என் மலர்
உடற்பயிற்சி
தொந்தியைக் குறைப்பதற்கு நமது உடலின் நடுப்பாகத்திற்கு (வயிற்றுப் பகுதிக்கு) பயிற்சி கொடுத்தால் மட்டும் போதுமா என்பதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் இளம் பருவத்தினர் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே வேலை செய்வது, உடல் உழைப்பு இல்லாதது, நொறுத்தீனி போன்ற பிரச்சனைகளால் உடல்பருமன் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். தொப்பையை குறைக்க அவர்கள் எளிய வழிமுறைகளை நாடுகின்றனர். மேலும் தொப்பை குறைய வயிற்று பகுதிக்கு மட்டும் பயிற்சி கொடுத்தால் போதுமானது என்று நினைக்கிறார்கள்.
தொந்தியைக் குறைப்பதற்கு சிறந்த வழி நமது உடலின் நடுப்பாகத்திற்கு (வயிற்றுப் பகுதிக்கு) பயிற்சி கொடுக்க வேண்டும் என்ற கருத்து பலருக்கும் உள்ளது. ஆனால் இது ஒரு தவறான கருத்து.
நம்மில் பலர் எந்த இடத்தில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து இருக்கிறதோ, அந்த இடத்தில் உள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் கொழுப்பு கரைந்து தொந்தி குறையும் என்று எண்ணுகிறோம். ஆனால் ஆய்வுகள் தெரியப்படுத்துவது என்னவென்றால், நாம் பயிற்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கொழுப்புகள் கரைவதில்லை.
இப்படிச் செய்வதற்கு பதில், நாம் உடற்பயிற்சியுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் நமது உடம்பிலுள்ள கொழுப்புகள் எல்லா இடங்களிலும் சீராகக் குறையும் போது நமது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பும் கரைந்து தொந்தி குறையும்.

உடல் எடை விரைவில் குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் வியர்வை வெள்ளம் போல் கொட்டும் அளவில் உடற்பயிற்சி செய்ய வேண்டுமா? என்பதை விரிவாக கீழே பார்க்கலாம்.
உடற்பயிற்சி வாழ்வில் முக்கியமான ஒன்று. உடல் கொஞ்சம் வெயிட் அதிகமாகிவிட்டதால் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் சாப்பாட்டைக்குறை, உடற்பயிற்சி செய் என ஏகப்பட்ட அறிவுரை. நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. ஆனால் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது நம்மில் பலர் தவறான அறிவுரையாலும், கருத்துக்களாலும் குழப்பம் அடைந்து தாறுமாறாக உடற்பயிற்சி செய்ய நேரிடுகிறது.
அதே போல் எடையைக் குறைப்பதற்கு வியர்வை வெள்ளம் போல் கொட்டும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற கருத்து அனைவரிடத்திலும் உள்ளது. ஆனால் அது ஒரு தவறான கருத்து. வியர்வையானது உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதற்கு மட்டுமே உதவும். அது நமது எடையைக் குறைக்க உதவாது.
வேர்வை பொங்க கடுமையான உடற்பயிற்சி செய்த பிறகு நமது உடல் எடை குறைந்தாலும் அது உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தற்காலிக எடை குறைவே ஆகும். இதை விடுத்து உடல் தசைகளுக்கு கடுமையான பயிற்சி கொடுக்காமல் மிதமாக பயிற்சிக் கொடுத்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உடல் தசைகள் நல்ல வலுவுடன் இருக்கும். இதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
நீச்சல் ஒரு நல்ல உடற்பயிற்சி. உடலின் அனைத்து தசைகளையும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்ய வைக்கிறது என்பது தெரிந்தது. தொடர்ந்து நீச்சல் பயிற்சியை மேற்கொண்டால் உடல் வலுமைப் பெறும். நீச்சலானது எந்த வயதிலும், எந்த நிலையிலும் செய்யக்கூடியது. அதிலும் வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என்று அனைவரும் செய்யக் கூடியப் பயிற்சிகளில் இதுவும் ஒன்று.
தொடர்ந்து நீச்சல் பயிற்சி செய்து வந்தால் உடல் தசைகளை வலுவடையும். நீச்சல் என்பது பண்டைய காலம் முதலே ஒரு தற்காப்பு முறையாகவே இருந்து வருகிறது. மற்ற உடற்பயிற்சிகளை நாம் ஒப்பிடுகையில் நீச்சல் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகவே கருதப்படுகிறது.
நீச்சல் பயிற்சி நம் உடலில் உள்ள பெரும்பாலான பகுதிகளை வலிமைப்படுத்தும் நல்ல உடற்பயிற்சியாக அமைகின்றது. தற்போது உடல் எடையை குறைக்க நீச்சல் பயிற்சி சிறந்த ஒன்றாக கருதபடுகிறது.
சராசரி ஆண் (ஆ) மற்றும் (பெ) ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளுவதன் மூலம் எரிக்கபடும் கலோரிகள்.
நீச்சல் சுற்றுக்களை, /ப்ரீஸ்டைல், வேகமாக, தீவிரமான முயற்சி மேற்கொள்ளும் போது அ=862. கி.கலோரிகள் , பெ=739. கி.கலோரிகள் எரிக்கப்படும்.
நீச்சல் சுற்றுக்களை, /ப்ரீஸ்டைல், மிதமாக பயிற்சி மேற்கொள்ளும் போது அ=603. கி.கலோரிகள், பெ=518. கி.கலோரிகள் எரிக்கப்படும்.
குழந்தைகளுக்கு ஐந்து வயதில் நீச்சல் கற்றுத்தர ஆரம்பிக்கலாம். பதினெட்டு வயதுக்குள் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு உடலின் எடை கூடிவிடும். மூட்டுகளில் அசையும் தன்மையும் நெகிழ்வுத் தன்மையும் குறைந்துவிடும். இந்தக் காரணங்களால், நீச்சல் கற்றுக்கொள்வது கடினம்.
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடலில் உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் நீச்சல் பலனளிக்கும். உடல் தசைகள் வலிமையாகும். இதனால் அழகும் கூடும்.
கணினியில் வேலை பார்ப்பவர்கள் முதுகு வலியால் அவதிப்படுவார்கள். நீச்சல் அடிப்பதால் முதுகு தண்டுவடம் வலிமை பெற்று முதுகு வலி ஏற்படாது. தோள் வலி, கழுத்து வலியும் நீங்கும்.
நீச்சல் இடிப்பதால் பெண்களுக்கு உடலில் ஹார்மோன் பிரச்சனைகள் மற்றும் மாதவிலக்கு கோளாறுகள் வராது.
நீச்சல் பயிற்சி என்பது ஒரு காற்றலைப் பயிற்சி. நுரையீரல் வலுப்பெறுவதற்கும் இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இயங்குவதற்கும் நீச்சல் பயிற்சி நன்கு உதவுகிறது. தொடர்ந்து நீச்சல் பயிற்சி செய்து வருபவர்களுக்கு எலும்பு மூட்டு தொடர்பான நோய்கள் வருவது குறைகிறது.
நீச்சல் தெரியாதவர்கள் முறைப்படி கற்றுக் கொள்வது அவசியம். அதன் பின்னரே இந்த வகை பயிற்சி செய்ய வேண்டும்.
சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உடல் தசைகள் நல்ல வலுவுடன் இருக்கும். ஆரோக்கியம் கைகூடும்.

ஆரோக்கியமான வாழ்விற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். வாரத்தில் எத்தனை நாட்கள் உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கும் நல்லது என்பதை பார்க்கலாம்.
வாரத்துக்கு இரண்டு நாட்கள் உடற்பயிற்சி செய்தாலே நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு போதுமானது என்ற கருத்து பலரிடம் உள்ளது. ஆனால் இது தவறான கருத்து.
எப்படி விட்டமின்கள் நமது உடலுக்கு தினசரி தேவையோ, அதுபோல் மிதமான உடற்பயிற்சியும், நமக்கு தினசரி தேவை.
ஏனென்றால், உடற்பயிற்சிகளால் ஏற்படும் நல்ல மாற்றங்களை 48 முதல் 72 மணி நேரங்கள் வரைதான் நமது தசைகளால் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
ஆகவே நமது தசைகளும், அவற்றுடன் தொடர்புடைய நமது இரத்த, சுவாச, செரிமான உறுப்புகளும் உறுதியாகவும், நல்ல நிலையில் இயங்க குறைந்தது வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

பெண்கள் யோகா, ஆசனம், உடற்பயிற்சி போன்றவை செய்ய வேண்டியது மிகவும் அவசியமான என்பதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
ஆண்களுக்கும் ஆசனம் அவசியம் என்றால், பெண்களுக்கு அவை அதி அவசியம் ஆகும். எனினும், அடிப்படை உடற்பாங்கு வேறுபாட்டுக்கு ஏற்ப இரு பாலரும் ஆசனத்திலும் சில மாறுபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
பின்னால், குழந்தைப் பேறு காலத்தில், உடலை, தரையில் முழுமையாக நீட்டிட முடியாததைக் கருதி, பெண்கள் சிறு வயதிலிருந்தே குறுகிய வணங்கு முறையை பின்பற்றுகின்றனர்.
இது போலவே பருவமடையும் வரை பெண்களுக்கும் எல்லா ஆசனங்களையும் பழக்கினாலும், பூப்படைந்த பிறகு, மாதவிலக்குக் காலத்தில் சில நாட்களும், கருவுற்ற காலம் மற்றும் பிள்ளை பெற்ற பின்பு சில மாதங்களும் உடல்நிலைக்கேற்ப ஓரளவோ, முழுமையாகவோ ஆசனங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவ அறிவும் உடைய ஆசனப்பயிற்றுவிப்பாளரிடம், எந்தெந்த ஆசனங்களை, எவ்வளவு நேரம் பழகிடலாம் என்று தெரிந்து கொண்டு செய்வது நல்லது. பெண்ணின் உடலும் பேணப்படும். எதிர்காலப் பிள்ளையின் நிலையும் பேணப்படும்.
ஒவ்வொரு ஆசனத்திலும் நமக்கு சுகமான உணர்வு ஏற்பட வேண்டும். விழித்த நிலையிலேயே, சுகமான உறக்கத்தின் அனுபவத்தை, பயனை அளிப்பதாக ஆசனம் அமைய வேண்டும். ஆசனம் பழகும் முன் செய்யப்படும்; கபாலபாதி போன்ற மூச்சுப்பயிற்சிகள் வேறு; பிராணாயாமம் என்ற சுவாசக்கட்டுப்பாடு வேறு. நம் எண்ணப்படி, காற்றை இழுத்து, நிறுத்தி வெளியிடும் திறனை அளிக்கின்ற பிராணாயாமத்தை ஆசனங்களில், ஓரளவு தேர்ச்சி பெற்ற பின் பழகிவிடுவதே நல்லது.

கழுத்து வலி, தலைவலி, தலைபாரம், சளியால் ஏற்படும் தலைவலி, இரு சக்கர வாகனம் ஓட்டுவோர், நீண்ட நேரம் குனிந்து படிக்கும் மாணவர்கள் இந்த முத்திரையை செய்யலாம்.
‘சிரசாசனம்’ என்பது தலைகீழாக நின்று செய்யும் ஆசனம். சிரசாசனம் செய்ய முடியாதவர்களுக்கு ‘மகா சிரசு முத்திரை’ நல்ல மாற்று. சிரசாசனம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்குமோ, அவை அனைத்தும் இந்த முத்திரையைச் செய்வதால் கிடைக்கும். இது உச்சி முதல் கழுத்து, தோள்பட்டை வரை உள்ளஅனைத்துப் பகுதிகளுக்கும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, அங்குள்ள சளி, நீர் ஆகியவற்றை வெளியேற்றும்.
செய்முறை :
மோதிர விரலை மடக்கி உள்ளங்கையின் நடுவில் வைத்து அழுத்த வேண்டும். ஆள்காட்டி விரல் நடுவிரல் நுனிகளை கட்டைவிரல் நுனியோடு சேர்த்து வைக்க வேண்டும். சுண்டு விரல் நீட்டி இருக்கவும்.
விரிப்பில் அமர்ந்து தலை, முதுகுத்தண்டு நிமிர்ந்த நிலையில் தரையில் சம்மணமிட்டு செய்ய வேண்டும். நாற்காலியில் அமர்ந்து பாதங்களை தரையில் பதித்தும் செய்யலாம்.
படுக்கையில் இருக்கும் நோயாளிகள் தலையணை வைத்து சாய்ந்த நிலையில் செய்யலாம்.
உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.
பலன்கள் :
நீர்கோத்தலால் ஏற்படும் தலைவலி, தலைபாரம், சளியால் ஏற்படும் தலைவலி, நெற்றிப்பொட்டில் ஏற்படும் வலி (Frontal sinusitis), மூக்குக்கு இருபுறமும் கண்களுக்குக் கீழே உள்ள எலும்புகளில் வரும் வலியை (Maxillaray sinusitis, Ethomoidal sinusitis) சரியாக்கும்.
மூக்கடைப்பு, மூக்கில் சதை வளர்தல், மூக்கில் நீர் வடிதல், ஒரு பக்க மூக்கில் மூச்சுவிடுதல், வாசனை உணராமல் போதல் பிரச்சனை உள்ளவர்கள் மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
குனிந்து நிமிர்ந்து வேலை செய்வோர், இரு சக்கர வாகனம் ஓட்டுவோர், நீண்ட நேரம் குனிந்து படிக்கும் மாணவர்கள் ஆகியோருக்கு ஏற்படும் கழுத்து வலி சரியாகும். கழுத்து இறுக்கமும் நீங்கும்.
சிலருக்குக் கழுத்து எலும்பில் உள்ள சவ்வு பாதிக்கப்பட்டிருக்கும். இதனால் தோள்பட்டை, கை வரை வலி பாயும். இவர்களுக்கான பிரச்னையைத் தீர்க்கும் சிறந்த முத்திரை இது.

உடற்பயிற்சி செய்யும்போது அவசியம் பின்பற்ற வேண்டிய விஷயங்களை அறிந்திருப்பது நல்லது. உடற்பயிற்சிக்கு முன் கீழ்க்கண்ட உணவுகளை உண்ணலாம்.
இன்று மக்களுக்கு உடலை கச்சிதமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அதற்காக உடற்பயிற்சிக்கூடங்களை நோக்கி ஓடுகிறார்கள் அல்லது வீட்டில் ‘டிரெட் மில்’லில் ஓடுகிறார்கள்.
ஆனால் உடற்பயிற்சி செய்யும்போது அவசியம் பின்பற்ற வேண்டிய விஷயங்களை அறிந்திருப்பது நல்லது. குறிப்பாக, உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது வெறும் வயிற்றில் இருக்கக் கூடாது.
பலரும் செய்யும் இந்தத் தவறை நீங்கள் தவிர்த்திடுங்கள். உடற்பயிற்சிக்கு முன் கீழ்க்கண்ட உணவுகளை உண்ணலாம்...
* தற்போது ஓட்ஸ், பரவலாக விரும்பி உண்ணப்படும் உணவாகி வருகிறது. ஓட்சில் நார்ச்சத்தும் புரதச்சத்தும் உள்ளன. இவை மெதுவாக ஆற்றலை வழங்கி, நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய உதவும்.
* வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இதனால் உடற்பயிற்சி செய்வதற்குத் தேவையான சக்தி கிடைப்பதோடு, தசைகள் பாதிக்கப்படாமல் இருக்க உதவும்.
* வேக வைத்த முட்டையின் வெள்ளைக்கருவில் பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், ரிபோபிளேவின், செலினியம் ஆகியவை உள்ளன. இவை உடற்பயிற்சியின்போது வேண்டிய ஆற்றலை வழங்கும்.
* இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் பொட்டாசியம், எளிதாக உடற்பயிற்சி செய்ய உதவும். மேலும் இவை உடலுக்கு நீர்ச்சத்தை வழங்கும்.
* ‘அவகேடோ’ என்ற வெண்ணெய்ப் பழம், பழ அங்காடிகளில் கிடைக்கும். இந்த வெண்ணெய்ப் பழ மில்க் ஷேக்கை உடற்பயிற்சி செய்யும் முன் குடிப்பது மிகவும் நல்லது. அதில் உள்ள ஊட்டச்சத்துக்களால், செய்யும் உடற்பயிற்சியின் முழு நன்மையையும் நாம் பெறலாம்.
* முழுத்தானிய உணவுகள், கொழுப்பு குறைந்த யோகர்ட், பழுப்பு அரிசி உணவுகள், பழங்கள், வேகவைத்த காய்கறிகள் சாப்பிடலாம். போதுமான தண்ணீர் அருந்த வேண்டும்.
* உடற்பயிற்சியைத் துவங்குவதற்கு 5 நிமிடம்தான் இருக்கிறது என்றால், ஒரு துண்டு ஆப்பிள் அல்லது வாழைப்பழம் சாப்பிடலாம்.

தினமும் தொடர்ந்து தியானம் செய்வதனால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றது. அவ்வாறு கிடைக்கும் நன்மைகளை கீழே விரிவாக பார்க்கலாம்.
மூளையின் ஆற்றல் பன்மடங்கு பெருகுகின்றது
மன அழுத்தம் மட்டுமன்றி இரத்த அழுத்தம் குறைகின்றது.
பல்வேறுபட்ட நோய்கள் நீங்குகின்றன.
உறக்கத்தில் கிடைக்கும் ஓய்வை விடக் கூடிய ஓய்வினைப் பெறலாம்.
உடல் உள்ளம் ஆற்றல் பெருகும்.
குறுகிய காலத்தில் பெரிய வேலைகளைச் செய்ய முடிதல்.
தெய்வீகச் சக்தி பெருகும்.
முகம் ஒளி பெறும்
கெட்ட எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்களின் செயற்பாடு அதிகரிக்கும்.
மனம் அமைதியடையும்
சிந்தனைத்திறன், ஞாபக சக்தி அதிகரிக்கும்
உள்மனத்தை விழிப்படையச் செய்யும்.
மேலும் அன்பு, அமைதி, ஒற்றுமை சகோதரத்துவ உணர்வு, அறிவு தன்னம்பிக்கை, நடைமுறை வாழ்க்கையில் சத்தியம், தர்மம் இவைகளை ஏற்படுத்த தியானம் உதவுகிறது.

வாயுத்தொல்லை, மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த சுப்த வஜ்ராசனத்தை தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
சுப்த என்றால் மல்லாந்து படுத்தல் என்று பொருள்படும். வஜ்ரம் என்றால் வைரம் என்று பொருள்படும். அதாவது இந்த ஆசனத்தில் இருக்கும் போது கிடையாக வைக்கப்பட வைரம் போல் தோன்றுவதால் இந்தப் பெயர் உண்டாகியிருக்கலாம்.
செய்முறை :
பாதங்களின் மேற்பகுதி தரையில் படுமாறு, முழங்காலிட்டபடி அமர்ந்திருப்பது வஜ்ராசனம். அப்படியே பின்னுக்குச் சரிந்து கைகளைத் தலைக்கு அணையாக வைத்துக் கொண்டோ அல்லது கைகளை முடிந்த அளவு பின்னால் நீட்டிய நிலையில் படுத்திருப்பது சுப்த வஜ்ராசனம் எனப்படும். சாயும் போது வெளி மூச்சும் நிமிரும் போது உள் மூச்சும் வாங்குதல் சிறப்பு. கழுத்துப் பிடிப்புள்ளவர்கள், மூட்டுப் பிடிப்புள்ளவர்கள், இதய நோயுள்ளவர்கள் இதனைத் தவிர்க்க வேண்டும்.
நன்மைகள் :
தொடை, இடுப்புப் பகுதியிலுள்ள தேவையற்ற சதையைக் கொழுப்பைக் குறைக்கும்.
கூன் முதுகு நிமிரும்.
வயிறு, இடுப்பு என்பன நன்கு நீட்டப்பட்டு உரம் பெறும்.
வாயுத்தொல்லை, மலச்சிக்கலுக்கு நல்ல ஆசனம்.
கால்களை மடக்கி அமர்ந்து பின்னால் முழுமையாகச் சரிய முடியாதவர்கள், கைகளை ஊன்றி அல்லது முழங்கையை ஊன்றி படிப்படியாகச் செய்து பார்க்கலாம்.
மிகவும் சிரமப்பட்டு இந்த யோகா பயிற்சியை செய்ய முயற்சி செய்ய வேண்டாம்.

இடுப்பு மற்றும் இடுப்புக்கு கீழ் உள்ள அதிக சதைப் பகுதியை குறைக்க விரும்புபவர்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து தினமும் செய்து வர வேண்டும்.
முதுகுத்தண்டு நன்கு நீண்டு வளையும் தன்மை பெற்று இளமையாகத் தோற்றமளிக்கிறது. இதைத் தொடர்ந்து செய்து வந்தால் உயரம் அதிகமாகும். உடல் கனம் குறையும்.
செய்முறை :
விரிப்பில் நிமிர்ந்து நிற்க வேண்டும். இரு கைகளையும் தலைக்கு மேல் ஒட்டியிருக்கும் படி நன்கு நீட்ட வேண்டும். இருகால்களையும் சேர்த்து வைக்க வேண்டும். அப்படியே முன்புறம் மெதுவாகக் குனிய வேண்டும்.
கைகள் காதுகளை ஒட்டியே இருக்க வேண்டும். மெதுவாகக் கால் விரல்களைத் தொட வேண்டும். இப்பயிற்சி செய்யும் போது முழங்கால் மடங்கக் கூடாது.
இந்நிலையில் ஐந்து முதல் பத்து நிமிடம் இருக்க வேண்டும். இதுவே பாதஹஸ்தாசனம் ஆகும்.
கீழே குனியும்போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும்போது உள்மூச்சு.
பயன்கள் :
உடம்பின் பின்புறம் உள்ள எல்லாத் தசைகள், இடுப்பு நரம்பு தொடையில் உள்ள எலும்பை பிணைக்கும் தசை நார்கள், தசையை பிணைக்கும் தசை நார்கள், கால்கள் ஆகியவை நன்றாக நீட்டப்படுகின்றன. முதுகுத்தண்டு மற்றும் இடுப்பில் உள்ள நரம்புகள் முறுக்கேறுகின்றன. தலைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ஜீரண சுரப்பிகள் நன்கு சுரக்கின்றன. உடலின் சுற்றளவை நன்கு குறைக்கிறது. இடுப்பு மற்றும் இடுப்புக்கு கீழ் உள்ள அதிக சதைப் பகுதியை மெலிய வைக்கிறது.
அதிக இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் உள்ளவர்கள் , கழுத்து வலி , இடுப்புபிடிப்பு உள்ளவர்கள். இதைச் செய்தல் கூடாது.

இரத்தத்தில் சர்க்கரையில் அளவு அதிகம் இருப்பவர்கள் இந்த முத்திரையை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
செய்முறை :
விரிப்பில் அமர்ந்து இருகைகளையும் கோர்த்தவாறு இடதுகை பெருவிரல் மீது வலதுகைப் பெருவிரல் இருக்குமாறு வைக்கவும். இரு நடு விரல்களையும் நேராக நீட்டி ஒன்றை ஒன்று தொட்டவாறு இருக்கச் செய்யவும்.
தினமும் காலை, மாலை 15 நிமிடகள் செய்ய வேண்டும்.
இந்த முத்திரையை அமர்ந்து கொண்டோ அல்லது நின்று கொண்டோ செய்யலாம்.
பலன்கள் :
இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் இரத்ததில் சர்க்கரையின் அளவை குறையும்.

கணினியில் பணி செய்வதால் ஏற்படும் வலி, களைப்பிற்கும், மணிக்கட்டில் ஏற்படும் சோர்விற்கும் சிறந்த நிவாரணியாக உள்ளது இந்த கூட்டு முத்திரை.
இம்முத்திரை இரு தனித்தனியான முத்திரைகளை இணைத்து ஒரே நேரத்தில் செய்வதால் இது கூட்டு முத்திரை அல்லது சம்யுக்த முத்திரை என்று வழங்கப்படுகிறது. இது சிகிச்சை முத்திரைகளில் ஒன்று.
செய்முறை :
விரிப்பில் அமர்ந்து வலது கை மோதிர விரலை மடித்துக் கட்டை விரல் நுனியோடு சேர்த்து வைக்கவும். இடது கை நடுவிரலை மடக்கி கட்டை விரல் நுனியோடு சேர்த்து வைக்கவும்.
பயன்கள் :
தினமும் 10 முதல் 15 நிமிடம் பயிற்சி செய்வதால், உடலின் சக்தி பெருகும். குறிப்பாக ஆர்த்ரைடிஸ் என்ற, மூட்டு, முழங்கால் வலிகள் தீரும். சுளுக்கு, தசைப்பிடிப்பிற்கும், நீண்ட தூரம் நடந்தால், மாடி ஏறுவதால், கணினியில் பணி செய்வதால் ஏற்படும் வலி, களைப்பிற்கும், மணிக்கட்டில் ஏற்படும் சோர்விற்கும் சிறந்த நிவாரணி.