என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் கைகள், தோள்பட்டை, மணிக்கட்டு மற்றும் அடிவயிற்று தசைகள் பலமடையும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    உத்தித என்றால், உயர்த்துதல் அல்லது துாக்குதல் என்று பொருள். பத்மாசன நிலையில் உடலை உயர்த்துவதால் இப்பெயர் பெற்றது.

    செய்முறை :

    விரிப்பில் பத்மாசனத்தில் அமர வேண்டும். உள்ளங்கைகளை இரண்டு தொடைப்பகுதிக்கு பக்கத்தில் ஒட்டியவாறு கீழே வைக்க வேண்டும். இப்போது மூச்சை இழுத்துக் கொண்டே, புட்டப்பகுதியை முழங்கை வரை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும்.

    இந்நிலையில் முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். சிறிது நேர ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், ஆசனத்தை விலக்கி சாதாரண நிலைக்கு வந்து, பின் கால்களை மாற்றி செய்ய வேண்டும்.

    நான்கு முறை செய்யலாம். ஒவ்வொரு முறையும், 30 வினாடி முதல், 45 வினாடிகள் வரை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.



    குறிப்பு: வலுவிழந்த மணிக்கட்டு உடையவர்கள் தவிர்க்க வேண்டும்.

    பயன்கள் :

    1. தோள்பட்டை, மணிக்கட்டு மற்றும் அடிவயிற்று தசைகள் பலமடைகின்றன.

    2. ஜீரண சக்தி நன்கு கிடைக்கிறது.

    3. குடல் இறக்கம், வாயுத் தொல்லை தடுக்கப்படுகிறது.

    4. உடல் எடை குறைகிறது.

    5. கைகளுக்கு நன்கு பலம் கிடைக்கிறது.
    தோப்புக்கரணம் போடுவதால் உடலுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. தோப்புக்கரணம் போடுவதால் குண்டலினி சக்தி கிடைக்கிறது. இதனால் உடல் சுறுசுறுப்பு அடைகிறது.
    நமது முன்னோர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் நமக்கு பல்வேறு நன்மைகளை செய்து கொடுத்து இருக்கிறார்கள். முன்னோர்களின் செயல்பாடுகள், உணவு முறை பழக்க வழக்கம் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அர்த்தம் உடையதாக இருந்தது. அவற்றில் மிக முக்கியமானது தோப்புக்கரணம். அந்த காலத்தில் சிறியவர்கள் தவறு செய்து விட்டால் உடனே கட்டையை எடுத்து அடிக்க மாட்டார்கள்.

    தவறை திருத்த வேண்டும் என்ற நோக்கத்தில் என்ன தண்டனை கொடுப்பார்கள் தெரியுமா? வலது கையை வைத்து இடது காதையும் இடது கையை வைத்து வலது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுந்திருக்க செய்யும் தோப்புக்கரணத்தை தான் தண்டனையாக தருவார்கள். நான் போதும் என்று சொல்லும் வரை தோப்புக்கரணத்தை நிறுத்தக்கூடாது என்பார்கள்.

    வீட்டில் மட்டுமல்ல பள்ளிகளிலும் நமது ஆசிரியர் பெருமக்கள் தோப்புக்கரணத்தை தான் மாணவர்களுக்கு தண்டனையாக தருவார்கள். இன்றைய பல பேருக்கு இந்த தோப்புக்கரணத்தை பள்ளியிலோ அல்லது வீட்டிலோ போட்ட ஞாபகம் இருக்கத்தான் செய்யும். ஆனால் இளைய தலைமுறையினர் பலர் தோப்புக்கரணம் தண்டனையை அனுபவித்து இருக்கமாட்டார்கள். விநாயகர் கோவில்களில் சாமி கும்பிடுபவர்கள் விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு வணங்குவது உண்டு.



    தோப்புக்கரணம் போடுவதால் உடலுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. தோப்புக்கரணம் போடுவதால் குண்டலினி சக்தி கிடைக்கிறது. இதனால் உடல் சுறுசுறுப்பு அடைகிறது.

    இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொருவரும் பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி உள்ளனர். எனவே ஒவ்வொருவரும் தினமும் காலையிலும் மாலையிலும் தோப்புக்கரணம் போடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் உடலிலும் உள்ளத்திலும் நல்ல மாற்றம் ஏற்படுவது தெரிய வரும். நாம் தொடங்கிய இந்த தோப்புக்கரணம் பழக்கத்தை இன்று அடியோடு மறந்து விட்டோம்.

    ஆனால் வெளிநாடுகளில் சூப்பர் பிரெய்ன் யோகா என்ற பெயரில் தோப்புக்கரணம் அழைக்கப்படுகிறது.உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்ல மாற்றத்தை தரும் இந்த தோப்புக்கரணத்தை வெளிநாட்டு டாக்டர்கள் மருத்துவ சிகிச்சையாகவும் பயன்படுத்துகிறார்கள்.

    எனவே நாம் ஒவ்வொருவரும் தினமும் காலையில் பத்து முறையாவது தோப்புக்கரணம்போடுவோம். மாணவ, மாணவிகள் கட்டாயம் தோப்புக்கரணம் போட்டால் அவர்களது மூளை சுறுசுறுப்பாகி படிப்பது மனதில் நன்கு பதியும். கல்வியில் கொடி கட்டி பறக்கலாம். மனதில் புதிய சிந்தனையும் பிறக்கும். எனவே இன்றே தோப்புக்கரணத்தை போட தயாராவோம்.

    இந்த ஆசனம் இடுப்பு பகுதியில் உள்ள அதிகளவு கொழுப்பை குறைத்து இடுப்பை வலுவடையச்செய்யும். இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    செய்முறை :

    விரிப்பில் நேராக நின்று, 3 அடி இடைவெளியில், இரண்டு கால்களையும் விலக்கி நிற்க வேண்டும். வலது காலை வலது பக்கம் திருப்ப வேண்டும். கைகளை பக்கவாட்டில் திருப்ப வேண்டும். இப்போது மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே, வலது காலை ‘எல்’ வடிவில் மடக்க வேண்டும்.

    பின் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே வலது பக்கம் சாய்ந்து, வலது கையின் விரல்களை, வலது கால் விரல்களுக்கு இணையாக அருகில் வைக்க வேண்டும்.
    பின் மூச்சை இழுத்துக் கொண்டே, இடது கை, இடது காதை அணைத்தவாறு, முழங்கையை மடக்காமல் இருக்க வேண்டும்.



    இப்போது முகத்தை சற்று மேல் நோக்கி திருப்ப வேண்டும். இந்த நிலையில், ஆழ்ந்த சுவாசத்தில் சிறிது நேரம் இருந்து, பின் மூச்சை இழுத்துக் கொண்டே சாதாரண நிலைக்கு வர வேண்டும். அடுத்து இதேபோன்று, கால்களை மாற்றி செய்ய வேண்டும். கைகளை தரையில் வைத்து செய்ய முடியாதவர்கள், சற்று உயரத்திற்கு செங்கல் போன்று ஏதாவது வைத்து, அதன் மேல் கைகளை வைத்து செய்யலாம்.

    பயன்கள் :

    1. இடுப்பு சதை பகுதி குறையும்.
    2. ஜீரண மண்டலம் நன்கு தூண்டப்பட்டு, கழிவுகள் முறையாக வெளியேற்றப்படும்.
    3. சுவாச மண்டலம் நன்கு வேலை செய்யும்.
    இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் மூட்டுப்பகுதி நன்கு வலுவடையும். இப்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    செய்முறை :

    விரிப்பில் நேராக நிற்க வேண்டும். பார்வையை ஒரு இடத்தில் பதித்து, இடது கையை மேலே உயர்த்தி, இடது கன்னத்தை ஒட்டியவாறு வைக்க வேண்டும்.  பின் வலது காலை பின்புறம் மடக்கி, வலது கையால் கெண்டைக் காலை பிடிக்க வேண்டும்.

    பின் மூச்சை இழுத்துக் கொண்டே, வலது காலை பின்புறமாக மேலே உயர்த்தும் போது, இடது கையை கீழே இறக்கி, இடது தோள்பட்டைக்கு முன்புறம் நீட்ட வேண்டும். பின் இடது கையின் கட்டை விரல் நுனியும், ஆள் காட்டி விரல் நுனியும் சேர்ந்திருக்க வேண்டும்.

    பின் சீரான சுவாசத்தில் சிறிது நேரம் இருந்து, மூச்சை வெளிவிட்டுக் கொண்டே காலை விலக்கி பின், இடது கையை விலக்கி சாதாரண நிலைக்கு வர வேண்டும். பிறகு காலை மாற்றி செய்ய வேண்டும். இரண்டு பக்கமும், இரண்டு முறை செய்யலாம்; ஒவ்வொரு முறையும், 20 முதல் 30 வினாடிகள் செய்யலாம்.



    பயன்கள் :

    1. மூட்டுப்பகுதி நன்கு வலுவடைகிறது
    2. மனம் ஒரு நிலை அடைந்து தியான சக்தி தூண்டப்படுகிறது
    3. ஜீரண சக்தி அதிகமாகிறது
    4. ஜணன உறுப்புகள் நன்கு தூண்டப்பட்டு சரியாக இயங்குகிறது
    5. நரம்பு சுருள் பிரச்சனை சரியாகிறது.
    ஆதி என்பது எல்லாவற்றுக்கும் முந்தையது, பழைமையானது. இந்த முத்திரை ஆரம்ப காலம் முதலே செய்யப்பட்டுவருவதால் ‘ஆதி முத்திரை’ என்று பெயர் பெற்றுள்ளது.
    செய்முறை :

    கட்டை விரலை மடக்கி, சுண்டு விரலின் மேட்டுப் பகுதியில் வைத்து அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரலை மடக்கி, கட்டை விரலைச் சுற்றிப் பிடிக்க வேண்டும்.

    விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டு, நேராக அமர்ந்தோ, நாற்காலியில் நேராக அமர்ந்து பாதம் தரையில் பதியும்படியோ இரு கைகளாலும் இந்த முத்திரையைப் பிடிக்க வேண்டும். தினமும், 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.



    பலன்கள் :

    நுரையீரலின் மேல்பகுதிக்கு ஆக்சிஜன் செல்ல உதவுகிறது.

    முறையற்ற சுவாசம் சரியாகும். அனைத்து சுவாசப் பிரச்சனைகளும் தீரும்.

    தலை, கழுத்து, தோள்பட்டை, கைகள் மற்றும் விரல்களில் வரும் இறுக்கம் தளர்கிறது.

    மூளை மற்றும் தொண்டைப் பகுதிக்கு ரத்த ஒட்டம் சீராகப் பாயும். நரம்புகளைப் பலப்படுத்தும்.

    வயிற்றுக்கோளாறுகள், செரிமானப் பிரச்சனை, உணவு உண்ட பின் மலம் கழித்தல், அடிக்கடி மலம் கழித்தல் சரியாகும்.

    தோல், நாக்கு, கண், மூக்கு, காது ஆகிய ஐந்து புலன்களுக்கும் இழந்த சக்தியை மீட்டுத் தரும்.
    உடலை வளைத்து, நிமிர்த்திச் செய்யும் இரண்டு நிமிட ஆசனம் இது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் முதுகு வலி சரியாகும். அடிமுதுகுவலி, நடு முதுகுவலி குறையும்.
    உடலை வளைத்து, நிமிர்த்திச் செய்யும் இரண்டு நிமிட ஆசனம் இது. உடலின் வளைவுத்தன்மையை மேம்படுத்தும்.

    செய்முறை :

    தரையில், மண்டியிட்டு, பாதத்தை ஆங்கில வி (V) போல விரித்து, பாதம்மேல் உட்கார வேண்டும். உடல் நேராக இருக்கட்டும். இது, வஜ்ராசன நிலை. இப்போது, கண்களை மூடியபடி, கைகளை மேலே உயர்த்தி, முன்புறம் வளைந்து, நெற்றி, கைகளைத் தரையில் பதிக்க வேண்டும். பின்னர், கண்களைத் திறந்து, கையைத் தரையில் ஊன்றி முட்டி, மற்றும் கைகளால் உடலைத் தாங்கும்படி இருக்க வேண்டும்.

    இப்போது, இடுப்பை உயர்த்தி, பாதம் மற்றும் கைகளால் உடலைத் தாங்கும்படி, மலை வடிவில் நிற்க வேண்டும். பின்னர், ஒவ்வொரு படியாகக் கடந்து பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி மூன்று முறை செய்ய வேண்டும். கை மணிக்கட்டில் அடிபட்டிருக்கும்போதும், தலைவலி இருக்கும்போதும் இந்த ஆசனத்தைச் செய்ய வேண்டாம்.



    பலன்கள் :

    மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்வதால், மூளை சுறுசுறுப்பாக இயங்கும். மனஅழுத்தம்​, பயம், மனச்சோர்வு தீரும்.

    தோள்பட்டை, புஜம், கால்கள் வலுப்பெறும்.

    உடல் எடையைத் தூக்கி நிறுத்தும் ஆசனம் என்பதால், எலும்புகள் வலுப்பெறும். எலும்பு அடர்த்தி குறைதல் வராமல் தடுக்கும்.

    ​முதுகு வலி சரியாகும். அடிமுதுகுவலி, நடு முதுகுவலி குறையும்.

    ​இந்த ஆசனத்தில் உடல் முழுதும் செயல்படுவதால், உடலின் வளைவுத் தன்மை அதிகரிக்கும்.

    ஆஸ்துமா, சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் அவசியம் செய்ய வேண்டிய ஆசனம். நாட்பட்ட தலைவலி சரியாகும்.​
    உஜாஸ் என்றால் விடியல் அல்லது புதிய தொடக்கம் என்று அர்த்தம். இந்த முத்திரை அடிவயிற்றில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் பிறப்பு உறுப்புகளுக்கும் சக்தி அளிக்கிறது.
    உஜாஸ் என்றால் விடியல் அல்லது புதிய தொடக்கம் என்று அர்த்தம். பூமியின் ஒவ்வொரு நாளும் புதிதாய் விடிவது போல, உஜாஸ் முத்திரையும் நம்மைப் புதிதாக மலரச் செய்கிறது. ஒரு புதிய தொடக்கத்தைக் கொடுக்கிறது, உற்சாமான மனநிலையைப் பெருக்குகிறது என்பதால், இந்த முத்திரைக்கு ‘உஜாஸ் முத்திரை’ என்று பெயர்.

    செய்முறை

    விரிப்பில் சப்பணம் இட்டு அமர்ந்த வாறோ, கால்களைத் தரையில் நன்கு பதித்தபடி நாற்காலியில் அமர்ந்தோ செய்யலாம். கைகள் உடலைத் தொடக் கூடாது. தொப்புளுக்குக் கீழே அடிவயிற்றுப் பகுதியில் வைத்து, இரு கை விரல்களையும் கோத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை இரு வேளையும் 15-20 நிமிடங்கள் வரை செய்யலாம்.

    பலன்கள்

    * அடிவயிறு மற்றும் பிறப்பு உறுப்புகளுக்குச் சக்தி அளிக்கிறது. அடிவயிற்றில் உள்ள அனைத்து உறுப்புகளும் வலுப்பெறும்.

    * கர்ப்பப்பை, சினைப்பை, முட்டை ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவும்.

    * ஆண்களின் வீரிய விருத்திக்கு உதவி செய்வதுடன், விந்தணுக்கள் உற்பத்திக்கும் உதவுகிறது.

    * ஹார்மோன் குறைபாடுகளைச் சரிசெய்யும்.

    சுரபி முத்திரையின் மற்றொரு பெயர் `காமதேனு முத்திரை.’ இந்த முத்திரையை செய்வது எப்படி என்றும் இந்த முத்திரை செய்வதால் கிடைக்கும் பயன்களையும் பார்க்கலாம்.
    சுரபி முத்திரையின் மற்றொரு பெயர் `காமதேனு முத்திரை.’ இதில் பஞ்ச பூதங்களும் மாறி மாறித் தூண்டப்படுவதால், காரணம் தெரியாத பல்வேறு நோய்கள் குணமாகின்றன. உடலில் உள்ள குணமாக்கும் சக்திகள் தூண்டப்படுகின்றன.

    செய்முறை :

    விரிப்பின் மீது சப்பணம் இட்டு அல்லது நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றிச் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை என ஒவ்வொரு முறையும் 10-20 நிமிடங்கள் வரை செய்யலாம்.

    இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று இணைப்பதுபோல வைக்கவும்.

    நடு மற்றும் ஆள்காட்டி விரல் ஒரு குரூப், சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல் ஒரு குரூப். கட்டை விரல் தனி என பிரித்து கொள்ள வேண்டும்.

    இடது கை ஆள்காட்டி விரல் நுனியால் வலது கை நடுவிரலைத் தொட வேண்டும். இடது கை நடு விரல் நுணியால் வலது கை ஆள்காட்டி விரலைத் தொட வேண்டும்.

    இடது கை சுண்டு விரல் நுனியால் வலது கை மோதிர விரலைத் தொட வேண்டும். இடது கை மோதிர விரல் நுனியால் வலது கை சுண்டு விரலைத் தொட வேண்டும். கட்டை விரல்களை எதனுடனும் சேர்க்காமல், நெஞ்சைப் பார்த்தபடி நீட்ட வேண்டும்.

    பலன்கள் :

    * அதிகப்படியான உடல் வெப்பம் குறையும்.

    * தைராய்டு, பிட்யூட்டரி, அட்ரினல் போன்ற நாளமில்லாச் சுரப்பிகள், நரம்பு முடிச்சுகள் தூண்டப்பட்டு அவற்றின் குறைபாடுகள் நீங்குகின்றன.

    * ‘கௌட்’ எனப்படும் வாதநீர் தேக்கத்தையும், ரூமேட்டிசம் (Rheumatism) எனப்படும் மூட்டு நோய்த் தாக்கத்தையும் குறைக்கும்.

    * செரிமானச் செயல்பாட்டைச் சீரமைத்து, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் புண்கள் குணமடைய உதவுகிறது.
    நீங்கள் எந்த வயதைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆரோக்கியமாகவும் மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்ளவும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும்.
    நீங்கள் எந்த வயதைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆரோக்கியமாகவும் மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்ளவும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். ஆனால், நம்மில் பலருக்கும் போதுமான அளவு ஜிம்முக்கு சென்று தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதற்கான நேரமோ, சக்தியோ அல்லது வசதியோ இருப்பதில்லை.

    இங்கு வீட்டிலேயே செய்யக் கூடிய தசைகளை வலிமையாக்கும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இவை ஒரு நிலையான நாற்காலி, பயிற்சிக்கான பாண்ட் கயிறு (Band) மற்றும் சுவர் ஆகியவற்றைக் கொண்டு மட்டும் எல்லா வயதைச் சேர்ந்த நபர்களும் வீட்டிலேயே செய்யக் கூடிய தசைகளை வலிமையாக்கும் பயிற்சிகளாகும்.

    பைசெப்ஸ் கர்ல் (Biceps Curl rope exercises) நாற்காலியில் அமர்ந்து, உங்கள் தொடைகள் இரண்டும் இணையாக இருக்குமாறு வைத்து பாதத்தை தரையில் வையுங்கள். இரண்டு பாதங்களுக்கும் அடியில் பாண்டை வைத்து விட்டு, அதன் முனைகளை இழுத்து பிடிக்கவும். இப்பொழுது உங்கள் கைகளை தோளை நோக்கி இழுக்கவும், அப்போது முழங்கால்களை சமநிலையில் வைத்திருக்க வேண்டும்.



    மெதுவாக கைகளை தொடைப்பகுதியின் மேலே படுமாறு, கீழே கொண்டு வந்து, பக்கவாட்டில் முழங்கைகளை வைக்கவும். இந்த பயற்சியின் போது பாண்ட்டிற்கு பதிலாக கைகளால் தூக்கக் கூடிய எடையுள்ள பொருட்களையோ அல்லது கேன்களில் அடைக்கப்பட்ட பொருட்களையோ பயன்படுத்தலாம்.

    சீட்டட் ரோ (Seated Row rope exercises) நாற்காலியின் விளிம்பில் நேரமாக அமரவும். முழங்கால்களை மடங்கியிருக்குமாறும், பாதங்கள் தரையில் சற்றே அகலமாக இருக்குமாறும் உங்களுக்கு முன் வையுங்கள். பயிற்சிக்கான பாண்டை உங்கள் பாதத்தை குறுக்கு நெடுக்காக சுற்றிக்கொண்டு இரண்டு கைகளாலும் பிடித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் கைகள் இரண்டையும் துடுப்பு போடுவது போல வளைத்து இழுக்கவும். இந்த செயலின் போது தோள்பட்டைகள் இரண்டிற்கும் அழுத்தம் தருவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மெதுவாக கைகள் இரண்டையும் துவக்க நிலைக்கு கொண்டு வரவும்.
    இந்த தியானம் மன அமைதியை மட்டுமல்லாமல் உடல் வலிமைக்கும் மிகவும் உதவுகிறது. உடலின் பொதுவான பலத்திற்கும், இந்த ஹாரா தியானம் பெருமளவு உதவுகிறது.
    ஹாரா என்பது மையம் என்ற பொருளைத் தரும் ஜப்பானியச் சொல். இது தொப்புளுக்குக் கீழ் இரண்டு விரல் அகலம் கழித்து இருக்கும் பகுதியைக் குறிக்கும். இது மணிப்புரா சக்ரா சக்தி மையத்தைக் குறிக்கும். இது உடலின் வலிமைக்கு முக்கிய மையமாக கருதப்படுகிறது. ஒருவன் இந்த சக்தி மையத்தில் கவனத்தைக் குவித்து தியான நிலையில் இருக்கும் போது எல்லையற்ற சக்தியுடையவனாக இருக்கிறான் என்கிறார்கள்.

    பண்டைய மருத்துவ சிகிச்சை முறைகளிலும் ஹாரா பகுதி மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தது. உடலின் எல்லா நோய்களையும் கண்டறிய வயிற்றுப் பகுதியே அதிகம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது. உடலுறுப்புகளின் ஒருங்கிணைப்பு முறையாக இல்லாவிட்டாலும் அதை ஹாரா பகுதி மூலம் அக்காலத்தில் கண்டறிந்தார்கள். அதை சரி செய்யவும் ஹாரா பகுதியை பலப்படுத்தவும் மூச்சுப் பயிற்சியும், தியானமும் பயன்படுத்தப்பட்டன. இனி ஹாரா தியானம் செய்யும் முறையைக் காண்போம்.

    1) தரையில் சம்மணமிட்டோ, அல்லது நாற்காலியிலோ சௌகரியமாகவோ நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள்.



    2) உங்கள் வலது கைவிரல்கள் மீது இடது கைவிரல்களை வைத்து இரு பெருவிரல்களும் லேசாகத் தொட்டுக் கொண்டிருக்கும் படியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் கைகள் ஒரு நீள்வட்டத்தை உருவாக்கி இருக்கும். மிகவும் பவித்திரமான ஒரு பொருளை அந்தக் கைகளில் வைத்திருப்பது போல் கவனத்துடன் இந்த முத்திரையை வைத்திருங்கள். இந்த முத்திரை மனதை அமைதியாக வைத்திருக்க மிகவும் உதவுவதாகக் கருதப்படுகிறது. உங்கள் கைகள் உங்கள் அடிவயிற்றை லேசாக ஒட்டியபடி இருக்கட்டும்.

    3) உங்கள் கவனம் உங்கள் மூச்சில் இருக்கட்டும். மூச்சு சீராகும் வரை முழுக்கவனமும் மூச்சிலேயே வைத்திருங்கள்.

    4) அமைதியை உள்மூச்சில் பெறுவதாகவும், டென்ஷன், கவலை போன்றவற்றை வெளிமூச்சில் வெளியே அனுப்பி விடுவதாகவும் எண்ணிக் கொள்ளுங்கள். சில மூச்சுகளில் மூச்சு சீராகி மனமும் அமைதி அடைந்தவுடன் உங்கள் கவனத்தை ஹாரா மீது திருப்புங்கள்.

    5) ஹாரா பகுதியில் ஒரு பொன்னிற பந்து இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்தப் பந்தை சக்திகளின் இருப்பிடமாக எண்ணிக் கொள்ளுங்கள். உங்கள் உள்மூச்சில் அந்தப் பொன்னிறப்பந்து விரிவடைவதாகவும், வெளிமூச்சில் பழைய நிலைக்கு சக்தி பெற்று திரும்புவதாகவும் நினைத்துக் கொள்ளுங்கள்.



    6) இப்படி நீங்கள் செய்யச் செய்ய உங்கள் வயிற்றுப் பகுதியில் உள்ள இறுக்கம் எல்லாம் குறைந்து ஒரு விதமாக லேசாவதை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள்.

    7) இந்தப் பயிற்சியால் ஹாரா அல்லது மணிப்புரா சக்ரா கழிவுகள் நீங்கி சுத்தமடைவதாகவும், பெரும் பலம் பெறுவதாகவும் உணருங்கள்.

    8) ஆரம்பத்தில் உருவகப்படுத்தி செய்த இந்த தியானம் பயிற்சியின் காலப்போக்கில் உண்மையாகவே ஹாராவின் சக்தியை பலப்படுத்தி அசைக்க முடியாத மன அமைதியையும், மன உறுதியையும் ஏற்ப்படுத்த ஆரம்பிக்கும்.

    இந்த தியானம் மன அமைதியை மட்டுமல்லாமல் உடல் வலிமைக்கும் மிகவும் உதவுகிறது. உடலின் பொதுவான பலத்திற்கும், இந்த ஹாரா தியானம் பெருமளவு உதவுகிறது. ஹாராவில் மனதைக் குவித்து ஐக்கியமாகி இருக்கும் சமயங்களில் எந்த வித தாக்குதலிலும் தளர்ந்து விடாமலும், நிலை குலைந்து விடாமல் இருத்தல் மிக சுலபமாகிறது.

    மன அமைதி, உடல் வலிமை இரண்டையும் தரவல்ல ஹாரா தியானத்தை நீங்களும் செய்து பார்த்து பலனடையலாமே.
    அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவது தான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும்.
    ஆழ்நிலை தியானம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விட்டது. மன இறுக்கமும், மனத் தொய்வும், மகிழ்ச்சியின்மையும் மாற்றுகின்ற ஒரு அரிய மருத்துவ முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    பரபரப்பு, மனக்கலக்கம், மனத்தவிப்பு, மனத்தொய்வு, தூக்கமின்மை, மன இறுக்கம், ஒற்றைத் தலைவலி, உயர் இரத்த அழுத்தம், மாதவிடாய்க்கு முன்தோன்றும் வேதனை, மலக்குடல் குறைபாடு போன்ற பல குறைபாடுகளை நீக்கவல்லது. இந்த தியான முறையெனக் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக மூப்படைவதையே இத்தியான முறை தடை செய்யக் கூடும் என ஒரு ஆய்வு முடிவு உறுதிப்படுத்துகிறது.

    அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவது தான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும்.

    ஆழ்நிலை தியானத்தின் நன்மைகள் பற்றிப் பேசுகின்ற போது “ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மனத்தின் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்த கற்றுக் கொள்வது என்பது உடல் நலம் பேண உதவுகின்ற ஒரு நல்ல முறையாகும். நாள் தோறும் நமது நரம்பு மண்டலத்தில் ஏற்படுகின்ற தேய்மானங்களை நீக்கி நரம்புகளை நெறிப்படுத்தி உள்ளத்திற்குப் புத்துணர்ச்சியும், புது உணர்வும் தருவதுடன் நமது தடுப்பாற்றல் சக்தியை உயர்த்தவும் மனநிலை தொடர்புடைய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது” என்று தமது ‘மெடிடேசன் பார் எவிரி படி’ (பெண்குயின்) என்னும் நூலில் குறிப்பிடுகிறார் புகழ் மிக்க உளவியலாரான லூயி புரோடோ.



    இலக்கின்றி அலைகின்ற மனதை அடக்கி, அதன் பொருளற்ற புலம்பல்களை நிறுத்தி உள்ளத்தில் சாந்தியும், அமைதியும் நிலவச் செய்வதே தியான முறையாகும். ஆனால் இதைச் செய்கின்ற வழி ஒவ்வொரு தியான முறைக்கும் வேறுபடுகிறது.

    ஆழ்நிலை தியானத்தைப் பொருத்தவரை அமைதியான முறையில் அமர்ந்து ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இடைவிடாமல் மனதிற்குள் ஜெபம் செய்வதாகும். மனப்பாடம் செய்கின்ற காலத்தில் மனம் சில நிமிட நேரம் மனத்தில் ஒன்றலாம். சில நேரம் விலகியும் போகலாம். அது பற்றிக் கவலை கொள்ளாமல் திரும்பத் திரும்ப மனதை ஒரு முகப்படுத்த வேண்டும்.

    நாட்கள் செல்லச் செல்ல, பழக்கம் மனதில் படியப், படிய தொடர்பில்லாத சிந்தனைகள் வருவதும் மனம் அலைபாய்வதும் மட்டுப்படும். மேற்பரப்பில் உயர்ந்தும், தாழ்ந்தும் அலை அலைபாய்கின்ற கடலின் அடியில் சென்று பார்த்தால் நீரின் கீழே ஒரு ஆழ்ந்த அமைதி தென்படுவது தெரியும். அந்த நிலையை ஆழ்நிலை தியானத்தின் மூலம் மனதிற்குள் உணர முடியும்.

    இந்த தியான முறையில், பயிற்சி பெறுபவர்க்கு ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை சொல்ல வேண்டும் இந்த மந்திரத்தை தினம் காலையிலும் மாலையிலும் 1/2 மணி நேரம், மனதுக்குள்ளேயே ஜபிக்க வேண்டும். இதற்காக பத்மாசனத்தில் தான் உட்கார்ந்து ஜபிக்க வேண்டும் என்பதில்லை. நாற்காலியில் உட்கார்ந்து கூட ஜபிக்கலாம். ஜபிக்கும் போது மனது அலைபாய்ந்து எண்ணங்கள் சிதறினாலும், விடாமல் மந்திரத்தை சொல்லிக் கொண்டே (மனதுக்குள்) இருக்க வேண்டும். ஆழ்நிலை தியானத்தை பயின்றவர்கள் மனதை ஒரு முகப்படுத்துவது இந்த முறையால் சுலபமாகிறது.
    உட்கார்ந்து செய்யும் ஆசனங்களில் சுகாசனம் சுலபமானது. எளிமையானது. இப்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    செய்முறை :

    கீழே ஒரு விரிப்பை விரித்துக்கொள்ள வேண்டும். நேராக அமர்ந்து வலது காலின் குதியை இடது தொடையின் மேல் இருக்கும்படி செய்யவேண்டும். இடது காலின் குதிகால் வலது தொடையின் அடியில் செருக வேண்டும். இரண்டு கைகளையும் இரண்டு முழங்கால்களில் வைக்க வேண்டும்.

    சுவாசம் இயல்பாய் போய்க்கொண்டிருக்க வேண்டும். முதுகுத்தண்டும், கழுத்து, தலையும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். கண் பார்வை மூக்கு நுனியை பார்க்க வேண்டும். சரீரத்தை மிகவும் விறைப்பாக வைக்க வேண்டாம். சோர்வாக இருந்தால் கால்களை மாற்றி அமர்ந்து கொள்ளலாம்.

    பூஜை, தியானம், போஜனம்  ஆகிய சந்தர்ப்பங்களில் இந்த ஆசனத்தை செய்யலாம். ஐந்து நிமிடத்திலிருந்து மூன்று மணிநேரம் வரை அமர்ந்து இருக்கலாம். ஜபம் செய்யும்போது மூன்று மணிநேரம் வரை காலை மாற்றாமல் சோர்வின்றி அமர முடிந்தால் இந்த ஆசனம் சித்தியாகிவிட்டது என்று யோகிகள் கூறுவார்கள்.

    சரீர ஆசனத்தை முன்னிட்டு இந்த ஆசனத்தை அவ்வளவு நீண்ட நேரம் செய்யத் தேவையில்லை. வசதிக்கு ஏற்றவாறு காலை மாற்றி மாற்றி செய்யலாம். ஆனால் முதுகுப்பகுதி நேராக இருப்பது அவசியம். மிகவும் விறைப்பாக இருக்க வேண்டாம். நாம் சுகமாக அமர்ந்துள்ளோம் என்று மனதை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்.

    இதில் தேகம், மனம், பிராணன், புலன்கள் ஆகியவை அதிகம் சோர்வாவதில்லை. சரீரத்தின் கீழ் பகுதியும், இடுப்பும் நரம்புகளும் உறுதிப்பட்டு பலப்படுகின்றன. முதுகுத்தண்டும் ஆரோக்கியமாகி பலப்படுகிறது. யோகிகளுக்கு சுஷுனா நாடி வழியாக பிராணவாயு சீராக போகும். தியானத்தில் மனம் ஒருமைப்படும். சஞ்சலம் அடையாது.

    ×