search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    ஒரு டிஸ்ஸு பேப்பர் போதும் குழந்தையை தூங்க வைக்க முடியும்
    X

    ஒரு டிஸ்ஸு பேப்பர் போதும் குழந்தையை தூங்க வைக்க முடியும்

    • குழந்தையை தூங்க வைப்பதற்கு தலாலாட்டு பாடல்கள் பாடினார்கள்.
    • தூங்க வைப்பதற்கு டிஸ்ஸு பேப்பரை பயன்படுத்தலாம்.

    பொதுவாக தாய்மார்கள் கஸ்டப்படுகின்ற விஷயம் என்னவென்றால் குழந்தையை தூங்க வைப்பது தான். நம் தாத்தா, பாட்டி எல்லாம் குழந்தையை தூங்க வைப்பதற்கு தலாலாட்டு பாடல்கள் பாடினார்கள். இதனை கேட்டவுடன் பிள்ளைகள் தூங்கிவிடும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மொபைல் போனில் பாட்டை போட்டு குழந்தைகளை தூங்க வைக்கிறார்கள். இதனால் குழந்தைகள் அழுதுகொண்டே இருக்கின்றது. நாம் இந்த பதிவில் குழந்தைகளை எப்படி தூங்க வைப்பது என்பதைப்பற்றி தெரிந்துகொள்ளலாம்.

    குழந்தையை சீக்கிரம் தூங்க வைப்பதற்கு டிஸ்ஸு பேப்பரை பயன்படுத்தலாம். இதனை முகத்தில் தடவ வேண்டும். அதன்பிறகு டிஸ்ஸுவை கண்களில் முன் எடுத்துவந்து கண்களை சிமிட்டுவது போல செய்ய வேண்டும். இதுபோல செய்வதால் குழந்தைகள் சீக்கிரம் தூங்கிவிடும்.

    குழந்தைகள் நீரின் சத்தத்திற்கு அமைதியாகிவிடும். அதனால் குழாய்க்கு பக்கத்தில் நிற்க வேண்டும் என்று இல்லை. தண்ணீன் சத்தத்தை மொபைல் போனில் பிளே செய்யலாம். இதனால் குழந்தைகள் இதை கேட்டவுடன் சீக்கிரம் தூங்கிவிடும்.

    அதன்பிறகு அறையின் விளைக்கை அனைத்துவிட்டு குழந்தைகளை தூங்க வைக்க வேண்டும். வெளிச்சம் சிறிதளவு இருந்தால் மட்டும் போதும்.

    குழந்தைகளின் தலையை தடவி கொடுக்க வேண்டும். நெற்றியிலும் முதுகிலும் தடவி கொடுக்கலாம். இதன்மூலம் குழந்தைகள் அமைதியாகுவது மட்டுமில்லாமல் தூக்கத்தையும் வர வைக்க உதவுகிறது.

    தொட்டிலில் போட்டு குழந்தையை தூங்கவைக்க வேண்டும். அவ்வாறு தூங்க வைக்கும்போது இருபுறமும் துணி வைக்க வேண்டும். அதன் நடுவில் குழந்தையை போட்டு அணைத்தப்படி போட வேண்டும்.

    Next Story
    ×