என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    தூக்கமின்மை போன்ற நோய்களுக்கு விரைவில் நிவாரணம் அளிக்கக் கூடியது பரமபிதா ஆசனமாகும்.
    பிரார்த்தனைக்கு உறுதுணையாக அமைவதே பரமபிதா ஆசனமாகும். 

    செய்முறை :

    விரிப்பில் முழங்காலிட்டு அமர்ந்து கொள்ளவும். பின்னர் மெதுவாக எழுந்து இரு கைகளையும் இருபக்கங்களிலும் நீட்டி விரித்து தலையை பின்னார் சாய்த்து வானத்தைப் பார்க்கவும். இரு உள்ளங்கைகளும் வானத்தைப் பார்க்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும். 

    இதனால் வானத்தில் உள்ள லட்சக்கணக்கான நட்சத்திரங்களின் கதிர்கள் நமது உள்ளங்கையை அடைந்து அங்கிருந்து நமது மூளைச் செல்களை விருத்தி அடையச் செய்யும். மிகக் குறுகிய நேரத்தில் மனஅமைதியை அளிக்க வல்லதே பரமபிதா ஆசனமாகும். 

    வானத்தைப் பார்க்க முடியாதாவர்கள் தங்கள் அறையிலிருந்தும் இந்த ஆசனத்தைப் பயிலலாம். உயர் இரத்த அழுத்தம், தூக்கமின்மை போன்ற நோய்களுக்கு விரைவில் நிவாரணம் அளிக்கக் கூடியது பரமபிதா ஆசனமாகும். 
    தினமும் அல்லது நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் கோபத்தை கட்டுப்படுத்தலாம்.
    செய்முறை :

    அறிவையும் ஒருமுனைப்படுதலையும் குறிக்கும் மிக அடிப்படையான யோகாசன முத்திரை இதுவாகும். விரிப்பில் பத்மாசனா தோரணையில் அமர்ந்திருக்கும் போது காலையில் செய்ய வேண்டிய முத்திரை இது. 

    ஆள்காட்டி விரலால் கட்டை விரலை தொட வேண்டும். இந்த நிலையில் ஆரம்பத்தில் 20 நிமிடமும், போகப்போக நேரத்தில் அளவை அதிகரித்து கொள்ளலாம். 

    பயன்கள் :

    இந்த முத்திரை உங்கள் ஒருமுனைப்படுதலை மேம்படுத்தி, தூக்கமின்மையை போக்கி, கோபத்தை கட்டுப்படுத்த உதவும்.

    முதுகுத்தண்டு சார்ந்த நோய்களும் இடுப்பு மற்றும் முதுகு வலியை சரிசெய்ய முதுகுத்தண்டு முத்திரை உதவும்.
    செய்முறை :

    வலது கை: கட்டை விரல் நுனியுடன் சுண்டு விரல் மற்றும் நடு விரல் நுனிகளைச் சேர்த்துவைக்க வேண்டும். ஆள்காட்டி விரல் மற்றும் மோதிர விரல் நீட்டி இருக்க வேண்டும்.

    இடது கை: கட்டை விரலின் நடுரேகையில் ஆள்காட்டி விரலின் நகப்பகுதியைவைத்து, கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். தரையில் சப்பளமிட்டு அமர்ந்தோ, தரையில் காலை ஊன்றியபடி நாற்காலியில் அமர்ந்தோ, 10-15 நிமிடங்கள் வரை இந்த முத்திரையைச் செய்யலாம். ஒரு நாளைக்கு 3 முதல் 5 முறை செய்வது நல்லது.

    பலன்கள் :

    உட்கார்ந்தே வேலை செய்வோர் ஐந்து நிமிடங்கள் இந்த முத்திரையைச் செய்ய இடுப்பு வலி குறையும். மேலும், இடுப்பு வலி வராமல் தடுக்கலாம். முதுகுவலிக்கு இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்துவர, சிறந்த பலன் கிடைக்கும். முதுகில் ஏற்படும் தசைப்பிடிப்பு, உச்சந்தலையில் பிடிப்பது போன்ற வலி, இடுப்பு வலி சரியாகும். பெண்களுக்கு, இடுப்பு எலும்புத்தசை பலப்படவும், பிரசவத்துக்கு பின்னர், இடுப்பு எலும்புகள் நல்ல நிலைக்குத் திரும்பவும் இந்த முத்திரையைச் செய்யலாம்.

    யோகாசனம் செய்பவர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னவென்று கீழே பார்க்கலாம்.
    யோகாசனப்பயிற்சியின் மூலம் மன அழுத்தம் குறைவதோடு தாம்பத்ய வாழ்க்கையில் சிறந்த முறையில் செயல்பட செய்வதும் தெரியவந்துள்ளது. 

    யோகாசனத்தை முதன்முதலாகப் பழக விரும்பும் ஒருவர் குறைந்தது ஒரு வார காலமாவது நன்கு பயிற்சி பெற்ற ஒரு குருவிடம் ஒழுங்காகப் பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் நல்லது.

    * காலையில் ஆசனங்களைப் பழகுவதே சிறந்ததாகும். மாலையில் செய்வதாயின் சாப்பிட்டு, மூன்று மணி நேரத்திற்கு பின்னரே செய்தல் வேண்டும். காலையில் எழுந்தவுடன் தேநீர் அருந்தும் பழக்கமிருப்பவர்களாயின் தேநீர் அருந்தி அரை மணி நேரத்திற்கு பின்னரே ஆசனங்களைச் செய்தல் வேண்டும். 

    * ஆசனங்களைச் செய்வதற்கு முன்பு உடலைத் தயார் நிலைப்படுத்துவதற்காக சில எளிய முன் பயிற்சிகள் செய்தல் வேண்டும்.

    * உடல் உபாதைகள் உடையவர்கள் சில ஆசனங்களைச் செய்தலாகாது. இருபது வயதுக்குட்பட்டவர்கள் சிரசாசனம் செய்யக் கூடாது.

    * ஆசனங்கள் செய்யும் போது ஒரு ஆசனத்துக்கு அடுத்து அதற்கான மாற்று ஆசனம் செய்தே அடுத்த ஆசனத்தைச் செய்தல் வேண்டும். ஆசனங்களுக்கிடையில் சாந்தியாசனம் செய்து ஓய்வு எடுத்தல் வேண்டும்.

    * ஒவ்வொரு ஆசனத்தின் முடிவிலும் இரு தடவைகள் மூச்சை நன்றாக இழுத்து விடுதல் வேண்டும்.

    * ஆசனங்களை மிக இலகுவாகச் செய்தல் வேண்டும். உடல் வளைந்து வலுக்கட்டாயமாகச் செய்யக் கூடாது. அவரவர் தங்களால் இயலக் கூடிய ஆசனங்களையே செய்தல் வேண்டும்.

    * ஆசனங்களை முடிக்கும் போது 3-5 நிமிடங்கள் வரை சவாசனம் செய்தே முடித்தல் வேண்டும்.

    * இறுதியாக நாடி சுத்தி, பிராணாயாமம் செய்து, 10-20 நிமிடங்கள் வரை தியானம் செய்வது நல்லது.

    * ஆசனங்களை செய்ய முடியாதவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் காலையும்,மாலையும் 10-20 நிமிடங்கள் சாதாரண நிலையில் அமர்ந்து தியானம் செய்வது நல்ல பயனளிக்கும். இதுவும் இயலாதவர்கள் சாப்பிடும்போது நிலத்தில் சப்பாணி கொட்டி இருந்து சாப்பிட்டாலே போதுமாகும். இதுவுமியலாதவர் 20நிமிடங்கள் நடப்பது நன்மை பயக்கும். 

    சங்கு முத்திரையை தொடர்நது தினமும் செய்து வந்தால் தைராய்டு நோய் குணமடையும்.
    செய்முறை :

    இடது கை பெருவிரலை படத்தில் காட்டியுள்ளபடி வலது கை விரல்களால் மூடிக்கொள்ளவும். இடது கையின் மற்ற விரல்கள் வலது கை விரல்களின் பின்பகுதியில் சாய்த்து வைத்துக்கொள்ளவும். வலது கை பெருவிரல் நுனியால் இடது கை நடு விரல் நுனியை தொட்டுக்கொள்ளவும், மற்ற இடது கை விரல்கள் நடுவிரலை சார்ந்து இருக்கவேண்டும். இந்த முத்திரை சங்கு வடிவம் போல் இருக்கும். இதனால் இதை சங்கு முத்திரை என அழைக்கப்படுகிறது.

    இந்த முத்திரை பயிற்சியால் நமது சுவாச மண்டலம் அதிக சக்தி பெறுகிறது. இந்த முத்திரை பயிற்சியின் போது கண்களை மூடிக்கொண்டு அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு "ஓம்" மந்திரத்தை உச்சரித்துக்கொண்டிருந்தால் இந்த முத்திரையினால் ஏற்படும் நல்ல பலன் முழுவதும் நன்றாக கிடைக்கும்.

    இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரத்திலும் செய்யலாம். சில நிமிடங்கள் செய்தாலே இது நல்ல பலன் கொடுக்கும்.

    பயன்கள் :

    தைராய்டு நோய் குணமடைகிறது. திக்கிப் பேசுவது குணமடைகிறது. இந்த முத்திரை நமது தொப்புளுக்கு கீழே உள்ள 72000 நரம்புகளை சக்தியுடன் இயங்கவைக்கிறது.

    அலர்ஜி மற்றும் தோல் நோய் குணமடைகிறது. தசை வலுவடைகிறது. தொண்டையில் ஏற்படும் நோய்கள் குணமடைகிறது.

    மெல்லோட்டத்துக்கான விதிமுறைகள் என்னவென்று கீழே பார்க்கலாம்.
    விதிமுறைகள் என்று சிறப்பாக எதுவும் இல்லை. 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். மெல்லோட்டத்தை மேற்கொள்வதற்கு முன் நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து உங்கள் இதயத்துடிப்பு, ரத்த அழுத்த அளவு, நாடித் துடிப்பு, உடல் எடை ஆகியவற்றை நன்கு பரிசோதனை செய்து உங்கள் உடலின் தகுதியைக் கணித்துக்கொள்ளுங்கள். அவற்றைப் பொறுத்து மெல்லோட்டத்தில் ஈடுபடலாமா என்பதை முடிவு செய்யுங்கள்.

    நம் நாட்டுச் சூழலில், காலையில் 8 மணிக்கு முன்னரும், மாலையில் 5 மணிக்குப் பின்னரும் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். அவைதான் இந்த உடற்பயிற்சிக்கான சிறந்த வேளைகள். மாலைப் பொழுதைவிட விடியல் பொழுதுதான் மிகவும் சிறந்தது. ஏனென்றால் காலைப் பொழுதில் வீசும் இளம் தென்றலும், மாசு படியாத நிலையில் இருக்கும் தூய்மையான காற்றும் உடல் நலத்துக்கு நல்லது.
    மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மலக்குடல் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும்.

    மலச்சிக்கலால்  உங்கள் மெல்லோட்டம் பாதிக்கப்படும். காலைப்பொழுதில் மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சைச் சாறும், தேனும் கலந்து குடிக்கலாம். இதனால் மெல்லோட்டத்தின்போது உடலில் இருந்து வெளியாகும் பலவகையான உப்புகளின் இழப்பையும், நீரின் இழப்பையும் ஈடுசெய்யலாம்.

    மெல்லோட்டத்தை இப்போதுதான் தொடங்குகிறீர்கள் என்றால் முதல் முதலாக அரை கிலோ மீட்டர் தூரம் மட்டும் ஓடி நிறுத்திக் கொள்ளுங்கள்.

    பின்னர் உங்கள் உடல் அமைப்பு வயது, ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறிது சிறிதாக ஓடும் தூரத்தை அதிகப்படுத்துங்கள். நடுத்தர வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் ஒரு நாளைக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் ஓடுவது உடல் நலத்துக்கு உகந்தது அல்ல.
    ஞானம் என்றாலே அறிவுதானே, இந்த முத்திரை அறிவைப் பெருக்கும். அறிவு முத்திரை என்றும் இதனை அழைக்கலாம்.
    செய்முறை :

    ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் எண்டாக்ரின் சுரப்பிகளுக்கு ஆதாரம். ஆள்காட்டி விரல் நுனியால் அழுத்தம் கொடுக்கும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும். இந்த முத்திரையை நின்ற நிலை, உட்கார்ந்த நிலை, படுத்த நிலையிலும் செய்யலாம்.  எந்தவொரு அமைதியான இடத்திலும் இந்த முத்திரையை செய்யலாம்.

    நேர அளவு: 

    இந்த முத்திரைக்கு குறிப்பிடும்படியாக நேர அவகாசம் தேவையில்லை, எந்த நேரத்திலும் இதனைச் செய்யலாம்.

    பலன்கள்: 

    அறிவு முத்திரையல்லவா, அறிவைக் கூட்டும். கட்டை விரலின் நுனியானது அகஞ்சுரப்பிகளின் (முக்கியமாக கபச்சுரப்பி pituitary ) மையமாக விளங்குகிறது. விரல்கள் அமுக்கப்படுவதால் இந்தச் சுரப்பிகள் நன்கு வேலை புரிகின்றன.

    அறிவை கூர்மையாக்கி நினைவாற்றலை அதிகரிக்கும். தூக்கமின்மையை போக்கும். கோபம் குறையும்.

    • ஞாபக சக்தியைக் கூட்டும், மூளையைக் கூர்மையாக்கும்.

    • கிரகிக்கும் செயற்பாட்டைக் கூட்டும், மேலும் தூக்கமின்மையை நீக்கும்.

    • ஒழுங்கான பயிற்சியின் மூலம் மன உள நோய்களான ஹிஸ்டீரியா, மன எரிச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தும். மனம் சாந்தமடையும்.
    உடல் வலிமை பெறுவதற்கு எப்படி பல உடற்பயிற்சிகள் இருக்கின்றதோ, அதேபோல கண்களின் பார்வை கூர்மையாவதற்கும் ஒருசில பயிற்சிகள் இருக்கின்றன.
    உடல் வலிமை பெறுவதற்கு எப்படி பல உடற்பயிற்சிகள் இருக்கின்றதோ, அதேபோல கண்களின் பார்வை கூர்மையாவதற்கும் ஒருசில பயிற்சிகள் இருக்கின்றன.

    கண்களுக்கு தேவையான சத்தான உணவுகள் மற்றும் கண் பயிற்சிகள் போன்றவற்றை நாம் தினமும் கடைபிடித்து வந்தால், இளம் வயதில் உண்டாகும் பார்வையிழப்பை தவிர்த்து முதுமை காலத்திலும் நாம் கண் பார்வை கூர்மையுடன் இருக்கலாம்.


    முதலில் நாற்காலியில் நேராக அமர்ந்துக் கொண்டு தலையை அசைக்காமல் கண்களை வலமிருந்து இடமாகவும், பிறகு இடமிருந்து வலமாகவும் பார்க்க வேண்டும். இதேபோல் 8 முறை செய்ய வேண்டும்.

    அதனைத் தொடர்ந்து கண்களை மேலிருந்து கீழாகவும், பிறகு கீழிருந்து மேலாகவும் பார்க்க வேண்டும். இதையும் 8 முறை செய்ய வேண்டும்.

    அதன் பின் கண்களை கடிகார முள்களைப் போல வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் 8 முறை சுழற்ற வேண்டும்.
    உங்களது கண்களுக்கு முன்னால் படுக்கை வசத்தில் 8 என்ற எண் வரைந்து வைத்துக் கொண்டு முதலில் வலமிருந்து இடமாக, இடமிருந்து வலமாக கண்களால் 8ஐ வரைவது போன்று பயிற்சியை செய்ய வேண்டும்.

    உங்களது கண்களுக்கு முன்னால் செங்குத்தாக 8 என்ற எண்ணை வரைந்துக் கொண்டு முதலில் மேலிருந்து கீழாகவும் பின் கீழிருந்து மேலாகவும் கண்களால் 8 ஐ வரைய வேண்டும்.

    வலது கண்ணின் மேல் கார்னரை உற்று நோக்க வேண்டும். பிறகு வலது கண்ணின் கீழ் கார்னரை பார்க்க வேண்டும். இதேபோல் 8 முறை செய்ய வேண்டும்.

    பின் நாற்காலியில் அமர்ந்தவாறே வலது உள்ளங்கையால் இடது கண்ணையும், இடது உள்ளங்கையால் வலது கண்ணையும் மென்மையாக அழுத்தம் கொடுக்காமல் கண்களை மூட வேண்டும். சில வினாடிகள் கழித்து மூடிய உள்ளங்கைகளை மெதுவாக கண்களை சிமிட்டிக் கொண்டே எடுக்க வேண்டும்.

    குறிப்பு 

    ஒவ்வொரு பயிற்சி முடிவிலும் கண்களை சிமிட்டிக் கொள்ள வேண்டும். பயிற்சிகளை தினமும் ஒன்றிலிருந்து இரண்டு முறைகள் கடைபிடிக்கலாம்.
    நீண்ட நாளாக உள்ள மலச்சிக்கல் பிரச்சனைக்கு இந்த ஆசனம் ஒரு சிறந்த தீர்வு.
    செய்முறை :

    விரிப்பின் மேல் வசதியாக மல்லாந்து படுத்துக் கொள்ளவும். இது ஆரம்பநிலை. 

    சுவாசத்தை உள்ளிழுத்து கைவிரல்களைப் பூட்டி வலது காலை சற்று மடக்கி முழங்கால் மூட்டுக்குக் கீழே பிடிக்கவும். பின்பு வலது முழங்காலை மடக்கி, தொடைப்பகுதியை நெஞ்சை நோக்கி இழுக்கவும். இடது கால் தரையில் நேராக இருத்தல் அவசியம்.

    சுவாசத்தை உள்ளடக்கி தலை மற்றும் தோள்பட்டையை உயர்த்தி நெற்றியால் முழங்காலைத் தொட முயற்சிக்கவும். இது இறுதி நிலை. 10 விநாடிகள் இதில் நிற்கவும்.

    சுவாசத்தை வெளியேற்றி உடலைத் தளர்த்தி ஆரம்பநிலைக்கு வரவும். இதே போல இடதுபுறமும் செய்யவும். இரு கால்களையும் ஒன்றாக மடக்கி நெற்றியால் தொடுதல் பவன முக்தாசனம் ஆகும். 3-5 முறைகள் இப்பயிற்சியைச் செய்யலாம்.

    பயன்கள்...

    முதுகுத்தசைகளை வலுவடையச் செய்கிறது. வயிற்றுப்பகுதி நன்கு அழுத்தப்பட்டு மசாஜ் செய்யப்படுவதனால் வயிற்றில் உள்ள வாயு வெளியேற்றப்படுகிறது. அதனால்தான் இதற்கு பவன(வாயு) முக்த (வெளியேற்றல்) ஆசனம் என்று பெயர். நீண்ட நாளாக உள்ள மலச்சிக்கல் பிரச்சனைக்கு இந்த ஆசனம் ஒரு சிறந்த தீர்வு!
    இந்த ஆசனம் நமது தசை, ஜீரண, ரத்த ஓட்ட, நரம்பு மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது.
    செய்முறை :

    விரிப்பின் மேல் வசதியாக மல்லாந்து படுத்துக்கொள்ளவும். இது ஆரம்பநிலை. ஆழமாக சுவாசத்தை உள்ளிழுக்கவும். சுவாசத்தை உள்ளடக்கி, இரு கால் மற்றும் கைகளைத் தரையில் இருந்து 15 செ.மீ. மேலே தூக்கவும். அதே நேரம் கழுத்து மற்றும் தோள்பட்டையை உயர்த்தி கால் விரல்களைப் பார்க்கவும்.

    புட்டப்பகுதியில் உடலை சமநிலைப்படுத்தி நிற்பது இறுதிநிலை. உடல் ஒரு படகு போல இருப்பதால் இதற்கு நெளகாசனம் என்று பெயர்.

    10 விநாடிகள் இறுதி நிலையில் நின்று பின் மெதுவாக சுவாசத்தை வெளியேற்றி ஆரம்பநிலைக்கு வரவும். 3 - 5 முறைகள் இப்பயிற்சியைச் செய்யலாம்.

    பயன்கள் :

    இந்த ஆசனம் நமது தசை, ஜீரண, ரத்த ஓட்ட, நரம்பு மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது.
    டென்ஷனை குறைத்து ஓய்வளிக்கிறது. காலை எழுந்தவுடன் செய்தால் சோம்பல் நீங்கி உடனடி புத்துணர்வு கிடைக்கும்.
    வயிற்றுத் தசைகளை இறுக்கம் அடையச் செய்வதனால் எடை குறைய உதவுகிறது

    இந்த ஆசனங்களைத் தொடர்ந்து செய்வதால் உடலளவில் மட்டுமல்ல... மன அளவிலும் பல நன்மைகள் உண்டு. ஆழ்மன அச்சத்தை உடைத்து நமது ஆளுமைத்திறனை மேம்படுத்துகிறது. வயிற்றுப்பகுதியில் ஆரோக்கியமான அழுத்தத்தை ஏற்படுத்துவதால் ஜீரண மற்றும் இனப்பெருக்க மண்டல உறுப்புகள் அனைத்தையும் சீராக இயங்கச் செய்கிறது.
    இந்த யோகா செய்யும் போது வயிற்று தசைகள் இறுக்கப் பெறுவதால் தொப்பை குறைய உதவுகிறது.
    செய்முறை :

    முதலில் விரிப்பில் வஜ்ராசனத்தில் அமரவும் (தொழுகை செய்தல் போல). இது ஆரம்ப நிலை. மெதுவாக முழங்காலிடவும். உள்ளங்கையைத் தரையில் பதித்து முன்நோக்கி உடலை நகர்த்தவும். புட்டத்தை உயர்த்தி முழங்கால் மூட்டை நேர் செய்யவும். சுவாசத்தை உள்ளிழுத்து கைகளை முழுவதுமாக நேர் செய்யவும். 

    தலை முதல் குதிங்கால் வரை உடல் ஒரே நேர் கோட்டில் இருத்தல் அவசியம். கால் விரல்களை நன்கு தரையில் ஊன்றி கொள்ளவும்.சுவாசத்தை உள்ளடக்கித் தலையை உயர்த்தி நேராகப் பார்க்கவும். இது இறுதி நிலை. 15 விநாடிகள் இதில் நிற்கவும். சுவாசத்தை மெதுவாக வெளியேற்றி ஆரம்ப நிலைக்கு வரவும். 5 - 7 முறைகள் இப்பயிற்சியைச் செய்யலாம்.

    பயன்கள்  :

    நமது நரம்பு மண்டலத்தை சீர்படுத்தி சமன் செய்கிறது.

    கை, தோள்பட்டை மற்றும் பின்முதுகுத்தசைகளை வலுவடையச் செய்கிறது.

    Core muscle என சொல்லப்படும் முக்கிய தசைகளை வலுவடையச் செய்கிறது.

    வயிற்று தசைகள் இறுக்கப் பெறுவதால் தொப்பை குறைய உதவுகிறது.

    அதிக நேரம் அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கு உண்டாகும் கழுத்து, முதுகெலும்பு, இடுப்பு போன்ற வலிகளுக்கான பயிற்சிகளை பார்க்கலாம்.
    உடல் உழைப்பு அற்ற வாழ்க்கைமுறையினால் மூளை, கழுத்து, முதுகெலும்பு, கண்கள், விரல்கள், இடுப்பு உள்ளிட்ட உறுப்புகள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. நீண்ட நேரம் அலுவலகத்தில் அமர்ந்தே வேலை செய்பவர்கள், இருந்த இடத்திலேயே சில எளிய பயிற்சிகளைச் செய்ய முடியும். அலுவலகத்தில் பணிபுரிவோர் ஃபிட்டாக இருப்பதற்கான எளிமையான பயிற்சிகளை பார்க்கலாம்.

    பயிற்சி 1: நிமிர்ந்த நிலையில் நாற்காலியில் அமர வேண்டும். வலது கையை வலது கன்னத்தில் பதித்து, இடது பக்கம் மெதுவாகத் திருப்பி, சில விநாடிகளில் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதுபோல இடது பக்கத்துக்கும் என தலா மூன்று முறை செய்ய வேண்டும்.

    பலன்கள்: மூளையில் இருந்து வரும் நரம்புகளைத் தூண்டிவிடும். கழுத்துப்பிடிப்பு இருந்தால், சரியாகும். மூளைக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். மன அழுத்தத்தைச் சரிசெய்யும். மூளையைப் புத்துணர்வு பெறவைக்கும். தூக்கக் கலக்கத்தில் இருப்பவர்கள், உற்சாகமாக வேலை செய்ய உதவும்.

    பயிற்சி 2: இரு கைகளையும் கோத்து, கட்டை விரல்களை தாடையின் அடியில்வைத்து, கழுத்தை மெதுவாக மேலே தூக்கி, பழைய நிலைக்கு வர வேண்டும். இதேபோல, கைகளை தலைக்குப்பின் கோத்து, கழுத்தை மென்மையாகக் கீழே அழுத்த வேண்டும். இப்படி, மூன்று முறை செய்ய வேண்டும்.

    பலன்கள்: கழுத்துப்பிடிப்பு இருந்தால், சரியாகும். மூளைக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். மூளையைப் புத்துணர்வு பெறவைக்கும். தூக்கக் கலக்கத்தில் இருப்பவர்கள், உற்சாகமாக வேலை செய்ய உதவும்.

    பயிற்சி 3: நாற்காலியில் நேராக அமர்ந்தபடி, தலையை இடது தோள்பட்டையின் பக்கமாக, காது தோள்பட்டையில் படும்படி, சாய்க்க வேண்டும். பின், வலது தோள்பட்டையின் பக்கம் சாய்க்க வேண்டும். இதேபோல், தலையை  மேலே உயர்த்தியும் கீழே குனிந்து தரையைப் பார்த்தபடியும் செய்ய வேண்டும்.

    பலன்கள்: மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லும். கழுத்துப் பகுதி வலிமை பெறுவதுடன், அந்தப் பகுதியில் இறுக்கம் குறையும். வளைவுத்தன்மை அதிகரிக்கும்.

    உணவுக்குப் பின், இரண்டு மணி நேரம் கழித்து இந்தப் பயிற்சிகளைச் செய்யலாம். அலுவலகத்தில் உள்ளவர்கள், காலை 11 மற்றும் மதியம் 3 மணி அளவில், கை விரல்கள், கழுத்து, தோள்பட்டை போன்றவற்றுக்கான பயிற்சிகளைச் செய்வது புத்துணர்வு அளிக்கும்.
    ×