என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    பிரணாயாமம் செய்யும் போது சில முக்கியமான விஷயங்களை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.
    பிரணாயாமம் என்பது யோகாவின் ஒரு பகுதியாகும். இது பெரும்பாலும் மூச்சுப்பயிற்சி சம்பந்தப்பட்டவை. பிரணாயாமம் என்பது 'பிராண' மற்றும் 'அயாமா' என்ற வார்த்தைகளின் கூட்டாகும். 'பிராண' என்றால் அதிமுக்கிய ஆற்றல் திறன் என்று பொருளாகும்.

    பிரணாயாமம் செய்யும் போது சில முக்கியமான விஷயங்களை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பிரணாயாமம் செய்வதால் கிடைக்கும் அனைத்து பயன்களையும் அடைய வேண்டுமானால் அதனை விடிய காலை, சூரிய உதயத்தின் போது செய்திட வேண்டும்.

    அதே போல் அதனை செய்யும் போது சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பிரணாயாமம் செய்ய முயற்சிப்பதற்கு முன், ஒரு தேர்ந்தெடுத்த யோகா ஆசிரியரிடம் பயிற்சி பெற பரிந்துரைக்கப்படுகிறது. பிரணாயாமம் செய்வதால் கிடைக்கும் முக்கியமான உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும்.

    பிரணாயாமம் என்பது சிறந்த மூச்சுப்பயிற்சியாகும். அதனால் உங்கள் நுரையீரலும் சிறப்பான முறையில் செயல்படும். சுவாசக் கோளாறுகள் அல்லது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். பிரணாயாமம் செய்வதால் கிடைக்கும் உடல்நல பயன்கள், உங்கள் உடலுக்குள் இருக்கும் அங்கங்களின் ஒழுங்காக செயல்பாட்டோடு மட்டும் நிற்பதில்லை.

    உங்கள் உடல் எடையை குறைப்பதற்கும் உதவுகிறது என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள். பிரணாயாமம் பயிற்சியை தினமும் தொடர்ச்சியாக செய்து வந்தால் நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள். உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுப் பொருட்களை நீக்க சிறந்த வழியாக விளங்குகிறது பிரணாயாமம் பயிற்சி.

    உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க யோகாவில் பல வழிகள் உள்ளது. அவைகளில் புகழ்பெற்ற வழிகளில் ஒன்றாக விளங்குகிறது பிரணாயாமம். உங்கள் வாழ்க்கையில் எரிச்சலடைய வைக்கும் பிரச்சனைகளில் ஒன்றான மூக்கடைப்பை ஒரு முறையாவது சந்தித்திருப்பீர்கள். பிரணாயாமம் செய்வதால் கிடைக்கும் பயன்களில் தெளிவான சுவாச குழாய்களும் ஒன்று என்பதை மறந்து விடாதீர்கள்.
    சக்கரம் போன்று பாதி நிலையில் பின்னால் வளைந்து செய்வதால் இப்பெயர் பெற்றுள்ளது. முதுகுவலி இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்யலாம்.
    செய்முறை :

    விரிப்பின் மீது கால் பாதங்களை ஒன்று சேர்த்து வைத்து நின்று கொள்ள வேண்டும். கைகளால் இடுப்பை பிடித்து கை கட்டை விரல்களால் முதுகை அழுத்தி பின்னோக்கி முடிந்த அளவிற்கு வளைய வேண்டும்.

    ஆனால் கால் முட்டிகளை வளைக்கக் கூடாது. அப்படியே 20 எண்ணிக்கையில் இருக்க வேண்டும். சாதாரணமாக மூச்சு விட வேண்டும். கண்கள்  திறந்திருக்க வேண்டும். அடுத்து மெதுவாக நிமிர்ந்து நிற்கவும். கைகளை இடுப்பிலிருந்து பிரித்து தளரவிட்டு சிறது ஓய்வு எடுக்க வேண்டும். இவ்வாறு இந்த ஆசனத்தை 5 முதல் 7 முறை செய்து முடிக்க வேண்டும்.

    இதய நோய் உள்ளவர்கள் இதனை மெதுவாக செய்யவேண்டும். மெலிந்த உயரமான உடல்வாகு அல்லது பலவீனமானவர்கள் அதிகமாய் வளைவதை தவிர்க்கவும். அவர்கள் விழாதவாறு கால்களை சற்று அகற்றி வைத்துக் கொண்டு செய்யலாம். முதுகெலும்பு மற்றும் கழுத்து வலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்ய வேண்டாம்.

    பயன்கள் :

    ஆஸ்துமா, கீழ் முதுகுவலி ஆகியவை குணமாகின்றன. தொடை, கெண்டைக் கால் பகுதியில் ஏற்படும் தசைப் பிடிப்பு நீங்குகிறது..

    உடம்பின் முன்புறத்தசைகள், கெண்டைக்கால் தசைகள், இடுப்பு, விலாப்பகுதிகளில் உள்ள தசைகள் முறுக்கேறுகின்றன. முதுகுத் தண்டின் வளைந்து கொடுக்கும் தன்மை நீடிக்கிறது. இது பாத ஹஸ்தாசனத்தை பூர்த்தி செய்யும் ஆசனம் என்பதால் அந்த ஆசனத்தின் பலன்களை இது கூட்டுகிறது. சுவாச உறுப்புகள் ஓய்வடைகின்றன.

    வயதானவர்கள் மருந்துகள் இல்லாமல், ஓய்வு நேரங்களில் சில முத்திரைகளைச் செய்து வந்தாலே, மூட்டுவலி காணாமல் போய்விடும்.
     வயதானவர்களின் நிரந்தரப் பிரச்சனை, கை, கால்வலி, மூட்டுவலி மற்றும் உடல்வலி. வலி மாத்திரைகளால் பெரிய பலனும் கிடைப்பது இல்லை. மருந்துகள் இல்லாமல், ஓய்வு நேரங்களில் சில முத்திரைகளைச் செய்தாலே, மூட்டுவலி காணாமல் போய்விடும்.

     சந்தி முத்திரை செய்முறை :

    வலது கை: மோதிர விரல், கட்டை விரலின் நுனிகள் தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.

    இடது கை: நடுவிரல், கட்டை விரலின் நுனிகள் தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.

    காலை மாலை என இருவேளையும் 20 நிமிடங்கள் செய்யலாம்.

    பலன்கள்: முழங்கால் மூட்டுவலி சரியாகும். முழங்கால் மூட்டு சவ்வுக் கிழிதல், மூட்டு பலமின்மை, மூட்டில் உள்ள திரவம் குறைதல், வீக்கம், வலி சரியாகும்.
    கழுத்து வலி உள்ளவர்கள் இந்த முத்திரையை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக நிவாரணம் அடையலாம்.
    செய்முறை:

    ஆட்காட்டி விரலை நேராக நீட்டி, சுண்டு விரல், நடு விரல், மோதிர விரல்களை வளைத்து அதன் நுனிகள் உள்ளங்கையை தொடுமாறு செய்யவும். கட்டை விரலை நடு விரலின் மீது வைத்து லேசான அழுத்தம் கொடுக்கவும். கை மாற்றி செய்யவும்.

    தினமும் காலை, மாலை 15 நிமிடம் செய்யவும்.

    இந்த முத்திரையை அமர்ந்து கொண்டும், நின்று கொண்டும் செய்யலாம்.

    கழுத்துவலி குறையும். தண்டுவடம் வலுவடையும். கழுத்து, தோள்பட்டை தசைகளை வலுவாக்கும்.
    வாயுப் பிரச்சனை, ஏப்பம், அஜீரணம், வயிற்றில் சத்தம், வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் செய்ய வேண்டிய முத்திரையை பார்க்கலாம்.
    ஆள்காட்டி விரல், கட்டை விரலின் அடிப்பகுதியைத் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். கட்டை விரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும் குறிக்கின்றன. நெருப்பு விரலால் காற்று விரல் அழுத்தப்பட்டு, உடலில் உள்ள வாயுவைக் குறைக்கிறது (Supress) என்று சொல்லலாம்.

    உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு உடலில் வாயு அதிகமாகச் சேரும். மேலும், நம் இந்திய உணவுகள் வாயுவை உண்டாக்கக்கூடியவை. அதனால், மூட்டு வாதம், கை, கால் வலி, ஏப்பம், அஜீரணம், மலக்காற்று பிரிதல், நெஞ்சு எரிச்சல், வயிற்றில் சத்தம், வயிற்று உப்புசம், வயிற்றுப் புண், கை கால் பிடிப்பு, நெஞ்சு குத்தல், நெஞ்சு வலி  போன்றவை ஏற்படலாம். வாயு முத்திரை இவற்றைச் சரி செய்யும். 10 நிமிடங்களிலேயே பலன் தெரியும்.

    வாயுப் பிரச்சனை இருப்பவர்கள், தொடர்ந்து செய்யலாம். சிலருக்குத் தொடர்ந்து 10 நாட்கள் செய்யும்போது, மூச்சுத் திணறல் ஏற்படலாம். அவர்களுக்கு விசீங் பிரச்னை இருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே, இதை அவர்கள் செய்ய வேண்டாம்.
    முத்திரைகளின் கட்டளைகள்

    தரையில் விரிப்பை விரித்து, கண்கள் திறந்தவாறு கழுத்து மற்றும் முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி சம்மணம் போட்டு நிமிர்ந்து உட்காரவும். முடியாதவர்கள், நாற்காலியில் அமரலாம். ஆனால், பாதங்கள் தரையில் முழுமையாகப் பட வேண்டும். கால்களைக் குறுக்காகவோ, கால் மேல் கால் போட்டு உட்காரவோ கூடாது. படுக்கையில் செய்வோர், தலையணை இல்லாமல் முத்திரைகளைச் செய்யலாம்.

    விரல் நுனிகள் தொட்டுக்கொண்டிருப்பதைக் கவனித்தாலே போதும். மூச்சு இழுத்துப் பிடிக்க தேவை இல்லை. சாதாரணமாக இருக்கலாம்.

    வெறும் வயிற்றில் செய்வது சிறப்பு. தவிர, சாப்பிட்ட ஒன்றரை மணி நேரம் கழித்துச் செய்யலாம். பஸ், கார் போன்ற பயணங்களில்கூட முத்திரைகள் செய்யலாம்.

    காலை 6, 7 மணிக்குள் செய்தால், முழு பலன் கிடைக்கும். ஒரு நாழிகை (24 நிமிடங்கள்) செய்யலாம். புதிதாகச் செய்பவர்களுக்கு, ஐந்து நிமிடங்களே போதுமானது.
    முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
    செய்முறை :

    தரையில் உட்கார்ந்து, கால்களை நன்கு நீட்டி, கைகள் இரண்டையும் உடலின் பக்கவாட்டில் பதிக்க வேண்டும். இப்போது, வலது காலை மடக்கி இடது முட்டியின் அருகில் பதித்திருக்க வேண்டும். வலது கையை சற்று பின்நோக்கி வைத்து, இடது கையை மடக்கி, முழங்கையை உயர்த்திய நிலையில், வலது கால் முட்டிக்கு வெளியேவைக்க வைத்து, வலது கால் பாதம் அருகே தரையில் கையை பதிக்க வேண்டும்.

    இப்போது, கழுத்து மற்றும் மேல் உடலை மெதுவாகத் திருப்பிக்கொள்ள வேண்டும். இது உடலையே ட்விஸ்ட் செய்யும் பயிற்சி. இதேபோல இடது காலை மடக்கி, வலது முட்டியின் அருகில் பதித்தும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

    இந்தப் பயிற்சி செய்யும்போது, மூச்சு சாதாரணமாக இருந்தாலே போதும். இந்தப் பயிற்சியை மூன்று முறை செய்யலாம். காய்ச்சல், மாதவிலக்கு சமயத்தில் செய்ய வேண்டாம்.

    பலன்கள்:

    கல்லீரலைப் பலமாக்கும். வயிறு, இடுப்புச் சதைகளைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். நரம்பு மண்டலத்தை ஆரோக்கியப்படுத்தும். முதுகு வலி சரியாகும். செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படும். வயிறு தொடர்பான புற்றுநோய்கள் வருவது தடுக்கப்படும். மலவாய்க் காற்று பிரியும். சிறுநீரகங்களின் செயல்பாடு மேம்படும்.

    30 வயதை கடந்த பெண்களின் உடல் எடையை குறைக்கும் 3 பயிற்சிகளை கீழே பார்க்கலாம்.
    முப்பதுகளைக் கடந்த பெண்களுக்கு, மிகப் பெரிய பிரச்சனையே உடல்பருமன்தான். குழந்தைப்பேறுக்குப் பின் கவனிக்காமல்விட்ட உடலை, வருடங்கள் தாண்டிய பின் குறைக்க முடியாமல் மன உளைச்சலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

    வருடங்களாகச் சேர்ந்த எடையை, ஒரே நாளில் குறைப்பது சாத்தியமே இல்லை. சில எளிமையான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம், பழைய அழகான உடலைத் திரும்பப் பெற முடியும்.

    பெல்வீக் லிஃப்ட்டிங் வித் சிங்கிள் லெக் (Pelvic lifting with single leg):

    தரையில் மல்லாக்கப் படுக்க வேண்டும். இடுப்புப் பகுதி தரையில் படாதபடி, காலை மடக்கித் தரையில் பதிக்கவும். கைகள் உடலுக்குப் பக்கவாட்டில் இருக்கட்டும். இந்த நிலையில் இருந்து, வலது காலை மட்டும் மேலே நீட்டி, தரையில் இருந்து, மூன்று அடி உயர்த்தவும். இதே நிலையில், எவ்வளவு நேரம் இருக்க முடிகிறதோ, அவ்வளவு நேரம் இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்பவும். இதேபோல், இடது காலுக்குச் செய்யவும். கொஞ்சம் கொஞ்சமாக காலை உயர்த்தும் பயிற்சி நேரத்தை அதிகரிக்கவும்.

    பலன்கள்: வயிற்றுப் பகுதியில் இருக்கும் தேவையற்ற சதை குறையும். முதுகுத்தண்டு வலுவாகும்.

    ஹிப் அவுட்டர், ஹிப் இன்னர் (hip abductor and adductor exercises) :

    வலது பக்கமாக ஒருக்களித்துப் படுக்க வேண்டும்.   வலது கையால் தலையைத் தாங்கிக்கொள்ள வேண்டும். இடது கையை மடித்து, முன்பக்கம் தரையில் பதிக்க வேண்டும். இந்த நிலையில் இருந்து, இடது காலை 10 முறை இயன்றவரை உயர்த்தி இறக்க வேண்டும். இதேபோல், இடது பக்கமும் செய்ய வேண்டும்.

    பலன்கள்: வயிற்றுப் பகுதியில் உள்ள தேவையற்ற சதைகள் குறையும். இடுப்புப் பகுதி, தொடைப் பகுதி சதைகள் வலுப்பெறும்.

    சூப்பர் மேன் (Super man) :

    தரையில் குப்புறப் படுக்க வேண்டும். கைகளை முன்பக்கம் நீட்டியபடி, கால்களைத் தரையில் படாதபடி உயர்த்திக்கொள்ள வேண்டும். இதே நிலையில் இரண்டு நிமிடங்கள் இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.

    பலன்கள்: இதயம் வலிமை பெறும். முதுகுத் தண்டுக்கு நல்ல சக்தி கிடைக்கும். தொடைப் பகுதியில் இருக்கும் சதை வலிமை அடையும்.
    மனிதனது உடலில் உள்ள ஒவ்வாமை, பயங்களைப் போக்கவல்ல அற்புத சக்தி கொண்டது இம்முத்திரை.
    செய்முறை :

    ஆள்காட்டி விரலை மடக்கிக் கொண்டு, நடு விரல் நுனியைப் பெருவிரல் நுனியோடு அழுத்திப்பிடித்து, மற்ற இரு விரல்களையும் நேராக வைக்கவும். இவ்வாறு தினமும் 15 முதல் 25 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

    பயன்கள் :

    மனிதனது உடலில் உள்ள ஒவ்வாமை, பயங்களைப் போக்கவல்ல அற்புத சக்தி கொண்டது இம்முத்திரை. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது ஒவ்வாமை ஏற்படுகிறது. தொற்றுகள் ஏற்படும்போது வழங்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளால் ஏற்படுகின்ற வயிற்றுக் கோளாறுகள், சளி, சைனஸ் போன்ற தொல்லைகளுக்கும் இது நிவாரணம் தரும். நிம்மதியான உறக்கம், நல்ல செரிமாணம் தருவதற்கும் இம்முத்திரை பயன்படும்.
    இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் ஆண்மை நமது கட்டுப்பாட்டுக்குள் வரும்.
    குறிப்பாக தற்காலத்தில் மன அழுத்தம், குழப்பம் போன்றவற்றால் சிக்கி தவிப்வர்களுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் குறைந்து போய்விடுகிறது. இவர்கள் அதிலிருந்து மீண்டுவர உதவுகிறது உட்டியாணா ஆசனம். இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வருபவர்களின் முகம் மிகவும் பொலிவாக காணப்படும். 

    செய்முறை: 

    விரிப்பில் அரை அல்லது ஒரு அடி இடைவெளி விட்டு கால்களை விரித்து நிற்கவும். இரண்டு கைகளையும் தொடைகளின் மீது வைத்துக் கொள்ளவும். இந்த நிலையில் இடுப்புக்கு மேல் உள்ள உடல் பகுதியை மட்டும் முன் பக்கமாக சிறிது குனியும் படி வளைக்கவும். இப்படி இருக்கையில் வயிற்று பகுதியில் இறுக்கம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். மேலும் சுவாசப் பைகளில் நிரம்பியிருக்கும் காற்றை முழுவதுமாக வெளியில் விடவும்.

    இப்போது வயிற்றை உள்ளுக்குள் இழுத்து எக்கவும். இதே நிலையில் ஐந்து அல்லது பத்து விநாடிகளுக்கு அப்படியே நிறுத்தி, பிறகு மூச்சை மெதுவாக இழுத்தவாறு வயிறை தளர்த்தவும். பிறகு நிமிர்ந்து, சாதாரண மூச்சை இரண்டு மூன்று தரம் இழுத்து விட்டு மறுபடி மேற்சொன்னது போல் திரும்பவும் செய்யவும். ஆரம்ப நிலையிலேயே படத்தில் உள்ளவாறு செய்ய வருவது கடினம். ஆனால் முடிந்த அளவு முயற்சிக்கவும். சிறிது முயற்சியுடன் தினம் தினம் செய்து வந்தால் ஒரு கட்டத்தில் சரியாக செய்ய வந்து விடும். 

    முழுதாக செய்ய முடியவில்லை என்றாலும், செய்த வரையும் பலன் உண்டு. பொதுவாக யோகாசனங்களை செய்ய தொடங்குபவர்கள் உணவில் கொழுப்பு சத்து கலந்த உணவு வகைகளை தவிர்த்து விடுவது நல்லது. 

    பலன்கள் : 

    உட்டியாணா ஆசனத்தை தொடர்ந்து செய்து வரும் போது, மலச்சிக்கல், அசீரணம், வாய் துர்நாற்றம், பலவீனம் ஆகியவை விலகும். இடுப்பு சதைகள் வலுவடையும். இனவிருத்திக் கோளங்கள், அது தொடர்பான தாதுப்பை போன்ற உறுப்புகள் ஆரோக்கியமடையும். ஆண்மை மிகுதிப்படும். குறிப்பாக ஆண்மை நமது கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆஸ்துமா போன்ற மூச்சுக்குழல் தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு இது நல்ல பலனை தரும். வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், வயிற்றில் புண் இருப்பவர்கள் (அல்சர்) இருதய பலவீனம் உள்ளவர்களும் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

    வயிற்று பகுதியில் அதிகளவு கொழுப்பை குறைக்கும் பயிற்சியை கீழே பார்க்கலாம்.
    பெண்களுக்கு, ஆண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் உடல் எடை அதிகரிப்பதுடன் வயிற்று பகுதியில் அதிகளவு சதை போடுகிறது. இதற்கு முக்கிய காரணம் சரியாக உடற்பயிற்சி இல்லாதது. மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை. வயிற்று பகுதியில் உள்ள அதிகளவு கொழுப்பை குறைக்க உடற்பயிற்சிகள் பல பயிற்சிகள் இருந்தாலும் ஹாம்ஸ்ட்ரிங் கிரன்சஸ் பயிற்சி (Hamstring Crunches) என்ற பயிற்சி மிகவும் எளிமையானது.

    விரைவில் பலனை தரக்கூடியது. மேலும் வீட்டில் தினமும் 20 நிமிடம் செய்தால் போதுமானது. இந்த பயிற்சி செய்ய தரையில் மல்லாந்து படுத்து, கால் முட்டியை மடித்து, பாதத்தைத் தரையில் பதிக்க வேண்டும். கைகளை காதுகளோடு ஒட்டியபடி தலைக்கு மேலாகக் கொண்டுசென்று, தரையில் வைக்க வேண்டும்.

    இப்போது, தலை, மார்பகப் பகுதியை முன்னோக்கி நகர்த்தி, கைகளை உயர்த்தி, விரல்கள் கால் முட்டியைத் தொடுவது போல் கொண்டுவந்து, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல், ஆரம்பத்தில் 25 முறைகள் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும். அதிகளவு தொப்பை இருப்பவர்கள் இந்த பயிற்சியை செய்ய ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும்.

    பலன்கள் :

    வயிற்றுப் பகுதி அழுத்தப்படுவதால், கொழுப்பு கரைந்து, ஃபிட்டான வயிற்றுப் பகுதி கிடைக்கும்.
    பெண்களின் கருப்பை நீர்கர்ட்டி, மாதவிடாய் பிரச்சனையை பத்த கோணாசனம் சீராக்கும்.
    பத்த கோணாசணம் அடிவயிற்றில் தசைகள் நன்றாக இயங்க காரணமாகின்றன. ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். நீர்ப்பைகள் கருப்பையில் உருவாவதை தடுக்கச் செய்யும்.

    செய்முறை :

    முதலில் தரையில் அமர்ந்து கால்களை நீட்டிக் கொள்ளுங்கள். முதுகு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஆழ்ந்து மூச்சை இழுத்து விட வேண்டும். இப்போது இரு பாதங்களையும் பிடித்தபடி கால்களை மேலே படத்தில் உள்ளவாறு மடக்குங்கள். இரு கால்களும் மடக்கி சம நிலையில் வைத்திருங்கள். இருபாதங்களும் ஒன்றோடு ஒன்று பார்த்தபடி ஒட்டி இருக்கவேண்டும். கைகளால் பாதங்களை பொத்திக் கொள்ளுங்கள். இந்த நிலையில் முதுகை வளைக்காமல் நிமிர்ந்து இருக்க வேண்டும்.

    முட்டிகள் தரையை தொடக் கூடாது. தொடைகளை மட்டும் சிறிது தரையில் தாழ்த்தினால் முட்டிகள் சம நிலையில் சரியாக இருக்கும்.. அந்த நிலையில் 5 நிமிடங்கள் இருக்க வேண்டும். பின்னர் முட்டிகளை உயர்த்தி, கால்களை விலக்கி இயல்பு நிலைக்கு வாருங்கள்.

    பலன்கள் : 

    மன அழுத்தம், தேவையில்லாத குழப்பங்கள், கருப்பை நீர்கர்ட்டி ஆகியவைகள் வராமல் தடுக்கும். அது போலவே முறையற்ற மாதவிலக்கு சீராகும். முடிஉதிர்தல், முகப்பரு, உடல் பருமன் ஆகியவைகளும் சீராகும். தினமும் இரு வேளைகள் செய்யுங்கள்.

    பல மணி நேரம் நடைப்பயிற்சி செய்யும்போது ஏற்படும் வியர்த்தல் உள்ளிட்ட பலனை சில நிமிடங்களில் இந்த முத்திரை தந்துவிடும்.
    லிங்கம், வெப்பத்தின் வடிவமாகக் கருதப்படுகிறது. இது, வெப்பம் மற்றும் உயிர்சக்தியைத் தன்னிடத்தில் உள்ளடக்கி, நோய் கிருமிகள், உடலில் தேங்கி உள்ள கழிவுகளை அகற்றவல்லது. 

    செய்முறை  :

    இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று கோத்துக் கொள்ள வேண்டும். ஒரு கை கட்டை விரலை மட்டும் உயர்த்திக்கொள்ள வேண்டும். இரு கைகளையும் சேர்த்து விரல்கள் ஒன்றுக்கொன்று பின்னி இருப்பது போல் சேர்த்து கொள்ளவும். 

    பெண்கள்: வலது கை மேற்புறமாக இருக்குமாறு கோத்து, இடது கை கட்டைவிரலை உயர்த்த வேண்டும்.

    ஆண்கள்: இடது கை மேல்புறமாக இருக்குமாறு கோத்து, வலது கட்டை விரலை உயர்த்த வேண்டும்.

    வஜ்ராசனத்தில் அமர்ந்து அல்லது நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றியபடி இந்த முத்திரையைச் செய்ய வேண்டும்.

    அதிகமான வியர்வை மற்றும் படபடப்பு தோன்றினால், முத்திரை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.

    அதிக நேரம் இந்த முத்திரையைச் செய்தால் சோர்வு ஏற்படலாம். முத்திரை செய்யும் காலங்களில் பழங்கள், பழச்சாறு, மோர், தண்ணீர் போன்றவற்றை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

    பெரியவர்கள் காய்ச்சல் சமயத்தில் இந்த முத்திரையைச் செய்யலாம். குழந்தைகள் செய்யக் கூடாது.

    பலன்கள் :

    பருமனான உடல்வாகு உடையவர்கள், வியர்வை வரும் அளவுக்கு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்ய இயலாதோர் காலை, மாலை என வெறும் வயிற்றில் இந்த முத்திரையைச் செய்ய, உடல் எடை குறையும்.

    வியர்வை வராமல் உடல் வறட்சியாக இருப்போர் இதைச் செய்தால், உடல் வெப்பமாகி, வியர்வை உண்டாகி சரும வறட்சியைப் போக்கும். இவர்கள் வியர்வை வரும் வரை முத்திரையைச் செய்யவேண்டும்.

    ஏ.சி-யால்  அலர்ஜி இருப்பவர்கள், ஏ.சி அறையில் இருக்க வேண்டிய சூழ்நிலையில், அதிகக் குளிர், நடுக்கம் போன்றவை ஏற்பட்டால், இந்த முத்திரையைச் செய்துவர, உடல் வெப்பமாகி இதமாக இருக்கும்.

    ஆண்கள், விந்துவின் வீரிய விருத்திக்கு காலை, மாலை முறையே ஐந்து நிமிடங்கள் என்ற அளவில் ஒரு மாதம் வரை செய்ய வேண்டும்.

    தலையில் நீர் கோத்தல், சளியுடன் கூடிய இருமல், குளிர் காய்ச்சல் போன்ற தொந்தரவுகளுக்கு இந்த முத்திரை நல்ல பலன் தரும்.
    ×