொழிகளின் உபயோகத்தினால் இந்த உபயோகா என்ற வார்த்தை உபயோகமான யோகா அல்லது உபயோகமான செயல் என்று மாறிவிட்டது. அது உபயோகமானது தான், அதில் எந்தசந்தேகமும் இல்லை.

    ஆனால் அதை அப்படி அணுகக் கூடாது. எந்த ஒன்றையும், அதன் பலனுக்காக அணுகுவது சரியான அணுகுமுறை அல்ல, அதையும் தாண்டி அதற்கு பலபரிமாணங்கள் இருக்கக் கூடும். அதை எப்படி பயன்படுத்தி கொள்ளலாம் என்ற மனப்பான்மையை நீங்கள் மாற்றினால், அது உங்களுக்கு பலனளிக்கக் கூடியதாகமட்டுமல்லாமல், உங்களின் அடிப்படை அம்சத்தையே மாற்றியமைத்துவிடும்.
    உபயோகா என்பது, ஒருவரின் ஆன்மீக பரிமாணத்தில் அதிகம் சார்ந்திராமல், உடல்நிலை, மனநிலை மற்றும் சக்திநிலையில் சார்ந்துள்ளது. ஒருவர் முழுமையானவாழ்க்கை வாழ்வதற்கான ஒரு வழிமுறையாகும்.

    உடல் நிலை என்று குறிப்பிடும்போது, அதில் மனநிலையும், உணர்ச்சி நிலையும் சேர்த்துதான் குறிப்பிடுகிறேன். சிலர் யோகாவை வெறுமனே கடுமையான உடற்பயிற்சி போலசெய் வதற்கு பதிலாக, ஐந்து நிமிட உபயோகா செய்யலாம். ஏனென்றால் அது ஒரு சக்திவாய்ந்தவழிமுறை. அதனால் ஈர்க்கப் பட்ட பிறகு வேண்டுமானால், அவர்கள் யோகாவில்ஈடுபடலாம்.

    நீங்கள் இரவு உறங்கும் போது, தட்டையான நிலையில் படுத்து அசைவில்லாமல் இருக்கிறீர்கள். அப்போது உங்கள் சக்தி நிலையிலும், மூட்டு இணைப்புகளிலும் ஒரு செயலின்மை உருவாகிறது. அதனால் இயல்பான நிலையைவிட, உங்கள் மூட்டுக்களில் உயவுத்தன்மை இல்லாமல் போகிறது. அப்படி அந்த உயவுத்தன்மை இல்லாமல் உங்கள் மூட்டுக்களை நீங்கள் நகர்த்தினால், அது அதிக நாட்களுக்கு தாங்காது.

    ஒருவர், எந்த மாதிரியான மூட்டு இணைப்புகளைக் கொண்டுள்ளார் என்பதைப் பொறுத்தே உடல்நிலையில் விடுதலை என்பதற்கு வாய்ப்புள்ளது. உடலின்நாடிகள், இந்த மூட்டுப் பகுதிகளில் மட்டும் ஒரு குறிப்பிட்ட விதமாக இயங்குவதால், அனைத்து மூட்டுக்களும் சக்தியின் சேகரிப்பு மையங்கள் போன்று உள்ளன.

    ஐந்து நிமிட உபயோகாவின் குறிப்பிட்ட அம்சம் மூட்டு இணைப்புகளில் உயவுத்தன்மையை வழங்குவதோடு சக்தி முனைகளையும் இயக்கச் செய்வதால் உடலின் மற்றசக்தி மண்டலங்களும் செயல்படத் துவங்குகின்றன.

    உப-யோகப் பயிற்சிகள் உடல், மன நலத்தை ஒருவருக்கு வழங்குகிறது. ஒவ்வொரு நாளும் இந்தப் பயிற்சிக்காக நீங்கள் செலவு செய்யும் 5 நிமிடங்கள் உங்கள் வாழ்வை மாற்றியமைக்க வல்லவை. நீங்கள் நாடுவது ஆரோக்கியம், ஆனந்தம், அமைதி, அன்பு, வெற்றி, உள்நிலை அறிதல் என எதுவாய் இருந்தாலும், இப்பயிற்சிகள் உங்கள் தடுமாற்றங்களை தகர்த்தெறிந்து வாழ்வில் முன்நோக்கி படியெடுக்க உதவும்.

    யோக அறிவியலின் மூலமாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவது அவசியமாகும். நமது கல்விமுறை தரும் மனஅழுத்தங்களாலும், போட்டி உலகில் வேலை வாய்ப்பைத் தேட வேண்டிய நிர்பந்தங்களாலும், வேலையில்லா திண்டாட்டம் தரும் மன உளைச்சலினாலும் இன்றைய இளைஞர்கள் உடல் அளவிலும் மன அளவிலும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். சரியாகச் சொல்வதானால், இன்றைய இளைஞர்களின் உயிரையும் இந்த பிரச்சனைகளின் தாக்கம் குடிக்கக் கூடியதாய் உள்ளன.

    இலவசமாக யோகப் பயிற்சிகளை வழங்குவதன் மூலம், வருங்கால இந்தியாவின் நம்பிக்கைகளாக விளங்கும் இளைய சமுதாயத்தை உடல், மனதளவில் செழுமை அடையச் செய்வதற்கான முயற்சிகளைத் துவங்கியுள்ளது ஈஷா அறக்கட்டளை. உள்நிலை நலனுக்கு உறுதுணைபுரியும் ஒரு ஒப்பற்ற கருவியான யோக அறிவியலை முன்னிறுத்துவதன் மூலம், இளைஞர்கள் தங்கள் இலட்சியங்களை அடைவதற்கு அவை வழிவகுக்கும் என்பது மட்டுமல்லாமல், இந்த நாட்டின் நலனுக்கும் உலக நலனுக்கும் அதுவே அடிகோலும் என்பதில் ஐயமில்லை!

    மாணவர்களின் நலனுக்காக உபயோகா!

    கடந்த 20 வருடங்களில் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது. 2014-ல் 14 வயதிற்கு உட்பட்ட 1700-க்கும் அதிகமான குழந்தைகள் தற்கொலை செய்துள்ளனர். இந்நிகழ்வு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. முறையான யோகப் பயிற்சிகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் மாணவர்களின் இந்நிலைமை மாறுவதற்கு யோகா ஒரு முக்கிய பங்குவகிக்கும். இதனைக் கருத்தில் கொண்டு, உலக யோகா தினத்தை முன்னிட்டு எதிர்வரும் வாரங்களில் இந்தியா முழுவதும் 25,000 பள்ளிகளில் சுமார் 15 மில்லியன் மாணவர்களுக்கு உபயோகா பயிற்சி வழங்கும் முயற்சிகளை ஈஷா மேற்கொண்டு வருகிறது.

    இந்த வகுப்புகள் யோகா தினம் முடிந்த பின்னரும் கூட, வருடம் முழுவதும் தொடர்ந்து நிகழவுள்ளது. இதன் மூலம் குழந்தைகள் ஆனந்தமாகவும் அமைதியாகவும் கல்வி கற்றல் செயல்முறையை கையாளும் திறம்பெறுவது உறுதி செய்யப்படும்.
    நல்வாழ்விற்காக 5 நிமிடங்கள் செய்யக்கூடிய இந்த எளிய பயிற்சிகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் இச்செயல் திட்டத்தை நிறைவேற்ற 45,600 பள்ளி ஆசிரியர்கள் உபயோகா வகுப்புகளை நடத்துவதற்கான பயிற்சியை ஈஷா அறக்கட்டளை மூலம் பெற்றுள்ளனர்.

    5 நிமிட யோகாவின் பலன்கள்

    · தசைகளுக்கு நல்ல உடற்பயிற்சி, மூட்டுகளுக்கு உயவுத்தன்மை, நரம்பு மண்டலத்தை தூண்டி புத்துணர்ச்சி கொள்ளச் செய்தல்.
    · மூளையில் நியூரான் செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தல், நினைவாற்றல் மற்றும் புத்திக் கூர்மை.
    · தூக்கத்தின் அளவு குறைதல் மற்றும் முதுகுத்தண்டில் புத்துணர்ச்சி.
    · ஆழ்ந்த அமைதியை உணர்தல், புதுவித உயிர்சக்தியை உணர்தல் மற்றும் நல்வாழ்வு.

    ஆழ்ந்த உறக்கத்திற்கு யோகாசனம்!


    மனித ஆரோக்கியத்திற்கு ஆழ்ந்த உறக்கம் அவசியமாகும். ஆழ்ந்த உறக்கம் என்பது சதா தின்றுவிட்டு எப்போதும் உறங்கிக் கிடப்பது என்று பொருள் அல்ல. சதா உறங்குபவர் களுக்கு உடலில் தேவையற்ற சதை பெருகி நோய்தான் வரும்.

    இரவு உணவருந்தி விட்டு படுக்கும்போது ஆழ்ந்த நித்திரை அவசியம். சரியாக நித்திரை இல்லையென்றால் அஜீரண கோளாறுகள் ஏற்பட்டு பலவித நோய்கள் வருவதற்கு வழி வகுத்து விடும்.

    சிலர் சரியாக தூக்கம் வரவில்லை என்பதற்காக தூக்க மாத்திரையை சாப்பிட்டு விட்டு உறங்குவார்கள். இதனால் இயற்கையான தூக்கம் இல்லாமல் செயற்கை தூக்கத்தினால் தான் வாழ்நாளில் பாதியை இழந்து விடுகின்றனர் என்பதை மறந்து விடுகின்றனர்.
    உழைப்பவர்கள் அயர்ந்து தூங்குகிறார்கள். ஆனால் உடலுழைப்பு அற்றவர்களில் சிலர் தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுகிறார் என்பது எதனால்?

    போதிய உடலுழைப்பை அவர்கள் நல்காததுதான் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆகையினால் இவர்கள் ஓரளவுக்காவது உடல் உழைப்பை கொடுக்க வேண்டும்.

    சரியாக உறக்கத்தைப் பெற மிக எளிதான யோகாசனப் பயிற்சியை மேற்கொண்டால் ஆழ்ந்த உறக்கத்தைப் பெற முடியும்.
    கடுமையான யோகாசனப் பயிற்சியை செய்ய இயலாதவர்கள் படுக்கைக்குச் செல்லும் அரைமணி நேரத்திற்கு முன்னதாக “பத்மாசனம்” செய்து விட்டு மன நிம்மதியாகச் சென்றால் ஆழ்ந்த நித்திரை வரும்.

    இலவசமாக யோகா பயிற்சிகள் பெறலாம்!

    2016ஆம் ஆண்டின் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடும் வகையில், உங்கள் ஊரில் இலவச பயிற்சி வகுப்பை ஒருங்கிணைக்க அல்லது கலந்துகொள்ள ஈஷா அறக்கட்டளை உங்களை அன்புடன் அழைக்கிறது. 90 நிமிட நேரம் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பு - அன்பு, அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம் ஆகியவற்றை நல்கும் யோக அறிவியலுக்கான பயிற்சி வகுப்பாக அமையும். இது முழுக்க, முழுக்க இலவசமானது.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்த ஜூன் மாதம் முழுவதும் இலவச யோகா பயிற்சியை அளிக்க ஈஷா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் தனி நபர்கள் மட்டுமல்ல குழுக்களாகவும் கலந்து கொள்ளலாம்.

    பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் ஒன்றிணைந்து இந்த பயிற்சியை பெறலாம். அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் குடியிருப்பு சங்க நிர்வாகிகள் மூலம் ஈஷா மையத்தைத் தொடர்பு கொண்டு இந்த இலவச யோகா பயிற்சியை பெறலாம்.

    மகளிர் குழுக்கள், விளையாட்டுக் குழுக்கள் போன்ற குழுக்களும் யோகா பயிற்சி பெற்று பயன் அடையலாம். 90 நிமிடம் பயிற்சி பெற்று விட்டு, தினமும் வீட்டில் 5 நிமிடம் யோகா பயிற்சி செய்து உங்கள் வாழ்வையே மாற்றி அமைத்துவிடும்இலவசமாக கிடைக்கும் வாய்ப்பு என்பதால் சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள். வாழ்வை மாற்றும் மகத்துவம் இந்த 5 நிமிட யோகா பயிற்சிக்கு உண்டு என்பது உறுதி.

    மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள 83000 11000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
    பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பாக அகில உலக யோகா தினம் நாளை சென்னை பிராட்வே பஸ்நிலையத்தினுள் அமைந்திருக்கும் பச்சையப்பர் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.
    தியானம், யோகா என்பது உலகறிந்த மிகப்பழமையான மன, உடல் பயிற்சியாகும். பிரதமர் மோடி ஜூன் 21-ம் நாளை கொண்டாட மேண்டுமென கேட்டுக்கொண்டதன் பேரில் ஐ.நா. சபை அகில உலக யோகா தினமாக அறிவித்தது. அதன் பிறகு நலகும வளமும நல்கும் யோகத்தின் மீதான மக்களின் ஆர்வம் சிகரம் தொட்டுள்ளது.

    இந்த ஆண்டு பிற தியான நிலையங்களுடன் பிரம்மா குமாரிகள் இயக்கமும் கலந்து கொண்டு தியானத்தின் மூலம் நல்லதொரு உலக மாற்றத்திற்கு அடிகோல வேண்டுமென அழைக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் உலகம் முழுவதிலுமுள்ள பிரம்மா குமாரிகளின் இராஜயோக தியான நிலையங்கள் இத்தியான நிகழ்ச்சியை மக்கள் பங்கேற்க ஏற்பாடு செய்துள்ளது.

    ஆன்மாவின் முக்கிய சக்திகளாகிய மனம், புத்தியை பிரபஞ்சத்தின் உன்னத சக்தியாக இறை சக்தியுடன் ஆழந்த அன்புடன் இணணையச்செய்வதே இப்பயிற்சியின் அணுகுமுறையாகும்.

    இராஜயோகம் என்பது உடற்பயிற்சியான ஆசனங்களை கடந்தது. அது உண்மையான நம்மை (ஆத்மாவை) பரமாத்மாவோடு இணைக்கும் மனப்பயிற்சியாகும். யோகா என்றால் தொடர்பு என்னும் பொருளாகும். ஆக இராஜயோகம் தன்னை எல்லாம் வல்ல இறைவன், பரம தந்தையுடன் இணைந்து அமைதி மற்றும் பேரானந்தத்தில் திளைக்கச் செய்கிறது.

    உலகெங்கிலும் சுமார் 8500 கிளைகளின் மூலம் 137 நாடுகளில் இராஜயோக தியானத்தையும், நற்பண்புகளையும் வளர்க்கச்செய்து உலகம் ஓர் குடும்பம் என்று சாதி, சமய, இன, மொழி வேறுபாடுகளை கடந்து மக்கள் பணியாற்றி வருகிறது. பிரம்மா குமாரிகள் இயக்கம்.

    வருகிற ஜூன் 21-ந்தேதி(நாளை) அகில உலக தியான தினத்தை முன்னிட்டு சென்னையில் பாரிமுனையில் பிராட்வே பஸ்நிலையத்தினுள் அமைந்திருக்கும் பச்சையப்பர் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 3500 பேர் கலந்து கொள்ளும் யோகா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. மாலை 5 மணி முதல் 7 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும்.

    முதலில் ஒரு சில யோகாசனப் பயிற்சிகளும் பின்பு தியான யோகத்தின் பல்வேறு நிலைகளில் செயல் முறைப்பயிற்சியும் நடைபெறும். பொது மக்கள் கலந்து கொண்டு இதன் முழுபலனை அடையுமாறு பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தமிழக மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் பி.கு. பீனா கேட்டுக்கொண்டுள்ளார்.
    கண்களுக்கு பயிற்சி கொடுத்தாலே போதும். பார்வை பளிச் என்று கிடைக்கும்.
    கண்களுக்கு பயிற்சி கொடுத்தாலே போதும். பார்வை பளிச் என்று கிடைக்கும். இது சீனர்களின் நம்பிக்கை. மற்ற நாட்டினரை காட்டிலும் சீனர்களுக்கு கண்பார்வை கூர்மையாக உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதற்கு காரணம் அவர்கள் உடற்பயிற்சி போலவே கண்களுக்கு பயிற்சி அளிக்கும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.

    அந்த பயிற்சி விவரம் வருமாறு:- முதலில் ஒரு நாற்காலியில் நேராக அமர்ந்து கொள்ள வேண்டும். பின்பு கீழே கூறப்பட்டுள்ள பயிற்சிகளை ஒவ்வொன்றாக செய்தால் போதும். கண்ணாடி இல்லாமலே பார்வை பளிச்சிடும்.

    பயிற்சி-1. தலையை அசைக்காமல் கண்களை வலமிருந்து இடமாகவும், பிறகு இடமிருந்து வலமாகவும் பார்க்க வேண்டும். இப்படி 8 முறை செய்ய வேண்டும். எவ்வளவு தூரத்திற்கு பார்க்க முடியுமோ அவ்வளவு தூரத்திற்கு பார்க்க வேண்டும்.

    பயிற்சி-2. தொடர்ந்து மேலிருந்து கீழாகவும், பிறகு கீழிருந்து மேலாகவும் பார்க்க வேண்டும். இதையும் 8 முறை செய்ய வேண்டும்.

    பயிற்சி-3. கண்களை வலமிருந்து இடமாக கடிகார முட்களைப் போல 8 முறை சுழற்ற வேண்டும். இதேபோல இடமிருந்து வலமாக 8 முறை சுழற்ற வேண்டும்.

    பயிற்சி-4. உங்களது கண்களுக்கு முன்னால் படுக்கை வசத்தில் 8 என்ற எண் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். முதலில் வலமிருந்து இடமாக கண்களால் 8ஐ போடுங்கள். இதையே மாற்றி இடமிருந்து வலமாக செய்ய வேண்டும்.

    பயிற்சி-5. உங்களது கண்களுக்கு முன்னால் செங்குத்தாக 8 என்ற எண் இருப்பதாக பாவித்துக்கொள்ளுங்கள். முதலில் மேலிருந்து கீழாகவும் பின் கீழிருந்து மேலாகவும் கண்களால் 8 போட வேண்டும்.

    பயிற்சி-6- வலது கண்ணின் மேல் கார்னரை உற்று நோக்க வேண்டும். பிறகு வலது கண்ணின் கீழ் கார்னரை பார்க்க வேண்டும். இதையும் 8 முறை செய்ய வேண்டும். இதேபோல இடது கண்ணின் மேல் கார்னரையும், கீழ் கார்னரையும் பார்க்க வேண்டும். இதையும் 8 முறை செய்ய வேண்டும்.

    ஒவ்வொரு பயிற்சியின் முடிவிலும் கண்களை சிமிட்ட வேண்டும்.

    இந்த பயிற்சிகள் முடிந்ததும் நாற்காலியில் அமர்ந்தவாறே வலது உள்ளங்கையால் இடது கண்ணையும், இடது உள்ளங்கையால் வலது கண்ணையும் மென்மையாக அழுத்தம் கொடுக்காமல் மூட வேண்டும். சில வினாடிகள் கழித்து மூடிய உள்ளங்கைகளை மெதுவாக எடுக்க வேண்டும். அப்போது கண்களை சிமிட்டிக் கொண்டே கைகளை எடுக்க வேண்டும். பிறகு முழுமையாக எதிரே உள்ளவற்றை பார்க்கலாம்.

    பயிற்சிகளை தினமும் ஒரு முறை அல்லது இரு முறை செய்யலாம். 30 முதல் 40 நாட்களுக்கு தொடர்ச்சியாக செய்தால் நல்ல பலன் உண்டு. கடைசியாக ஒன்று பயிற்சி காலத்தில் மது, புகை கூடாது. இதற்கு கண்ணாடியே போட்டுக்கொள்ளலாம் என்று புகை, மதுப் பிரியர்கள் சொன்னாலும் சொல்வார்கள்.
    40 வயதை கடந்ததும் வயிற்றில் தொப்பை லேசாக எட்டிப்ப்பார்க்க தொடங்கும். வீட்டில் சில நிமிடங்களில் செய்யும் இந்த யோகாவினால் நீங்கள் நினைத்தபடி வயிற்றிலிருக்கும் தொப்பையை குறைக்கலாம்.
    பரிபூரண என்றால் சமஸ்கிருதத்தில் முழுமையான, நவாசனா என்றால் படகு என்று பொருள் தரும். முழுமையான படகு போல் அமர்ந்த நிலையில் செய்யப்படும் இந்த ஆசனத்திற்கு பரிபூரண நவாசனா என்று பெயர் வந்துள்ளது. அடிவயிற்றில் அதிக அழுத்தம் தரப்படுவதால் விரைவில் அங்கிருக்கும் கொழுப்புகள் கரையும்.

    செய்முறை :

    முதலில் விரிப்பில் கால்களை நீட்டி அமருங்கள். மூச்சை இழுத்துவிட வேண்டும். கைகளை தரையில் அழுந்த பதியுங்கள். பின்னர் மெதுவாக பாதங்களை தூக்குங்கள்.

    கால்கள் வளையக் கூடாது. பேலன்ஸ் இல்லையென்றால் மெதுவாக தொடையை கைகளால் பிடித்துக் கொள்ளலாம். பாத விரல்கள் உங்கள் கண்களின் உயரத்திற்கு சிறிது அதிகமாக இருக்கும்படி தூக்குங்கள்.

    மொத்த எடையையும் இப்போது உங்கள் இடுப்பு தாங்கும். முதுகை வளைக்காமல் இருக்க வேண்டும். இப்போது படகு போன்ற நிலையில் நீங்கள் இருப்பீர்கள். ஆரம்பத்தில் செய்யும்போது இந்த நிலையில் 10- 20 நொடிகள் இருங்கள். பின்னர் ஒரு நிமிடம் வரை தக்குபிடிக்க முடியும். பின் மெதுவான கால்களை இறக்கி இயல்பு நிலைக்கு வாருங்கள்.

    பலன்கள் :

    உங்கள் வயிற்றிற்கும் முதுகிற்கும் பலம் அளிக்கும். சிறு நீரகம், சிறுகுடல் ஆகியவற்றின் செயல்களை ஊக்குவிக்கும். ப்ரோஸ்டேட் சுரப்பியை தூண்டும். ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

    கழுத்து, முதுகுவலி இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம். கர்ப்பிணிகளும் செய்யக் கூடாது. அதே போல், குறைந்த ரத்த அழுத்தம், ஆஸ்துமா, இதய நோய் இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.
    இந்த பயிற்சி செய்வதால் மார்பு நன்கு விரிந்து கைகள் வலிமையடைகிறது.
    மார்பு அளவிற்கு இரண்டு உள்ளங்கைகளையும் புஜங்களுக்கெதிரில் தரையில் ஊன்றி, கால்களை ஒன்று சேர்த்து பின்னுக்கு நீட்டிக் கொள்ளவும். கால் விரல்களை பூமியில் படிய வைத்து தலை நிமிர்ந்து உடலை விறைப்பாக வைத்துக் கொண்டு சுவாசத்தை நெகிழ்த்தவும். அதாவது உடல் தரையில் படாமல் உள்ளங்கைகளும், கால் விரல்களும் மட்டுமே தரையில் பட வேண்டும்.

    பிறகு சுவாசத்தை நெகிழ்த்திய பின் உடலை தரை மட்டத்திற்கு கொண்டு வர வேண்டும். ஆனால் தரையில் உடல் படக்கூடாது. இந்நிலையில் சுவாசத்தை உள் இழுத்துக் கொண்டே முன்போல உடலை மேலே நோக்கி கிளப்பி கைகளை நேரே உயர்த்தி தலையை நிமிர்த்தவும். உடலைத் தணிக்கும் பொழுது உள்ளங்கைகளும் கால் விரல்களும் தவிர மற்ற பாகங்கள் தரையில் படுத்தல் கூடாது.

    இதுமாதிரி ஆரம்பத்தில் பத்து தடவைகள் செய்யலாம் சில நாட்கள் பயின்று திறமை வந்த பின் சுவாசத்தை அடக்கிய வண்ணமே ஒரே மூச்சில் (தம்மில்) எத்தனை தடவைகள் சுலபமாக செய்ய முடிகிறதோ அத்தனை தடவைகள் சுறுசுறுப்பாக செய்து பழக வேண்டும்.

    சற்று சிரமம் ஏற்படும் பொழுதும் அப்பிடியே கை, கால்களை நகர்த்தாமல் உடலைத் தரையில் படிய வைத்து சுவாசத்தை நெகிழ்த்தி சில வினாடிகள் ஒய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் முன்போல் செய்யலாம். இந்த பயிற்சி செய்வதால் மார்பு நன்கு விரிந்து கைகள் வலிமையடைகிறது. 
    குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு விருக்ஷாசனா யோகா நிரந்தர தீர்வை தரும்.
    குறைந்த ரத்த அழுத்தம் உடலுக்கு ஆபத்தைதான் தரும். ஆகவே உடனடியாக கவனிக்க வேண்டும். அவற்றை சரி செய்ய யோகாவில் ஒரு தீர்வு உண்டு. அதுதான் விருக்ஷாசனா. இது செய்வதற்கு மிக எளிது. ரத்த ஓட்டத்தை சீராக்கும். அதனை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

    செய்முறை :


    தரையில் உள்ள விரிப்பில் நேராக நில்லுங்கள். மூச்சை சீராக விட வேண்டும். கால்களை நன்றாக சம நிலைப் படுத்தி நின்றுகொள்ளுங்கள். முதலில் வலது காலை தூக்கி, இடது காலின் தொடை மீது பாதம் பதிய வைக்க வேண்டும். முனிவர் ஒற்றைக் காலில் தவம் செய்வது போல.

    இப்போது கைகளை மேலே தூக்கி நமஸ்காரம் செய்வது போல் வையுங்கள். உங்கள் உடல் நேராக இருக்க வேண்டும். உடல் ஆடாமல் இருக்க உங்கள் இடது காலால் நன்றாக பேலன்ஸ் செய்து கொள்ளுங்கள். கண்கள் நேராக பார்த்தபடி இருக்க வேண்டும். 2 நிமிடம் அவ்வாறு இருந்துவிட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு வாருங்கள்.

    இப்போது இது போல், இடது காலுக்கும் செய்யுங்கள். இவ்வாறு ஐந்து முறை செய்யலாம்.

    ஒற்றைக்காலில் நிற்கும் நேரத்தை படிப்படியாக அதிகரித்து கொள்ளலாம்.

    பலன்கள் :

    இந்த யோகாவை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் உடலில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். மனதை ஒருமுகப்படுத்துதல் அதிகமாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். நரம்பு தளர்ச்சி பிரச்சனை சரியாகும். குறைந்த ரத்தம் அழுத்தம் உள்ளவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் குறைந்த ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

    குறிப்பு :

    ஒற்றை தலைவலி, தூக்கமின்மை, அதிக ரத்த அழுத்தம் ஆகியவை உள்ளவர்கள் இந்த யோகாவை செய்ய வேண்டாம்.
    பெண்களுக்கு இடுப்பு பகுதியில் இருக்கும் கொழுப்பை கரைக்க இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
    அனைவருக்குமே இடுப்பு பகுதியானது அழகாக இருக்க வேண்டும் ஆசை உண்டு. சிலருக்கு இடுப்பு இருக்குறதே தெரியவில்லை என்று சொல்வார்கள். அவர்கள் இந்த உடற்பயிற்சி செய்து நல்ல பயன் பெருங்கள்.
    முதலில் உடற்பயிற்சி செய்யும் விரிப்பில் நேராக நிற்கவும், பிறகு இரண்டு பாதங்களும் சற்று இடைவெளி விட்டு இருக்குமாறு கால்களை வைத்துக் கொண்டு நேராக நிற்கவும்.

    கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு அதில் கட்டை விரல் மட்டும் முன்பக்கம் மற்றும் மற்ற விரல்கள் பின்பக்கமும் இருக்குமாறு இடுப்பை பிடிக்கவும்.

    இப்பொழுது இடுப்பை வலது புறமாகவும், இடது புறமாகவும் சுற்றவும். அதாவது இடுப்பை 5 முறை வலமிருந்தும், 5 முறை இடமிருந்தும் சுற்றினால் போதும்.

    இப்பயிற்சி செய்யும்போது பாதம் நன்றாக தரையில் ஊன்றி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கால்களை நகர்த்தாமல் இடுப்பை மட்டும் வலதுபுறமாக 5 முறை சுற்றவும். பிறகு பழைய நிலைக்கு வரவும். அதே முறையில் இடது புறத்துக்கும் செய்ய வேண்டும்.   

    இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆரம்பத்தில் இப்பயிற்சி செய்யும் போது சற்று வலி உண்டாகும். ஆனால் தொடர்ந்து செய்ய செய்ய இடுப்பை சுலபமாக சுற்ற முடியும் மற்றும் வலியும் ஏற்படாது.

    ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு அனைவருக்கும் சிறந்த உடற்பயிற்சி அவசியம்
    ஆரோக்கியத்திற்கு வயது வரம்பு இல்லை. எனும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு அனைவருக்கும் சிறந்த உடற்பயிற்சி அவசியம். உடற்பயிற்சி செய்பவருக்கும், சாதாரண ஒருவருக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை நாம் வெளிப்படையாகக் கண்டுகொள்ளலாம்.

    வயதில் முதியவர்களும் சில பாதுகாப்பான உடற்பயிற்சி முறைகளை மேற்கொள்ளலாம். சீரான உடற்பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கங்கள் முதியோர்களை சுதந்திரமாக வைப்பது மட்டும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக பேண உதவுகிறது. வயது மூத்தவர்கள் ‘ஏரோபிக்’, யோகா, தசை தளர்வுக்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

    இவ்வாறான பயிற்சிகள் இதய நோயின் ஆபத்திலுருந்து முதியோர்களை பாதுகாக்கும். அதிலும், முறைப்படி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும் ஒன்றாகும்.

    முறையான உடற்பயிற்சி அனைவருக்கும் பயன் அளிக்கும். வாரத்திற்கு குறைந்தது ஐந்து நாட்கள் உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
    தினமும் காலை, மாலை இருவேளை தோப்பு கரணம் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்.
    பிள்ளையார் முன்னாள் தோப்புகரணம் போடுவதும், குழந்தைகள் தவறு செய்தால் தோப்பு கரணம் போடு என பெரியவர்கள் சொல்வதும் நாம் சர்வ சாதாரணமாக அறிந்த செய்தி. இரண்டு காதுகளையும் கைகளை குறுக்காக பிடித்து கால் மடித்து அமர்ந்த நிலை வருவதும் அப்படியே மறுபடி எழுவதும்தான் தோப்பு கரணம் என்று அழைக்கப்படுகின்றது. ஆனால் இதன் பின்னே எத்தனை ஆரோக்கிய ரகசியங்கள் அடங்கியுள்ளது என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்.

    யோகா பயிற்சியில் இதனை மனித உடலில் உள்ள சக்கரங்கள் நன்கு தூண்டப்பட்டு இயங்க வைக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
    ஆய்வில் முக்கியமான நரம்புகள் நன்கு இருக்கப்பட்டு மேலும் மூளையுடன் தொடர்புடைய தண்டுவடம் மூளை நரம்புகளை கூடுதல் சக்தியுடன் இயக்குவிப்பதாகவும் அதனால் நம் மூளை பன் மடங்கு சக்தியுடன் செயலாற்றும் திறன் பெறுகின்றது என்றும் கூறப்படுகின்றது.

    தினமும் காலையும், மாலையும் 21 முறை தோப்பு கரணம் செய்பவரின் உடல் வஜ்ரம் போல் உறுதியாகி மூளையும் திறம்பட செயல்படுகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. வெளிநாட்டு ஆய்வில் இதனை மருந்தில்லா மூளையின் சக்தி என்கின்றனர்.
    பொதுவில் தோப்பு கரணத்தினை காலையிலும் மாலையிலும் செய்வது நல்லது.

    அதே போன்று பிள்ளையார் குட்டும் மூளையில் உள்ள பீனியில் சுரப்பிக்கு புத்துணர்வு ஊட்டுவதாக சொல்லப்படுகின்றது.
    தோப்பு கரணத்தினை பிள்ளையாரை நோக்கி மட்டும்தான் போட வேண்டுமா என்ற கேள்வி அநேகரிடம் எழும். நமது முன்னோர் மனிதனின் ஆரோக்கியத்தினை பக்தியுடன் இணைந்து வழங்கினர். நீங்கள் இதனை பயிற்சியாக செய்தாலும் சிறந்ததே.
    முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் விரைவில் குணம் அடையலாம்.
    செய்முறை :

    விரிப்பில் முதுகு தரையில்படும்படி படுக்கவும். கால்களை மடித்து, பாதங்களை மேலே உயர்த்தி இரு முட்டிகளையும் இரு உள்ளங்கைகளால் பிடிக்கவும். முட்டிகளுக்கு இடையில் இடைவெளி இருக்கட்டும். பாதங்கள் தளர்வாக இருக்கட்டும்.

    இந்த நிலையில் மூச்சை இழுத்து, ஓரிரு விநாடிகளுக்குப்பின் மூச்சை வெளியே விட்டபடி இரு முட்டிகளையும் மார்புப் பக்கம் நகர்த்துங்கள். இப்போது கால்கள் நன்கு அகண்டு, முழங்கைகள் தரையைத் தொடும். ஓரிரு விநாடிகளுக்குப்பின், மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே முட்டிகளை பழைய நிலைக்குக் கொண்டுவரவும். இதுபோல ஆறு முறை செய்யவும்.

    பலன்கள் :

    அடிவயிறு, கீழ் முதுகு ஆரோக்கியம் பெறும். தோள்பட்டை நெகிழ்வுத்தன்மை அடையும். நாட்பட்ட முதுகுவலி குறையும்.
    தேவையற்ற கொழுப்பு எரிக்கப்படுவதால் இதய நோயாளிகளுக்கும் பயனுள்ள பயிற்சியாக சைக்கிளிங் இருக்கும்.
    தொடர்ந்து சைக்கிளிங் பயிற்சி செய்கிறவர்களுக்கு 40 சதவிகிதம் நீரிழிவு குறைந்திருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆர்த்ரைட்டிஸ் போன்ற எலும்புப் பிரச்சனைகள், மூட்டு வலி, முதுகுவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கெல்லாம் சைக்கிளிங் பரிந்துரைக்கப்படுகிற பயிற்சியாக இருக்கிறது. பருமன் உள்ளவர்களால் அதிக எடையை தூக்க முடியாது என்பதால் இவர்களுக்கு சைக்கிளிங் நல்ல சாய்ஸாக இருக்கும்.

    நடைப்பயிற்சியில் 150 முதல் 250 கலோரி வரைதான் எரிக்க முடியும். ஜாக்கிங் செல்லும்போது 300 முதல் 400 வரைதான் கலோரிகள் செலவாகும். சைக்கிளிங்கிலோ 500 முதல் 600 வரை கலோரிகளை எரிக்க முடியும். தினமும் 30 நிமிடம் சைக்கிளிங் பயிற்சி செய்தாலே நல்ல பலன் கிடைக்கும். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு எரிக்கப்பட்டு, வருடத்தில்

    தேவையற்ற கொழுப்பு எரிக்கப்படுவதால் இதய நோயாளிகளுக்கும் பயனுள்ள பயிற்சியாக சைக்கிளிங் இருக்கும். இதயத்துடிப்பின் விகிதத்தையும் சராசரி அளவுக்கு மிதமாகக் கொண்டு வர முடியும். இதற்காகவே, ஒருவருக்கு சைக்கிளிங் பயிற்சி கொடுக்கும் முன்னர் அவரது இதயத்துடிப்பைக் கணித்துக்கொண்டு அந்த வேகத்துக்குத் தகுந்தாற்போல சைக்கிளிங் பயிற்சி கொடுப்பார்கள். சைக்கிளிங் பயிற்சியை பலருடன் இணைந்து மேற்கொள்வது இன்னும் நல்ல பலனைத் தரும்.

    ஜிம்மில் செய்யும் சைக்கிளிங்கிலேயே இதுபோல் கூட்டாக 10 பேர் சேர்ந்து சைக்கிளிங் செய்யும் ஸ்பின்னிங் முறை இருக்கிறது. இந்த ஸ்பின்னிங் முறையின்போது துள்ளலான இசை ஒலித்துக் கொண்டிருக்கும்.

    இன்ஸ்ட்ரக்டர் ஒருவர் சொல்லிக் கொடுப்பார். மலைப்பாதையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்வது போலவோ, ஒரு குகைக்குள் சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்வது போலவோ கற்பனை செய்துகொள்ள வேண்டும். இதுதான் ஸ்பின்னிங் சைக்கிளிங் முறை. இது நல்ல பொழுதுபோக்காகவும் இருக்கும். மனதிலும் உற்சாகம் பெருகும். இதனால் மன அழுத்தம், பதற்றம் போன்றவை நம்மைவிட்டுக் காணாமல் போய்விடும்.

    சைக்கிளிங்கில் Aerobic என்ற ஆக்சிஜன் பயிற்சி,  Anaerobic என்ற ஆக்சிஜன் இல்லாமல் செய்யும் பயிற்சி என இரண்டு வகைகள் இருக்கின்றன. இதில் ஏரோபிக் முறை எளிதானது. இரண்டாவது வகை அனரோபிக் பயிற்சியில் கொஞ்சம் சிரமப்பட்டு, அதிவேகமாக, மூச்சிரைக்கப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஏரோபிக் பயிற்சியில் நம் உடலில் இருக்கும் கிளைக்கோஜன் அப்படியே குளுக்கோஸாக மாறி, அதிலிருந்து சக்தி எரிக்கப்படும். அதன்பிறகு, கொழுப்பு எரிக்கப்படும்.

    ஆனால், அனரோபிக்கில் கொழுப்பு சக்தி நேரடியாகவே எரிக்கப்பட்டு, உடல் எடை குறையும். ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கெல்லாம் சைக்கிளிங் வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.

    பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலின் செயல்பாட்டை அதிகரிக்க ஹேண்ட் சைக்கிளிங் என்ற பயிற்சி முறையும் இருக்கிறது. மற்ற உடற்பயிற்சிகளை ஒருவரின் வழிகாட்டுதல் இல்லாமல் செய்ய முடியாது. ஆனால், சைக்கிளிங் அப்படி இல்லை. நாமே நமக்குத் தேவையான, செய்ய முடிகிற அளவில் செய்து கொள்ளலாம்.

    சைக்கிளிங்குக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. இப்படித்தான் சைக்கிளிங் செய்ய வேண்டும் என்று விதிமுறைகள் எதுவும் இல்லை என்பதால் யார் வேண்டுமானாலும் சைக்கிளிங் பயிற்சி செய்யலாம். பெண்களுக்கு சைக்கிளிங் பயிற்சி செய்வதால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, உடலுக்கு வசீகரமான வடிவம் கிடைக்கும். Upper body, Lower body என்று நம் உடலை இரண்டுவிதமாக பிரித்துப் பார்த்தால் லோயர் பாடியில்தான் அதிகப்படியான கொழுப்புகள் சேர்ந்திருக்கும்.

    சைக்கிளிங்கில் இந்த லோயர் பாடியில் இருக்கும் கொழுப்பு கரைக்கப்பட்டு தசைகள் சரியான வடிவத்துக்கு வரும். குறிப்பாக, இடுப்புப் பகுதியில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்பைக் கரைக்க சைக்கிளிங் உதவுகிறது. சைக்கிளிங் பயிற்சி செய்யும் இயந்திரத்தை முடிந்தால் வீட்டில் வாங்கி வைத்துக் கொண்டால் நேரம் கிடைக்கும்போது பயிற்சி செய்து கொள்ளலாம். வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பயிற்சி செய்து கொள்ளவும் வசதியாக இருக்கும்.

    வெளியிடங்களில் சைக்கிள் பயிற்சி செய்யும்போது பரபரப்பான இடங்கள், சுகாதாரமற்ற இடங்கள் போன்றவற்றைத் தவிர்த்து நல்ல சூழலில் சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இயற்கை சார்ந்த சூழலாக இருந்தால் நாம் எதிர்பார்க்கிற பலன்கள் இன்னும் பலமடங்கு அதிகமாகவே கிடைக்கும். சைக்கிள் ஓட்டுவது கிரவுண்டாக இருந்தாலும் சரி... ஜிம்மாக இருந்தாலும் சரி... இரண்டுக்குமே பலன் ஒன்றுதான்!’’ரத்தக்கொதிப்பு, பக்கவாதம் போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கெல்லாம் சைக்கிளிங் வரப்பிரசாதம்!
    தலை சார்ந்த அனைத்துத் தொந்தரவுகளையும் தீர்க்கும் முத்திரை இது.
    செய்முறை :

    மகா சிரசு முத்திரை இதை எப்படி செய்ய வேண்டும் என்றால் கட்டை விரல் ஆள்காட்டி விரல் நடுவிரல் இவைகளின் நுனிகளை ஒன்றோடொன்று தொடவேண்டும். மோதிர விரலை மடித்து கட்டைவிரலின் அடிப்பாக சதைப் பகுதியில் மோதிர விரலின் நுனியை வைக்க வேண்டும். படத்தை நன்றாகப் பார்க்கவும். சுண்டுவிரல் நேராக இருக்கும்படி வைக்கவும்.

    இந்த முத்திரையை தினமும் 2 வேளை செய்ய வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை செய்யலாம்.

    பயன்கள் :     

    தலை சார்ந்த அனைத்துத் தொந்தரவுகளும் நீங்கும். தலைவலி, மனஅழுத்தம், டென்சன் இவைகள் தீரும்.
    ×