என் மலர்
உடற்பயிற்சி
இதயத்தைப் பாதுகாக்க, ஒப்பில்லாத மருந்து முத்திரை வடிவில் நம் கைவிரல்களிலேயே உள்ளது. இந்த முத்திரைக்கு ‘ம்ருத்யூசஞ்சீவி’ எனப் பெயர்.
‘ம்ருத்யூ’ என்றால் மரணம். ‘சஞ்சீவி’ என்றால் மரணமற்ற நீண்ட ஆயுள். அதாவது, ‘மரணமில்லாதப் பெருவாழ்வு’ என்பது இந்த முத்திரையின் பெயர்.
தரையில் நேராக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து செய்யலாம்; நாற்காலியில் நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து, பாதங்களைத் தரையில் பதித்துச் செய்யலாம். காலை, மாலை என வெறும் வயிற்றில் 10-30 நிமிடங்கள் வரை செய்யலாம்.
இதய அறுவைசிகிச்சை செய்தவர்கள், முத்திரை பயிற்சியாளரின் ஆலோசனைக்குப் பிறகே செய்ய வேண்டும். முத்திரையைச் செய்யத் தொடங்கும்போது, மிதமாக வலி வருவதுபோலத் தெரியும். ஏனெனில், முதன்முறையாக சீரான ரத்த ஓட்டம் செல்வதால் ஏற்படும் அறிகுறி இது. பின் வலி மறையும். தொடர்ந்து செய்துவர, நல்ல பலன்களை உணரலாம்.
அவசர காலத்தில், அதாவது நெஞ்சுவலி ஏற்பட்டால் எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் செய்யலாம். உயிர் காக்க உதவும் முத்திரை இது. மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற சந்தேகம் தோன்றிய உடனேயே, இம்முத்திரையைச் செய்யத் தொடங்கவும். வலி, படபடப்பு, நெஞ்சு எரிச்சல் குறையும். மருத்துவரை அணுகி சிகிச்சை தொடங்கும் வரை முத்திரையை விடாமல் செய்வது நல்லது.

செய்முறை :
ஆள்காட்டி விரலை மடக்கி, கட்டை விரல் அடிரேகையைத் தொட வேண்டும். கட்டைவிரல் நுனியுடன் மோதிரவிரல் மற்றும் நடுவிரல் நுனியை சேர்த்து வைக்கவும். சுண்டு விரல் நேராக நீட்டி இருக்க வேண்டும்.
பலன்கள் :
படபடப்பு, சீரற்ற சுவாசம், பதற்றம் மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு பிரச்சனைகள் சரியாகின்றன. சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது. ரத்தக் குழாய்களின் அடைப்பை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீர்செய்து, தசைகளை வலுவாக்கும்.
உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். அதிகமாக வியர்த்தல், தலை சுற்றுதல் போன்ற பிரச்சனை இருக்கும்போது, இந்த முத்திரையைச் செய்தால் உடனடி பலன் தெரியும்.
வாயு அதிகமாவதால் ஏற்படும் வயிற்று உப்புசம், வயிற்றைப் பிரட்டுதல், மலச்சிக்கல், மலம் மற்றும் வாயு தங்கியிருந்து வலி ஏற்படுதல் ஆகியவை குணமாகும்.
நெஞ்சு வலி, வாயுப்பிடிப்பு, நெஞ்சு எரிச்சல், குத்துதல் போன்றவை குணமாகும். ஹார்ட் பிளாக் பிரச்சனை இருப்பவர்கள், தொடர்ந்து செய்துவர அறுவைசிகிச்சையைத் தடுக்க வாய்ப்புகள் அதிகமாகும்.
40 வயதைக் கடந்தவர்கள், மன அழுத்தச் சூழலில் இருப்பவர்கள், உடல் பருமனானவர்கள், மூச்சுத் திணறல் உள்ளவர்கள் தினமும் இந்த முத்திரையைச் செய்துவர, இதய நோய் பாதிப்பிலிருந்து முழுமையாக தற்காத்துக்கொள்ள முடியும்.

கடவுள் மீதான நம்பிக்கை, பேச்சு, செயல், உறக்கம்... என எதிலும் மிதமாக இருத்தல், அக்கறையுடனும் விடாமுயற்சியுடனும் ஈடுபடுதல் இதுவே பிராணாயாமத்தில் வெற்றிபெறத் தேவையான தகுதிகள்.
தேர்ந்த குரு
பயிற்சிக்கு ஏற்ற இடம்
முறையான உணவு
தகுந்த காலம்
நாடிகள் பற்றிய அறிவும் தூய்மையும்
உடல் தூய்மை
தொடர்ச்சி பயிற்சி
குரு: அதிக நேரம் மூச்சை நிறுத்திப் பழகவும், வகை வகையான பிராணாயாமங்களில் திறமை பெறவும் சிறந்த குருவின் நேரடிப் பார்வையில் பயிற்சி செய்வது.
ஏற்ற இடம்: மூச்சுப்பயிற்சிக்கு என்று தனியாக ஓர் இடம் வைத்துக்கொண்டால் நல்லது. திறந்தவெளி, இயற்கைக் காட்சிகள் நிறைந்த சூழல், கடற்கரை, ஆற்றங்கரை, வீட்டின் மொட்டைமாடி... என நல்ல காற்றும் வெளிச்சமும் வரும் இடமாகத் தேர்வு செய்யவேண்டும்.
முறையான உணவு: மனதுக்கும் உணவுக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. ஆன்மிகம், யோகம் போன்ற பயிற்சிகளைப் பழகுபவர்களுக்கு மன அமைதி அவசியம். மனதை சாந்தமாக வைத்திருக்க, சாத்வீக உணவு உட்கொள்வதே நல்லது. இதனால், உள்ளேயோ, வெளியேயோ மூச்சைக் கும்பகம் செய்யும்போது, விரும்பும் நேரம் வரை நிறுத்த முடியும்.
எளிதில் ஜீரணமாகக்கூடிய தானிய உணவுகள், சாறுள்ள பழங்கள், பச்சைப் பயறு, காய்கறிகள், எலுமிச்சம்பழச் சாறு, பால், வெண்ணெய், நெய், கைக்குத்தல் அரிசி, சிவப்பரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு மாவால் ஆன உணவுகள் ஆகியவை எடுத்துக்கொள்ளலாம்.
உப்பு, புளிப்பு, காரம், கசப்பு மிகுந்த உணவுகளை உண்பதைத் தவிர்க்கவேண்டும். சமைத்து வெகுநேரம் ஆன, பழைய, கெட்டுப்போன உணவுகளைச் சாப்பிடக் கூடாது. பச்சைக் காய்கறிகள், தேங்காய் போன்றவற்றைச் சாப்பிடலாம். அதிகம் வெயிலில் அலைவதோ, நெருப்புக்கு அருகில் இருப்பதோ கூடாது.
அரை வயிறு உணவும், கால் வயிறு காற்றும், கால் வயிறு தண்ணீரும் உட்கொள்ள வேண்டும். அதிகப் பசியுடனோ, சாப்பிட்ட உடனோ பிராணாயாமம் செய்யக்கூடாது.

தகுந்த காலம்: மார்ச் முதல் ஏப்ரலில் அதாவது வசந்த காலத்தில் பயிற்சியைத் தொடங்கலாம். இலையுதிர் காலமான செப்டம்பர் முதல் அக்டோபர் வரைகூட, பயிற்சியைத் தொடங்க ஏற்ற காலம். பிற்பகலில் காற்றில் சூடு அதிகம் இருப்பதால், பயிற்சிகளை தவிர்த்துவிடலாம். காலை 4 மணியில் இருந்து 6 மணி வரையிலான குளிர்ந்த சமயத்தில் பயிற்சி செய்வது உசிதம்.
நாடிகள் பற்றிய அறிவும் தூய்மையும்: அதிகாலை வெயில் வருமுன் பழகுதல் நல்லது. மாலை சூரியன் மறையும் நேரம் அதாவது 6 மணிக்குச் செய்யலாம்.
முதலில் நாடி சுத்தீயில் தொடங்கும்போது, காலை, நண்பகல், மாலை, நள்ளிரவு என நான்கு வேளைகளில் பழகுவார்கள். இப்படி ஒரு மாதம் செய்து, நாடிகளைத் தூய்மை செய்துகொள்ளலாம்.
உடல் தூய்மை: தினமும் காலையில் எழுந்ததும், பல் துலக்கி, கை, கால்களை நன்றாக கழுவவேண்டும். பிறகு, கடவுளை வணங்கிவிட்டு, பயிற்சியை மேற்கொள்ளவேண்டும்.
உடல் சுத்தம் மனதையும் புத்துணர்ச்சியாக்கும். கோபம், வெறுப்பு, கூடாத உணவு, மாறான நடவடிக்கை, கூடா குணம், நடத்தைக் கோளாறு உள்ளவர்களுக்குப் பிராணாயாமக் கலை கை கூடாது.
தொடர் பயிற்சி: அன்றாட கடமைகளை செய்வது போல், மூச்சுப்பயிற்சியையும் தொடர்ந்து செய்துவந்தால், ஆர்வம் அதிகரிக்கும். தினமும் ஒருவித புத்துணர்ச்சி கிடைப்பதை உணரமுடியும்.
கடவுள் மீதான நம்பிக்கை, உணவு, பேச்சு, செயல், உறக்கம்... என எதிலும் மிதமாக இருத்தல், அக்கறையுடனும் விடாமுயற்சியுடனும் ஈடுபடுதல் இதுவே பிராணாயாமத்தில் வெற்றிபெறத் தேவையான தகுதிகள்.

மூச்சை உள்ளிழுப்பது, கும்பகம் செய்வது, வெளிவிடுவதில் உள்ள ஏற்றத்தாழ்வை வைத்து, பிராணாயாமத்தை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம். அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.
மூச்சை உள்ளிழுப்பது, கும்பகம் செய்வது, வெளிவிடுவதில் உள்ள ஏற்றத்தாழ்வை வைத்து, பிராணாயாமத்தை முதல் நிலை, நடு நிலை, உயர் நிலை என மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.
முதல் நிலை:
இது சாதாரணப் பிராணாயாமம்.
'தாழ்ந்த வகை’ எனப்படும் இந்த முதல் விதத்தில், 12 முறை உள்ளே இழுத்து (பூரகம் செய்து), 48 முறை உள்ளே வைத்திருந்து (கும்பகம் செய்து), 24 முறை மூச்சை வெளியே (ரேசகம்) விடுவது. (ஒரு முறை என்பது, கண் மூடி கண் திறக்கும் கால அளவு. இதை ஒரு மாத்திரை என்றும் கணக்கிடலாம்.)
ஒரு மாதம் வரை திணறல், சிரமம் இல்லாதபடி செய்ய பழகியதும், நடுநிலைக்குப் போகலாம்.
நடு நிலை:
இதில், மூச்சை 16 முறை உள்ளிழுத்து 64 முறை நிறுத்தி, சீராக 32 முறை வெளியே விடலாம். உடம்பில் வியர்வை வழியும். அதைத் துண்டால் துடைத்துக்கொள்ளாமல் வெறும் கைகளாலேயே துடைப்பது நலம்.
இந்தவிதமான பிராணாயாமத்தை மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து பழகிட வேண்டும். இதன் பிறகே உயர்நிலை பிராணாயாமத்தை அடையவேண்டும்.

உயர் நிலை:
இதில் 24 முறை மூச்சை உள்ளே இழுக்கவும். உடனே, 96 முறை உள்ளே நிறுத்திக் கும்பகம் செய்யவும். கும்பகம் செய்தவுடன் 48 முறை வெளிவிடவும். இப்படி ஒழுங்காக உயர்த்தி, திணறல் இன்றியும், மூச்சை விரைவின்றி சீராகவும் இழுக்கவும் விடவும் பழகவேண்டும்.
காலை 4 மணிக்கு அதாவது சூரிய உதயத்துக்கு முன் எழுந்து விரும்பும் தெய்வத்தை வணங்கிவிட்டு, பிராணாயாமத்தை ஆசன நிலையில் பயிற்சி செய்யவேண்டும்.
காலை 11 மணி, மாலை 5 மணி, இரவு 11 மணி என வைத்துக்கொண்டு நான்கு முறை பயிற்சியில் ஈடுபடவேண்டும். ஒரு தடவையில் 80 என்று 320 பிராணாயாமங்கள் ஒரு நாளில் பயிற்சி செய்வதுதான் தீவிர பயிற்சி.
பலன்கள்: பயிற்சியில் நாம் பிரணவ மந்திரத்தை ஜெபிக்குபோது உடலில் வெப்பம் உண்டாகிறது. இது அழுக்குகளைப் போக்கும். புது நிலையில் நாடிகள் தூண்டப்படுகின்றன. சிலருக்கு, உடலின் பல பாகங்களில் வலிகூட ஏற்படலாம். இருந்தாலும் பயிற்சியை முறைப்படி விடாமல் செய்து வரவேண்டும். உடல் வெப்பத்துக்கு ஏற்ப, பால், வெண்ணெய் ஆகியவை பயன்படுத்தவேண்டும். எண்ணெய்க் குளியல் அவசியம் தேவை.

பிராணாயாமத்தை சரியான முறையில் செய்வது முக்கியம். ஆகவே, சரிபார்த்துக் கொள்ளுங்கள். கூடுதல் பலன்களை நிறைவாகப் பெறுங்கள்.
ஒரு மூக்கை முழுவதுமாக மூடிக்கொண்டு, மற்றொரு மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுப்பதோ அல்லது வெளியே விடுவதோ செய்ய வேண்டும். அப்போது அந்த மூக்கு பாதி மூடியிருக்க வேண்டும். அப்போதுதான் உள்மூச்சு-வெளிமூச்சின் அளவு நன்கு நீளும்; மூச்சு மென்மையாகவும் சீராகவும் இருக்கும். இதில் உள்மூச்சையோ-வெளிமூச்சையோ அல்லது இரண்டையுமோ நீட்டச் செய்யலாம். இரு மூச்சு களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியைக் கூட்டலாம்.
நாங்கள் பயிற்சி செய்யும் யோகா மரபிலிருந்து முக்கியமான இரண்டு பிராணாயாமங்களை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். நீங்கள் ஆலோசனை பெறும் யோகா ஆசிரியர் தரும் பிராணாயாமம் இப்பயிற்சியிலிருந்து மாறுபடவும் வாய்ப்புள்ளது.
நாடி சோதனா பிராணாயாமம் :
* வலது கை விரல்களின் துணையோடு, வலதுபுற மூக்குத் துவாரத்தை முழுதாக அடைத்துக் கொள்ளவும்.
* இடது மூக்குத் துவாரம் பாதியளவு திறந்திருக்கட்டும்.

* இடது மூக்கு வழியே மூச்சை வெளியேற்றி, அதே மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும்.
* மூச்சை உள்ளே எடுத்து முடித்ததும் ஓரிரு வினாடிகளுக்குப் பின் இடதுபக்க மூக்கை முழுவதுமாக மூடிக்கொண்டு, வலதுபுற மூக்கைப் பாதியளவு திறந்து அதன் வழியே மூச்சை வெளியே விடவும்.
* ஓரிரு வினாடிகளுக்குப் பின், வலது மூக்கு வழியே மூச்சை உள்ளே இழுக்கவும். மீண்டும் இடது பக்க மூக்குத் துவாரம் வழியே மூச்சை வெளியே விடவும். இது ஒரு சுற்று ஆகும்.
இதுபோல ஆறு சுற்று, பத்து சுற்று அல்லது 12 சுற்று என்று தேவையை அறிந்து செய்த பின்பு வலது கையை மூக்கிலிருந்து எடுத்து விட்டு, சிறிது நேரம் அமைதியாக இருக்கலாம். எப்போது கை வலித்தாலும் கையைக் கீழிறக்கி சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம். பின்பு தொடரலாம். பிராணாயாமத்தை சரியான முறையில் செய்வது முக்கியம். ஆகவே, சரிபார்த்துக் கொள்ளுங்கள். கூடுதல் பலன்களை நிறைவாகப் பெறுங்கள்.

பெண்கள் தொய்வின்றி செய்யும் அன்றாட பணிகளுக்கு மத்தியில் ஒரு சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் பெற செய்ய முடியும்.
பெண்கள் அலவலகத்திலும், இல்லத்திலும் எப்போதும் பணிகளை மேற்கொண்டுதான் இருப்பர். இதில் அவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய எங்கே நேரம் ஒதுக்குவது என்பர். ஆனால் பெண்கள் தொய்வின்றி செய்யும் அன்றாட பணிகளுக்கு மத்தியில் ஒரு சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் பெற செய்ய முடியும்.
காலை முதல் இரவு வரை அனைத்து பணிகளை மேற்கொள்வது எவ்வளவு அவசியமோ பெண்கள் உற்பயிற்சி செய்வதும் மிக அவசியம். உடற்பயிற்சியை பெண்கள் மேற்கொள்வதன் மூலம் உடலும், மனமும் என்றும் இளமையுடன் செயல்படும். சரும பொலிவு, சுறுசுறுப்பு, உத்வேகம், பொறுப்புணர்வு போன்றவை ஏற்படுவதுடன் உடல் வலி, அசதி, தேவையற்ற கொழுப்புகள் சேருவது போன்ற பிரச்சினைகளிலிருந்து பெண்கள் விடுபட முடியும்.
கண்களுக்கு புத்துணர்வு :
அன்றாடம் அதிகாலையில் எழுந்து நள்ளிரவில் படுக்க செல்லும் பெண்மணிகள் கண்களுக்கு புத்துணர்வை தரும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் அதிகம் மெனக்கெட வேண்டாம். நம் கையே நமக்கு உதவி. நமது இரு உள்ளங்கைகளையும் இரு கண்கள் மீது வைத்து மூடி அழுத்தி கொள்ளவும். ஐந்து வினாடிகள் கழித்து கைகளை எடுத்து விடவும். இது போன்று ஐந்து (அ) ஆறு முறை தொடர்ந்து செய்யவும். இதன் பின் வெதுவெதுப்பான நீரில் நனைத்த டவலை கொண்டு கண்களை மெதுவாக மசாஜ் செய்யவும். பிறகு குளிர்ந்த நீரால் நனைத்த டவலை கொண்டு கண்களை மசாஜ் செய்யவும். இதன் மூலம் கண்களின் அயர்வு அகன்று புத்துணர்வு பெருகும்.
முழங்காலுக்கு வலுசேர்க்கும் மாடிப்படி ஏறுதல் :
தினந்தோறும் மாடிப்படிகளில் ஏறுதல் மூலம் நமது கலோரி குறிப்பிட்ட அளவு எரிக்கப்படுகிறது. அதுபோல் மாடிப்படிஏறுதல் மூலம் முழங்காலும் நல்ல வலிமை பெறும். மாடிபடி ஏறுதலை சற்று வேகமாக மேற்கொண்டால் அது மிக சிறந்த உடற்பயிற்சி. மூட்டுவலி உள்ள பெண்கள் இம்முயற்சியை மேற்கொள்ள வேண்டாம்.

குதிகால்களுக்கு வலுசேர்க்கும் உடற்பயிற்சி :
பெண்கள் ஒரு சேரில் அமர்ந்தவாறோ (அ) படுத்து கொண்டோ இந்த உடற்பயிற்சியை செய்யலாம். சேரில் அமர்ந்து கால்களை நேராக இருக்க செய்து பாதத்தின் பின்புறம் குதிகால்களை மட்டும் மேல் தூக்கி இறக்கவும். இது போல் ஒரு நிமிடம் செய்தாலே மேலும் பல தசைகள் நல்ல வலுப்பெறுவதுடன், குதிக்கால்களின் வலி குறையும்.
பெண்களின் கைவிரல்களுக்கான சிறுபயிற்சி :
பெண்கள் அலுவலகத்திலும் சரி, வீட்டிலும் சரி, கைகளை பயன்படுத்தியே அதிகப்பணிகளை மேற்கொள்வர். இதன் மூலம் கைவிரல்கள் வலுவிழந்து, அவ்வப்போது வலி மற்றும் பிடிப்புகளை ஏற்படுத்தும். இதனை போக்க கைகளை அகல விரித்து விரல்களை மட்டும் நன்கு மடிக்கவும். விரல்களின் அடிப்பகுதியை தொடும் அளவிற்கு விரல்களை மடக்கவும். இப்படியே 30 வினாடி இருக்கவும். பின் விரல்களை விரிக்கவும். இது போல் நான்கு முதல் ஐந்து முறை செய்யும் போது அசைவுகள், உறுதித்தன்மை மேம்படும்.
முதுகெலும்புக்கு வலுசேர்க்கும் பயிற்சி :
சம்மணமிட்டு நேராக அமர்ந்து கொள்ளவும். இடது கையை வலது முட்டி பகுதியில் வைத்து கொண்டு வலது கையை எடுத்து பின்புற தரையில் வைக்கவும். பின் அதுபோல் வலது கையை இடது முட்டி பகுதியில் வைத்து இடது கையை பின்புற தரையில் படும் படி வைக்கவும். இதன் மூலம் முதுகெலும்பு சுழல வைக்கப்படுகிறது. இந்நேரத்தில் மூச்சு நன்றாக இழுத்து விட்டு பிறகு சாதாரண நேர் நிலைக்கு வரவும். இதன் மூலம் பெண்களின் இடுப்பு ஓரப்பகுதிகளில் சதை போடாது. எப்போது மெல்லிய இடுப்பாகவும், முதுகெலும்புகள் வலுவாகவும் இருக்கும்.
கழுத்திற்கு ஏற்ற பயிற்சி :
பெண்களின் கழுத்து பகுதி அழகுடன் திகழவும், கழுத்து எழும்புகளில் வலி ஏற்படாமல் இருக்கவும் இந்த பயிற்சி உதவுகிறது. நேராக நின்று தலையை மெதுவாக சுழற்றவும். இது போல் வலது, இடது என மாறி மாறி கழுத்தை மெதுவாக சுழற்றும் போது கழுத்து தசைகள் வலுப்பெற்று நல்ல வனப்புடன் காட்சி தரும்.

சீதளி பிராணாயாமத்தை தொடர்ந்து செய்து வந்தால் உடல் குளிர்ச்சியடையும். சுவாசிக்கும் மூச்சுக்காற்றை உடலாலும் மனதாலும் ஆழமாக உணர முடியும். ஆழ்ந்த அமைதியை, மகிழ்ச்சியைப் பெறலாம்.
இப்போது சீதளி பிராணாயாமம் செய்யப்போகிறோம். வசதியான நிலையில் உட்கார்ந்துகொள்ளுங்கள். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இந்தப் பிராணயாமத்தை இடது, வலது மற்றும் நடுப்பகுதி என மூன்று நிலைகளில் செய்யப்போகிறோம்.
கைகளை இடது கால் முட்டியின் மேல் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்துக்கொள்ள வேண்டும். தலையைக் குனிந்த நிலையில் வைத்து, நாக்கை நீட்டி உருட்டிக்கொள்ளவும். உருட்டிய நாக்கு மூலம் (வாய் வழியாக) மூச்சை உள்ளிழுத்தபடியே தலையை மேலே கொண்டுசெல்லவும்.
மூச்சை நன்றாக இழுத்து முடித்ததும், ஓரிரு விநாடிகளுக்குப் பின் நாக்கை மடித்துக்கொண்டு வாயை மூடிக்கொண்டு மூக்கு வழியாக முச்சை வெளியேவிட்டபடி தலையை பழைய நிலைக்குக் கொண்டுவரவேண்டும். இதேபோல கைகளை வலது முட்டியின் மேல் வைத்து செய்ய வேண்டும். பின்னர், வலது கையை வலது மூட்டின் மேலும், இடது கையை இடது மூட்டின் மேலும் வைத்து செய்ய வேண்டும்.

நாக்கு லேசாக வெளியே வந்தால் போதும். மூச்சு உள்ளிழுக்கும்போது சிறிது சத்தம் வரலாம். முடிந்தால் கண்களை மூடிக்கொள்ளுங்கள். மூன்று நிலைகளிலும் செய்து முடித்தவுடன், சிறிது நேரம் அமைதியாக இருக்கலாம். தேவையெனில், முதுகுப் பக்கம் படுத்து ஓய்வு எடுக்கலாம்.
பலன்கள்: உடல் குளிர்ச்சியடையும், மனம் அமைதியாகும். சுவாசிக்கும் மூச்சுக்காற்றை உடலாலும் மனதாலும் ஆழமாக உணர முடியும். நிறைவான உணர்வு ஏற்படும். ஆழ்ந்த அமைதியை, மகிழ்ச்சியைப் பெறலாம்.
ஆசனத்தை முடித்தவுடன், சிறிது நேரம் வசதியான நிலையில் இருந்து ஓய்வு எடுக்கலாம். அது, மூச்சை இயல்பு நிலைக்குக் கொண்டுவர உதவும்.
குறிப்பு: நாக்கை உருட்ட முடியவில்லை என்றால், நாக்கை லேசாக உள்ளிழுத்தபடி, இரு பல் வரிசைகளுக்கு இடையில் வைத்துக்கொண்டு சீதளியின் தலை அசைவு, மூக்குவழி வெளிமூச்சு ஆகியவற்றைச் செய்யலாம். இது சீத்காரி பிராணாயாமம் எனப்படும். இதற்குப் பிறகு கைகளை கோர்த்துக்கொண்டு சிறிது நேரம் அமைதியாக இருக்கலாம்.

முதுகு வலி, தோள்பட்டை வலியால் அவதிப்படும் பெண்கள் இந்த அர்த்த சலபாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை விரைவில் காணலாம்.
பெண்களுக்கான ஆசனங்களில் நாம் செய்த செய்கின்ற பிராணாயாமம் மற்றும் அனைத்து ஆசனங்களும், அலுவலகம் செல்லும் பெண்களின் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளையும் வெகுவாகக் குறைத்து, சரிசெய்யும் சக்திகொண்டவை.
செய்முறை :
விரிப்பில் புஜங்காசனத்துக்குப் படுத்ததுபோல, படுக்கவும். கைகளை உடலுக்கு அருகில் வைக்கவும். இந்த நிலையில் இருந்து, மூச்சை உள்ளே இழுத்தபடியே முதலில் இடது காலை மேல்புறமாகத் தூக்கவும். ஓரிரு விநாடிகளுக்குப் பிறகு மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்கு வரவேண்டும். இதேபோல், வலது காலைத் தூக்கி இறக்கவும். இது ஒரு சுற்று. இதுபோல ஆறு முறை செய்ய வேண்டும். இடையில் மூச்சுவாங்கினால், கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்.
பலன்கள்: பலவீனமான கீழ் முதுகு பலப்படும். கால்களைப் புவியீர்ப்பு விசைக்கு எதிராகத் தூக்குவதால் அதுவும் ஓரளவு பலமடையும்.

தினமும் 40 நிமிடங்கள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிராண முத்திரை செய்தால், பார்வைத் திறன் மேம்படும். இப்போது இந்த முத்திரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சுண்டு விரல் - நீர், மோதிர விரல் - நிலம், கட்டை விரல் - நெருப்பு. இந்த மூன்று விரல்களும் ஒன்றாகச் சேரும்போது, நிலம் மற்றும் நீரை, நெருப்பால் சமன் செய்கிறோம். இந்த செயல்பாட்டை உடலில் சிறப்பாக நடத்துவதுதான் பிராண முத்திரையின் வேலை.
செய்முறை :
சுண்டு விரல், மோதிர விரல், கட்டை விரல் என மூன்று விரல்களின் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக வைத்திருப்பது மிக முக்கியம்.
பிராண முத்திரையைச் செய்யும்போது, கை நடுக்கம் ஏற்பட்டால், செய்வதை நிறுத்தவும். பிராண சக்தி அதிகமாகிவிட்டதை கைநடுக்கத்தின் மூலம் உடல் உணர்த்துகிறது. அதீத இயக்கங்கள் Aggressive behaviour) கொண்டவர்கள், இதை செய்யக் கூடாது. வயதானவர்கள் இரவு 8 மணிக்கு மேல் இந்த முத்திரையைச் செய்ய வேண்டாம். தூக்கம் கலைந்துவிடும்.

பயன்கள் :
இந்த முத்திரையை 10 நிமிடங்கள் செய்தால், உடலில் உள்ள உயிர் சக்தி (Energy level) அதிகரிக்கும். பிரச்னைகளின் வீரியம் குறையும். இடுப்பு, முதுகு வலிகளால் அவதிப்படும் போது, இந்த முத்திரையைச் செய்துவந்தால், வலியின் வீரியம் குறைந்து, நாளடைவில் குணமாகும்.
கண்ணாடி அணிந்திருப்பவர்கள், தினமும் 40 நிமிடங்கள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிராண முத்திரை செய்தால், பார்வைத் திறன் மேம்படும். கிட்டப்பார்வை, தூரப் பார்வை பிரச்னைகள் சரியாகும். தொடர்ந்து 40 நிமிடங்கள் செய்ய முடியவில்லை எனில், ரிலாக்ஸ் செய்துகொண்டு மீண்டும் செய்யலாம். 10 நிமிடங்களாகப் பிரித்தும் செய்யலாம்.
சிலருக்கு இந்த முத்திரை செய்யும்போது கண் எரிச்சல், கண்களில் நீர் வழிதல், கண் பொங்குதல் போன்ற பிரச்னைகள் வரலாம். ஒரு பஞ்சை, சாதாரண நீரில் நனைத்து, கண்களின் மேல் வைத்துக்கொள்ளவும். பிறகு, இளஞ்சூடான நீரில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் வைக்க வேண்டும். இப்படி மூன்று நிமிடங்கள் வரை செய்ய, கண் பிரச்னைகள் சரியாகும். இரவு நேரம், பௌர்ணமி நிலவை 15 நிமிடங்கள் பார்த்தாலும் இந்த மூன்று பிரச்னைகளும் சரியாகிவிடும்.

இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் உடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேறும். கெட்ட கொழுப்புகள் கரையும். இப்போது இந்த முத்திரையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, வெளிப்புறம் பூசும் சரும கிரீம்கள் என அனைத்திலும் மறைந்து, நிறைந்திருக்கின்றன நச்சுக்கள். உணவையே மருந்தாகச் சாப்பிட்டதுபோய், மருந்தையே உணவாகச் சாப்பிடும் காலத்தில் இந்த நச்சுக்கள் கல்லீரல், சிறுநீரகம் முதல் சின்ன சின்ன அணுக்கள் வரை தங்கியிருக்கின்றன. இந்த நச்சுக்களை அகற்றும் சுலபமான வழி, நம் விரல்களிலேயே உள்ளது. அதுதான் கழிவு நீக்க முத்திரை.
கட்டைவிரல் நுனியால் மோதிர விரலின் அடிப் பகுதியில் உள்ள ரேகையைத் தொட்டு அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இது, நிலத்தைத் தீயால் அழிக்கும் முறையாகும்.
காலை, மாலை இருவேளையும் 5 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம். முத்திரை செய்த பிறகு, கட்டாயம் நீர் அருந்த வேண்டும்.
முத்திரை செய்யும் காலங்களில் நீர் அதிகமாகக் குடிப்பதால், கழிவுகள் எளிதில் வெளியேற்றப்படுகின்றன. வாய் துர்நாற்றம், வயிற்றுப்போக்கு போன்றவை வராமலும் தடுக்கிறது.
புதிதாகச் செய்பவர்களுக்கு, சில நாட்களுக்கு மட்டும் பசி எடுக்காது. எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது. வயிறுமுட்ட, சாப்பிடக் கூடாது.
முதன் முதலாகச் செய்பவர்கள், மூன்று வாரங்கள் வரை செய்யுங்கள். பிறகு, மாதத்துக்கு மூன்று நாள் செய்தாலே போதும்.
மருந்துகளை உட்கொள்வோர், இந்த முத்திரையைச் செய்தால், அதிகமாக நீர் அருந்த வேண்டியது மிக அவசியம்.
சிலருக்கு இரண்டு மூன்று முறை வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இதற்கு, இளநீர், எலுமிச்சைச் சாறு, மோர், வெந்நீர் குடித்தாலே போதும்.
பலன்கள் :
காபி, டீ, இனிப்பு உணவுகளுக்கு அடிமையானவர்கள் தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்தால், அந்தப் பழக்கத்திலிருந்து எளிதில் வெளிவரலாம்.
உடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேறும். கெட்ட கொழுப்புகள் கரையும். முடி வளர்ச்சி சீராக இருக்கும். சருமத்தில் பொலிவுகூடும். சீரற்ற மாதவிலக்குப் பிரச்னை தீரும். உடலும் மனமும் ஆரோக்கியமாகும்.

உடற்பயிற்சி உங்கள் உடலின் முதுகுத் தண்டில் தொடங்கி, முக்கிய எழுப்பு இணைப்புகளின் செயல்திறனையும், ஆயுள் காலத்தையும் அதிகரிக்க செய்கிறது.
உடற்பயிற்சி என்பது வெறும் உடல் எடையைக் குறைக்க மட்டும்தானா என்றால் அதுதான் இல்லை! வாழ்நாள் முழுவதும் உடற்பயிற்சியை நீங்கள் தினசரி பழக்கமாக்கிக் கொள்வதன் மூலம், உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். நாற்பது வயதுக்கு பிறகு உங்கள் இதய ரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும் கொழுப்பு, தொடர்ச்சியான உடற்பயிற்சியின் காரணமாக இதயத்தில் படிவதில்லை.
கொழுப்பு படியாத காரணத்தால் உங்களை உயர்ரத்த அழுத்தம் தாக்குவதில்லை. இதனால் உங்களுக்கு இதயநோய், ஹார்ட் அட்டாக், வால்வுப் பிரச்சனை வருவதில்லை. முக்கியமாக உங்கள் தாத்தா, அப்பா ஆகியோர் இதயநோயின் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தால், அவர்கள் விட்டுச்செல்லும் பரிசாக, டி.என்.ஏ வழியாக இடம்பெயரும் பாரம்பரிய தொடர்ச்சியான இதயநோயும் உங்களை தொடர வாய்ப்பே இல்லை!
அடுத்து கொழுப்பு பிரச்சனை இல்லாமல் போவதால் ‘பேட்டி லங்ஸ்’ எனும் தடித்த நுரையீரல் பிரச்சனையோ, ‘ஆஸ்மேட்டிக் லிவர்’ எனப்படும் மூச்சுப்பிரச்சனையோ இல்லாமல் வாழ்வீர்கள்.

உடலின் முக்கியமான எலும்பு பாகமான மண்டையோடும், ஸ்பைனல் எனப்படும் முதுகெலும்பும் மிக முக்கியமானவை. இதில் ஸ்பைனலை ‘ஸ்பைனல் கார்டு’ என்றே அழைக்கிறோம்.
தரையில் நடத்திசெல்ல அல்லது கால்களால் நடந்து செல்ல பாதுகாவலனாக இருப்பது ஸ்பைனல் கார்டு. அப்படிப்பட்ட முதுகுத்தண்டில் டிஸ்குகள் தேய்மானம் என்பது தனி மனிதவாழ்க்கையை சவாலாக முடக்கி விடுகிறது. போதிய உடற்பயிற்சி இன்மையால் முதுகுத்தண்டானது, முதுமைக் காரணத்துக்கு முன்பாகவே, தனது செயல்திறனை இழக்க ஆரம்பிக்கிறது.
மேலும் இடும்பு எழும்பின், பந்து கின்ன மூட்டுக்களும், பாத எழும்புகளும், தோல்பட்டை மூட்டுக்களும், கழுத்து எழும்பும் பாதிக்கப்படுவதற்கு உடற்பயிற்சி இன்மையே காரணம். உடற்பயிற்சி உங்கள் உடலின் முதுகுத் தண்டில் தொடங்கி, முக்கிய எழுப்பு இணைப்புகளின் செயல்திறனையும், ஆயுள் காலத்தையும் அதிகரிக்க செய்கிறது.

பஸ்சிமோத்தாசனம் நீரிழிவை தடுப்பதோடு ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தருகிறது. இப்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
நோய்கள் வந்த பின் அவற்றை கட்டுப்படுத்த போராடுவதை வித நோய் வரும்முன் தடுப்பதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பஸ்சிமோத்தாசனம் நீரிழிவை தடுப்பதோடு ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தருகிறது. உட்கார்ந்த நிலையிலான ஆசனங்களில் நீரிழிவுக்கு மிகவும் பயன்தரக்கூடிய ஒரு ஆசனம் இது என்றும் யோகாசன வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பஸ்சிமோத்தனம் செய்யும் போது, குடல்கள், பித்தப்பை, இரைப்பை முதலியன நன்றாக அமுக்கப்படுகின்றன. உடலின் உயிராற்றலை வலுப்படுத்தும் முதுகெழும்பு, முதுகு நரம்பு வளைத்து இழுக்கப்படுகிறது. இதனால் நீரிழிவு குறைபாடு உண்டாவது தடுக்கப்படுகிறது. வயிற்று வலி, தலைவலி, மூலக்கடுப்பு, இடுப்பு வலி, முதுகுவலி, பலவீனம் முதலியவை நீங்குகிறது.
செய்முறை :
விரிப்பில் மல்லாந்து படுத்த நிலையில் இரு கால்களை ஒன்றாகச் சேர்த்துப் படுத்த நிலையில் வைத்துக் கொள்ளவும். பின் இரு கைகளை தலைப் பக்கம் நீட்டி காதுகளுடன் ஒட்டியவாறு சுவாசத்தை உள்ளிழுத்து ஒரே முயற்சியில் இடுப்பு நிலைக்கு வரவும். பின் இரு கைகளில் உள்ள ஆள்காட்டி விரலினால் கால்களின் பெருவிரலை இறுக்கிப்பிடிக்க முயற்சிக்கவும்.

விரல்கள் எட்டவில்லையாயின், கால்களை உள்ளே இழுத்துப் பெருவிரலைப் பிடித்திடவும். பின் முகத்தால் கால்களின் மூட்டுகளைத் தொட முயற்சிப்பதோடு, வயிற்றை மூச்சை வெளியேவிட்ட நிலையில் எக்கவும். கைகளின் இரு மூட்டுக்களும் படத்தில் காட்டியவாறு தரையைத் தொட முயற்சிக்கவும். ஒரு முறைக்கு 10 வினாடிகள் செய்யவும். 2 முதல் 4 முறை முயற்சிக்கவும். தலை கொஞ்சம் கொஞ்சமாய் குனியச் செய்யவும். ஒவ்வொறு முறைக்கும் சற்று இளைப்பாறி மீண்டும் செய்யவும்.
சிலருக்கு கால் விரல்களை கைகளால் தொட முடியாது. பொதுவாகவே முதுகெழும்பு கட்டை பாய்ந்து விட்டிருப்பதால் தான் இப்படி முன்னோக்கி குனிய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் பழக பழக கால் விரல்களை கைகளால் பிடித்து விடலாம். சிலருக்கு கால் விரல்களை பிடிக்க முயலும் போது முழங்கால் தூக்கிக் கொள்ளும்.
ஆனால் முழங்கால் மடிக்காமலேயே கூடுமான வரை குனிந்து தொட முயற்சிக்க வேண்டும். இப்படி பழகி வரும் போது தொடையில் உள்ள தசைகளும், நரம்புகளிலும் வலி ஏற்படுவதுண்டு. ஆனால் சில நாட்களில் சரியாகி விடும். சிலருக்கு முழங்காலில் முகத்தை கொண்டு வைக்க முடியாது. இதுவும் விடா முயற்சியுடன் பழகும் போது சரியாகி விடும்.
இந்த ஆசனத்தை வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் செய்யக்கூடாது.
பலன்கள் :
வயிற்றுப் பகுதித் தசைகள் பலம் பெறும். கல்லீரல், மண்ணீரல், இரைப்பை, கணையம், மூத்திரக்காய் இவைகள் புத்துணர்ச்சி பெற்று தமது கடமைகளைச் சரிவரச் செய்வதோடு, இவ்வுறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவாயினும் முற்றிலும் நீங்கும். பசியின்மை நீங்கும். நீரழிவு நோய் முற்றிலும் நீங்கும். இளமை மேலிடும். பெண்கள் இவ்வாசனத்தையும், சர்வாங்காசனத்தையும் செய்து வந்தால் மாதாவிடாயின்போது உண்டாகும் இடுப்பு வலி, வயிற்று வலி, மலட்டுத்தனம் முதலியன நீங்கும்.

கழுத்துவலி, முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் மச்சாசனதை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். இப்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
செய்முறை :
பத்மாசன நிலையில் அமர்ந்துகொண்டு இரண்டு கைகளையும் பின்னால் கொண்டுபோய் முழங்கைகளைத் தரையில் ஊன்றி லேசாக உச்சந்தலையால் தரையைத்தொட்டு உடலை மேல்நோக்கி வளைத்து, கையால் அந்தந்தப் பக்கத்து கால் கட்டை விரல்களைப் பிடிக்கவும்.
பத்து வினாடிகள் இயல்பான சுவாசத்தில் இருந்து ஆசனத்தைக் கலைக்கவும். இதன்படியே கால்களை மாற்றிப்போட்டு செய்ய வேண்டும். ஒரு முறைக்கு 5 முதல் 15 வினாடியாக 3 முதல் 4 முறை செய்யலாம்.
அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கழுத்துப்பிடிப்பு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது. வலப்பக்கமோ அல்லது இடப்பக்கமோ சாயாமல் சரியாக உச்சந்தலை தரையில் வைக்கப்பட வேண்டும்.

பயன்கள் :
கண், காது, மூக்கு, வாய், மூளை பகுதிகளுக்கு நல்ல இரத்த ஓட்டம் கிடைப்பதால் அவை நன்கு சீராக இயங்கும்.
தொண்டைச் சதை (டான்சில்) நீங்கும். கழுத்துவலி நீங்கும். நல்ல நினைவாற்றல் பெருகும். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.
ஆஸ்துமா நீங்குவதுடன் நாள்பட்ட மார்புச்சளி நீங்கவும் இது மிகவும் சிறப்பான ஆசனமாகும்.
நீரிழிவு, நுரையீரல் நோய்கள், தைராய்டு, பாரா தைராய்டு முதலியவை சரியாகும்.
உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். மேனிக்கு மெருகூட்டும். இவ்வாசனம் பிராண சக்தியை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது.
வயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களும், கர்ப்பிணிப் பெண்களும் இவ்வாசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.