என் மலர்
உடற்பயிற்சி
கூன் விழுந்த முதுகுடன் இருப்பவர்கள் முதுகை சீராக்க உஷ்ட்ராசனம் உதவுகிறது. இப்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
உஷ்ட்ரம் என்றால் ஓட்டகம். இந்த ஆசனத்தை செய்யும் போது ஓட்டகத்தைப் போன்று தோற்றம் தருவதால் இதற்கு உஷ்ட்ராசனம் என்று பெயர்.
ஆண், பெண் பாகுபாடின்றி வயது பாகுபாடின்றி இளையோர் முதல் பெரியோர் வரை அவர்களது உடல் அமைப்பிற்கும் ஏற்றவாறு இவ்வாசனத்தை செய்யலாம்.
மலசலம் கழித்த பின்னரே இதை செய்ய வேண்டும். உணவு உண்டபின் ஆசனம் செய்யலாகாது. இவ்வாசனம் செய்யும் போது உடலில் வலி ஏற்பட்டால் ஆசனம் செய்வதை நிறுத்தி விட வேண்டும். எந்த ஒரு உறுப்பும் இறுக்கம் இன்றி தசைகள் தளர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.
செய்முறை :
முதலில் தரையில் முட்டி போட்டு நிற்கவும். அதாவது முழங்கால்களும் கணுக்கால்களும் தரையில் படுமாறு நிற்கவும். இரு பாதங்களும் மேல்நோக்கி இருக்க வேண்டும். இருபாதங்களையும் ஒன்றோடொன்று சேர்த்து வைக்கவும். மெதுவாக மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்துக் கொண்டே பின்பக்கமாக சாய வேண்டும். இடது உள்ளங்கையை இடது கால் பாதத்திலும் வலது உள்ளங்கையை வலது கால் பாதத்திலும் வைக்கவும்.
முதுகை எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு நன்றாக வளைக்கவும். தலையை பின்பக்கமாக தொங்கவிடவேண்டும். தலையின் உச்சிப்பகுதி தரையை பார்த்தபடி இருத்தல் சிறப்பானது. தொடைப்பகுதி உள்பக்கமாக சாய்ந்திருக்கக் கூடாது. தரைக்கு செங்குத்தாக இருக்க வேண்டும். இந்த நிலையில் சுமார் 30 நிநாடிகள் இருந்த பின் சாதாரண நிலையில் மூச்சு விடவும். பிறகு கைகளை ஒவ்வொன்றாக மேலே எடுத்து இயல்பு நிலைக்கு திரும்பவும்.

பயிற்சியின் போது வாயினால் மூச்சு விடக்கூடாது. உடல் குறுகுதலை தவிர்க்க வேண்டும். ஆடைகள் தளர்ச்சியாக இருத்தல் நல்லது. ஆசனம் நிதானமாகவும் மெதுவாகவும் படிப்படியாகவும் செய்ய வேண்டும். இவ்வாசனம் செய்ய காலை 4 மணி முதல் 6 மணி வரை செய்யலாம்.
இதய நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், முதுகுதண்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் இவ்வாசனத்தை செய்யக்கூடாது.
பயன்கள் :
இவ்வாசனம் முதுகு தண்டை உறுதி செய்வதில் மிக முக்கியமானதாகும். எளிதில் உணவுகளை ஜீரணிக்க செய்கிறது. குடல் இறக்கத்தை சரிசெய்து உணவு செரிமானத்தை சீராக்குகிறது. கூன் விழுந்த முதுகுடன் இருப்பவர்கள் முதுகை சீராக்க உஷ்ட்ராசனம் உதவுகிறது. கணையத்தின் சுரப்பு தன்மையை சீராக்குகிறது.
தோள் மூட்டுகளில் உள்ள குறைகளை தீர்க்க உதவுகிறது. கண்களின் பார்வை திறனை அதிகரிக்க செய்கிறது. இதயத்தை வன்மையடையச் செய்து இரத்த ஒட்டத்தை சீராக்குகிறது. கழுத்துபகுதி தசைகளை வலுப்படுத்துகிறது. மார்பு பகுதியை விரிவடையச் செய்து மார்பு தசைகளை வன்மையடையச் செய்கிறது. சிறுநீரக பிரச்சனைகளை சீர் செய்கிறது. நரம்பு தளர்ச்சியை நீக்கி புத்துணர்வு அளிக்கிறது. ஞாபக சக்தி, மன ஒருமைப்பாடு இவற்றை அதிகரிக்கிறது.

வயிறு, இடுப்புப் பகுதிகளில் அதிகத் தசைகளும் கொழுப்பால் அவதிப்படுவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
வயதை நெருங்குவதற்குள் பெரும்பாலான பெண்களுக்கு, வயிறு, இடுப்புப் பகுதிகளில் அதிகத் தசைகளும் கொழுப்பும் சேர்ந்து, உடல் எடை கூடிவிடுகின்றனர். தாய்மை, ஹார்மோன் மாற்றம், உணவு போன்ற காரணங்களோடு போதிய உடற்பயிற்சி இல்லாததும் கொழுப்பு அளவு அதிகரித்து, தசைகள் தளர்வு பெற முக்கியக் காரணம்.
அதிகப்படியான கலோரியை எரிக்க பைசைக்கிள் க்ரஞ்சஸ் பயிற்சி பெரிதும் உதவுகிறது. இந்த பயிற்சி செய்ய தரையில் மல்லாந்து படுத்து, கால் முட்டியை மடித்தபடி உயர்த்த வேண்டும்.

தலையை சற்று உயர்த்தி, கைகளை மடித்து தலையின் பக்கவாட்டில் வைக்க வேண்டும். இப்போது, வலது கை முட்டியை இடது கால் முட்டியைத் தொடுவதுபோல் கொண்டுவர வேண்டும். பின்னர், பழைய நிலைக்குத் திரும்பி, இடது கை முட்டி வலது காலைத் தொடும்படி செய்யவும்.
இது ஒரு செட். இதுபோல, 25 முதல் 35 முறைகள் செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம். இந்த பயிற்சி செய்ய ஆரம்பித்த 1 மாதத்தில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

உடல் சோர்வு உள்ளவர்கள், வயதானவர்கள் இந்த முத்திரையை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம். இப்போது இந்த முத்திரையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பிருத்வி என்றால் சமஸ்கிருதத்தில் பூமி மாதா என்பதாகும்.
செய்முறை :
விரிப்பில் அமர்ந்து கொண்டோ நாற்காலியில் அமர்ந்து கொண்டோ இந்த முத்திரையை செய்யலாம். இடதுகை மோதிர விரல் நுனியை கட்டைவிரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்கட்டும். தினமும் காலை, மாலை மூன்றரை நிமிடம் செய்யவும்.

பலன்கள் :
எந்தவித உடல் சோர்வினையும் நீக்கும். உடல் பலவீனமற்றவருக்கு நிறையைக் கூட்டும்.
தோலின் கட்டமைப்பை உகந்ததாக்கி தோலினை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் உடலினைப் பேணுவதன் மூலம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
வயதானவர்களுக்கு மிகுந்த பயன். நகம் எழும்பு, முடி வளரும். உடல் நடுக்கம் குறையும்.

தியானம் என்பது உங்களின் வெற்றிக்கான பாதை என்று சொல்லலாம். தினமும் காலையில் தியானம் செய்தால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று விரிவாக பார்க்கலாம்.
தியானம் என்பது உங்களின் வெற்றிக்கான பாதை என்று சொல்லலாம். தியான நிலை என்றால் துன்பத்திலிருந்து முற்றிலும் விடுபட்ட நிலை. வாழ்க்கையின் கஷ்டங்களை மறந்து அந்த கஷ்டங்கள் நம்மை தொடராமல், நம் வாழ்வில் நாம் விரும்பியதைச் செய்யும் நிலை ஆகும்.
காலையில் தினமும் 5 முதல் 6 மணி வரையிலும், மாலையில் 6 மணி முதல் 7 மணி வரை தியானம் செய்தால் நல்ல பயன்கள் கிடைக்கும். பொதுவாக தியானம் செய்யும் போது கண்களை மூடிக் கொண்டு, நம்முடைய கஷ்டங்களை மறந்து உங்களுக்கு பிடித்த தெய்வத்தை நினைத்து வழிபடுதல் வேண்டும்.
தியானம் தினமும் செய்தால், உடலும், மனமும் சந்தோஷத்துடனும், ஆரோக்கியத்துடனும் மற்றும் சுறுசுறுப்புடனும் காணப்படும். நாம் தியான நிலையில் இருந்து சுவாசிக்கும் போது, தூய்மையான காற்று உள்ளே சென்று மார்பு பகுதியை விரிவடையச் செய்து, கோபம் வராமல் கட்டுப் படுத்துகிறது.

நாம் கற்றுக் கொள்ளும் ஆற்றலையும், ஞாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. தீய எண்ணங்களை விரட்டி, நல்ல எண்ணங்களின் செயல்பாட்டை கொண்டு வந்து, மனதிற்கு உற்ச்சாகத்தையும், உடலுக்கு இளமையையும் தருகிறது.
மது அருந்துதல், சிகரெட் பிடித்தல் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபட வைக்கிறது. கவலைகளைப் போக்கி சகிப்புத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கச் செய்கிறது.
நம் மனதை அமைதிபடுத்தி, படிப்பு மற்றும் வேலைகளில் கவனங்களை அதிகரிக்கச் செய்கிறது. தசைகளின் இறுக்கம் மற்றும் மனக்கவலைகளைப் போக்கி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து அலர்ஜி மற்றும் ஆர்த்தரைடிஸ் போன்ற நோயகள் வராமல் தடுக்கிறது.
ஹார்மோன்களை சரியான அளவில் சுரக்கச் செய்து, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடலில் உள்ள திசுக்களைப் பாதுகாத்து, இதயம் தொடர்பான நோய்களை அண்ட விடாமல் தடுக்கிறது.

மார்பு பகுதி, தொடை மற்றும் குதிகால் தசைகள் வலுவாக்கும் சக்தி தடாசனத்திற்கு உள்ளது. இப்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தடாசனம் நிலை நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, வலிமையாக்கவும் செய்யும். கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் செய்வதற்கு இது சிறந்த ஆசனம். இந்த ஆசனத்தின் போது மூச்சுப்பயிற்சியின் உதவியினால், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
இவ்வாசந்தின் இறுதி நிலை மலைக் குன்று போன்று இருப்பதால் இப்பெயர் பெற்றது.
செய்முறை :
இது பாத ஹஸ்தாசனத்திற்குப் பிறகு செய்யவேண்டிய ஆசனமகும்.
விரிப்பில் இரு கால்களையும் சுமார் பத்து செ.மீட்டர் இடைவெளி விட்டு கைகள் பக்கவாட்டில் தொங்கியவாறு நிற்கவும். மூச்சை இழுத்து கொண்டே குதி கால்களை தூக்க வேண்டும். அதே நேரத்தில் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் உயர்த்தி தலைக்கு மேலே நேராக கொண்டு சென்று உள்ளங்கைகள் ஒன்றோடோண்டு ஒட்டி இருக்குமாறு (வணக்கம் சொல்வது போல்) செய்ய வேண்டும்.

நிலை தடுமாறாமல் சுமார் 20 நொடிகள் அல்லது 30 நொடிகள் சுவாசத்தை நிறுத்தி அதே நிலையில் நிற்கவும்.
மூச்சை வெளி விட்டுக் கொண்டே மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 5 முதல் 7 முறை செய்ய வேண்டும்.
பலன்கள் :
மார்பு பகுதி, தொடை மற்றும் குதிகால் தசைகள் வலுப்பெறுகின்றன.
இது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆறு மாதவயிற்றுத் தசைகளை சீராக வைத்திருக்க உதவுகிறது.
மார்பு நன்கு விரிவடைகிறது.

மனிதன் தனக்குள் மறந்து கிடக்கும் சக்திகளின் ஆற்றலை கண்டு கொள்வது என்பதே யோகா பயிற்சிகளின் அடிப்படை நோக்கம் ஆகும். இது குறித்த செய்தியை விரிவவாக பார்க்கலாம்.
தற்போதைய நவீன உலகில் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் பலரும் அவதிப்படுவது தவிர்க்க இயலாததாகி வருகிறது. இது போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபட யோகா பயிற்சியில் ஈடுபடுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
நோய்க்கும், நமக்குமான நட்பை பலப்படுத்தும் சூழலை மாற்ற வேண்டிய அவசியம் குறித்து நாம் கவனம் கொள்வதில் தாமதமாக இருந்து விடுகிறோம். அதனால் பல்வேறு உடல் சார்ந்த சிக்கல்களை நமது நண்பர்களாக மாற்றிக் கொள்கிறோம். வாழ்க்கையையும் பிரச்னைகள் நிரம்பியதாக மாற்றிக் கொள்கிறோம். இத்தகைய சிக்கலில் இருந்து விடுபட யோகா முறைகளை கையாள்வது உலகமெங்கும் பரவலாக இருந்து வருகிறது.

யோகாவில் ஈடுபடுவது உடலுக்கு மட்டும் பயிற்சி அளிப்பதில்லை. மனதையும் சீரான முறையில் இயங்க வைக்கிறது. மனநிம்மதியானது எவ்வகையிலும் பாதிக்கப்படாமல், வாழ்க்கை பயணத்தை சீரான மகிழ்ச்சியுடன் கொண்டு செல்ல யோகா பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன. யோகா என்ற சொல்லுக்கு தமிழில் ஒருங்கிணைப்பது என்ற பொருளை தருகிறது.
மனிதன் தனக்குள் மறந்து கிடக்கும் சக்திகளின் ஆற்றலை கண்டு கொள்வது என்பதே யோகா பயிற்சிகளின் அடிப்படை நோக்கம் ஆகும். பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்து வரும்போது மனதையும் நம்மால் ஒருமைப்படுத்த முடியும். இந்த பயிற்சிகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நோய்கள் வராமலும் தடுக்கும் பணியினை கச்சிதமாக செய்கின்றன.

தியானம் செய்வதற்கு இந்த முத்திரை உகந்தது. மனஅமைதி வேண்டுபவர்கள் இந்த முத்திரையை தினமும் செய்து வரலாம்.
பலன்கள் :
இது தியானத்திற்கு ஏற்றது. சிந்தனை தெளிவு அடையும். நரம்பு மண்டலங்கள் நன்றாக செயல்படும். இரத்த அழுத்தம் சீர்ப்படும்.
செய்முறை :
இருகைகளையும் முழங்கால் மீது உள்ளங்கை மேல் நோக்கி இருக்குமாறு வைத்து கட்டைவிரல் ஆட்காட்டி விரல் நுனியைத் தொட்டவாறு லேசான அழுத்தம் தரவேண்டும்.

காலை, மாலை என 10 முதல் 15 நிமிடம் தினமும் செய்ய வேண்டும்.
இந்த முத்திரையை தரையில் அல்லது சேரில் அமர்ந்து கொண்டு செய்யலாம்.
1 மாதம் தொடர்ந்து இந்த முத்திரையை செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

இந்த முத்திரை அடி வயிற்றுப் பகுதிக்கு சக்தியைத் தந்து கருப்பைக் கோளாறு, கர்ப்பம் தரிப்பதில் தாமதம், மாதவிடாய் கோளாறு போன்றவற்றிற்கு நிவாரணம் தரும்.
சக்தி முத்திரை பெண்களுக்கும், ஆண்களுக்கும் தேவையான அனைத்து சக்திகளையும் தருவதாகவும், குறிப்பாக அடி வயிற்றுப் பகுதிக்கு சக்தியைத் தந்து உள் உறுப்புகளுக்கு பலம் தந்து, நல்ல உறக்கம், கருப்பைக் கோளாறு, கர்ப்பம் தரிப்பதில் தாமதம், மாதவிடாய் கோளாறு போன்றவற்றிற்கு நிவாரணம் தரும். ஆண்களுக்கு, குடல், விரைப்பைகளில் கழிவுகள் தேங்காமல் பாதுகாக்கும்.
செய்முறை :
இந்த முத்திரையை தலையணை இன்றி நேராக மல்லார்ந்து படுத்த நிலையில் செய்ய வேண்டும். இரண்டு கை கட்டை விரல்களையும் உள்ளங்கையில் மடித்து வைத்து ஆள்காட்டி விரல், நடு விரல்களால் மூடியபடி கட்டை விரலில் லேசன அழுத்தம் கொடுக்கவும்.

இடது கைவிரல்கள் வலது கை விரல்களைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இடது கை சுண்டு விரல், மோதிர விரல் இரண்டையும் நேராக நீட்டி விரல்களின் நுனிகள் வலது கையின் விரல் நுனிகளைத் தொடுமாறு செய்யவும்.
இந்நிலையில் கைகளை அப்படியே அடிவயிற்றின் அருகே வைத்து மூச்சை மெதுவாக இழுத்து மெதுவாக விடவும்.
இவ்வாறு 15 முதல் 20 நிமிடம் செய்யலாம்.

அமைதியான சுற்றுப்புற சூழலுடன், திறந்தவெளியில் வாக்கிங் போவதே சிறந்த பலனை தரும். இரவு நேரத்தில் வாக்கிங் போகலாமா என்பதை பற்றி பார்க்கலாம்.
அமைதியான சுற்றுப்புற சூழலுடன், தூய்மையான வளிமண்டல காற்று கிடைக்கும், அதிகாலை வேளையில், திறந்தவெளியில், வாக்கிங் போவதே, சிறந்த பலனை தரும். அவரவர் இருப்பிடத்தை பொறுத்து, மொட்டை மாடி, தெருக்களிலும், நடைப்பயிற்சி போவதில் தவறில்லை. உணவு செரிமானம் பாதிக்கப்படும் என்பதால், இரவில், உணவருந்திய பின், வாக்கிங் போகக் கூடாது.
மைதானம், பூங்காக்களின், இடப் பக்கம், வாக்கிங் போனால் நல்லதெனவும், வலப்பக்கம் செல்வதே, உடலுக்கு ஆரோக்கியம் எனவும், நடைப்பயிற்சி செல்வோரிடம் இருவேறு கருத்துக்கள், நிலவி வருகின்றன. இதற்கு, ஆய்வுபூர்வமான நிரூபணங்கள் எதுவும் இல்லை. இடப்பக்கமோ, வலப்பக்கமோ, தினமும், வாக்கிங் போனாலே போதும்.

நோயற்ற வளமான வாழ்க்கை வாழலாம். ஒரு மணி நேரத்திற்கு, 6 கி.மீ., வேகத்தில், கை, கால்களை வீசியப்படி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம், 25 நிமிடம் வீதம், வாரத்திற்கு, 150 நிமிடங்கள், வாக்கிங் போக வேண்டும். தினமும், வாக்கிங் செல்வதால், உடல் தசைகள் சுறுசுறுப்பு அடைகின்றன.
தினமும், குறைந்தபட்சம் ஒரு மைல் தூரம் நடக்கும்போது, உடல் ஆற்றலில், 200 கலோரிகள் செலவிடப்படுகின்றன. இதனால், உடல் உயரம் மற்றும் வயதிற்கேற்ப, உடல் எடை பராமரிக்கப்பட்டு, உடல் பருமன் பிரச்சனை, உயர் ரத்த அழுத்த நோய் ஆகியவை தவிர்க்கப்படுகிறது. இரவு நேரத்தில் உணவு அருந்திய பின்னர் வாக்கிங் செல்வது உடலுக்கு நல்லதல்ல. உணவு செரிமானம் பாதிக்கப்படும் என்பதால், இரவில், உணவருந்திய பின், வாக்கிங் போகக் கூடாது.

உடலுக்கு ஓய்வே இல்லாமல், உடலை வதைத்து, கொடுமைப்படுத்தி உடற்பயிற்சி செய்வதை நம் உடல் விரும்பாது. உடற்பயிற்சி குறித்த விரிவாக பார்க்கலாம்.
சீரான மூச்சில் இருந்து உடற்பயிற்சிக்கான மூச்சுத் திறமையை வளர்த்துக் கொள்ள 6 முதல் 8 வாரங்கள் தேவை. அப்போது மெதுவாக வாக்கிங், வேகநடை, மெது ஓட்டம், மித ஓட்டம், வேக ஓட்டம் என உங்கள் வயதுக்கேற்ப தொடங்க வேண்டும்.
உடற்பயிற்சிக்கான சற்று அதிக பளுவை தாங்கக்கூடிய இதய வலிமை, நுரையீரல் வலிமை, எலும்புகள் இணையுமிடங்களின் வலிமை, தசைகளின் வலிமை, மன வலிமை என அனைத்தையும் படிப்படியாக மூச்சுத் திறமையால் கையாள தொடங்கவேண்டும் 20 வயது இளைஞர் உடற்பயிற்சியில் ஈடுபடுவதாகக் கொள்வோம்.
அவரது உடல் வலிமை, இளமையின் காரணமாக மூச்சுத் திறனை மேம்படுத்திய பிறகு, வேக ஓட்டம், கடின உடற்பயிற்சி செய்யும் போது, அந்த இளைஞர் அதிகமான இதயத் துடிப்பை தாங்கக்கூடிய வலிமையைப் பெறுவார். அதே நேரம் 70 வயதுடைய வயோதிகர் உடற்பயிற்சி செய்யும் போது, மிக அதிக இதயத் துடிப்பு உண்டாவதைத் தவிர்க்க வேண்டும்.
முதல் 8 வாரங்கள் உடற்பயிற்சியை மெதுவாக, சிறியதாகத் தொடங்கி, சீராகக் கூட்டி - ஆனால், தொடர்ச்சியாக அடுத்த 24 மணி நேரத்துக்குள் அல்லது அதிகபட்சம் 48 மணி நேரத்துக்குள் மீண்டும் தொடர்வது மிக அவசியம். இல்லாவிட்டால் நீங்கள் பட்ட சிரமம், உங்கள் பலம் அனைத்தும் பலவீனமாக வாய்ப்புண்டு. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் உடல், மன வலிமை கூடிக்கொண்டே இருப்பது உண்மை.

வாரம் 4 அல்லது 5 நாட்கள், அதில் தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் தொடர் உடற்பயிற்சி மிகவும் அற்புதமான தொடக்கமாகும். முதல் 6 - 8 வாரங்களில் படிப்படியான முன்னேற்றத்துக்குப் பிறகு மேலும் படிப்படியாக, சிறுகச் சிறுக, தங்களுக்குத் தேவையான விளையாட்டுகளில் - கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, நீந்தல், சிறகுப்பந்து, டென்னிஸ், ஓட்டப்பந்தயம், குஸ்தி, பாக்ஸிங், பளு தூக்குதல், நடனப் பயிற்சிகள், சிறந்த பயிற்சியாளர்களின் துணையோடு கவனம் செலுத்த வேண்டும்.
இந்த சிறப்புப் பயிற்சிகள் அவரவர் விளையாட்டுக்கேற்ப, பலவித மாறுதல்கள் கொண்டதாக அமையும். எல்லாவற்றுக்கும் ஒரே விதமான பயிற்சி பலன் அளிக்காது. குறிப்பிட்ட பயிற்சி அளிப்பதில் வல்லுனரான பயிற்சியாளரிடம் செல்வதே உங்களின் திறமையை வளர்க்கவும் அந்த விளையாட்டில் நீங்கள் தலைசிறந்து விளங்கவும் வாய்ப்பாக அமையும்.
சமீபகாலமாக சில ஆண்கள் 6 அல்லது 8 பேக் என்று சொல்லிக் கொண்டு, 10 மணி நேரம் ஜிம்மில் தண்ணீர் கூடக் குடிக்காமல் உடலை வதைக்கின்றனர். உடலுக்கு ஓய்வே இல்லாமல், உடலை வதைத்து, கொடுமைப்படுத்துவதையும் நம் உடல் விரும்பாது.
நம் உடல் சில நேரங்களில் சிறிய, பளு குறைந்த வேலைகளையும் சில நேரங்களில் சற்று அதிக பளு உடைய வேலைகளையும் மாறி மாறிச் செய்து, சற்று ஓய்வுக்குப் பிறகு மீண்டும் செய்வதை மிகவும் ரசித்து விரும்புகிறது.

நீண்ட நாட்கள் உடல் ஆரோக்கியத்துடனும், நோயின்றியும் வாழ விருப்பம் உள்ளவர்கள் தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் யாருக்கும் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை என்று சொல்வதை விட நேரம் ஒதுக்க விருப்பம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சிக்கு ஒதுக்கும் நேரத்தில் வேறு வேலை ஏதாவது செய்து விடலாம் என்ற எண்ணம் தான் அவர்களுக்கு உள்ளது.
உடல் ஆரோக்கியத்துடன் வாழ விருப்பம் உள்ளவர்கள் தினமும் 30 நிமிடம் ஒதுக்கினால் போதுமானது. தினமும் 30 நடைப்பயிற்சி செய்வதால் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை பார்க்கலாம்.
தினசரி 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால், ஒரு வருடத்தில் மூன்றரை கிலோ கொழுப்பைக் கரைக்கலாம்.

இதய நோய்கள் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் இதய நோய்க்கான வாய்ப்பை 50 சதவிகிதம் அளவுக்குக் குறைக்கலாம். மேலும், ஆறு புள்ளிகள் வரை ரத்த அழுத்தமும், கெட்ட கொழுப்பும் குறைய உதவுகிறது.
புற்றுநோய் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டப் பெண்கள் வாரத்துக்கு மூன்று முதல் ஐந்து மணி நேரமும், ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் வாரத்துக்கு ஒன்றரை மணி நேரமும் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பை 50 சதவிகிதமாக அதிகரிக்கலாம்.
மன அழுத்தம் நடைப்பயிற்சி செய்வது என்டோஃபின் சுரப்பைத் தூண்டும். இதனால் ரிலாக்சேஷன் ஏற்படுகிறது. மேலும், மனப் பதற்றம் மற்றும் மன அழுத்தத்துக்கான வாய்ப்பும் இதனால் குறையும்.

அபான வாயு முத்திரை எனப்படும் மிருத்த சஞ்சீவினி முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் தலைவலி குறையும். இப்போது இந்த முத்திரையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள். தலைவலியால் அவதிப்படுவோர் படும் அவஸ்தை சொல்லி மாளாது. சிலருக்கு தைலம் தேய்த்தாலும் மாத்திரைகள் சாப்பிட்டாலும் அந்த நேரத்திற்கு மட்டும்தான் நிவாரணம் கிடைக்கும். தொடர்ந்து தலைவலி ஏற்படும் பட்சத்தில் உரிய மருத்துவரை ஆலோசித்து, உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அதேசமயம் வீட்டில் இருந்தபடியே அதற்குரிய யோக முத்திரைகளை செய்தால் நிரந்தர பலன்களை பெறலாம்.
இதில், ஐம்புலன்களையும் குறிக்கும் ஐந்து விரல்களே நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றன. அபான வாயு முத்திரை எனப்படும் மிருத்த சஞ்சீவினி முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் தலைவலி குறையும்.

இந்த முத்திரையை செய்வதற்கு முதலில் ஆட்காட்டி விரலை மடக்கி கட்டைவிரலின் அடியை தொடவேண்டும். பின்னர் நடு விரலையும், மோதிர விரலையும் கட்டை விரலின் நுனியை தொடவேண்டும். சுண்டு விரலை மேலே நீட்டவேண்டும். இந்த முத்திரை இதயத்திற்கு பலம் சேர்க்கும் என்பதால் இதய முத்திரை என்றும் கூறுவார்கள்.
இதேபோல் பட்சி முத்திரை செய்தும் தலைவலியை விரட்டலாம். இந்த முத்திரை செய்வது மிகவும் எளிது. ஆள்காட்டி விரலை சற்று மடக்கி, பெருவிரல் நுனியோடு இணைக்கவும். மற்ற மூன்று விரல்களையும் உள்ளங்கையில் சேருமாறு மடக்கி கொள்ள வேண்டும். அவ்வளவுதான். இந்த முத்திரையை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம்.