search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைப்பருவ பார்வை இழப்புக்கு காரணங்கள்
    X
    குழந்தைப்பருவ பார்வை இழப்புக்கு காரணங்கள்

    குழந்தைப்பருவ பார்வை இழப்புக்கு காரணங்கள்

    குழந்தை பிறந்த ஒரு மாதத்துக்குள் கண்களில் ஏற்படும் தொற்று நியோனேட்டரம் எனப்படும். அதற்கு முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வையின்மையை ஏற்படுத்திவிடும்.
    இந்தியாவில் குழந்தைப்பருவ பார்வையின்மை பாதிப்பு 1,000 குழந்தைகளுக்கு 0.8 என்ற அளவில் உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 1.5 மில்லியன் குழந்தைகள் கண் பார்வை இல்லாமல் உள்ளனர். மேலும் 18 மில்லியன் குழந்தைகள் மிதமான மற்றும் கடுமையான பார்வைக் குறைபாட்டுடன் உள்ளனர்.

    அவர்களில் நான்கில் 3 பேர் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள். அங்கு குழந்தைப்பருவ பார்வையின்மை பாதிப்பு 1000-க்கு 1.5 என்ற அளவில் உள்ளது. பல ஆண்டுகளாக, இந்தியாவில் குழந்தைப்பருவ பார்வையின்மைக்கு கார்னியா தொடர்பான பிரச்சினைகளே காரணமாக இருக்கிறது.

    கிட்டப்பார்வை, தூரப்பார்வை அல்லது ஆஸ்டிஜிமாடிசம் (அருகாமை மற்றும் தொலைதூர பார்வை மங்கலாக தெரிவது) போன்ற ஒளிவிலகல் பிழைகள், கண்ணாடிகளை பயன்படுத்தாதது அல்லது முறையற்ற கண்ணாடியைப் பயன்படுத்துவது போன்றவையும் பார்வை இழப்பு பிரச்சினைக்கு வழிவகுக்கின்றன. அத்துடன் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக கற்றல் குறைபாடு பிரச் சினையை எதிர்கொள்ள நேரிடும்.

    அமெரிக்கன் அகாடமி ஆப் ஆப்தமாலஜி (ஏ.ஏ.ஓ) ஆய்வின் படி, குழந்தைப்பருவ பார்வையின்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று தட்டம்மை நோய் பாதிப்பாகும். ஊட்டச்சத்து குறைபாடுதான் அதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக வைட்டமின் ஏ குறைபாடு கண் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது. இரவில் பார்வை இழப்பு ஏற்படுவது வைட்டமின் ஏ குறைபாட்டுக்கான முக்கியமான அறிகுறியாகும். அதனை கவனத்தில் கொள்ளாத பட்சத்தில் நிரந்தர பார்வை இழப்புக்கு வழிவகுத்துவிடும்.

    உலக சுகாதார அமைப்பின் கருத்து படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் முதல் 5 லட்சம் குழந்தைகள் வைட்டமின் ஏ குறைபாடு காரணமாக பார்வையற்றவர்களாக மாறுகிறார்கள். அதுமட்டுமின்றி ஒரு வருடத்திற்குள் பாதி பேர் இறந்து விடுகிறார்கள்.

    குழந்தை பிறந்த ஒரு மாதத்துக்குள் கண்களில் ஏற்படும் தொற்று நியோனேட்டரம் எனப்படும். அதற்கு முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வையின்மையை ஏற்படுத்திவிடும். பொதுவாக வயதாகும்போது கண் புரை பிரச்சினை ஏற்படும் என்றாலும் பிறக்கும்போதே சில குழந்தைகளுக்கு கண் புரை பாதிப்பு உண்டாகும். இதுவும் குழந்தை பருவ பார்வை இழப்புக்கான காரணங்களில் ஒன்றாகும்.

    குழந்தைப்பருவ பார்வையின்மைக்கு மற்றொரு காரணம் கிளேகோமா ஆகும். கண்களில் உருவாகும் திரவ அழுத்தம் பார்வை நரம்புகளை சேதப்படுத்தும்போது இந்த பிரச்சினை உண்டாகும். பிறந்த குழந்தை முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகள் இந்த பாதிப்பை எதிர்கொள்வார்கள். ஆதலால் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கு முன்பு கண் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. கண்களில் ஏதேனும் பாதிப்பு நேர்ந்தால் உடனே கண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதும் அவசியமானது.
    Next Story
    ×